Daily TN Study Materials & Question Papers,Educational News

மேஷம் முதல் மீனம் வரை.. தமிழ் புத்தாண்டு பலன்.. இன்று முதல் அடுத்த 1 வருடத்திற்கு என்ன நடக்கும்?

மேஷம் முதல் மீனம் வரை.. தமிழ் புத்தாண்டு பலன்.. இன்று முதல் அடுத்த 1 வருடத்திற்கு என்ன நடக்கும்?



தமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில் 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.


மேஷ ராசி பலன்கள்: மேஷத்தில் சூரியன் குரு ஆகியவை இந்த புத்தாண்டில் நிலவும். இந்த மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம். பொருளாதார ரீதியான மாற்றம்; உங்களுக்கு பொருளாதார ரீதியான மாற்றத்தை இந்த புத்தாண்டு கொடுக்கும். நீங்கள் இத்தனை காலம் கடுமையான கடனில் இருந்தீர்கள். முக்கியமாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டு வந்திருப்பீர்கள். இனி அந்த பிரச்சனை இருக்காது. இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கான இந்த பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறையும்., பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சில பிரச்சனைகள் வரும். திருமண வாழ்க்கையில் நிலவிய சில பிரச்சனைகள் சரியாகும். பிரிந்து இருந்த கணவன் உங்களுடன் சேரும் வாய்ப்புகள் உள்ளன. மாதவிடாய் பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படலாம்


வேலை ரீதியில் என்ன நடக்கும்?: வேலையில் பணி உயர்வு கிடைக்கும். புதிய நிதி ஆண்டில் அதிக சம்பள உயர்வு கிடைக்கும். கூடுதல் வருமானத்தை நன்றாக முதலீடு செய்வது நல்லது. முதலீடுகளில் கவனம் செலுத்தவும். பணியில் மூத்தவர்களிடம் கவனம் அவசியம். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வார்த்தையில் கவனம்; இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். எதையும் யோசித்து பேசுங்கள். தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள். யாரிடமும் கோபத்தை காட்ட வேண்டாம். உங்கள் குணமே எடுத்து எறிந்து பேசுவதுதான். அந்த குணம் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதிலும் கவனம் அவசியம். எப்போதும் கவனம் அவசியம். குடும்ப பிரச்சனை தீரும்: குடும்பத்தில் நிலவிய சொத்து பிரச்சனை. நில பிரச்சனை தீரும். அப்பா மகன் இடையிலான உறவு சரியாகும். உங்கள் பெண்ணின் வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகளும் சரியாகும். விவாகரத்து வரை சென்ற உங்களின் பெற்றோர் சேர கூட வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலம் பேசாமல் இருந்த சொந்தங்கள் பேசும்.


பரிகாரம்: உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சென்று உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கு பூஜை செய்யுங்கள்.


ரிஷப ராசி பலன்கள்: உங்களுக்கு நல்லது தொடங்க போவதெல்லாம் மே 1ல் தான். அதனால் 15 நாட்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். பொறுமையாக இருப்பதே உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் காக்கும். கஷ்டங்களின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அலட்சியம் வேண்டாம்:
எதிலும் அலட்சியம் வேண்டாம். அடுத்த 15 நாட்களை கடந்து விடுங்கள். புத்தாண்டு குருபெயர்ச்சியும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். ரிஷப ராசிக்கு ஜென்ம இடத்தில் குரு மாற உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார். அவர் இருக்கிற இடத்தை விட பார்க்கிற இடம் முக்கியம் என்பதால் தடங்கல்கள் வந்தாலும்.. நீங்கள் நினைத்த காரியங்களை கஷ்டப்பட்டு செய்தால் நிறைவேற்றுவீர்கள். கால் மேல கால் போடும் காலம்: புத்தாண்டு பிறந்து முதல் 15 நாட்களுக்கு பின் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். கால் மேல் கால் போடும் காலம் வரும். எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது. குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும்.

