மே மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI பட்டியல் வெளியீடு!
நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் மே மாதங்களில் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை:
இந்திய ரிசர்வ் வங்கியானது நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கான மாதாந்திர விடுமுறை நாட்களின் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு விடுகிறது. அதன்படி தான் அனைத்து வங்கிகளும் செயல்பட்டு வருகின்றது. மேலும், மாநில வாரியாக கொண்டாடப்படும் பண்டிகைகள் வேறுபடுவதால், அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை நாட்கள் ஒரே மாதிரியாக வருவதில்லை.
தமிழகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடம் – எப்போது வரும் முடிவுகள்? காத்திருக்கும் தேர்வர்கள்!
மாநிலங்களை பொறுத்து விடுமுறை நாட்களும் மாறுபடும். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த பணிகளை திட்டமிட்டுக் கொள்வதற்கு முன்னதாக வங்கி விடுமுறை நாட்களை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விடுமுறை பட்டியல்:
- மே 1- திங்கட்கிழமை – மகாராஷ்டிரா தினம்/மே தினம் – பேலாபூர், பெங்களூரு, சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், இம்பால், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, திருவனந்தபுரம்
- மே 2 – செவ்வாய் – மாநகராட்சி தேர்தல் – சிம்லா
- மே 5 – வெள்ளி – புத்த பூர்ணிமா – அகர்தலா, ஐஸ்வால், பேலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர்
- மே 7 -ஞாயிற்றுக்கிழமை -ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
- மே 9 – செவ்வாய் – ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் -கொல்கத்தா
- மே 13 -சனிக்கிழமை – இரண்டாவது சனிக்கிழமை – எல்லா இடங்களிலும்
- மே 14 – ஞாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
- மே 16 – செவ்வாய் – மாநில தினம் (சிக்கிம்) – காங்டாக்
- மே 21 – ஞாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
- மே 22 – திங்கட்கிழமை – மகாராணா பிரதாப் ஜெயந்தி – சிம்லா
- மே 27 – சனிக்கிழமை – நான்காவது சனிக்கிழமை – எல்லா இடங்களிலும்
- மே 28 – ஞாயிற்றுக்கிழமை -ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.