10th,9th std tamil இலக்கிய நயம் பாராட்டல்

நயம் பாராட்டுக.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே 
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே 
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
 மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே 
மென்காற்றில் விளை கமே சுகத்தில்உறும் பயனே
 ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் 
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே .

திரண்ட கருத்து:

          கோடையில் இளைப்பாறும் வகையில் கிடைத்த குளிர்ச்சி பொருந்திய தரு ஆனவன். மரம் (தரு) தரும் நிழலாகவும், நிழலின் குளிர்ச்சியாகும், நிழல் தரும் கனியாகவும் இருப்பவன். ஓடையிலே ஊறுகின்ற இன்சுவை நீராகவும், நீரின் இடையில் மலர்ந்து சுகந்தம் தரும் வாசமலராகவும் திகழ்பவன், மேடையிலே வீசுகின்ற மென்பூங்காற்றாகவும், மென்காற்று தரும் சுகமாகவும் சுகத்தின் பயனாகவும் இருக்கும் இறைவா, இவ்வுலக வாழ்வில் ஆடிக்கொண்டிருக்கும் என்னையும் ஏற்றுக்கொண்ட (மனந்த) தலைவனே (மணவாளனே) பொதுவிலே ஆடுகின்ற, ஆட்டுவிக்கின்ற எம் அரசே நான் தரும் பாமாலையை (அலங்கல்) அணிந்து எனக்கு அருள் செய்வாயாக,

மோனை நயம்:

குயவனுக்கு பானை செய்யுளுக்கு மோனை
 செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை ஆகும்.

மேடையிலே - மென்காற்று....

டையிலே...  - டுகின்ற...

என்று மோனை நயமும் மிகுந்து வருகிறது.


எதுகை நயம்

மதுரைக்கு வைகை செய்யுளுக்கு  அழகெ எதுகை
எதுகை முதல் எழுத்து அளவொத்திருக்க அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகையாகும். 
இப்பாடலில்
கோடையிலே -ஒடையிலே 
மேடையிலே -ஆடையிலே

என்று எதுகை நயம் அமைந்துள்ளது.

இயைபு நயம்
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும், 
தண்ணீரே 
மலரே 
என இயைபு நயமும் உள்ளது.

அணி நயம்:

அணி என்றால் அழகு. இப்பாடலின் அழகுக்கு அழகு செய்யும் வகையில், 
குளிர் தருவே
நிழல் கனிந்த 
 இறைவனை உருவகப்படுத்தும் "உருவக அணியின்" இறைவனை மேன்மைப்படுத்தி உயர்த்திப் புகழ்ந்து பாடியிருப்பதால் உயர்வு நவிற்சி அணியும்" அமைந்து பாடலுக்கு நயம் கூட்டியுள்ளது.

சந்த நயம்: | 
இப் பாடல் இனிய ஓசையுடன், இசையுடன் பாடும் வகையில், ஒழுகிய ஓசையாய் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' பெற்று அகவலோசையுடன் சந்த நயமும் மிக்குள்ளது.

முடிவுரை
* இப்பாடல் அனைத்து இலக்கிய நயங்களுமுடையதாய் படிப்போர் மனதில் இறைபக்தியையும், இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது



Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...