Daily TN Study Materials & Question Papers,Educational News

பொறியியல் படிப்பு கலந்தாய்வு - இதுவரை 56,837 இடங்கள் நிரம்பின..!!

பொறியியல் படிப்பு கலந்தாய்வு - இதுவரை 56,837 இடங்கள் நிரம்பின..!!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் இதுவரை 56,837 இடங்கள் நிரம்பியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 775 இடங்கள் நிரம்பின.

இதையடுத்து பொதுப் பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதன் முடிவில் 16,096 இடங்கள் நிரம்பின.

இதைத் தொடர்ந்து 2-வது சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 9-ல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 40,741 இடங்கள் நிரப்பப்பட்டன. அதில் 5,267 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டது. அந்த வகையில் முதல் 2 சுற்றுகளின் முடிவில் மொத்தம் 56,837 இடங்கள் நிரம்பியுள்ளன.

தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க 89,694 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு செப். 3-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதன்பின் உள்ள காலியிடங்கள் துணைக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் சுமார் ஒரு லட்சம் இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது


Share:

காலை உணவு திட்டம் - மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்தல் - தெளிவுரை..!!!

காலை உணவு திட்டம் - மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்தல் - தெளிவுரை..!!!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - சட்டமன்ற 110 விதியின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்திட அரசாணை வரப்பெற்றது பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்து உத்தரவிடல்.

Download here...

Share:

கல்வி உதவித்தொகை பெறும் போட்டியில் பங்கேற்க அழைப்பு..!!

கல்வி உதவித்தொகை பெறும் போட்டியில் பங்கேற்க அழைப்பு..!!

அஞ்சல் துறை சார்பில், 'தீன் தயாள் ஸ்பர்ஸ் யோஜனா' எனும் திட்டத்தின் கீழ், உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், 2017ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

இப்போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் சிறந்த கல்வித்தகுதி கொண்ட, அஞ்சல்தலை சேகரிக்கும் மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். வெற்றி பெற்று விருது பெறுபவர்களுக்கு, 6,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதற்காக, ஒவ்வொரு அஞ்சல் கோட்டம் சார்பிலும், அஞ்சல் தலை சேகரிப்பு வினாடி - வினா, கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தேர்வு செய்யப்படுவோர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறலாம்.

இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ - மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அஞ்சல் தலை சேகரிப்பு கிளப்பில், உறுப்பினராக இருக்க வேண்டும்.

மேலும், தேர்வுகளில், 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, 5 சதவீத தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பங்களை, செப்., 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தை அணுகலாம். அல்லது, 044 - 28543199 என்ற எண்ணிலும், annaroadho-dop@nic.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என அஞ்சல்துறை அறிவித்துள்ளது.


Share:

தலைமை ஆசிரியா்களாக 697 பேருக்கு பதவி உயா்வு - ஆணை வழங்கப்பட்டது!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாக 697 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த இரு ஆண்டுகளாக 742 தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருந்தன. இவற்றை பதவி உயா்வு மூலம் நிரப்புவதற்கு முடிவானது.

இதையடுத்து கடந்த ஜன.1-ஆம் தேதி நிலவரப்படி பதவி உயா்வுக்கு தகுதியான 1,016 போ் கொண்ட உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவா்களுக்கான கலந்தாய்வு ‘எமிஸ்’ தளம் வழியாக ஆக.18 முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.20) வரை நடைபெற்றது.

கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 819 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 697 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது. மற்ற 112 போ் பதவி உயா்வுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக முதுகலை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

எஞ்சியுள்ள காலிப் பணியிடங்களையும் விரைவில் நிரப்ப வேண்டும். மற்றொருபுறம், பல முதுநிலை ஆசிரியா்கள் தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா். இதனால் ஏற்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்றனா்

Share:

SMC - செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் - 01.09.2023 நடைபெறும்- SPD Proceedings..!!

SMC - செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் - 01.09.2023 நடைபெறும்- SPD Proceedings..!!

SMC - செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 01.09.2023 வெள்ளிக்கிழமை நடைபெறுதல் சார்ந்து அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள் 21.08.2023) 

 SMC - Sep 2023 - Meeting Proceeding - Download here

Share:

CRC - பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - SCERT செயல்முறைகள்!!

CRC - பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - SCERT செயல்முறைகள்!!

9 & 10-ஆம் வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட அளவில் (24.08.2023& 25.08.2023) ஆகிய இரு நாட்களிலும் வட்டார அளவில் (28.08.2023& 30.08.2023) நடத்துதல் - தொடர்பாக SCERT செயல்முறைகள்....

SCERT Proceedings - Download here

Share:

TNPSC - தலைவர் நியமனம்: கோப்புகளைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்!!

TNPSC - தலைவர் நியமனம்: கோப்புகளைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்!!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். 

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளார்.

நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.


Share:

TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 3373 காலிப்பணியிடங்கள் – சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!

TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 3373 காலிப்பணியிடங்கள் – சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!

தமிழகத்தில் TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் காலியாகவுள்ள 3373 தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த 2022 ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு, தரவரிசை பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் தற்காலிக விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. தற்போது 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று துவங்கியுள்ளது.

தேர்வர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இந்த கலந்தாய்வு செப். 11ம் தேதி வரை நடைபெறும் என TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 1079 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான மூல சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு செப். 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை வரை நடைபெறும் என்று TNPSC செயலாளர் தெரிவித்துள்ளார்

Share:

6th science - ( Term 1 ) Quarterly Exam Question Paper 2023 - 2024

6th science - ( Term 1 ) Quarterly Exam Question Paper 2023 - 2024

science

6th science - ( Term 1 ) Quarterly Model Question Paper 2023 - 2024 - Tamil Medium PDF Download Here

6th science - ( Term 1 ) Quarterly Model Question Paper 2023 - 2024 - English Medium PDF Download Here

6th science - ( Term 1 ) Quarterly original Question Paper 2023 - 2024 - Tamil Medium PDF Download Here

6th science - ( Term 1 ) Quarterly original Question Paper 2023 - 2024 - English Medium PDF Download Here

6th All Subjects - ( Term 1 ) Quarterly Model Question Paper 2023 - 2024 - PDF Download Here

Share:

Definition List

header ads

Unordered List

Support