தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது – வெளியான தகவல்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது – வெளியான தகவல்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு விடுமுறை கிடையாது என்று தமிழக அரசால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



அரையாண்டு விடுமுறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. எனினும் நீண்ட காலம் கொரோனாவால் கடந்த நிலையில் வருடத்தின் கடைசியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 72.20 லட்சம் பேர் காத்திருப்பு! ஷாக் ரிப்போர்ட்!

அவ்வாறு திறக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 3ம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதாவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை அரையாண்டு தேர்வுக்கு வழங்கப்படும் 10 நாள் விடுமுறையில் கொண்டாடுவது வழக்கம்.

அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மதிப்புமிகு. ஆணையர் அறிவிக்கக்கோரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

ஆனால் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடைபெறாததால் விடுமுறை மட்டும் வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மாணவர்களுக்கு டிச.10 முதல் 20ம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் வருவதால் அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து வாரத்தில் 6 நாட்கள் வேலை பார்த்து வந்த ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments