வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டில் முன்கூட்டியே பள்ளி இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் படிக்க கூடிய 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்வு தொடங்கவுள்ளது.
அதற்கு முன்னதாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை இருக்க கூடிய மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் காய்ச்சல் பரவி வர கூடிய சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவர்களுக்கு செய்ய கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான முழு அறிவிப்பானது வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த வேளையில் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற இருந்த 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏப்.27-ம் தேதி நடைபெற இருந்த தேர்வை 10 முன்னதாக ஏப்.17-ம் தேதி முதல் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.