10th,9th std tamil இலக்கிய நயம் பாராட்டல்

நயம் பாராட்டுக.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே 
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே 
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
 மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே 
மென்காற்றில் விளை கமே சுகத்தில்உறும் பயனே
 ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் 
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே .

திரண்ட கருத்து:

          கோடையில் இளைப்பாறும் வகையில் கிடைத்த குளிர்ச்சி பொருந்திய தரு ஆனவன். மரம் (தரு) தரும் நிழலாகவும், நிழலின் குளிர்ச்சியாகும், நிழல் தரும் கனியாகவும் இருப்பவன். ஓடையிலே ஊறுகின்ற இன்சுவை நீராகவும், நீரின் இடையில் மலர்ந்து சுகந்தம் தரும் வாசமலராகவும் திகழ்பவன், மேடையிலே வீசுகின்ற மென்பூங்காற்றாகவும், மென்காற்று தரும் சுகமாகவும் சுகத்தின் பயனாகவும் இருக்கும் இறைவா, இவ்வுலக வாழ்வில் ஆடிக்கொண்டிருக்கும் என்னையும் ஏற்றுக்கொண்ட (மனந்த) தலைவனே (மணவாளனே) பொதுவிலே ஆடுகின்ற, ஆட்டுவிக்கின்ற எம் அரசே நான் தரும் பாமாலையை (அலங்கல்) அணிந்து எனக்கு அருள் செய்வாயாக,

மோனை நயம்:

குயவனுக்கு பானை செய்யுளுக்கு மோனை
 செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை ஆகும்.

மேடையிலே - மென்காற்று....

டையிலே...  - டுகின்ற...

என்று மோனை நயமும் மிகுந்து வருகிறது.


எதுகை நயம்

மதுரைக்கு வைகை செய்யுளுக்கு  அழகெ எதுகை
எதுகை முதல் எழுத்து அளவொத்திருக்க அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகையாகும். 
இப்பாடலில்
கோடையிலே -ஒடையிலே 
மேடையிலே -ஆடையிலே

என்று எதுகை நயம் அமைந்துள்ளது.

இயைபு நயம்
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும், 
தண்ணீரே 
மலரே 
என இயைபு நயமும் உள்ளது.

அணி நயம்:

அணி என்றால் அழகு. இப்பாடலின் அழகுக்கு அழகு செய்யும் வகையில், 
குளிர் தருவே
நிழல் கனிந்த 
 இறைவனை உருவகப்படுத்தும் "உருவக அணியின்" இறைவனை மேன்மைப்படுத்தி உயர்த்திப் புகழ்ந்து பாடியிருப்பதால் உயர்வு நவிற்சி அணியும்" அமைந்து பாடலுக்கு நயம் கூட்டியுள்ளது.

சந்த நயம்: | 
இப் பாடல் இனிய ஓசையுடன், இசையுடன் பாடும் வகையில், ஒழுகிய ஓசையாய் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' பெற்று அகவலோசையுடன் சந்த நயமும் மிக்குள்ளது.

முடிவுரை
* இப்பாடல் அனைத்து இலக்கிய நயங்களுமுடையதாய் படிப்போர் மனதில் இறைபக்தியையும், இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது



Share:

10th std letter writting tamil | பத்தாம் வகுப்பு தமிழ் கட்டுரை

வாழ்த்து மடல் எழுதுக.

திருநெல்வேலி மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.


திருநெல்வேலி,
12-3-19.


அன்புள்ள நண்பா,
                        நான் நலம், உன் நலம் மற்றும் உன் வீட்டார் அனைவரின் நலம் அறிய ஆசை, மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற செய்தியை நாளிதழில் உன் புகைப்படத்துடன் கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.

மரங்களின் பயன்களையும், மரங்களை அழிப்பதனால் ஏற்படும் தீமைகளையும் பற்றி பல நல்ல கருத்துகளைக் கூறியிருக்கிறார். மரங்களை அழித்துக் கொண்டே போனால் நாம் உயிர் வளியைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும் என்ற செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். இதை நினைக்கும் போது மனம் வருத்தம் அடைகிறது.

உயிர் வளியைக் காசு கொடுத்து வாங்கும் நிலை வராதபடி நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி "வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் ; மரங்களை அழிக்காதீர்!" என்று அச்செயல்களில் ஈடுபடுவோம். தூய காற்றை சுவாசிப்போம், நீ மேலும் பல கட்டுரைகளை எழுதி பரிசுகள் பெற்று மகிழ்வுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு, 
உன் தோழன், 
அ. சங்கர்.

உறை மேல் முகவரி,
க.கண்ண ன், 
வடமலை தெரு திருநகர்,
மதுரை - 11


Share:

பத்தாம் வகுப்பு கடிதம் || 10th std letter Tamil

கடிதம் எழுதுக.

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்,

               ஆர். இராகவன், 16,  
                பெரியகடைவீதி, 
                தஞ்சாவூர்
பெறுநர்,
                 ஆசிரியர் அவர்கள், 
                  'கனல்' நாளிதழ், 
                   மதுரை.
பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல் - தொடர்பாக.
மதிப்பிற்குரிய ஐயா,
                    தங்கள் நாளிதழின் சார்பாக பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம். என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். அக்கட்டுரையைத் தங்கள் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளேன். ஒன்று எழுதியுள்ளேன். தொழிலுக்கு செய்கையை ஒட்டி தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் என் கட்டுரையும் வெளிவர ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

                       நன்றி!

இப்படிக்கு, 
ஆர். இராகவன்.

உறைமேல் முகவரி:
ஆசிரியர் அவர்கள், 
'கனல்' நாளிதழ் அலுவலகம், 
மதுரை - 10.
Share:

10th,11th,12th Public exam time table June 2020

பத்தாம் வகுப்பு. மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு ஆண்டு பொதுத் தேர்வுகள் - புதிய தேர்வுக்கால அட்டவணைகள்


  1. 21.03.2020 தேதியிட்ட தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி, நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சார்பாக ஏற்கனவே, 
27.03.2020 முதல் 13.04.2020 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல், 2020 பருவத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்
  1.  மற்றும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகள் வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
  2. 24.03.2020  நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகள் வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுத இயலாத தேர்வர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
  3. தற்போது ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு, 
  4. மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும்
  5.  24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதாத தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த கால இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. 
  6. இக்கால  தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும், இணைப்பு: 
தேர்வு கால அட்டவணைகள்.

10th Public Exam Timetable

 S.No Subjects Exam Date
 1 Tamil 01-06-2020
 2 English 03-06-2020
 3 Mathematics 05-06-2020
 4 Optional Language 06-06-2020
 6 Science 08-06-2020
 7 Social Science 10-06-2030
 8 Vocational 12-06-2020

11th Last exam Time table

 S.No Subjects Exam dateold syllabus
1

 Chemistry
Accountancy
Geography
 02-06-2020 Chemistry
Accountancy
Geography
Vocational Accountancy Theory

12th public exam time table
Reexam for Absentees (24-03-2020)

 S.No Subjects exam date old Syllabus
 1 Chemistry
Accountancy
Geography
 04-06-2020 Chemistry
Accountancy
Geography

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support