தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் எச்சரிக்கை! - எந்தெந்த மாவட்டங்கள் இதோ!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் எச்சரிக்கை! - எந்தெந்த மாவட்டங்கள் இதோ!

தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர்‌, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி

மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

01.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி,திருப்பூர்‌,திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர்‌, விருதுநகர்‌, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌,திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

03.09.2022 மற்றும்‌ 04.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...