தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 72.20 லட்சம் பேர் காத்திருப்பு! ஷாக் ரிப்போர்ட்!

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 72.20 லட்சம் பேர் காத்திருப்பு! ஷாக் ரிப்போர்ட்!



தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை குறித்த விவரங்களை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் அரசு வேலை பெற அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். மேலும் அவ்வவ்போது கல்வித் தகுதிகளையும் அப்டேட் செய்ய வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து வர வேண்டும். இதற்காக இணையதளம் வாயிலாகவும் அல்லது நேரடியாகவும் புதுப்பிப்பு செய்யலாம். தமிழகத்தில் 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசு தற்போது 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது. இதை பயன்படுத்தி ஏராளமானோர் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து வருகின்றனர்.


மேலும் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் 300 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் 600 ரூபாயும் 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை உண்டு.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற வருமான உச்ச வரம்பு கிடையாது. தற்போது தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 72 ,20 ,454 ஆக உள்ளது. அதில் 33,81,966 போ் ஆண்கள் மற்றும் 38,38,264 போ் பெண்கள் மேலும் 224 போ் மூன்றாம் பாலினத்தவா்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...