Daily TN Study Materials & Question Papers,Educational News

CTET ஜூலை 2023 தேர்வுக்கான பதிவு தொடக்கம் – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தெரியுமா?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 2023 ஜூலைக்கான பதிவுகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான எளிய வழிமுறைகள் குறித்து கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

CTET ஜூலை 2023:

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் அனைவரும் CTET தேர்வு மூலமாக நியமனம் செய்யப்படுகின்றனர். இத்தேர்வு ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. CTET தேர்வில் 2 தாள்கள் உள்ளது. தாள் 1 தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும், தாள் 2 தேர்ச்சி அடைபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலும் ஆசிரியர்களாக பணிபுரியலாம்.

CTET தேர்வில் அனைத்து கேள்விகளும் MCQ வகையில் தான் இருக்கும். CTET ஜூலை 2023 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 27ம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. மே 26, 2023 வரை விண்ணப்ப பதிவுகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 27,2023 வரை விண்ணப்ப கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CTET ஜூலை 2023 விண்ணப்ப பதிவு செயல்முறை:

முதலில், CBSE CTET ன் அதிகாரபூர்வ தலமான ctet.nic.in க்கு செல்ல வேண்டும்.

CTET ஜூலை 2023 பதிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது, திறக்கும் புதிய பக்கத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்ப பதிவு முடிந்த உடன் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இப்பொழுது, சமர்ப்பி என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

எதிர்கால தேவைக்காக பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Official NOTIFICATION Click here

Qualification and Syllabus Click Here


Share:

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்.. விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிப்பு!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.


இந்நிலையில், தமிழகத்தில்  உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 13 தொடங்கி ஏப்.3 வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவா்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தோ்வா்கள் 23 ஆயிரத்து 747 பேரும் எழுத விண்ணப்பித்திருந்தனா். 

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி மதிப்பெண் சான்றிதழ்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவ்க்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Share:

தனியார் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிப்போருக்கு மாற்று சான்று தர தடை: கல்வித்துறை!


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு மாற்று சான்று தரக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


புதுச்சேரியில் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறையக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் சில தனியார் பள்ளிகள் சுமாராக படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஏதாவது காரணம் கூறி பள்ளியில் இருந்து நீக்கத் தொடங்கியதாக புகார்கள் வந்தன. இவ்விவகாரம் கல்வித் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது.


இந்நிலையில் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்ட உத்தரவு: "புதுச்சேரியில் 9, 10, 11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், மாணவர்களின் பெற்றோரை மாற்றுச் சான்றிதழ் பெறச் சில தனியார் பள்ளிகள் வற்புறுத்துவது பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.


எனவே, அனைத்து தனியார் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்க வேண்டாம். தவிர்க்க முடியாத பட்சத்தில், இடமாறுதல் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வுத்தரவு அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share:

#Breaking News-2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!

தற்போது அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு செயல்முறைகளானது 2022-23ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாறுதல் கலந்தாய்வு (நடப்பு கல்வி ஆண்டு) ஆகும். பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை மாறுதல் கலந்தாய்வு மட்டும் (No Promotion Counselling) அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறைக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது!

Teachers General Transfer counselling 2023 - 2024 - instruction and schedule -Pdf - Download here

Share:

4th Standard Books - PDF Download 2023- 2024

4th Standard Books - PDF Download 2023- 2024

Tamilnadu State Board syllabus 4th Books All subjects Pdf Download New Edition Available here.New Syllabus Samacheer Kalvi 4th Books 2022-2023 are available PDF Download. Tamil, English, Maths, Science and Social Science PDF in Term Wise I, II, III. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் Term 1st, 2nd, 3rd for Tamil Medium below. New Syllabus 2022 to 2023 Textbooks both in English and Tamil Medium for all subjects below. 4th Standard Books for all subjects in PDF format for Free Download below.

4th Book – New Syllabus PDF : 2022 - 2023

TN State Board Syllabus School 4th Standard New Syllabus English, Tamil, Maths, Science and Social Science – English Medium Book. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் – Tamil Medium Book for Term 1st, 2nd, 3rd below:

4th Standard Books - PDF Download 2022 - 2023


S.NoNew Syllabus Tamil Medium BooksNew Syllabus English Medium Books
1.தமிழ் Term I – Download
Term II – Download
Term III – Download
Tamil Term I – Download
Term II – Download
Term III – Download
2.ஆங்கிலம் Term I – Download
Term II – Download
Term III – Download
English Term I – Download
Term II – Download
Term III – Download
3.கணிதம் Term I – Download
Term II – Download
Term III – Download
Maths Term I – Download
Term II – Download
Term III – Download
4.அறிவியல் Term I – Download
Term II – Download
Term III – Download
Science Term I – Download
Term II – Download
Term III – Download
5.சமூக அறிவியல் Term I – Download
Term II – Download
Term III – Download
Social Science Term I – Download
Term II – Download
Term III – Download
Share:

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - தேதி மாற்றம் !


பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மு டிவுகள் எப்போது வெளியிடப்படும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

முக்கிய செய்தி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள்- எப்போது வெளியிடப்படும்?- அறிவிப்பு

12-ம் வகுப்பு பொது தேர்வு May 8- ம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான இணையதளம்

http://www.tnresults.nic.in

http://www.dge1.tn.nic.in

http://www.dge2.tn.nic.in

Share:

பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தின் [01.05.2023] கூட்டப் பொருளாக இணைத்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி , கற்றல் கற்பித்தல் , உட்கட்டமைப்பு , மாணவர் பாதுகாப்பு , பள்ளி இடைநிற்றல் தொடர்பாகப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமாகும் . எதிர்வருகின்ற 2023 , மே மாதம் 1 - ஆம் தேதி " உழைப்பாளர் தினத்தன்று " நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது சம்பந்தமாகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

SPD Proceeding & Instructions - Download here

Share:

பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டிக் குழு (Career Guidance Cell) - தலைமை ஆசிரியரின் பங்கு !


பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டிக் குழு (Career Guidance Cell) - தலைமை ஆசிரியரின் பங்கு 
Role of Head Master) (School Level Higher Education Guidance Committee - Role of Head Master - Download here

Share:

1463 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஏப்ரல் - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை - பள்ளிக்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம்!


1463 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஏப்ரல் - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை - பள்ளிக்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் 
(April - 2023 Pay Authorization for 1463 Computer Instructor Posts - Letter from Principal Secretary, School Education Department) எண்:4611/ பக 7(1)/ 2023-1, நாள்: 24-04-2023 வெளியீடு...

Pay Order Letter - Download here

Share:

தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ள இடங்கள் (Central Cabinet approves setting up of 157 nursing colleges across the country at a cost of Rs.1,570 crore - 11 nursing colleges are set up in Tamil Nadu)...

நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது.

Share:

Definition List

header ads

Unordered List

Support