பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு – வலுக்கும் கோரிக்கை!

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு – வலுக்கும் கோரிக்கை!

தமிழத்தில் அரசு பள்ளிகளில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதால் இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நியமனம் செய்வதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொது மாறுதல் கலந்தாய்வு

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாணவர்களின்

எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர் உள்ளிட்ட பணியிடத்தில் 13000 பணியிடங்கள் மொத்தமாக காலியாக உள்ளது. இதனால் மாணவர்களுக்கு கற்பித்தலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் இதனை தவிர்க்கும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தபட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையருக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாக சேர்ந்துள்ள மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை கணக்கீடு 


செய்ய வேண்டும். அதன்பின் இந்த ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த கலந்தாய்வில் 3 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அத்துடன் வெவ்வேறு இடங்களில் பணிபுரியும் கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு 2வதாக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளனர்.


மேலும் நெல்லை மாவடட்டத்தில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்  கலந்தாய்வில் குளறுபடி ஏற்பட்டதால் அதனை ரத்து செய்து பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் அதே சரகத்தில்Seniority panel தொடர்ந்திட வேண்டும். தற்போது பட்டதாரி ஆசிரியர்  கலந்தாய்விற்கு முன் அதை சேர்த்திட வேண்டும்.

Post a Comment

0 Comments