எதை சாப்பிடலாம்...எதை சாப்பிடக்கூடாது?
காய்கறி, சிறுதானியங்களை கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவு உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெண்கள் காய்கறி மாலையுடன் கோவையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தேசிய ஊட்டச்சத்து மாத விழா, செப்.,1 முதல் 30 வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில், பேரணி நடத்தப்பட்டது.கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் முருகேஸ்வரி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடந்த பேரணியில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், 'உண்ணக்கூடியவை' மற்றும் 'உண்ணக்கூடாதவை' என்ற பெயர் எழுதிய தட்டிகளுடன் விழிப்புணர்வு கோஷம் எழுப்பியபடி சென்றனர்.உண்ணக்கூடியவை என்ற பட்டியலில் காய்கறி, சிறு தானியங்கள் இருந்தன.
பெண்கள் பலர், காய்கறிகளால் உருவாக்கப்பட்ட மாலைகளை அணிந்தபடி ஊர்வலத்தில் முன் சென்றனர்.உண்ணக்கூடாதவை பட்டியலில், புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலா போன்றவை இருந்தன. தொடர்ந்து 6 மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஊட்டச்சத்து மிகுந்த உணவு உண்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், இந்த பேரணி நடந்தது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.