Daily TN Study Materials & Question Papers,Educational News

TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

TNSED (SMC) Parents Mobile App :

03.03.2023 நடைபெறவுள்ள SMC உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் SMC Parents App - ஐ Google Play Store -ல் பதிவிறக்கம் செய்து அதில் தங்களது வருகையினை பதிவு செய்ய வேண்டும்.

User Name : உறுப்பினர்களது பதிவு செய்த Phone Number

Password : Smc@Phone Number last 4 Digit ( S Capital )

Example : Smc@5643

TNSED (SMC) Parents Mobile App - Download here...

Share:

இந்த உணவுகளை எடுத்துக்கிறவங்களுக்கு எந்த ஜென்மத்திலும் எலும்பு பிரச்சினை வராது

இளம் வயதில் நம் எலும்புகளை காக்க பின்வரும் உணவுகளை எடுத்து கொண்டால் முதுமையில் வரும் எலும்பு தேய்மானம் முதல் எலும்பு பலவீனம் போன்ற நோய்கள் வராமல் நாம் நம் உடலை காக்கலாம்

1.நாம் உண்ணும் பச்சைக் காய்கறிகள் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

2.இந்த பச்சை காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், போலேட், வைட்டமின் பி1, பி2, பி3, பி5 மற்றும் பி6 ஆகியவை உள்ளன.

3.நாம் தினமும் இந்த காய்கறிகளை உண்பதால் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

4.பருப்பு வகைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. பால் பொருட்கள் தவிர இவற்றை அதிகம் உட்கொள்ளலாம். 5.இதில், புரதம், நார்ச்சத்து ஆகியவற்றுடன் கால்சியமும் கிடைக்கும். இவை நமது செரிமான அமைப்புக்கும் நல்லது. நமது ஆற்றலை அதிகமாக்கும்.

6.வைட்டமின் சி அதிகம் இருக்கும் ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம்.

7.வைட்டமின் ேக சத்துக்கள் அதிகம் கொண்ட முட்டைகோஸ், காலிபிளவர், துளசி, கொத்தமல்லி, லெட்டூஸ் கீரை ஆகியவை சாப்பிடலாம்.



8.பால், தயிர், பாலாடைக்கட்டி, முட்டை, ஓட்ஸ், இறைச்சி போன்ற புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளலாம்.

9.காளான், முட்டையின் மஞ்சள் கரு, மீன், சோயா பால் போன்றவை வைட்டமின் டி உள்ளடங்கிய உணவு பொருட்கள்.

10.பச்சைக் காய்கறிகள், பூசணி விதைகள், வாழைப்பழம் போன்றவை அடிக்கடி சாப்பிடலாம்.

Share:

தினமும் காலையில் ஒரு அவித்த முட்டை சாப்பிட்டு வந்தால்...

தினமும் காலையில் ஒரு அவித்த முட்டை சாப்பிட்டு வந்தால்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது முட்டை தான்.பலருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே கூறலாம்.அதிலும் முட்டையை அவித்து சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும்.இப்படி முட்டையை தினமும் அவித்து சாப்பிடுவது நம்முடைய உடலுக்கு நல்லதா?


தினமும் முட்டையை அவித்து சாப்பிடலாமா என்பதை பற்றி பார்ப்போம்.

முட்டையில் கால்சியம் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது.

இது உங்களை நீண்ட நேரம் அதிக சக்தியோடு செயல்பட வைக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாகுலர் சிதைவு, கண்புரை, மிக வேகமாக வயதாகும் நிலை ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவில் 186 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இயற்கையாகவே அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் தினமும் அவித்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உடல்நிலை பாதிப்புகள் இல்லாமல் இருப்பவர்கள் தினமும் ஒரு அவித்த முட்டையை சாப்பிடுவது நல்லது. வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அவித்த முட்டை கொடுக்கலாம். இது அவர்களின் செல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

அவித்த முட்டை வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது. இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால் இது நம்முடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. முட்டை புரதங்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் துத்தநாகம், செலினியம் உள்ளது. இந்த இரண்டு தாதுக்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் முக்கியமான தாதுக்கள்.

முட்டையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கின்றன. முட்டையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகிய இரண்டு அத்தியாவசிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உங்களுடைய கண்களை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

மேலும் கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கிறது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற ஊதாக் கதிர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து உங்களுடைய கண்களை பாதுகாக்கிறது. மேலும் சிறு வயதிலேயே கண்புரை வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது முட்டை. முட்டையில் மூளையைப் பாதுகாக்க கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இது உங்களுடைய மூளையின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

Share:

பல நோய்களை வெடி வைத்து தகர்க்கும் இந்த கீரை பொடி!

பல நோய்களை வெடி வைத்து தகர்க்கும் இந்த கீரை பொடி!


முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் நம் உடலுக்கு நண்மை செய்வதால் பலர் அதை தினம் தங்களின் உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து கொள்கின்றனர் .குறிப்பாக முருங்கை கீரை கூட்டு ,முருங்கை காய் சாம்பார் ,முருங்கை பூ துவையல் என்று பல வகையில் சமைத்து சாப்பிடலாம் .இந்த கீரையை பொடியாக செய்து கர்ப்பிணி பெண்கள் தினம் சாப்பிட்டால் சுக பிரசவம் ஆகும் .மேலும் தலை முடி அடர்த்தியாக வளர இந்த முருங்கை பயன்படுகிறது ,மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சினை உள்ளோருக்கும் இந்த முருங்கை பயன் படும் .மேலும் இதன் பயன்களை பார்க்கலாம்

1.முருங்கை கீரையில் அதிகமான இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், ஜிங்க்,பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் 'ஏ', பீட்டா கரோட்டீன், வைட்டமின் 'சி', வைட்டமின் 'பீ' காம்பளக்ஸ், போன்ற ஊட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன .

2.மேலும் முருங்கைக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கும் தன்மை கொண்டது. எனவே இதை உணவில் சேர்த்தல் குழந்தை பிறப்பு நிச்சயம் உண்டு

3.சிலருக்கு தீராத மலசிக்கல் இருக்கும் ,அந்த மலச்சிக்கலை தீர்க்கவும் துணை புரிகிறது.

4., சிலருக்கு ரத்த சோகை இருக்கும் ,அதனால் ரத்த வெள்ளை அணுக்களின் எண்னிக்கையை அதிகரித்து ரத்த சோகையை வராமல் தடுக்கிறது.

5.குழந்தை பிறந்து பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.

6.இன்னும் பல மருத்துவ பயன்களை வாரி வழங்கும் முருங்கை கீரை வைத்து சத்தான பொடியை செய்து சாப்பிட்டு பலன் பெறலாம்

Share:

1 - 5 எண்ணும் எழுத்தும் கற்றல் விளவவுகள் - Leaning Outcomes Term-3..!

1 - 5 எண்ணும் எழுத்தும் கற்றல் விளவவுகள் - Leaning Outcomes Term-3..!

Leaning Outcomes Term-3

1 - 5 எண்ணும் எழுத்தும் கற்றல் விளவவுகள் - Leaning Outcomes Term-3- Pdf Download Here
Share:

1 முதல் 10 மாணவர்களுக்கு விடுமுறை அரசு அதிகார அறிவிப்பு


 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முழு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.




வெளியான அறிவிப்பு:

முக்கிய தலைவர் தினங்கள், இயற்கை பேரிடர்கள் மற்றும் கோவில் விழாக்கள் போன்ற தினங்களில் அரசின் சார்பாக ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காரைக்காலில் மஸ்தான் சாகித் தர்காவின் 200 வது ஆண்டு கந்தூரி விழா இன்று முதல் கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இன்று பிற்பகல் ரதம் மற்றும் பல்லாக்குடன் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிக அளவு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் மார்ச் 2ம் தேதியான இன்று முழு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி செய்முறை தேர்வுகள் நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது .

Share:

11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதியில் இருந்து - ஹால் டிக்கெட்!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதால் மார்ச் 3 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்குநர் சா.சேதுராமன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில்,  “ மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான  https://www.dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை சரியான முறையில் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share:

RTE 2023-2024 விண்ணப்பம் - முக்கிய தகவல்..!

RTE 2023-2024 விண்ணப்பம் - முக்கிய தகவல்..!

RTE எனப்படும் கட்டாய தொடக்கக் கல்வித் திட்டம், எல்.கே.ஜி இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சேர்க்கலாம்.  இந்தத் திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் படிக்கும் உங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.  திட்டம் 2023-24 கல்வியாண்டுக்கான விண்ணப்ப தேதியை அறிவித்துள்ளது.

  அதன்படி மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.அப்படியானால் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது?  இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?  விண்ணப்பிக்க என்ன சான்றிதழ் தேவை?  அதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

8-ம் வகுப்பு வரை கல்வியைக் கட்டாயமாக எல்லா குழந்தைகளுக்கும்  உறுதி செய்யக்கூடிய ஒரு  திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக மெட்ரிகுலேஷன் மற்றும் CBSE தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். உதாரணத்திற்கு 100 இடங்கள் அவர்கள் பள்ளியிலிருந்தால் 25 இடங்களை இவர்களுக்குக் கட்டாயமாக ஒதுக்க வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படுகிற மாணவர்களுக்கான கல்வித் தொகையை அரசே செலுத்திவிடும். 

விண்ணப்பிக்கும் முறை ? எப்படி 2023-2024?

இந்த வருடத்தில் L.K.G மற்றும் 1ஆம் வகுப்பு சேரக்கூடிய குழந்தைகளை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பள்ளிக்கூடம் 1 கிலோமீட்டர் பரப்பளவில் சுற்றியுள்ள பள்ளிகூடமாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 பள்ளிக்கூடங்கள் வரை இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாக 3 பிரிவுகளாகப் பிரித்து இருக்கிறார்கள். அதன்படி 

* நலிவடைந்த பிரிவினர் 

* வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் 

* வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர் 

இதில் நலிவடைந்த பிரிவினரில் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது. அடுத்து வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் அனைத்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களான BC, MBC, SC, ST ஆகியோர் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவில்

ஆதரவற்றோர் , மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையோர்:

* நலிவடைந்த பிரிவினருக்கு வருமான சான்றிதழ் 

*  குழந்தையுடைய சாதி சான்றிதழ் 

* குழந்தையின் ஆதார் அட்டை

* குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

* ரேஷன் கார்டு

* இருப்பிடச் சான்றிதழ் 

* சிறப்புப் பிரிவில் விண்ணப்பிக்கக் கூடியவர்கள் அந்தந்த துறையில் அதற்கான சான்றிதழை வாங்க வேண்டும். உதாரணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி சான்றிதழை அந்தத் துறையினரிடம் வாங்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்கக் கூடிய இணையதளம் https://rte.tnschools.gov.in/ வருகிற 20ஆம் தேதி திறக்கப்பட்டும். இணையதளம் திறக்கப்பட்டவுடன் எப்படி விண்ணப்பிப்பது என்பதை விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம். சென்ற வருடம்  தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 1,15,628 இடங்களில் வெறும் 60 சதவிகிதம் தான் நிரப்பப்பட்டிருக்கிறது. இதற்கு இந்தத் திட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடத்தில் போய்ச் சேராததும், குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழைச் சேர்க்க முடியாததும் காரணமாகக் கூறப்படுகிறது. ஆக இம்முறை உங்கள் குழந்தைகளைத் தனியார்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விருப்பப்படுவோர் இத்திட்டத்திற்குத் தேவையான அனைத்தையும் இப்போதே தயார் செய்யத் தொடங்கவும். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு 14417 என்னும் இலவச எண்ணுக்குத் தொடர்பு கொண்டு  தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்  

Share:

இனி கவலை இல்லை ,கைகொடுக்கும் ஹம்ச யோகம் மார்ச் மாத ராசிபலன் 2023

 மார்ச் மாத ராசிபலன் 2023:இனி கவலை இல்லை கைகொடுக்கும் ஹம்ச யோகம்..மன நிம்மதியும் மகிழ்ச்சியும் யாருக்கு கிடைக்கும்?

மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தினால் பணமழை கொட்டப்போகிறது. மார்ச்சில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின் பயணம் பார்வை ஆகியவைகளைப் பொறுத்து மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகரம்



மகர ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி, புதன், சூரியன், மூன்றாம் வீட்டில் குரு, சுக்கிரன், நான்காம் வீட்டில் ராகு ஐந்தாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்கள் ராசிக்கு கிரகங்களின் பயணம் சாதகமாக உள்ளது. ஏழரை சனியில் பாத சனி காலமாக இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. வேலையில் சில மாற்றங்கள் வரலாம். இடமாற்றம் நிச்சயம் உண்டாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுக்கிரன், குரு இடப்பெயர்ச்சி மனதில் புதிய மாற்றத்தை கொடுக்கும். வேலையில் திருப்பி உண்டாகும். மனதும் உடலும் ஏதோ ஒரு மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். பெண்களுக்கு நோய்கள் நீங்கப்போகிறது. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கவலையை தூக்கி தூரப்போடுங்கள். போராட்டங்கள் முடிவுக்கு வரும். ராகு உடன் சுக்கிரன் இணையும் காலத்தில் சின்னச் சின்ன நோய்கள் வந்து நீங்கும். மாணவர்களுக்குள் மனக்குழப்பம் வந்து போகும். படிப்பில் அக்கறையும் கவனமும் செலுத்துங்கள். உயர்கல்வி தொடர்பாக எதையும் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்காதீர்கள் ஆழ்ந்து யோசித்து முடிவு செய்யுங்கள்.

கும்பம்



சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்குள் சூரியன், சனி, புதன், இரண்டாம் வீட்டில் குரு,சுக்கிரன், மூன்றாம் வீட்டில் ராகு, நான்காம் வீட்டில் செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை மாற்றம் உண்டாகும். செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பண வருமானம் வரும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். வண்டி வாகன யோகம் கைகூடி வருகிறது. பெண்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக உள்ளது. தேர்வு எழுத செய்யும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். மனநிலை தெளிவாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எண்ணங்கள் தெளிவாக இருக்கும். எதிர்காலம் குறித்து தெளிவான திட்டமிடுவீர்கள். உங்களின் பலவீனம் நீங்கி பலம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல செய்யும் முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். வீண் வம்பு வழக்குகள் நீங்கி மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழக்கூடிய மாதமாகும்.

மீனம்



குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன், ராசியில் குரு, சுக்கிரன், இரண்டாம் வீட்டில் ராகு, மூன்றாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. மாளவியா யோகம் கை கூடி வருவதால் பண வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன், செவ்வாய், சூரியன் இடப்பெயர்ச்சி நிகழ்வதால் கவனமாக செயல்பட வேண்டும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் திடீர் அதிர்ஷ்டம் வரும். குரு பகவானும் அம்ச யோகத்தை கொடுக்கிறார், தொல்லைகள் ஏதுவும் இல்லை. சனி பகவான் ஏழரை சனியாக தொடங்கியுள்ளதால் அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம். கையில் புதிய வேலை கிடைத்த பிறகு புது வேலையை தொடங்கலாம், வேலை செய்யும் இடத்தில் வரும் சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை தடைகளைத் தாண்டி வெற்றியைக் கொடுக்கும்.பெண்களுக்கு மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மாணவர்களுக்கு மனநிலை தெளிவாக இருக்கும். குழப்பமின்றி தெளிவான முடிவுகளை எடுங்கள். தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். எதிர்காலம் பற்றி வெற்றிகரமாக முடிவு எடுப்பீர்கள். உயர்கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது.


