TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு & பதவிகள் – முழு விபரம் உங்களுக்காக!

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு & பதவிகள் – முழு விபரம் உங்களுக்காக!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட சில முக்கியமான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

குரூப் தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் ஒவ்வொரு பணியிடங்களும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப் 4 வரையுள்ள அனைத்து பணிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இப்போது கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சரிவர நடத்த முடியாதபடி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள TNPSC போட்டித்தேர்வுகள் வரவிருக்கும் புதிய ஆண்டில் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கான TNPSC வருடாந்திர தேர்வு கால அட்டவணையும் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டது. இதில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் 2022 மார்ச் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தேர்வு மூலம் சுமார் 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதனால் TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய சில முக்கியமான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அந்த வகையில் முதலாவதாக, குருப் 4 தேர்வு மூலம் 

  1. இளநிலை உதவியாளர், 
  2. தட்டச்சர், 
  3. சுருக்கெழுத்து தட்டச்சர், 
  4. VAO
  5. வரி தண்டலர், 
  6. நில அளவர், 
  7. வரையாளர் 

ஆகிய 7 பதவிகள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் TNPSC குரூப் 4 தேர்வில் கலந்து கொள்பவர்கள் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும் பட்டப்படிப்புக்கு ஏற்றபடி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...