தமிழகத்தில் இருந்து ஓர் ஆசிரியர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர் கே.ராமச்சந்திரன்.

ராமநாதபுரம்: 

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

நாடு முழவதும் 46 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து ஆறு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதில் தமிழகத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கே.ராமச்சந்திரன் ஒருவர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டில்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, விருது வழங்க உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூ. 50,000-க்கான காசோலை ஆகியவை வழங்கப்படும் என மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது

Image source : www.vikadan.con

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

Follow this Link - உடனடி கல்விச் செய்தி

Loading...