Share:

இப்படி ஒரு அதிர்ஷ்டமா இந்த ராசிக்கு ,மார்ச் மாத ராசிபலன் 2023

 மார்ச் மாத ராசிபலன் 2023 இப்படி ஒரு அதிர்ஷ்டமா இந்த ராசிக்கு ,அடிச்சான் பாரு ஜாக்பாட்..யார் வீட்ல பண மழை கொட்டும் பாருங்க!

மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தினால் பணமழை கொட்டப்போகிறது. மார்ச்சில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின் பயணம் பார்வை ஆகியவைகளைப் பொறுத்து துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்



சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதியில் ஆறாம் வீட்டில் உச்ச நிலையில் பயணம் செய்கிறார். ராசியில் கேது, ஏழாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் செவ்வாய், 5ஆம் வீட்டில் சூரியன், புதன், சனி, ஆறாம் வீட்டில் குரு சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக உள்ளது. வேலையில் இருந்த தடைகள் நீங்கும். ராசிநாதன் சுக்கிரன் 10ஆம் தேதிக்கு மேல் 7ஆம் வீடான மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியடைவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அமைதியும் பொறுமையும் தேவைப்படும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வரன் பார்க்கத் தொடங்கலாம். கணவன் மனைவி இடையேயான உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மன அமைதிக்காக குடும்பத்திற்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். பெண்களுக்கு இந்த மாதம் நல்ல மாதம். போராட்டங்கள் நீங்கும். நினைத்த காரியம் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வயிறு பிரச்சினைகள் வரலாம் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். மாணவர்களுக்கு நல்ல மாதம் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வீர்கள். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பதற்றமின்றி தேர்வுகளை எதிர்கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும்.

விருச்சிகம்


செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாத முற்பகுதியில் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 12ஆம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் ராகு, 4ஆம் வீட்டில் சூரியன், புதன், சனி, 5ஆம் வீட்டில் குரு சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. மாத முற்பகுதியில் கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் ராஜாதி ராஜயோகம்தான் இந்த மாதம் வேலை செய்யும் இடத்தில் திடீர் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் பண வருமானம் இரட்டிப்பாகும். செய்யும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். மாத பிற்பகுதியில் செவ்வாய் பெயர்ச்சியும், சுக்கிரன் பெயர்ச்சியும் சுமாராகவே உள்ளது பொறுமையாக அடி எடுத்து வைக்கவும். பணம் விசயங்களில் கவனம் தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாத பிற்பகுதியில் பெண்களுக்கு உடல் நிலை படுத்தி எடுக்கும். மருத்துவ ஆலோசனை செய்வது அவசியம். இல்லத்தரசிகள் கவனமாக இருப்பது அவசியம். வேலைப்பளு அதிகரிக்கும் மன அழுத்தம் ஏற்படும். மாணவர்களுக்கு குரு பார்வை கிடைப்பதால் படிப்பில் ஆர்வமும் அக்கறையும் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றிகள் தேடி வரும்.

தனுசு

   



குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன், புதன், சனி, நான்காம் வீட்டில் குரு, சுக்கிரன், 5ஆம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்களின் பயணம் உள்ளது. ஒரு வழியாக ஏழரை சனி முடிந்து விட்டது நிம்மதி நிறைந்த நாட்கள் இனி. உங்களுடைய வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தர்ம கர்மாதிபதி யோகம் கை கூடி வருவதால் ஆலய தரிசனம் தேடி வரும். கவுரவப்பதவிகள் வீடு தேடி வரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசியை பார்வையிடுகிறார். வரன் பார்ப்பது சுபமாக முடியும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உற்சாகமும் புத்துணர்ச்சியும் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி விடும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. மாணவர்கள் தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். கேட்ட கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் மார்ச் மாதத்தை எதிர்கொள்வீர்கள்.

Share:

Definition List

header ads

Unordered List

Support