10ம் வகுப்பு பொதுத்தேர்வில்…இன்று அறிவியல் வினாத்தாள் கசிவு – தேர்வை ரத்து செய்த மாநில அரசு!

தேர்வை ரத்து செய்த மாநில அரசு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில்…இன்று அறிவியல் வினாத்தாள் கசிவு – தேர்வை ரத்து செய்த மாநில அரசு!

தேர்வு ரத்து:

மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இன்று பொது அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்துள்ளது. இதனால் இத்தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு

அசாம் மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று பொது அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது.


மேலும் இது தொடர்பாக கல்வி அமைச்சர் கூறியதாவது, நேற்று இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு பொது அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் கசிந்துள்ளதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தார். அதனால் இத்தேர்வு இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இத்தேர்வுக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் வினாத்தாள் கசிவிற்கு, ஆசிரியர்கள் கட்டாயமாக காரணமாக இருக்க மாட்டார்கள். ஏனெனில், தேர்வு நாளில் அன்று காலையில் தான் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்ட வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு வரப்படும் என கூறியுள்ளார்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...