தமிழகத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என, ஸ்டாலின் ஊழியர்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு சாத்தியமா?


தமிழகத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என, ஸ்டாலின் ஊழியர்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு சாத்தியமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பழைய பென்ஷன் திட்டம் :

தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு, பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள், தற்போது வரை போராடி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்டாலின், இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்ட பின் மீண்டும் தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

வாட்ஸ் அப்: Padavelai News

ஆனால் தற்போது இது சாத்தியமா? என சந்தேகம் எழுந்துள்ளது. 2019-20பட்ஜெட் படி, தமிழக அரசின் பென்ஷன் பெற்றவர் எண்ணிக்கை 7,15,699 மட்டுமே, ஆனால் இந்த ஆண்டு அறிக்கையின் படி 7,15,761 நபர்கள் பென்ஷன் பெறுகின்றனர். இந்த திட்டம் அமலானால், இளம் வயதில் பணிக்கு சேர்ந்த ஊழியர்கள் பென்ஷன் பெற வாய்ப்பு உண்டு.



பழைய பட்ஜெட் படி அதற்கான செலவு 3,488.20 கோடி, ஆனால் தற்போதைய திட்டத்தின் படி இதற்கு 39,508.37 கோடி. இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெறும் 17.07% மட்டும் கூடுதலாக தேவைப்படுகிறது. அதனால்தான் அரசு மீண்டும் அதை கொண்டு வருவோம் என அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான முறையான அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

Post a Comment

0 Comments