தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2022 பொங்கல் பரிசு – பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2022 பொங்கல் பரிசு – பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளன. அதற்கான பொருட்களை பாக்கெட் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான தை முதல் நாளில் தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். மேலும் ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால் தற்போதைய அறிவிப்பில் பணம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, ஆவின் நெய் போன்ற பொங்கல் வைக்க தேவையான பொருட்களும், அது போக மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை கோதுமை மாவு உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் உட்பட 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. சுமார் 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மஞ்சள் பையில் 20 பொருட்களுடன் பொங்கல் பரிசு – அரசு அறிவிப்பு..

மேலும் ஜனவரி 3ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வழங்கப்படவுள்ள பொருட்களை பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்களை ரேஷன் கடைகளுக்கு கொண்டு சேர்க்க வாணிப கழகத்தினர் மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் கூடுதலாக சுமை தூக்கும் ஊழியர்களை நியமித்துள்ளனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...