Daily TN Study Materials & Question Papers,Educational News

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு எவ்வளவு? New Electricity Bill Calculation

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு சனிக்கிழமை (செப்.10) முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தாலும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் அமலில் இருக்கும். 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் விட்டுக்கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து சனிக்கிழமை (செப்.10) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு 2026-27 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டணம் எவ்வளவு?

முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும். 

200 முதல் 500 யூனிட்: இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என்ற அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது மின் கட்டணம் செலுத்தும் போது ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

இரண்டு மாதங்கள் 101 முதல் 300 யூனிட்கள் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.72.50-ஆகவும் (இரண்டு மாதங்களுக்கு ரூ.155), 400 யூனிட்கள் வரை மாதத்துக்கு ரூ.147.50-ஆகவும் (இரண்டு மாதங்களுக்கு ரூ.295) உயா்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மாதத்துக்கு ரூ.297.50 (இரண்டு மாதங்களுக்கு ரூ.595) கூடுதலாகச் செலுத்த வேண்டும். 

இரண்டு மாதங்களுக்கு 501 முதல் 600 யூனிட்கள் வரை மின் நுகா்வு செய்தால், மாதத்துக்கு ரூ.155-ஆகவும்( இரண்டு மாதங்களுக்கு ரூ.310) ஆகவும், 601 முதல் 700 யூனிட்கள் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.275-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.550), ஆகவும், 701 முதல் 800 யூனிட்கள் வரை பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.395 ஆகவும் (இரண்டு மாதங்களுக்கு ரூ.790) ஆகவும், 801 முதல் 900 யூனிட்கள் வரை வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.565 ஆகவும் (இரண்டு மாதங்களுக்கு ரூ.1,130) ஆகவும் செலுத்த வேண்டும்

இனி ஒரே மின் கட்டணம் வசூலிக்கப்படும்:

வீட்டு மின் பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டது. ஆனால், மின் நுகா்வானது 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணத் தொகையானது ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனிமேல் 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் ரூ.656.60 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருந்தது. இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றியமைக்கப்பட்டு அதே விலையில் தான் கணக்கீடு செய்யப்பட்டு வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மின் கட்டண உயர்வு குறித்து சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மின் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

Share:

இன்ஜி., சேர்க்கை பொது கவுன்சிலிங் நாளை1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

இன்ஜி., சேர்க்கை பொது கவுன்சிலிங் நாளை1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் பேர் பங்கேற்பு!

இன்ஜி., சேர்க்கை பொது கவுன்சிலிங் நாளை1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' பொது கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது.

இதில், 1.50 லட்சம் இடங்களுக்கு, 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர் கல்வித் துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 1.59 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 443 கல்லுாரிகளில், 1.50 லட்சம் இடங்கள், கவுன்சிலிங் வழியே நிரப்பப்பட உள்ளன.விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு, கடந்த மாதம் 20 முதல் 23ம் தேதி வரை கவுன்சிலிங் நடந்தது. மற்ற மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங், கடந்த 25ம் தேதி துவங்க இருந்தது. 'நீட்' தேர்வு முடிவு தாமதத்தால், கவுன்சிலிங் தேதி இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.

நவ., 20 வரை

நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, நாளை இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது. இந்த கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு நவ., 13ல் முடிகிறது. நவ., 15 முதல் 20 வரை துணை கவுன்சிலிங் நடக்கிறது. கவுன்சிலிங்கின் முதல் சுற்று நாளை துவங்குகிறது. இரண்டாம் சுற்று, இம்மாதம் 25; மூன்றாம் சுற்று, அக்., 13; நான்காம் சுற்று அக்., 29ல் துவங்குகிறது.

ஒவ்வொரு சுற்றிலும் தர வரிசைப்படி மாணவர்கள் பங்கேற்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இடங்களை தேர்வு செய்வதற்கான, 'சாய்ஸ் பில்லிங்' முறையில், கல்லுாரிகளின் பதிவுக்கு இரண்டு நாட்கள்; தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்ய இரண்டு நாட்கள்; கல்லுாரிகளில் சேர ஒரு வாரம் என, ஒவ்வொரு சுற்றுக்கும் 11 நாட்களுக்கு மேல் ஒதுக்கப்படுகின்றன.

