தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..

மிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் நர்சரி வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தவறுதலான அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (அக்.18) வெளியாகும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு : 

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 2ம் அலை தொற்று வெகுவாக குறைந்திருக்க கூடிய சூழலில் கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1 லிருந்து 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் கடந்த 14ம் தேதி முதல் தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் போது, நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் முழுமையாக செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பள்ளிகள் திறக்கப்படும் போது காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நர்சரி பள்ளிகளை திறக்கும் அறிவிப்பு தவறுதலாக கொடுக்கப்பட்டிருந்ததாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘தமிழக முதல்வருடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்து விவாதம் நடத்தப்பட்டது.

ஆனால் நர்சரி பள்ளிகளை திறப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. இது குறித்த தெளிவான அறிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும்’ என்று கூறியுள்ளர். இந்த தகவலின் கீழ் தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதியன்று நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்த அறிவிப்பு இன்று (அக்.18) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...