Daily TN Study Materials & Question Papers,Educational News

தமிழகத்தில் மார்ச்.3 ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் மார்ச்.3 ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் – பொதுமக்கள் கவனத்திற்கு!



தமிழகத்தில் மார்ச் மூன்றாம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலியோ சொட்டு மருந்து:

நாட்டில் இருந்து முற்றிலுமாக இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கு மார்ச் மூன்றாம் தேதியான வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் வழக்கமாக சொட்டு மருந்து வழங்கப்படும்.

இதை தவிர அன்றைய தினம் பயணத்தை மேற்கொண்டு இருக்கும் பெற்றோர்களை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனை சாவடிகளில் சொட்டு மருந்து முகாம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Share:

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்தால் ரூ.50,000/- பரிசு – கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்தால் ரூ.50,000/- பரிசு – கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.50,000 பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசு தொகை:

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொது தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் வகிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2023-24-ஆம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வில் தமிழ்ப்பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு மொத்தம் ரூ.50,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.10,000, இரண்டாம் இடம் பிடிக்கும் இருவருக்கு தலா ரூ.5000/- மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் மூன்று மாணவர்களுக்கு தலா ரூ.3000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு தலா ரூ.1,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையானது மே மாதத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் எனவும் இத்தொகை அவர்கள் உயர்கல்விக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

பொதுத்தேர்வு - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்..!

பொதுத்தேர்வு - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்..!



பொதுத்தேர்வு 2024 - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்

Hall invigilator duty - Download here

Share:

11 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை..!

11 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை..!


மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும்மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்தாண்டு 440 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் வளர்ச்சியால் முந்தைய ஆண்டுகளைவிட 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை சற்று முன்னேற்றம் கண்டிருந்தது. எனினும், சில கல்லூரிகளில் சேர்க்கை ஒற்றைஇலக்கத்தில்தான் அமைந்தது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பல்கலை. அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘கடந்த 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு 2024-25-ம் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படாது. 2023-24-ம் கல்வியாண்டில் 25 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கை கொண்ட 67 கல்லூரிகளுக்கு வரும் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் நிபந்தனையுடன் அளிக்கப்படும். இதை பின்பற்றாத கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்’’ என்றனர்.

Share:

பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது: 3,302 மையங்களில் 7.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்...!

பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது: 3,302 மையங்களில் 7.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்...!



பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்கி மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வுகள் முறையாக நடைபெற ஏதுவாக, தேர்வுத் துறையால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

வழக்கமாக, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தனித் தேர்வர்களின் புள்ளி விவரங்கள், தேர்வுக்கான உதவி மைய எண்கள் போன்ற தகவல்களை ஒரு வாரத்துக்கு முன்பாகவே தேர்வுத் துறை வெளியிடும். ஆனால், இம்முறை,இந்த விவரங்களை தேர்வுக்கு முந்தைய நாளான இன்று (பிப்.29) பள்ளிக்கல்வி அமைச்சர் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!



நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வெழுதவுள்ள செய்முறைத் தேர்வுகளை மார்ச் / ஏப்ரல் 2024 மாணாக்கர்களுக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் பாட பள்ளித் 23.02.2024 முதல் 29.02.2024 வரை நடத்திட , ( 25.02.2024 நீங்கலாக ) அனைத்து தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

 கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

DGE - SSLC Science Practical Instructions - Download here

Share:

கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்...!

 கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்...!


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் வங்கிகள் இணைந்து எடுத்துவருகின்றன.

இதன் ஒருபகுதியாக, சென்னையில் மாபெரும் கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் இன்று (பிப்.15) நடைபெற உள்ளது.

கல்விக்கடன் விண்ணப்பம் மற்றும் அதற்கு தேவையான வருமான சான்றிதழ், பான் கார்டு விண்ணப்பம் இ-சேவை மையம் மூலம் இந்த முகாமில் பதிவு செய்யலாம்.

இந்த முகாமில், அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

Share:

தேர்வு நேரம் - விடைத்தாளில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன?

தேர்வு நேரம் - விடைத்தாளில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன?

பொதுத்தேர்வுக்கு படிப்படியாக எப்படி ஆயத்த wமாவது என்பதை கடந்த சில நாட்களாக பார்த்தோம். ஒட்டுமொத்த முயற்சி மற்றும் பயிற்சிக்கான பலன் தேர்வில் எப்படி விடையளிக்கிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது. ஆகையால் ‘தேர்வு நேரம்’ பகுதியில் நாம் இறுதியாக பார்க்கவிருப்பது, தேர்வு எழுதுபவர் விடைத்தாளில் செய்யக்கூடியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதேயாகும்.

செய்யக்கூடியவை

1. முகப்புச்சீட்டில் உரிய இடத்தில் கையொப்ப மிடவேண்டும்.

2. விடைத்தாளில் ஒரு பக்கத்திற்கு 20 முதல் 25 வரிகள்வரை எழுதவேண்டும்.

3. விடைத்தாளின் இருபுறங்களிலும் எழுத வேண்டும்.

4. செய்முறைகள் யாவும் விடைத்தாளின் கீழ்ப் பகுதியில் இடம்பெற வேண்டும்.

5. வினா எண் தவறாமல் எழுதவேண்டும்.

6. இருவிடைகளுக்கிடையே இடைவெளி விட்டு எழுதவேண்டும்.

7. விடைத்தாளில் நீலம், கருப்புமை கொண்ட பேனாவால் விடைகளை தெளிவாக எழுத வேண்டும்.

8. விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்கே கோடு இடவேண்டும்.

செய்யக்கூடாதவை

1. வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.

2. விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.

3. விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் பெயர் எழுதக் கூடாது.

4. வண்ணங்கள் கொண்ட பேனா / பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது.

5. விடைத்தாள் கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது.

6. விடைத்தாள் புத்தகத்தின் எந்த தாளையும் கிழிக்கவோ நீக்கவோ கூடாது.

எல்லாம் படித்திருப்பீர்கள், எல்லாமே தெரிந் திருக்கும். ஆனால், நிதானம் தவறிவிடுவீர்கள். சின்ன தவறாக இருக்கும் அதை அதுவரை செய்திருக்கவே மாட்டீர்கள். கடைசியில் பார்த்தால் அதுதான் கிடைக்கவேண்டிய மதிப்பெண்ணை இழக்க காரணமாகிவிடும். ஆகையால், மாண வர்களே விடைத்தாளில் பதில் எழுதும்போது நிதானம் மிகவும் அவசியம்.

வெற்றி பெற வாழ்த்துகள்!


Share:

11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு

11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு..!


தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.19-ம்தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்), பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

Share:

10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்..!

 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் - விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்

விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் = 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல்

வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம்

நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை

வழக்கம்போல் தமிழ் . ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம்

நடப்பு ஆண்டு வரை 4 ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை

விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் : 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல்

Share:

Definition List

header ads

Unordered List

Support