பணம் வரும்: நீங்கள் வேலையில், படிப்பில் அசத்த போகிறீர்கள். அரியணையில் ஏறும் காலம் ஏற்படும். வேலை நிமித்தமாக இடம் மாறும் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றம் வாய்ப்பும் உண்டு. வேலையில் பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

பரிகாரம்: வடபழனி முருகன் கோவில் அல்லது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று பூஜை செய்யுங்கள்


மிதுன ராசி பலன்கள்: எல்லா மாற்றமும் வர கூடிய இந்த வருஷத்தில் கொஞ்சமும் அலட்சியமாக இருக்காதீர்கள். எதையும் பார்த்து பார்த்து செய்யுங்கள். ஒரு மெசேஜ் அனுப்பினால் கூட இரண்டுக்கு மூன்று முறை சோதனை செய்து பார்த்துவிட்டு மெசேஜ் அனுப்புங்கள். இது எடுத்துக்காட்டுதான். இப்படி எல்லா விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்


ஆரோக்கியம் சரியாகும்: உங்களின் ஆரோக்கியம் சரியாகும். உடல் ரீதியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். இதுவரை இருந்த கிட்னி பிரச்சனைகள் சரியாகும். வயிற்று பிரச்சனைகள் சரியாகும். கால் வலி நீண்ட காலம் இருந்த போதிலும் இப்போது சரியாகிவிடும்.

சேர்க்கையில் கவனம் வேண்டும்: காசு எவ்வளவு வந்தாலும் பணம் கையில் இருக்காது. வருகின்ற பணம் எல்லாம் செலவிற்கே போதுமானதாக இருக்கும். இதை சமாளிக்க நீங்கள் சுப செலவுகளை செய்யலாம். உங்களின் சேர்க்கையில் கவனம் வேண்டும். யாருடன் நட்பாக இருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். கூடாத சேர்க்கை பல பிரச்சனைகளை, ஆபத்துகளை ஏற்படுத்தும்.


குடும்பத்தினரிடம் அன்பாக இருங்கள்: நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம். இந்த காலத்தில் குடும்பத்தினரிடம் அன்பாக இருங்கள். அவர்களிடம் சண்டை போட வேண்டாம். அம்மா அப்பாவிடம் அன்பாக இருங்கள். மனைவியிடம் கோபம் கொள்ள வேண்டாம் .

ஏப்ரல் 14ல் பிறக்கும் தமிழ் குரோதி ஆண்டில் மிதுன ராசிக்கு எல்லாம் மாறும் என்பதால் மாற்றம் தரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபடவும்.


கடக ராசி பலங்கள்: எல்லா விஷயத்திலும் பொறுப்பாக இருங்கள். எதையும் யோசித்து செய்யுங்கள். ஒவ்வொரு படியையும் பார்த்து பார்த்து வையுங்கள். முக்கியமாக வேலை பார்க்கும் இடங்கள், படிக்கும் இடங்களில் பொறுப்பாக இருங்கள். ஒவ்வொரு முடிவையும் மிக கவனமாக வையுங்கள். அலுவலகங்களில் சில சமயங்களில் உங்களுக்கு அதீத பிரஷர் வரலாம். அதனால் நீங்கள் தவறு கூட செய்யலாம், இதனை தவிர்க்க மிகவும் பொறுப்பாக செயல்படுங்கள்.

பணம் வரும்: நீங்கள் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து எல்லாம் பணம். முக்கியமாக இந்த புதிய நிதி ஆண்டில் வருமானம் புதிய உச்சத்தை தொடும். பணத்தை நல்ல இடங்களில் முதலீடு செய்யவும். நீங்கள் வேலையில், படிப்பில் அசத்த போகிறீர்கள். அரியணையில் ஏறும் காலம் ஏற்படும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வேலையில் பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

கெட்ட எண்ணம் வேண்டாம்: உங்களுக்கு அதிகமாக கெட்ட எண்ணம் பிறக்கலாம். அதனால் கெட்ட எண்ணம் வந்தால் உடனே மறந்துவிடுங்கள். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட எண்ணம் வேண்டாம். யாரையும் பற்றி தவறாக யாரிடமும் பேச வேண்டும். கொஞ்சம் வாயை குறைத்துக்கொள்ளுங்கள் கடக ராசிக்காரர்களே. யோசித்து பேசுங்கள்.

