Daily TN Study Materials & Question Papers,Educational News

SG,MG - நிதியை களவாடும் களைகள் ஒழிக்கப்படுமா?

பள்ளிக்கல்வித்துறையில் SG,MG என்று சொல்லப்படுகின்ற பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற நிதி,எதற்கெல்லாம் செலவிடவேண்டுமோ அதற்கெல்லாம் செலவிடப்படாமல் Share பிரித்தலுக்காகவும்,Fake billகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.Records வாங்குவதற்காகவே என்ற கணக்கில் மட்டும்தான் அதில் உண்மைத்தன்மை இருக்கிறது.மற்றபடி ??

ஆகவே ஒவ்வொரு பள்ளிக்கும் என்ன தேவையென்று அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள்

& அங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் ஒப்புதலோடு உடன் அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் சிலரின் ஒப்புதலோடு உறுதிமொழிப் பெறப்பட்டு,பின் அதற்கான நிதியைப் பள்ளிக்கல்வித்துறை வழங்கவேண்டும்.

பள்ளி மேலாண்மைக்குழு என்ற ஒன்று உள்ளதே அது பார்க்காதா என்று சந்தேகம் எழுந்தால் ...அதில் நியாயம் இருக்கிறது.சரியான தலைமையாசிரியர்கள் மட்டுமே சரியான வழியில் அதை அந்த SMC/SMDC தலைவர்களின் ஒப்புதலோடு செலவழிப்பார்கள்.

ஆனால்...முறையற்றவர்கள் தலைவருக்குத் தெரியாமலே,தலைவரின் கையெழுத்தை அவர்களாகவே போட்டு பணத்தை எடுத்து என்ன செய்வார்களென்று கூட அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தெரியாது.இந்தத் தொகைக்கான கணக்கெழுதும் BRC Accountant ம் இது சார்ந்து கேள்வியெழுப்பினால் "billஐ பார்த்துக் கணக்கெழுவதுதானே உங்கள் வேலை"என்று மிரட்டுவதுபோல் செய்வார்கள் இல்லையெனில் அவர்களுக்கு ஒரு Share.இதையே BRC Supervisor கேட்காமலிருக்க அவருக்கு ஒரு Share.

ஆகவே......இந்த நிதி Share holderன் கைகளிலிருந்து சேராமலிருக்க வழிசெய்யவேண்டும்.Records வாங்க தலைமையாசிரியர்கள் என்ன செய்வார்கள் என்று கோபம் கொண்டால் அதையும் அரசு வழங்கும் விலையில்லா

நோட்டுப் புத்தகங்கள்,புத்தகங்கள் வரிசையில் அந்த Recordsஐயும் சேர்த்து விடவும்.அதற்காக கடந்த ஆட்சியில் மண்வெட்டி,

கடப்பாரை,சாணி காகிதத்தில் அச்சிடப்பட்ட நூலகப் புத்தகங்களுக்கு Tender விட்டதுபோல எதையும் செய்துவிடாதீர்கள்.

களைகளை எடுக்காமல் பயிர்களைக் காப்பாற்றிட முடியாது!

#குறிப்பு :ஒவ்வோர் ஆசிரியருக்கும் Separate id&password கொடுத்தாச்சு.

Queries னு ஒரு Optionஐ வைத்துவிட்டால்கூட ஒரு பள்ளியில் நடக்கும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து புகாரளிக்க வசதியாக இருக்கும்.

என்னடா....இது இந்த புள்ள கல்வித்துறை சம்பந்தமாவே எழுதுதுனு குழப்பமடைய வேண்டாம்.ஏனெனில் இது நம் அனைவருடைய வரிப்பணம் சார்ந்தது.

ஆசிரியர் மகாலட்சுமி

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support