7.5 சதவீதம்

மாணவர்கள் குழப்பமின்றி பங்கேற்கும் வகையில், ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து, உயர் கல்வித் துறை சார்பில் வழிகாட்டுதல் 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணைப்புகள், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின், www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கவுன்சிலிங்கும் நான்கு சுற்றுகளாக, பொது கவுன்சிலிங் நாட்களிலேயே நடக்கிறது.அரசு பள்ளி ஒதுக்கீடுக்கு தகுதி பெற்ற மாணவர்கள், பொது கவுன்சிலிங் மற்றும் அரசு பள்ளி ஒதுக்கீடு என, இரண்டு இடங்களை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். ஒதுக்கப்படுவதில் எந்த இடம் மாணவருக்குப் பிடித்துள்ளதோ, அதில் சேரலாம் என கவுன்சிலிங் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்

Share:

TNPSC குரூப் 4 தேர்விற்கான கட் ஆப் எவ்வளவு? முக்கியமான தகவல் இதோ !

TNPSC குரூப் 4 தேர்விற்கான கட் ஆப் எவ்வளவு? உண்மை நிலவரம் இதோ!

TNPSC குரூப் 4 தேர்விற்கான கட் ஆப் எவ்வளவு உண்மை நிலவரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்விற்கான கட் ஆப் எவ்வளவு? உண்மை நிலவரம் இதோ!

தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த 24ம் தேதி நடைபெற்றது. சுமார் 18.50 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது கட் ஆப் கூடுமா குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குரூப் 4 & VAO:

தமிழகத்தில் குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 4 தேர்வு குறித்து வெளியான அறிவிப்பில் 7382 காலிப்பணியிடங்கள் தகுதி உள்ள நபர்களை கொண்டு நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த 7382 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர். அதில் 18.50 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதி உள்ளனர்.

குரூப் 4 தேர்வு

கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி பல்வேறு மையங்களில் இந்த குரூப் 4 தேர்வு நடைபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் வினாத்தாள் சற்று கடினமாகவே இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த ஆண்டு குறைவான காலியிடங்களுக்கு அதிகமானோர் விண்ணப்பித்து தேர்வு எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை இது குறித்து தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கட் ஆப் குறைய வாய்ப்பில்லை

இந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. இந்த ஆண்டு தேர்வு சற்று கடினமாக இருந்ததால் கட் ஆப் குறையும் என்று கூறுகின்றனர். ஆனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கட் ஆப் குறைய வாய்ப்பில்லை என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Share:

இந்திய அரசு பள்ளிகளின் தரம் மேம்பாடு – மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய அரசு பள்ளிகளின் தரம் மேம்பாடு – மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய அரசு பள்ளிகளின் தரம் மேம்பாடு – மத்திய அரசு ஒப்புதல்!
இந்திய அரசு பள்ளிகளின் தரம் மேம்பாடு – மத்திய அரசு ஒப்புதல்!

தேசிய கல்வி கொள்கை 2020ஐ முழுமையாக செயல்படுத்த ஒப்புக்கொள்ளும் மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களை என்று மத்திய அமைச்சரவை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய அறிவிப்பான இதை பல மாநிலங்களும் வரவேற்றுள்ளது.

தேசிய கல்வி கொள்கை:

கடந்த மாதம், மத்திய அரசு மக்களவையில் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கையை தொடங்கியுள்ளன, அதே நேரத்தில் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை தேசிய கல்வி கொள்கைக்கான ஒப்புதலை இன்னும் அளிக்கவில்லை. தேசிய கல்வி கொள்கை 2020ஐ முழுமையாக செயல்படுத்த ஒப்புக்கொள்ளும் மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களில் PM SHRI (PM Schools for Rising India) திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்தாலோசித்து 14,500 பள்ளிகள் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.27,360 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. PM SHRI ஒரு புதிய மத்திய நிதியுதவி திட்டமாக இருக்கும், இதில் 60 சதவீதத்தை அரசாங்கம் ஏற்கும் என்றும் மீதமுள்ள 40 சதவீதத்திற்கு மாநில அரசு பொறுப்பாகும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். PM SHRI பள்ளிகள் என குறிப்பிட்ட தர உத்தரவாதத்தை அடைவதற்காக இந்த பள்ளிகளுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிமொழிகளை மத்திய அரசு முழுமையாக செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறது என்று கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதிரி பள்ளிகள்

