MBA படிப்பு-'கேட்' தேர்வுக்கு 'தாட்கோ' மூலம் இலவச பயிற்சி

 MBA படிப்பு-'கேட்' தேர்வுக்கு 'தாட்கோ' மூலம் இலவச பயிற்சி



'நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, எம்.பி.ஏ., பொது நுழைவுத்தேர்வு பயிற்சி (கேட்) இலவசமாக வழங்கப்பட உள்ளது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை, 'தாட்கோ' வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், இந்திய மேலாண் கழகம் மற்றும் இந்திய தொழில் நுட்பக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண் மேற்படிப்பு பயில, நடப்பாண்டு நவ., மாதத்தில் நடக்க உள்ள, 'கேட்' பொது நுழைவுத்தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.இப்பயிற்சியை பெற, ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்த அல்லது கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும், தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம், பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, தேசிய அளவிலான சி.ஏ.டி.,-எக்ஸ்.ஏ.டி.,-ஐ.ஐ.எப்.டி., எஸ்.என்.ஏ.பி., போன்ற நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைத்தவுடன், எம்.பி.ஏ., படிக்க செலுத்த வேண்டிய கட்டணம், 25 லட்சம் ரூபாய் வரையிலான செலவை, 'தாட்கோ' அல்லது வங்கிகள் மூலமாக கல்விக்கடனாக பெற்றுத் தரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments