Daily TN Study Materials & Question Papers,Educational News

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்: தன்னார்வலர்களை பயன்படுத்த உத்தரவு!


அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப்.17-ம்தேதி தொடங்கி வைத்தார்.


இதையடுத்து சேர்க்கைப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்பதிவு செய்து வருகின்றனர்.


இதுதவிர, கிராமப்புறங்களில் அரசுப் பள்ளியில் சேருவதில் உள்ள பயன்கள், அரசின் நலத்திட்டங்களை முன்வைத்து ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாணவர் சேர்க்கைப் பணிகளில் இல்லம்தேடிக் கல்வி தன்னார்வலர்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களில், ‘இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் ஆர்வத்துடன் பங்களிப்பாற்ற வேண்டும். தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் மழலையர் அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்க்க தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களை அணுகி, அவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


சேர்க்கைக்கு விருப்பம் தெரிவிக்கும் குழந்தைகளின் விவரங்களை சேகரித்து, பள்ளிக்கல்வி தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், அந்த தகவலை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது

Share:

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதற்க்கடுத்த அதிர்ச்சி ட்விஸ்ட்; இப்பபவே ஆரம்பிங்க படிக்க!


தமிழகத்தில் 10, 11, 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடைந்ததால் மாணவர்கள் கோடை விடுமுறையை சிறப்பித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து 2022-23 ம் கல்வியாண்டு 28 ம் தேதியுடன் முடிவடைந்து உள்ளதால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் நேற்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 2023-24 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு விவரங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024ம் ஆண்டு,

  • மார்ச் 18ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு,
  • மார்ச் 19ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு,
  • ஏப்ரல் 8ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Share:

TNPSC குரூப் 4 தேர்வு முடிவு குறித்து மனு தாக்கல்; அதிரடியான உத்தரவை வெளியிட்ட நீதிபதி!


நமது பாடவேளை வலைதளத்திலிருந்து தினந்தோறும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு செய்திகளை தொகுத்து வழங கி வருகிறோம். இந்த தகவல்களை உங்கள்  நண்பர்களுக்கும் பகிர மறந்து விடாதீர்கள் . இதோ TNPSC GROUP 4 பற்றிய புதிய செய்திஉங்களுக்காக.👇

தமிழகத்தில், திறமையான மற்றும் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து, அரசுப் பணியில் அமைத்துவதற்காக TNPSC தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக, குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. 18.5 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மார்ச் 24ம் தேதி வெளியாகியது.

இதன் தொடர்ச்சியாக, பணி நியமனத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த தேர்வு முடிவுகளில் பல குளறுபடிகள் உள்ளது என மறுப்புறம் புகாரும் எழுந்து வருகின்றன. இதனால், ஏமாற்றம் அடைந்துள்ள, தேர்வர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறியிருந்தனர். இதற்கிடையில், மதுரை ஐகோர்ட்டில், OMR விடைத்தாளை ஸ்கேனிங் செய்து, மதிப்பீடு செய்ததில் தவறு நடந்து இருக்கும்.

எனவே, பணி நியமனத்தில் எனக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்குமாறு, தேர்வு முடிவில் அதிருப்தி அடைந்த திண்டுக்கல்லை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குரூப் 4 பணிக்கான நியமன ஏற்பாடுகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே, இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும், விடைத்தாள் நகலை மனுதாரரிடம், TNPSC வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share:

நாகர்கோவில் ராணுவ கேண்டீனில் Clerk, Assistant, Computer Operator காலிப்பணியிடங்கள்!


Nagercoil Military Canteen .லிருந்து காலியாக உள்ள Clerk, Assistant, Computer Operator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 02.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

Nagercoil Military Canteen


பணியின் பெயர்: 

Clerk, Assistant, Computer Operator


தகுதி: 

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு மற்றும் பல்கலைக்கழகத்தில் B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


ஊதியம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 20 முதல் 55 வரை இருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை: 

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Written Exam / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு President, URC || TN BN NCC,459 Vasantham Building, Nagercoil-629004 இறுதி நாளுக்குள் (02.05.2023) தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 

02.05.2023


Notification for Nagercoil Military Canteen 2022: Download Here

Share:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 - தவற விட்ராதங்க !


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் .லிருந்து காலியாக உள்ள Internships பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்


பணியின் பெயர்: 

Internships


மொத்த பணியிடங்கள்: 

02


தகுதி: 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc., M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


ஊதியம்: 

தேர்வாகு தகுதியானவர்களுக்கு ரூ.5000/- (Consolidated) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


தேர்வு செயல்முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (மே மாத 2ம் வாரம்) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 

05.05.2023


Notification for மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2022: Download Here

Share:

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?

மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு


அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட எட்டு பாடங்களில், பகுதி நேர ஆசிரியர்களாக, 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். மாதம் தொகுப்பூதியமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.


தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை காலத்திற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. இந்த ஆண்டு கருணையுடன், மே மாத சம்பளம் வழங்க வேண்டும்.


இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு..

 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு.

 (Notification of TN EMIS for those who have applied for Teacher transfer counseling)...

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு (Notification of TN EMIS for those who have applied for Teacher transfer counseling)...

