இப்படி ஒரு அதிர்ஷ்டமா இந்த ராசிக்கு ,மார்ச் மாத ராசிபலன் 2023

 மார்ச் மாத ராசிபலன் 2023 இப்படி ஒரு அதிர்ஷ்டமா இந்த ராசிக்கு ,அடிச்சான் பாரு ஜாக்பாட்..யார் வீட்ல பண மழை கொட்டும் பாருங்க!

மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தினால் பணமழை கொட்டப்போகிறது. மார்ச்சில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின் பயணம் பார்வை ஆகியவைகளைப் பொறுத்து துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதியில் ஆறாம் வீட்டில் உச்ச நிலையில் பயணம் செய்கிறார். ராசியில் கேது, ஏழாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் செவ்வாய், 5ஆம் வீட்டில் சூரியன், புதன், சனி, ஆறாம் வீட்டில் குரு சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக உள்ளது. வேலையில் இருந்த தடைகள் நீங்கும். ராசிநாதன் சுக்கிரன் 10ஆம் தேதிக்கு மேல் 7ஆம் வீடான மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியடைவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அமைதியும் பொறுமையும் தேவைப்படும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வரன் பார்க்கத் தொடங்கலாம். கணவன் மனைவி இடையேயான உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மன அமைதிக்காக குடும்பத்திற்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். பெண்களுக்கு இந்த மாதம் நல்ல மாதம். போராட்டங்கள் நீங்கும். நினைத்த காரியம் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வயிறு பிரச்சினைகள் வரலாம் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். மாணவர்களுக்கு நல்ல மாதம் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வீர்கள். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பதற்றமின்றி தேர்வுகளை எதிர்கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும்.

விருச்சிகம்


செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாத முற்பகுதியில் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 12ஆம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் ராகு, 4ஆம் வீட்டில் சூரியன், புதன், சனி, 5ஆம் வீட்டில் குரு சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. மாத முற்பகுதியில் கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் ராஜாதி ராஜயோகம்தான் இந்த மாதம் வேலை செய்யும் இடத்தில் திடீர் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் பண வருமானம் இரட்டிப்பாகும். செய்யும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். மாத பிற்பகுதியில் செவ்வாய் பெயர்ச்சியும், சுக்கிரன் பெயர்ச்சியும் சுமாராகவே உள்ளது பொறுமையாக அடி எடுத்து வைக்கவும். பணம் விசயங்களில் கவனம் தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாத பிற்பகுதியில் பெண்களுக்கு உடல் நிலை படுத்தி எடுக்கும். மருத்துவ ஆலோசனை செய்வது அவசியம். இல்லத்தரசிகள் கவனமாக இருப்பது அவசியம். வேலைப்பளு அதிகரிக்கும் மன அழுத்தம் ஏற்படும். மாணவர்களுக்கு குரு பார்வை கிடைப்பதால் படிப்பில் ஆர்வமும் அக்கறையும் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றிகள் தேடி வரும்.

தனுசு

   குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன், புதன், சனி, நான்காம் வீட்டில் குரு, சுக்கிரன், 5ஆம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்களின் பயணம் உள்ளது. ஒரு வழியாக ஏழரை சனி முடிந்து விட்டது நிம்மதி நிறைந்த நாட்கள் இனி. உங்களுடைய வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தர்ம கர்மாதிபதி யோகம் கை கூடி வருவதால் ஆலய தரிசனம் தேடி வரும். கவுரவப்பதவிகள் வீடு தேடி வரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசியை பார்வையிடுகிறார். வரன் பார்ப்பது சுபமாக முடியும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உற்சாகமும் புத்துணர்ச்சியும் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி விடும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. மாணவர்கள் தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். கேட்ட கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் மார்ச் மாதத்தை எதிர்கொள்வீர்கள்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...