இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
கொரோனா தடுப்பூசி:
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதை தடுப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா தடுப்பூசி ஒவ்வொரு மக்களும் செலுத்தி கொண்டு வருகின்றனர். நேற்று மட்டும் கிட்டத்தட்ட 5000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவில் தற்போது வரை சுமார் 217.41 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 4 கோடி 9 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதே போல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 3 கோடி 14 லட்சத்து 91 ஆயிரத்து 154 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் 12 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி தடுப்பூசி 56 கோடி 11 லட்சத்து 63 ஆயிரத்து 416 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 51 கோடி 53 லட்சத்து 34 ஆயிரத்து 360 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நேற்று ஒரு நாள் மட்டும் 3,03,888 மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.