Transfer முக்கிய குறிப்பு

முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல் கட்ட ஒப்புதலுக்காக ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை மீண்டும் நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று BEO / CEO இடம் ஒப்படைக்கவும் )


1. விண்ணப்ப நகல் கையொப்பத்துடன்,

2.தலைமை ஆசிரியரால் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட விண்ணப்ப நகல்) ஒப்படைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர் தலைமை ஆசிரியராக இருப்பின் முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு BEO / DEO(S) / CEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

நாள் :

29/04/2023.


TN EMIS IMPORTANT INFORMATION

ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாறுதல் விண்ணப்பம் online மூலம் விண்ணப்பித்ததில் தவறு இருக்கும் பட்சத்தில் த.ஆ. ஆல் ஏற்கனவே approve கொடுத்திருந்தாலும் Reject செய்து மீண்டும் சரியான தகவலுடன் reapply செய்து த.ஆ. ஆல் approve கொடுக்கப்பட வேண்டும். 

(Reasons : wrong data, missing data, wrong priority, changing priority etc.,) 

Note :  5years priority க்கு அடுத்தே spouse priority எடுத்துக் கொள்ளப்படும். 

TN EMIS.


Share:

மே மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பட்டியல் வெளியீடு!


 மே மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI பட்டியல் வெளியீடு!

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் மே மாதங்களில் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியானது நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கான மாதாந்திர விடுமுறை நாட்களின் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு விடுகிறது. அதன்படி தான் அனைத்து வங்கிகளும் செயல்பட்டு வருகின்றது. மேலும், மாநில வாரியாக கொண்டாடப்படும் பண்டிகைகள் வேறுபடுவதால், அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை நாட்கள் ஒரே மாதிரியாக வருவதில்லை.

தமிழகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடம் – எப்போது வரும் முடிவுகள்? காத்திருக்கும் தேர்வர்கள்!

மாநிலங்களை பொறுத்து விடுமுறை நாட்களும் மாறுபடும். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த பணிகளை திட்டமிட்டுக் கொள்வதற்கு முன்னதாக வங்கி விடுமுறை நாட்களை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விடுமுறை பட்டியல்:

  • மே 1- திங்கட்கிழமை – மகாராஷ்டிரா தினம்/மே தினம் – பேலாபூர், பெங்களூரு, சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், இம்பால், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, திருவனந்தபுரம்
  • மே 2 – செவ்வாய் – மாநகராட்சி தேர்தல் – சிம்லா
  • மே 5 – வெள்ளி – புத்த பூர்ணிமா – அகர்தலா, ஐஸ்வால், பேலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர்
  • மே 7 -ஞாயிற்றுக்கிழமை -ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
  • மே 9 – செவ்வாய் – ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் -கொல்கத்தா
  • மே 13 -சனிக்கிழமை – இரண்டாவது சனிக்கிழமை – எல்லா இடங்களிலும்
  • மே 14 – ஞாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
  • மே 16 – செவ்வாய் – மாநில தினம் (சிக்கிம்) – காங்டாக்
  • மே 21 – ஞாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
  • மே 22 – திங்கட்கிழமை – மகாராணா பிரதாப் ஜெயந்தி – சிம்லா
  • மே 27 – சனிக்கிழமை – நான்காவது சனிக்கிழமை – எல்லா இடங்களிலும்
  • மே 28 – ஞாயிற்றுக்கிழமை -ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்

Share:

மகப்பேறு விடுமுறை வெறும் 2 வாரம் தான்.. புலம்பும் ஊழியர்கள்!


 மகப்பேறு விடுமுறை வெறும் 2 வாரம் தான்.. புலம்பும் ஊழியர்கள்!

டிவீட்டர் நிறுவனத்தில் இருந்து எந்த அறிவிப்பு வந்தாலும், அதன் ஊழியர்களையும், பயனர்களையும் அதிர்ச்சியாக்கும் வகையிலேயே உள்ளது. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பு பலரையும் புலம்ப வைத்துள்ளது.

விடுமுறை:

எலான் மஸ்க் டிவீட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் செயலி முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைத்து வகையிலும் பல அதிரடி மாற்றங்களை செய்தார். நிறுவன ஊழியர்களில் முக்கிய அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையும் நீக்கினார். எந்த வித முன்னறிப்பும் இல்லாமல் கூட பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஊழியர்கள் மகப்பேறு விடுமுறை முன்னதாக 20வாரங்களாக இருந்தது. தற்போது அதனை மஸ்க் 2 வாரமாக அதாவது வெறும் 14 நாட்களாக குறைத்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Share:

இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை....



 இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை....

மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விருப்பத்திற்கு இணங்க இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம்.

பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும்  மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் நடைபெறுகின்றன. அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நூலகங்களில்   குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்த்து நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை  ஊக்கப்படுத்துங்கள். 

இக்கோடை விடுமுறை காலத்தில் தன்னார்வலர்கள்  பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! மாணவர் சேர்க்கை  குறித்த பதிவை இல்லம் தேடிக் கல்வி மொபைல் செயலியில் தவறாது பதிவு செய்யவும். அதிக குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு  சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்!

அனைவருக்கும் வாழ்த்துகள்!


Share:

Definition List

header ads

Unordered List

Support