Daily TN Study Materials & Question Papers,Educational News

9th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

9th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

9th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

9th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

9th Tamil

9th Tamil - 3rd Mid Term Original Question Paper  2024 -Download Here

9th English

9th English- 3rd Mid Term Original Question Paper  2024- Download Here

9th Maths

9th Maths- 3rd Mid Term Original Question Paper  2024 - Tamil Medium Download Here

9th Maths- 3rd Mid Term Original Question Paper  2024 -English Medium Download Here

9th Science

9th Science- 3rd Mid Term Original Question Paper  2024 - Tamil Medium Download Here

9th Science- 3rd Mid Term Original Question Paper  2024 -English Medium Download Here

9th Social

9th Social - 3rd Mid Term Original Question Paper  2024 -Tamil Medium  Download Here

9th Social - 3rd Mid Term Original Question Paper  2024 -English Medium Download Here

Share:

8th std - 3rd Mid Term Question Paper 2024

8th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

8th std - Third Mid Term Question Paper 2024 , Important Model

8th Tamil

8th Tamil - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

8th English

8th English - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

8th Maths

8th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

8th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

8th science

8th science - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

8th science - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium  Download Here

8th Social

8th Social - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

8th Social - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

Share:

7th std - 3rd Mid Term Question Paper 2024

7th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

7t std - Third Mid Term Question Paper 2024 , Important Model


7th Tamil

7th  Tamil - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

7th English

7th English - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

7th Maths

7th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

7th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

7th science

7th science - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

7th science - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium  Download Here

7th Social

7th Social - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

7th Social - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

Share:

தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம்..!!

தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம்..!!

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய, 2010ல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, நேரடி நியமனத்திற்கான காலியிடங்களில், 20 சதவீதம் பணியிடங்களை, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, அந்த சட்டம் வழிவகை செய்தது.

ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை, முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, சட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது உரிய அலுவலரிடமிருந்து, தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உயர் கல்வி, வேளாண், மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், சட்டத்துறை ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட கல்லுாரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லுாரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த, பல்கலைப் பதிவாளரிடம், தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.


Share:

AI இளநிலை படிப்பு சென்னை ஐஐடி -யில் ஜூலை மாதம் தொடக்கம்..!!

 AI இளநிலை படிப்பு சென்னை ஐஐடி -யில் ஜூலை மாதம் தொடக்கம்..!!

சென்னை ஐஐடியில் `வாத்வானி தரவு அறிவியல்' மற்றும் `செயற்கைநுண்ணறிவு' (ஏஐ) மையத்தை தொடங்குவதற்கான அறிமுக நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நிறுவனவளாகத்தில் நேற்று நடைபெற்றது.

சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, முதல்வர் மகேஷ் பஞ்சக்னுலா, ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக் டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில்தரவு அறிவியல் மற்றும் செயற்கைநுண்ணறிவு துறை அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த துறையின் அடுத்தகட்டவளர்ச்சிக்காக தற்போது ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக்டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, ரூ.110 கோடி நிதி அளித்திருக்கிறார்.

அடுத்து வரும் 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிலே இந்த துறை முதலிடத்திலும், உலக அளவில் முதல் 5 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு.

இதையொட்டி தரவு அறிவியல்,செயற்கை நுண்ணறிவுத் துறையில்மருத்துவம், வேளாண்மை, உற்பத்திஉள்ளிட்டவைகளில் தனி கவனம்செலுத்தி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

சென்னை ஐஐடியில் ஏற்கெனவே பி.எஸ். தரவு அறிவியல் ஆன்லைன் படிப்பில் 25 ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், உலக அளவில் முதல்முறையாக இளநிலை படிப்புகளில் பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுஎன்ற படிப்பையும் ஜூலை மாதம்தொடங்க உள்ளோம். இந்த படிப்பானது போதிய அளவு வேலை வாய்ப்பை வழங்கக் கூடியதாக இருக்கும்.

