Daily TN Study Materials & Question Papers,Educational News

CUET தேர்வு எழுத 10ம் வகுப்பு மதிப்பெண் அவசிய மில்லை

 CUET தேர்வுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயமில்லை






மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுமே 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் CUETமுதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்திற்குள் வெளியிட்டப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழக மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் இல்லை என திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன். கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் க்யூட் தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் தமிழக மாணவர்கள் தவித்து வந்த நிலையில் அந்த பகுதி நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Share:

பிப்.28 வரை கால அவகாசம் மின் இணைப்புடன் ஆதார் எண்

 மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்.28 வரை கால அவகாசம்

''மின் நுகர்வோரை கவனத்தில் கொண்டு ஆதார் எண் இணைப்பு செய்ய வரும், 28 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவே இறுதி கால நீட்டிப்பாகும். இனிமேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.ஈரோடு வீரப்பன்சத்திரத்தில், கிழக்கு தொகுதி காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து,மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஓட்டு சேகரித்தார். முன்னதாக, அமைச்சர் செந்தில்பாலாஜி,நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 2.60 கோடி மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு கணக்குடன், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்னும், 7 லட்சம் மின் இணைப்பு கணக்குகளுக்கு மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது.இந்த மின் நுகர்வோரை கவனத்தில் கொண்டு ஆதார் எண் இணைப்பு செய்ய வரும், 28 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



அதுவே இறுதி கால நீட்டிப்பாகும். இனிமேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது.கடந்த, 2021 தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை குறைப்போம் என தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த ஆட்சியில் இதுவரை, 88 மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. தவிர, பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்த இடங்களில் உள்ள கடைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அ.தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி அச்சத்தால், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து வருகின்றனர்.


தங்களை அடைத்து வைத்துள்ளதாக வாக்காளர்கள் எங்காவது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்களா என பாருங்கள். தி.மு.க., கூட்டணி மூலம் திறக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களும், தேர்தல் ஆணையத்தால் முறையாக அனுமதி பெற்று செயல்படுகின்றன.கைத்தறி, விசைத்தறிக்கான இலவச மின்சார பயன்பாட்டு அளவை உயர்த்த அரசாணை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அரசு அனுமதி கோரியது. அ.தி.மு.க.,வினர் இந்த அரசாணை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் கடிதம் வழங்கி உள்ளனர். அதேநேரம் அரசு சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு விளக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தேர்தல் நடைமுறை முடிந்த பின் அரசாணை வெளியிடப்படும்.தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டுப்போட்டு, 5 ஆண்டு கால ஆட்சியில் திட்டங்களை நிறைவேற்றத்தான் வாய்ப்பு தந்துள்ளனர். ஒன்றரை ஆண்டில், 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை விரைவில் நிறைவேற்றப்படும்.தமிழக அரசு, 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்காக மின்சார மானியம் வழங்குகிறது. 2.37 கோடி மின் இணைப்புகளில், ஒரு கோடி மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் முழுமையாக இல்லை. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 84 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது, 31 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.


Share:

நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!மகா சிவராத்திரியை முன்னிட்டு



 மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!


மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகாசிவராத்திரியினை முன்னிட்டு 18.02.2023 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அன்றைய தினம் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.


(2)18.02.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச் நான்காவது சனிக்கிழமை (25.02.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி உள்ளுர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.



(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகாசிராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-ன்படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 18.02.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Share:

18.02.2023 ( சனிக்கிழமை ) - பள்ளி வேலைநாள் - CEO Proceeding

மழை காரணமாக அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிப்பது வழக்கம் அதனடிப்படையில் 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு பருவ மழை காரணமாக அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் 18.02.2023 ( சனிக்கிழமை ) அன்று பணி நாளாகும் . எனவே அனைத்து வகை பள்ளிகளும் செயல் பட வேண்டும் என்று அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



Share:

TNPSC - குரூப் 2, 2ஏ பதவிக்கு வரும் 25ம் தேதி மெயின் தேர்வு - ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு!

குரூப் 2, 2ஏ பதவிக்கு வரும் 25ம் தேதி மெயின் தேர்வு நடக்கிறது. 5,529 பதவிக்கு நடத்தப்படும் தேர்வை சுமார் 58 ஆயிரம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி (நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஆண்டு மே 21ம் தேதி நடத்தியது. இத்தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 11 லட்சத்து 78,163 பேர் மட்டுமே தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்தனர். இருந்தபோதிலும், முதல்நிலை தேர்வை 84.4 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர்.

அதாவது, 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 15.56 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகினர். அதாவது 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் நவம்பர் 10ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 58 ஆயிரம் பேர் முதன்மை தேர்வை(மெயின் தேர்வு) எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு வருகிற 25ம் தேதி நடைபெற உள்ளது. 25ம் தேதி காலை, மாலை என இத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான( www.tnpsc.gov.in, www.tnpscexams.in ) பதிவேற்றம்(டவுன்லோடு) செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

10ம் வகுப்பு பொதுத்தேர்வுஅரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு

 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் 14.12.2022 முதல் 23.12.2022 வரையிலான நாட்களில் தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களது விவரங்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.


அதன் பின்னர், மேற்குறிப்பிட்ட பணிக்கான கால அளவு 28.12.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது, மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் 17.02.2023 பிற்பகல் முதல் பெயர்ப் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அலுவலர்களும் ஆசிரியர்களும் என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி, ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுகுறித்த அறிவுறுத்தல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் சார்பில் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்கு தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.


10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:

  • ஏப்ரல் 6 - தமிழ் (மொழித்தாள்)
  • ஏப்ரல் 10 - ஆங்கிலம்
  • ஏப்ரல் 13- கணிதம்
  • ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்
  • ஏப்ரல் 17- அறிவியல்
  • ஏப்ரல் 20- சமூக அறிவியல்

Share:

புதிய ரேசன் கார்டுகள் உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு!

 புதிய ரேசன் கார்டுகள் யாருக்கு கிடைக்காது? உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு!


நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.


இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை இவற்றின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அரிசி அட்டை, சர்க்கரை அட்டை என சுமார் 1,96,16,093 ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.


அதில், "நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இருப்பு வைத்துக் கொண்டு விநியோகிக்காமல் இருத்தல் கூடாது. சரியாக 9 மணிக்கு நியாய விலை கடைகளை திறந்து பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திறக்கப்படாத கடைகள் குறித்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும் எனவும், ஒரே நபர் வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்து பொருட்கள் பெற்று வருவது குறித்து கள விசாரணை செய்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share:

க்யூட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்!

க்யூட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் 2021-ஆம் ஆண்டு பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டதால், தமிழக மாணவர்களால் தற்போது மதிப்பெண்கள் குறிப்பிட முடியவில்லை.

மார்ச் 12ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் உள்ள நிலையில், தமிழக அரசு தலையிட்டு விலக்கு பெற்று தர மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கெனவே ஜேஇஇ தேர்வுக்கும் இதே சிக்கல் எழுந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு அதிலிருந்து விலக்கு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share:

ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் - வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும்

ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும்

எவ்வித தவறுகளுக்கும் இடம்தராமல், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.


தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய ஓ.எம்.ஆர். விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் மேலாக உள்ளது. மேலும், பிழைகளை கணினி மூலம் அடையாளம் காண நேரடி அலுவலர் மூலம் உறுதி செய்ய அவகாசம் தேவை எனவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.  எவ்வித தவறுகளுக்கும் இடம்தராமல், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18,36,535 பேர் எழுதியிருந்தனர்.



ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Share:

TNPSC latest அறிவிப்பு 2023 - 1083 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்க போங்க!!

TNPSC - ல் CESSE காலிப்பணியிடங்கள் 

TNPSC Recruitment 2023 - Apply here for CESSE Posts - 1083 Vacancies - Last Date - 04.03.2023

TNPSC .லிருந்து காலியாக உள்ள CESSE பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04.03.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்

TNPSC

பணியின் பெயர்: 

CESSE

மொத்த பணியிடங்கள்: 

  1. Overseer / Junior Draughting Officer – 794 பணியிடங்கள்
  2. Junior Draughting Officer ( Highway) – 236 பணியிடங்கள்
  3. Junior Draughting Officer (Public Works) – 18 பணியிடங்கள்
  4. Draughtsman, Grade – III – 10 பணியிடங்கள்
  5. Foreman, Grade-II – 25 பணியிடங்கள்

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Civil Engineering /Diploma in Mechanical Engineering / B.E., Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

  1. Overseer / Junior Draughting Officer – ரூ.35400-130400/-
  2. Foreman, Grade-II – ரூ.19500-71900/-

வயது வரம்பு: 

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 37 க்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 27.05.2023 அன்று காலை 9:30 மணி முதல் 12.30 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

  • தேர்வுக் கட்டணம் ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 04.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

04.03.2023

Notification for TNPSC 2022: Download Here

Apply: Apply Now

Share:

Definition List

header ads

Unordered List

Support