ஆரோக்கியம் சரியாகும்: இந்த புத்தாண்டு உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்யும். உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும்.


திருமண உறவில் கவனம்: திருமண உறவில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். அவசரப்பட்டு பெண், ஆண் பார்க்க வேண்டாம். மணவாழ்க்கையை யோசித்து முடிவு எடுக்கவும். முக்கியமாக ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் திருமண உறவில் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவும்.


சிம்ம ராசி பலன்கள்: எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது உங்களுக்கு மிக அவசியம். எதிலும் அவசரம் வேண்டாம். ஒவ்வொரு முடிவையும் நீதானமாக எடுங்கள். அலுவலகத்தில் நேர்மையாக இருங்கள். இந்த வருடம் நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட பெரிதாக மாறலாம். அதனால் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள்.

கவனமாக செயல்படுங்கள்: வாகன விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள், அதேபோல் கடலில், நீர் நிலைகளில் குளிக்கும் போது கவனமாக செல்லுங்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். சிலருக்கு நல்லது செய்கிறேன் என்று உதவி செய்ய சென்றால் கூட பிரச்சனையாக மாறிவிடும். சிக்குனா சில்லறை ஆகிவிடுவீர்கள். கவனம்.

குடும்பத்தில் சண்டை வரும்: குடும்பத்திலும் நிம்மதி தொலையலாம். அதனால் எதை பற்றியும் யோசிக்காமல் அமைதியாக வீட்டில் இருக்கவும். பிரச்சனை, சண்டைகள் வந்தால் பெரிதாக அதில் தலையிடாமல் கொஞ்சம் பொறுமை காக்கவும். முக்கியமாக நிலம் வாங்கும் விஷயங்கள், வீடு வாங்கும் விஷயங்களில் அகலக்கால் வேண்டாம்.

என்னென்ன நல்லது நடக்கும்?: உங்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் பின்வரும் நல்ல விஷயங்களும் நடக்கும். உங்களின் ஆரோக்கியம் சரியாகும். இத்தனை காலம் நீங்கள் உடல் ரீதியாக பட்ட கஷ்டங்கள் எல்லாம் சரியாகும். அதிலும் மே 1ம் தேதி குரு பெயர்ச்சி வருகிறது. உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் குரு வருகிறார். இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும் என்பார்களே அது இப்போது வரப்போகிறது. இந்த முறை சிம்ம ராசிக்கு குரு 2, 4 , 6 இடத்தில் பார்க்கிறார்.

இதனால் பணம் உங்களுக்கு கொட்டோ கொட்டு என்று கொட்டும். உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.


கன்னி ராசி பலன்கள்: கன்னி ராசிதாரர்கள் பொதுவாக பலரும் பிறந்ததில் இருந்தே கஷ்டப்பட்டு இருப்பார்கள். நினைத்தது எதுவும் உங்களுக்கு நடந்து இருக்காது.

காதல் வாழ்க்கையில் பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டு இருக்கும். உங்கள் பள்ளி படிப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும்.

வளர்ந்த பின் கடன் மேல் கடன், திருமணம் கைகூடவில்லை, சொந்த வீடு இல்லை, அப்பா வாங்கிய கடனை அடைக்க வேண்டிய கட்டாயம் என்று பல கஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கும்.

அதன்பின் உடல் ரீதியான பிரச்சனைகள், விபத்துகள் மேல் விபத்துகள். பல்வேறு கண்டங்கள் கூட ஏற்பட்டு இருக்கும். இப்படி பட்டதெல்லாம் கஷ்டம்.. பார்த்ததெல்லாம் நஷ்டம் என்று கடுமையாக கஷ்டப்பட்டு இருப்பீர்கள். எல்லாம் மாறும்: இந்த 2024 தமிழ் புத்தாண்டில் இருந்து உங்களுக்கு பின்வரும் மாற்றங்கள் ஏற்படும்.

