தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!


தமிழகத்தில் அனைத்து அப்பள்ளிகளும் கொரோனாவுக்கு முன்பு இருந்து போல வழக்கமாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து சுற்றறிக்கையும் அனுப்பபட்டுள்ளது.


தூய்மை பணி:

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் புதிய முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. நடப்பு ஆண்டில் திமுக ஆட்சியில் பள்ளிகல்வி துறையில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளிகளில் மாணவர்களை கொண்டு தூய்மை பணிகளை செய்ய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பள்ளிகளில் NCC, தேசிய சாரணர் அமைப்பில் உள்ள மாணவர்களும் பிற மாணவர்களும் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள்.


இந்த நிலையில் இனி மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி தூய்மை பணியில் ஈடுபடுத்த கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை செய்ய 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றிக்கையில், எதிர்வரும் மழைக் காலத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய கட்டிட பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மழையின் போது மேல் ஓட்டில் இல்ல குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகளை அகற்ற வேண்டும். பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உரிய அலுவலர்கள் அணுகிப் பெற்று பள்ளியின் பராமரிப்பு பணிகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...