மார்ச் மாத ராசிபலன் 2023:இனி கவலை இல்லை கைகொடுக்கும் ஹம்ச யோகம்..மன நிம்மதியும் மகிழ்ச்சியும் யாருக்கு கிடைக்கும்?
மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தினால் பணமழை கொட்டப்போகிறது. மார்ச்சில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின் பயணம் பார்வை ஆகியவைகளைப் பொறுத்து மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி, புதன், சூரியன், மூன்றாம் வீட்டில் குரு, சுக்கிரன், நான்காம் வீட்டில் ராகு ஐந்தாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்கள் ராசிக்கு கிரகங்களின் பயணம் சாதகமாக உள்ளது. ஏழரை சனியில் பாத சனி காலமாக இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. வேலையில் சில மாற்றங்கள் வரலாம். இடமாற்றம் நிச்சயம் உண்டாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுக்கிரன், குரு இடப்பெயர்ச்சி மனதில் புதிய மாற்றத்தை கொடுக்கும். வேலையில் திருப்பி உண்டாகும். மனதும் உடலும் ஏதோ ஒரு மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். பெண்களுக்கு நோய்கள் நீங்கப்போகிறது. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கவலையை தூக்கி தூரப்போடுங்கள். போராட்டங்கள் முடிவுக்கு வரும். ராகு உடன் சுக்கிரன் இணையும் காலத்தில் சின்னச் சின்ன நோய்கள் வந்து நீங்கும். மாணவர்களுக்குள் மனக்குழப்பம் வந்து போகும். படிப்பில் அக்கறையும் கவனமும் செலுத்துங்கள். உயர்கல்வி தொடர்பாக எதையும் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்காதீர்கள் ஆழ்ந்து யோசித்து முடிவு செய்யுங்கள்.
கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்குள் சூரியன், சனி, புதன், இரண்டாம் வீட்டில் குரு,சுக்கிரன், மூன்றாம் வீட்டில் ராகு, நான்காம் வீட்டில் செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை மாற்றம் உண்டாகும். செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பண வருமானம் வரும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். வண்டி வாகன யோகம் கைகூடி வருகிறது. பெண்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக உள்ளது. தேர்வு எழுத செய்யும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். மனநிலை தெளிவாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எண்ணங்கள் தெளிவாக இருக்கும். எதிர்காலம் குறித்து தெளிவான திட்டமிடுவீர்கள். உங்களின் பலவீனம் நீங்கி பலம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல செய்யும் முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். வீண் வம்பு வழக்குகள் நீங்கி மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழக்கூடிய மாதமாகும்.
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன், ராசியில் குரு, சுக்கிரன், இரண்டாம் வீட்டில் ராகு, மூன்றாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. மாளவியா யோகம் கை கூடி வருவதால் பண வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன், செவ்வாய், சூரியன் இடப்பெயர்ச்சி நிகழ்வதால் கவனமாக செயல்பட வேண்டும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் திடீர் அதிர்ஷ்டம் வரும். குரு பகவானும் அம்ச யோகத்தை கொடுக்கிறார், தொல்லைகள் ஏதுவும் இல்லை. சனி பகவான் ஏழரை சனியாக தொடங்கியுள்ளதால் அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம். கையில் புதிய வேலை கிடைத்த பிறகு புது வேலையை தொடங்கலாம், வேலை செய்யும் இடத்தில் வரும் சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை தடைகளைத் தாண்டி வெற்றியைக் கொடுக்கும்.பெண்களுக்கு மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மாணவர்களுக்கு மனநிலை தெளிவாக இருக்கும். குழப்பமின்றி தெளிவான முடிவுகளை எடுங்கள். தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். எதிர்காலம் பற்றி வெற்றிகரமாக முடிவு எடுப்பீர்கள். உயர்கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது.
0 Comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.