உங்களுக்கு பணம், பொருளாதாரம் உயரும். சினிமாவில் வாய்ப்புகள் வரும். உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த நீங்கள் இனிமேல்.. உலகிற்கே தெரியும் அளவிற்கு பெரிய ஆளாக மாறும் காலம் வந்துவிட்டது. எல்லாத்திலும் வெற்றி - பயன்படுத்திக்கொள்ளுங்கள்: நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கெட்டதெல்லாம் விலகும். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.

இதுவரை 8ல் இருந்த குரு இப்படி உங்களை போட்டு தாக்கிக்கொண்டு இருந்தார். இனிமேல் அவர் உங்கள் ராசிக்கு 9ல் இருக்க போகிறார். முக்கியமாக குரு பெயர்ச்சிக்கு பின் உங்களுக்கு பல மாற்றங்கள் ஏற்படும். மே 1ம் தேதி குரு பெயர்ச்சி ஏற்படும். அதோடு உங்கள் ராசியை பார்க்க போகிறார். இனி உங்களுக்கு பொருளாதாரம் உயரும். பணம் கொட்டும். பிஸ்னஸ் தொடங்கினால் வெற்றி நிச்சயம், வீடு, நிலம் கிடைக்கும் வாய்ப்பு வரும். பெரிய மனிதர்கள் ஆசிர்வாதம் உறவு கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.


துலாம் ராசி பலன்கள்: இந்த புத்தாண்டில் உங்களுக்கு நல்லதை விட கெட்டதையே கொஞ்சம் அதிகம் கொடுக்கும். கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு.

இதற்கு முன் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்தார் குரு. இப்போது 8ம் இடத்தில் இருக்கிறார். துலாம் ராசிதாரர்களுக்கு பொதுவாகவே குரு பிரச்சனைகளை தரும்.

குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும்.

துலாம் ராசி கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும். அதாவது வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவி அந்நியோனியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம், வேலை மாற்றத்துக்கும் வாய்ப்பு உண்டு. போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும்.

யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கே எதிராக திரும்பலாம். நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். தவறாக முடியலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். போக்குவரத்தில் கவனமாக இருங்கள்.நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை நிமித்தமாக இடம் மாற வாய்ப்பு உண்டு. வேலை மாற்றத்துக்கும் வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு..


விருச்சிக ராசி பலன்கள்: கடந்த 10 வருடமாக நீங்கள் கடுமையாக பல விஷயங்களில் கஷ்டப்பட்டீர்கள். உங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. ஆரோக்கிய ரீதியாக சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, வயிற்று பிரச்சனை எல்லாம் ஏற்பட்டது.

குடும்பத்தில் சண்டை, திருமண வாழ்க்கையில் சண்டை, குழந்தைகளின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்தது. உங்கள் பொருளாதாரம் மிக மோசமாக நலிவடைந்தது. உங்களின் குழந்தைகள், பெற்றோர்களின் பொருளாதாரமும் மோசம் அடைந்தது. உங்களின் சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உங்களின் வீட்டை கூட காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

விருச்சிக ராசிக்கு நடக்கும் நல்ல பலன்கள்: வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகி நல்லதே நடக்க தொடங்கும். பொருளாதார ரீதியாக நிலவிய கடன்கள் சரியாகும். அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள்.

குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். கணவருடன் உறவை பேணுவதில் சிக்கல் ஏற்படலாம். உங்கள் பேச்சில் கவனம் செலுத்துங்கள். அவசரப்பட வேண்டாம். இந்த வருடமே வீடு காட்டுவீர்கள். மே மாதமே நிலம் வாங்கும் வாய்ப்பு இருக்கும். தொட்டது துலங்கும். இந்த குரு பெயர்ச்சியில் ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் விருச்சிக ராசிக்கு எல்லாம் நல்லதே நடக்க போகிறது

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். என்ன செய்ய வேண்டும்: மதுரை மீனாட்சி கோவில்களுக்கு செல்வது நல்ல பரிகாரமாக அமையும். ஆலங்குடி குருஸ்தலத்திற்கு குரு பெயர்ச்சிக்கு பின் சென்று பூஜை செய்வது பலன் தரும்.


தனுசு ராசி பலன்கள்: நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் சுணக்கம் ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம்.