தேசியக் கல்வி கொள்கையை ஏற்று கொண்ட மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது இரண்டு மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும். மாநில அரசுகளின் விண்ணப்பங்களைத் தொடர்ந்து கடுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு பள்ளிகள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா போன்று மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கும், மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். 18 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் கீழ், “நேரடியாக பள்ளி அதிகாரிகளுக்கு” பணம் மாற்றப்படும் என்று கல்வி அமைச்சர் கூறினார்.

Share:

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை – சிறப்பு குழு அமைப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை – சிறப்பு குழு அமைப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை – சிறப்பு குழு அமைப்பு!
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை – சிறப்பு குழு அமைப்பு!

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீட் தோ்வு எழுதிய தமிழக மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு குழு:

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 12ம் மதிப்பெண்கள் வெளியான பிறகு நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவு தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

சுமார் 18 லட்சம் பேர்

இந்த நிலையில் தமிழ் நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. கோரிக்கைகள் மனுக்கள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனாலும் மத்திய அரசு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 2022ம் ஆண்டுகான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இதில் தமிழகத்தில் இருந்து 1,45,988 பேர் பங்கேற்றனர்.

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது இதனையடுத்து தமிழகத்தில் நீட் தேர்வு மனநல ஆலோசனைகள் வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தோல்வியுற்று மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டனர். இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அரசு சார்பாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தோ்வு எழுதிய மாணவா்களை தொடா்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Share:

தில்லி முதலமைச்சரால் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 26 தகைசால் பள்ளிகள் (School of Excellence) மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளின் விவரம் வெளியீடு!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் , மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு . அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்று ( 5.9.2022 ) சென்னை , பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகளையும் , அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி , நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்.


Share:

காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

01.09.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



Share:

புதுமைப்பெண்’ திட்டம் இன்று தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்பு

புதுமைப்பெண்’ திட்டம் இன்று தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்பு


அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். விழாவில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்று, 25 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளை திறந்து வைக்கிறார்.


ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உதவித் திட்டமாக மாற்றப்பட்டது. இத்திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ.698 கோடியை ஒதுக்கியதுடன், வழிகாட்டுதல்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ், பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1.000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.


இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.


இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர, பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்தும் மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 93 ஆயிரம் மாணவிகள் பயன்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

‘புதுமைப்பெண் திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், ஆசிரியர் தினமான இன்று தொடங்கப்படுகிறது.

வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று நடக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 23 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார். அப்போது, அங்கு டெல்லி அரசால் செயல்படுத்தப்பட்டு வரும்மாதிரிப் பள்ளிகளை பார்வையிட்டார். மாதிரிப் பள்ளிகளின் செயல்பாடுகளை ஸ்டாலினிடம் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் விளக்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திலும் இதுபோன்ற மாதிரிப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும்,விழாவுக்கு கேஜ்ரிவால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

கேஜ்ரிவாலுக்கு வரவேற்பு

இதையடுத்து, சமீபத்தில் டெல்லி சென்ற பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டெல்லி முதல்வருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை 6.30 மணிக்கே கேஜ்ரிவால் சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக அமைச்சர்கள், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

Share:

அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் - Live Link

அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் - Live Link


Dear All, 

We welcome you to Join the Special Live Event of Our Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. M.K.Stalin & Hon'ble Chief Minister of Delhi Thiru. Arvind Kejriwal  Interaction with Students of Government Model Schools. 


Kindly click on the below link to join in this Special Live Event👇🏻


https://linktr.ee/TN_SED


Date : 05.09.2022

Time : 11.30 AM

Place :  Anna Centenary Library, Chennai

TN SED

Share:

Definition List

header ads

Unordered List

Support