இந்தப் படிப்புக்கான மாணவர்சேர்க்கை ஜேஇஇ நுழைவுத்தேர்வுவழியாகவே நடத்தப்படும். முதல்கட்டமாக 30 இடங்களுடன் இந்த படிப்புஆரம்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, முதுநிலை எம்.டெக். தரவு அறிவியல் - செயற்கை நுண்ணறிவு படிப்பும் தொடங்கப்படும். இதற்கான மாணவர்சேர்க்கை கேட் தேர்வு மூலம் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.


Share:

நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் பிப்ரவரியில் தொடக்கம்..!!

நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் பிப்ரவரியில் தொடக்கம்..!!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, 2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை அறிவிக்க உள்ளது.


Share:

TNPSC GROUP 4 & VAO 2024 Notification – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

TNPSC GROUP 4 & VAO 2024 Notification – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!


விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2024 – 28.02.2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Group 4 தேர்வு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 6244 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே ஒவ்வொரு தலைப்பின் தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அதனை தற்போதே ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.

TNPSC-ன் கீழ் வெளியாகும் குரூப் 4 பணிக்கு மொத்தமாக 6244 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Village Administrative Officer - 108

Junior Assistant - 2442

Junior Assistant & 44

Junior Assistant - 10

Junior Assistant - 27

Junior Assistant - 49

Junior Assistant - 15

Junior Assistant - 7

Junior Assistant - 10

Typist - 1653

Typist - 3

Typist - 39

Typist - 7

Steno-Typist (Grade – III) - 441

Steno-Typist - 2 

Steno-Typist - 2

Personal Assistant to Chairman (StenoTypist II) - 1
Personal Clerk to Managing Director/General Manager (Steno Typist III) - 2

Private Secretary (Grade-III) - 4

Junior Executive (Office) - 34

Junior Executive (Typing) - 7

Receptionist cum Telephone Operator -1

Milk Recorder, Grade III - 15

Laboratory Assistant - 25

Bill Collector - 66

Senior Factory Assistant - 49

Forest Guard - 171

Forest Guard with Driving Licence - 192

Forest Watcher - 526

Forest Watcher (Tribal Youth) - 288

Junior Inspector of Cooperative Societies1

TNPSC கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேலும், Steno-Typist (Grade – III) பதவிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC VAO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 42 (பிரிவுகளுக்கு ஏற்ப) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பதவிகளுக்கு வயது வரம்பு கிடையாது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு அவரவர் பணிக்கு ஏற்ப குறைந்த பட்சம் ரூ.16,600 முதல் அதிகபட்சம் ரூ.75,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TNPSC Group 4 தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு ஆனது தமிழ் தகுதி தேர்வு மற்றும் பொதுப் படிப்பு மற்றும் திறன் மற்றும் மன திறன் தேர்வு என 3 வகைப்படும்.

TNPSC Group 4 விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ. 150/- (இது முறை செலுத்தினால் 5 வருடங்களுக்கு செல்லும்)

தேர்வுக் கட்டணம் – ரூ.100/-

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.01.2024 முதல் 28.02.2024 வரை தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Notification PDF Download

Share:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா நீங்கள் ???அப்போ இதை மறக்காம படிங்க ..!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா நீங்கள் ???அப்போ இதை மறக்காம படிங்க ..!

பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில், எப்படி படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம், கவனசிதறல்களை குறைப்பது எப்படி என்பது குறித்து, உளவியல் ஆலோசகர் கவிதா பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இதை பின்பற்றினாலே, முழு மதிப்பெண்கள் உறுதியாக பெறலாம்.அட்டவணை தயாரித்தல்எதையும் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற டயலாக்குக்கு ஏற்றாற்போல், பொதுத்தேர்வு அட்டவணை, இடைப்பட்ட நாட்கள் எத்தனை, தினசரி படிக்க வேண்டிய பாடங்கள் குறித்த அட்டவணையை முதலில் தயாரித்து கொள்ளுங்கள். அனைத்து பாடங்களிலும் குறிப்பிட்ட பகுதியாவது, தினமும் படிக்க வேண்டுமென்பதை உறுதி கொள்ளுங்கள். கடின பாடங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்கிவிடுங்கள். ஒருமுறை எழுதி பார்ப்பது, இருமுறை படிப்பதற்கு சமம்.

