Daily TN Study Materials & Question Papers,Educational News

10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – அறிவியல் செய்முறைத் தேர்வு பயிற்சி நிச்சயம்!


தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாட செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

செய்முறை தேர்வு:

தமிழகத்தில் மே 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதனையடுத்து தேர்வில் பங்கேற்காதவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்களுக்கான துணைத்தேர்வு ஜூன் 27ம் தேதி துணைத்தேர்வு நடத்தபடும் என்று அரசு தேர்வு இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த துணைத்தேர்வில் பங்கேற்கவுள்ளவர்கள் அறிவியல் பாடத்தின் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். முதலில் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மே 23ம் தேதி முதல் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் ரூ.125 கட்டணம் செலுத்தி அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ளலாம். இதன் மூலம் பயிற்சி அறிவியல் பாட செய்முறை தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். அறிவியல் பாட செய்முறை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த பிறகே கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.


Share:

வெயிலின் தாக்கம் பள்ளிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை., அறிவிப்பு வெளியீடு!

வெயிலின் தாக்கத்தால் பள்ளிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை., அறிவிப்பு வெளியீடு!

 வெயிலின்தாக்கம் பல்வேறு மாநிலங்பளிலும் சற்று அதிகமாகவே உள்ளது .இந்நிலையில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை அதிகரிக்கப்பட்டு வருகிறது .அதே போல்தான் ஒரு மாநிலத்தில் கூடுதல் வெப்பச் சலனத்தின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜூன் 15-ம் தேதி வரை கோடை விடுமுறை என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது .,அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் ?

கோடை விடுமுறை:

உத்திரபிரதேச மாநிலத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்து மே 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், மாணவர்கள் பள்ளிகள் திறப்பு குறித்தான தகவலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியத்துடன் இணைக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்தான தகவல் வெளியாகவில்லை. உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டுமல்லாமல் ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப சலனத்தின் காரணமாக பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா ? அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் ?

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில்

 திட்டமிட்டப்படி ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

 ஏற்கனவே திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 5 தேதி திறக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆஹா அறிவிப்பு

வெயிலின் தாக்கம் பள்ளிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை., அறிவிப்பு வெளியீடு!

Share:

TNPSC Group 4 - தேர்வு தேதி அறிவிப்பு எப்போதோ வந்துவிட்டது., படிக்க தொடங்கி விட்டீர்களா?

 

தொடர் பயிற்சி மட்டுமே பலனைத்தரும் இதுவே tnpsc வெற்றியாளர்களின் தாரக மந்திரம்.இப்போது இருந்தே தொடங்குங்கள் .

குரூப் 4 தேர்வானது 2024ஆம் ஆண்டு பிப்ரவரி-யில் நடத்தப்படும் என தேர்வு கால அட்டவணை (Annual Planner) – யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியாகும் நாள்         -  நவம்பர் 2023

விண்ணப்பம் தொடங்கும் நாள்   -      நவம்பர் 2023

விண்ணப்பிக்க இறுதி நாள்       -          டிசம்பர் 2023

குரூப் 4 தேர்வு நாள்                         -       பிப்ரவரி 2024

தேர்வு முடிவு வெளியாகும் நாள்     -           மே 2024

TNPSC குரூப் 4 தேர்வு 2023 பாடத்திட்டம்

குரூப் 4 பாடத்திட்டத்தை (Syllabus) 10 ஆம் வகுப்பு தரத்தில் வடிவமைத்துள்ளது TNPSC.

TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் சுருக்கிய வடிவத்தை கீழே கொடுக்கின்றோம், பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொது தமிழ்

  • இலக்கணம்
  • இலக்கியம்
  • தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

பொது அறிவு / General Studies

  • பொது அறிவியல்
  • நடப்புநிகழ்வுகள்
  • புவியியல்
  • இந்திய அரசியல்
  • இந்தியா & தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு
  • இந்திய பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • திறனறிவு மற்றும் புத்திகூர்மை தேர்வு. 

ஒவ்வொரு ஆண்டும் தேர்வர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்னவென்றால் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் அப்ளிகேஷன் தொடங்கிய பிறகு படிப்பதற்கு தொடங்க வேண்டும் என்ற நிலையில் உள்ளதால் தான் கடைசியில் தோல்வி மிஞ்சுகிறது. Annual Planner வெளியிட்ட தேதியிலிருந்து அடுத்த ஆண்டுக்கான தேர்வுக்கு நீங்கள் தொடர்ச்சியாக தயாராவதன் மூலமாக தேர்வில் வெற்றி பெறலாம் இதற்கு முந்தைய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை நீங்கள் விசாரிக்கும் போது அவர்கள் எந்த ஒரு நொடியையும் வீணாக்கியதாக தெரிவிப்பதில்லை .அனைத்து நேரங்களிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதே அவர்களுடைய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதால் தான் எங்களால் வெற்றி பெற முடிந்தது என்று பலர் கூறியுள்ளனர். இந்த ஆண்டும் டிஎன்பிஎஸ்சியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இப்போது இருந்தே நீங்க படிக்க தொடங்கும் போது நீங்கள் கண்டிப்பாக அடுத்த ஆண்டு ஒரு அரசு அதிகாரியாக ஆக முடியும்.

#இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் .
Share:

TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு ., கடந்து வந்த பாதை இது!


2010 ஆம் ஆண்டு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அப்போது இருந்து ஆட்சியாளர்கள் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்க்கே பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டனர். ஆனால் தகுதி தேர்வு என்பது   ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு தான் தவிர அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்ய க்கூடாது என்று ஒரு சிலர்  நீதி மன்றத்தை நாடினர் நீதிமன்றமும் வேறு ஏதாவது அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் அரசு  தகுதி தேர்வுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் வெயிட்டேஜ் முறை என்ற ஒரு புதிய அரசாணையை வெளியிட்டது. முதன் முதலில் ஆசிரியர் தகுதி தேர்வு 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 நடைபெற்றது. தேர்வில் சுமார் 4 முதல் 5 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் காலிப் பணியிடங்களை காட்டிலும் மிகக் குறைவான அளவில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர் இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுதேர்வை அக்டோபர் மாதம் நடத்தியது இதற்காக தேர்வு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. இதற்கான தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,000 க்கு மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் 10000 க்கு மேலும் தேர்ச்சி பெற்றனர் அப்போது ஏற்பட்ட காலிப் பணியிடங்களின் மூலம் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டது. பிறகு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது ஆனால் இந்த தகுதி தேர்வில் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர் இதனால் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்க முடியவில்லை. எனவே வெயிட்டேஜ் முறையை அரசு பின்பற்றியது இந்த வெயிட்டேஜ் முறையை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடினர் நீதி அரசர் நாகமுத்து அவர்கள் வெயிட்டேஜ் முறையை அறிவியல் பூர்வமாக கணக்கிடும்படி அரசுக்கு பரிந்துரை செய்தார்.அதே சமயத்தில் அன்று முதலமைச்சராக இருந்த மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்ணை 90 ல் இருந்து 82 ஆக குறைத்தார்

 இது தற்போது நடைபெற்ற 2013-க்கும் பொருந்தும் என்றும் கூறினார்.

