1 முதல் 10 மாணவர்களுக்கு விடுமுறை அரசு அதிகார அறிவிப்பு


 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முழு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.




வெளியான அறிவிப்பு:

முக்கிய தலைவர் தினங்கள், இயற்கை பேரிடர்கள் மற்றும் கோவில் விழாக்கள் போன்ற தினங்களில் அரசின் சார்பாக ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காரைக்காலில் மஸ்தான் சாகித் தர்காவின் 200 வது ஆண்டு கந்தூரி விழா இன்று முதல் கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இன்று பிற்பகல் ரதம் மற்றும் பல்லாக்குடன் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிக அளவு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் மார்ச் 2ம் தேதியான இன்று முழு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி செய்முறை தேர்வுகள் நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது .

Post a Comment

0 Comments