ஆரோக்கிய உணவு

சுற்றுச்சூழல் மாற்றம், புதிய வகை நோய்கள் என, தினசரி மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. பருவக்கால நோய்களில் இருந்து விடுபட, உடலின் ஆரோக்கியம் கிரீன் சிக்னலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீண்ட நேரம் படிக்க முடிவெடுத்தால், அருகில் வாட்டர் பாட்டில் இருப்பது அவசியம்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். தேர்வு நெருங்குவதால், அடிக்கடி துரித உணவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இறுதிநேரத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டால், ஓராண்டு முழுவதும் படித்த படிப்பு வீணாகி விடும்.

குட்டி பிரேக் எடுக்கணும்

படிக்கும் போது எடுக்கும் குட்டி பிரேக், மூளையை இன்னும் சுறுசுறுப்பாக்கும். தேர்வு துவங்கிவிட்டால், விளையாட்டு, பொழுதுபோக்கை மூட்டை கட்டி விடுவது நல்லதல்ல. நம் மூளைக்கு எனர்ஜி கொடுப்பதே, சுறுசுறுப்பான உடல், மன இயக்கம் தான். 6-8 மணி நேர துாக்கம், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நடைப்பயிற்சி, தியானம், யோகா அல்லது பாட்டு கேட்பது, டான்ஸ் ஆடுவது என, நம்மை நாமே பிரஷ் ஆக வைத்து கொள்ள வேண்டும்.

பெற்றோரே...இது உங்களுக்கு! பெற்றோரே... உங்கள் குழந்தையை விட, அவர்கள் பெறும் மதிப்பெண்கள் பெரிதல்ல. வீட்டில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி கொடுங்கள். சத்தான உணவு சமைத்து கொடுப்பது, சிறிது நேரம் அவர்களுடன் பேசுவது, அவர்களிடம் உள்ள பயத்தை போக்கி தன்னம்பிக்கை தருவது அவசியம். டார்கெட் கொடுத்து அவர்களிடம் சுமையை ஏற்றாமல், ரிலாக்ஸாக படிக்க உதவுவதே சிறந்த பேரன்டிங்!.

Share:

பிப்ரவரியில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!!

பிப்ரவரியில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!!

பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த முழு பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது பிப்ரவரி மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களை சேர்த்து 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை காணலாம்.

  • பிப்ரவரி 4, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 10, 2024: இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 11, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 14, 2024: பசந்த பஞ்சமி காரணமாக திரிபுரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 15, 2024: Lui-Ngai-Ni காரணமாக மணிப்பூரின் வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 18, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 19, 2024: சத்ரபதி சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 20, 2024: மாநில தினம் காரணமாக மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 24, 2024: இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 25, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 26, 2024: நியோகம் காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

Share:

தமிழகத்தில் நாளை (ஜன. 30) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை (ஜன. 30) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி ஆராதனை விழா நடைபெற இருக்கும் நிலையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 177 வது ஆராதனை விழா கடந்த ஜனவரி 26ம் தேதி தொடங்கப்பட்டுள்ள நிலையில் முப்பதாம் தேதி வரையிலும் நடைமுறை இருக்கிறது. தியாகராஜ ஸ்வாமிகள் சித்தியடைந்த பஞ்சமி நாளாகிய ஜனவரி 30-ம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆராதனை விழா நடைபெற இருக்கிறது.

இந்த ஆராதனை விழாவன்று இசை கலைஞர்கள் கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். மேலும், இந்த விழா ஜனவரி 26 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆராதனை விழாவையொட்டி ஜனவரி 30 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் அறிவித்துள்ளார். 

Share:

Definition List

header ads

Unordered List

Support