 எனவே எனவே தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தது. வெயிட்டேஜ் முறையில் 12 ம் வகுப்பு, இளங்கலையில் (UG) மற்றும் B.Ed யில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுவரை போராடாத ஆசிரியர்கள் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடினர் அரசும் இவரது போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினர் நீதிமன்றமும் இடைக்கால தடை பிறப்பித்தது இருப்பினும் அரசு மேல்முறையீடு செய்து தடையை நீக்கியது. பணி நியமனம் இரவோடு இரவாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது இதில் கணிசமான அளவில் தேர்ச்சி பெற்றனர் ஆனால் பணி நியமனம் ஏதும் வழங்கப்படவில்லை அதே ஆண்டில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வை நடத்த அரசாணை 149 பிறப்பித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 ஆம் ஆண்டு மீண்டும் தகுதி தேர்வை நடத்தியது இதில் மிகக் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2021 ஆம் ஆண்டு வருடாந்திர தேர்வு அட்டவணையில் போட்டிதேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிக்கை வெளியிட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன அறிவிப்பை வெளியிட்டது.அதில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வும் நடைபெறும் என்றும் அறிவித்தது. முதன்முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு கணினி வழியில் நடைபெற்றது. இதில் கணிசமான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது இடைநிலை ஆசிரியர்  6000 பணியிடங்களுக்கு மேல் உள்ளது இதற்கு 60,000 க்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதே போல் பட்டதாரி ஆசிரியர்களின் சுமார் 4000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இதிலும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


ஆசிரியர் தேர்வு வாரியம் மே மாதம் போட்டி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களால் எவ்வாறு நியமன தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று நியமனத் தேர்வை ரத்து செய்ய(Go.149) வேண்டும் என்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் (TET+ EMPLOYMENT SENINORITY) செய்யப்பட வேண்டும் என்று போராட்டத்தை தற்போது நடத்தி வருகிறார்கள் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், கல்வியாளர்களும, ஆசிரியர் கூட்டமைப்பினரும், ஆதரவு அளித்து வருகிறார்கள்.

ஒரு சிலர் போட்டி தேர்வுக்கு தயார் செய்து கொண்டு வருகின்றனர்.

 ஆனால் தற்போது போட்டித் தேர்வு நடைபெறுமா ? அல்லது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவரை நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

      நன்றி வணக்கம்...

Share:

EMIS - TC INSTRUCTIONS & புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்-தொர்பாக - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை!


மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அடுத்த வகுப்பிற்கு செல்ல 2023-2024ஆம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து வகை பள்ளி மாணவர்களின் தேர்ச்சிசார் விவரங்களையும் ( Promotion Module ) மாற்றுச் சான்றிதழையும் ( T.C ) கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) வழியாக சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 3105.2023 - க்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


 2023-2024ஆம் கல்வியாண்டில் அனைத்து தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

EMIS TC instruction - Download here...

Share:

மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்!

நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 


மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் வரும் 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரூ 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

2018-19ஆம் ஆண்டு முதல் ரூ.2,000 நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் வங்கிகளில் செலுத்தப்படும் ரூ2,000 நோட்டுகளை வங்ள் புழக்கத்தில் விடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 


மேலும் தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் எனவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 


Share:

5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் ., தொடர் காத்திருப்புப் போராட்டம்!

5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் காத்திருப்புப் போராட்டம்! - TNPTF அறிவிப்பு!

பதவி உயர்வுக்கு TET தேவையில்லை என கொள்கைமுடிவு எடுத்திடவும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டைக் களைந்திடவும் வலியுறுத்தி ஜுலை 14 முதல் சென்னை அன்பழகனார் வளாகத்தில் நடத்திட TNPTF மாநிலச் செயற்குழுவில் முடிவு


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (19.05.2023) மதுரையில் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.

மாநில செயற்குழுக் கூட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் கூறியதாவது:

👉2022-23 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுகள் இதுவரை நடைபெறவில்லை. கலந்தாய்வு அட்டவணையில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இடம் பெறவில்லை. இதற்குக் காரணம் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் என்று கூறப்படுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009-ன் படி ஆசிரியர் நியமனத்திற்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் பெறும் ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. வேறு எந்தத் துறையிலும் இது போன்ற நிலை இல்லை. இதனால் ஆசிரியர்களுக்கு இருந்த மிகக் குறைந்த பதிவு உயர்வு வாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு அவசியமில்லை என்பதை உறுதியான கொள்கை முடிவாக எடுத்து அறிவித்து நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து பதிவு உயர்வுக் கலந்தாய்வை விரைந்து நடத்திட வேண்டும்.

