தமிழகத்தில் பொங்கல் பரிசாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அரசின் திட்டம்.

தமிழகத்தில் பொங்கல் பரிசாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அரசின் திட்டம்.



தமிழக அரசு நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூடிய விரைவில் நிறைவேற்ற உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. அத்துடன் தற்பொழுது பொங்கல் தினத்தை மேலும் சிறப்பாக கொண்டாட கூடுதல் அறிவிப்பை அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கு உதவிபுரியும் வகையில் நகைக்கடன் தள்ளுபடியை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அரசாணை ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களுடன் விவசாயம் செய்ய நகைக்கடன் பெற்றிந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும் விவசாயம் சாராத கடன்களுக்கு தள்ளுபடி செல்லாது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக போலி நகைகளை கொண்டு கடன் வாங்குவது மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று வருகின்றனர். இந்த முறைகேடுக்கு வங்கி அதிகாரிகளும் உதவி செய்கின்றனர்.

இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் கூட்டுறவு சங்க நகைக்கடன்களை ஆய்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இப்பணிகளை வருகிற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகைக்கடன் தள்ளுபடியை அமல்படுத்த உள்ளதாக அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன் கடன் தள்ளுபடி குறித்த ரசீதும், நகைகளும் பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...