👉அதேபோன்று இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கையைக் காலதாமதமின்றி பெற்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவுள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனையை விரைந்து தீர்த்திட வேண்டும். குழு அமைத்தது என்பது பிரச்சனையைக் கிடப்பில் போட்டதாக ஆகிவிடக் கூடாது.


👉மேலும், காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் உட்பட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.


👉பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தை முன்பு போல் பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடமாக மாற்ற வேண்டும். தொடக்கக்கல்வித்துறை முன்பு போல் தனித்துவத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.


👉தமிழ்நாடு அரசு 01.04.2023 முதல் அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை 01.01.2023 முதல் வழங்க வேண்டும். 


👉பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றைத் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வழங்கிட வேண்டும்.


👉ஆசிரியர்களின் உயர்கல்விக்கான பின்னேற்பு அனுமதி உடனடியாக அளிக்கப்பட வேண்டும், ஆசிரியர்களின் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறுவதில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும்.


👉மாநில முழுவதும் விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல்களை ரத்துச் செய்திட வேண்டும்.


👉தொடக்கக்கல்வி இயக்குநர் மட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுக்களின் மீது உரிய தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேற்கண்ட தீர்மானங்களில் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி 
வளாகத்தில் வரும் ஜூலை 14 முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் காத்திருப்புப் போராட்டம் நடத்த மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் (STFI) உள்ள சங்கங்களுடன் இணைந்து வரும் ஜூன் மாதத்தில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதெனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் பொதுச்செயலாளர் ச.மயில் தெரிவித்தார்.

Share:

பிளஸ் 1 பொதுத்தோ்வை 7.73 லட்சம் போ் எழுதினா்.,பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

தமிழ்நாட்டில் மாா்ச் 14 முதல் ஏப்.5 வரை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தோ்வை 7.73 லட்சம் போ் எழுதினா். 

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்

இயற்பியல் 95.37%

வேதியியல் 96.74%

உயிரியல் 96.62%

கணிதம் 96.01%

தாரவவியல் 95.30%

விலங்கியல் 95.27%

கணினி அறிவியல் 99.25%

வணிகவியல் 94.33%

கணக்குப்பதிவியல் 94% 




Share:

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


பிளஸ் 1 தேர்வில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.36% பேரும், மாணவர்கள் 86.99% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 7.37% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூரில் 96.38% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 


தமிழ்நாட்டில் மாா்ச் 14 முதல் ஏப்.5 வரை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தோ்வை 7.73 லட்சம் போ் எழுதினா். 

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்

இயற்பியல் 95.37%

வேதியியல் 96.74%

உயிரியல் 96.62%

கணிதம் 96.01%

தாரவவியல் 95.30%

விலங்கியல் 95.27%

கணினி அறிவியல் 99.25%

வணிகவியல் 94.33%

கணக்குப்பதிவியல் 94% 


மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்

திருப்பூரில் 96.38% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுமுதலிடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக..

 ஈரோடு 96.18%

கோவை 95.73%

நாமக்கல் 95.60%

தூத்துக்குடி 95.43%

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் 

மாநகராட்சி பள்ளி 82.86%

நகராட்சி பள்ளி 88.10%

ஆதிதிராவிடர் பள்ளி 76.10%

பழங்குடியினர் பள்ளி 90.69%

சமூகநலத் துறை பள்ளி 87.64%

கள்ளர் பள்ளி 90.43%

மாணவா்கள்  இணையதள முகவரிகளில் தங்களது தோ்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தோ்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறியலாம்.


மாணவா்களுக்கு பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித் தோ்வா்களுக்கு, இணைய வழியில் விண்ணப்பித்த போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Share:

Definition List

header ads

Unordered List

Support