செலவு பார்த்து செய்யுங்கள்: மே 1ம் தேதி குரு பெயர்ச்சி வருகிறது. இதுவும் இந்த வருடம் உங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். வேலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும்: வேலைகளில் உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். வேலை பார்க்கும் இடங்களில் நீங்கள்தான் வின்னர். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். நினைத்ததும் வேலை, பிஸ்னஸ் விஷயங்களில் அப்படியே கைகூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.

கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள். வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். உங்களுக்கு செலவு அதிகரிக்கும். அதை சுப செல்வாக மாற்றுவது உங்கள் சாதுர்யம். குரு பெயர்ச்சி + புத்தாண்டு: ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலைபாகையோடு சென்றுவிடும். நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம்.

தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார். முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவும்.


மகர ராசி பலன்கள்: இந்த புதிய ஆண்டில் மகர ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்கள் : உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.

உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். ஆனால் இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு பின்வரும் பாதக பலன்கள் ஏற்படும். அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள். வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்கலாம். திடீர் மயக்கம் ஏற்படலாம். கிட்னி பிரச்சனை ஏற்படலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு நடக்க போகும் நல்ல விஷயங்கள்: புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும் . எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.

இரண்டாவது குழந்தைக்கு முயல்பவர்களுக்கு இரண்டாம் குழந்தை கிடைக்கும். திருமணம் கைகூடும். இத்தனை காலம் பல வரங்களை தேடி இருப்பீர்கள். ஏதாவது ஒரு பெண் - ஆண் அமையாதா என்று பார்த்து இருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் தேடாமலே உங்களுக்கு திருமணம் கைகூடும்.

உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். அதனால் உங்களுக்கு பின்வரும் சாதக பலன்கள் ஏற்படும். உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும். மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது.


கும்ப ராசி பலன்கள்: அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம்.

இந்த புத்தாண்டு காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள். இத்தனை காலம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. உடல் ஆரோக்கியம் சிக்கலாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறக்கும்.

விடாமல் தொடர்ந்த கஷ்டம்: கும்ப ராசிக்கு கடந்த 10 வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்தது. வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது.

உங்களுக்கு வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.

இனி எல்லாம் நல்லதே நடக்கும் பாஸ்: உங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது. புதிய தொழில் வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகள் தீரும். குழந்தை பாக்கியம் உண்டு, ராசிக்கு 8, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. இதை தொழில் ஸ்தானம் என்பார்கள். இங்கே பார்வையிடுவதால் உங்கள் வாழ்க்கை அடியோடு மாறப்போகிறது.

இதே வருடம்தான் மே 1ம் தேதி குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் களமிறங்குகிறார். 4ம் வீட்டில் குரு இருந்தால் நல்லதே நடக்கும்.. நன்றாக நடக்கும்.. நினைத்ததே நடக்கும் என்பார்கள். அப்படிதான் உங்களுக்கு நடக்க போகிறது.

பரிகாரம்: வீரன் தெய்வத்தை வணங்கவும்.


மீன ராசி பலன்கள்: புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும்.

படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும்.வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும்.

திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மணவாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

மீன ராசிக்கு பாதகமாக போகும் விஷயங்கள்: இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மன ஆரோக்கியம் சரியாகும். ஆனாலும் முன்பு மோசமாக இருந்த மன ஆரோக்கியம் காரணமாக.. ஏற்பட்ட உடல் பாதிப்புகள் தொடரும்.

Share:

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 ... 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 ... 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?




இந்த ஆண்டு 1.5.2024 அன்று குருபகவான், கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம் ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ரிஷபம் குருவின் பகைவீடு. அதேபோல குருவின் விசேஷப் பார்வைகளான 5, 7,9-ம் பார்வைகள் முறையே கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளில் பதிகின்றன. அதோடு கோசார ரீதியாக மீனத்தில் ராகு, கன்னியில் கேது என்ற அமைப்பும், கும்பத்தில் சனி இருக்கும் அமைப்பும் காணப்படுகிறது.


இத்தகைய அமைப்பின் காரணமாக இந்த குரு பெயர்ச்சியினால் உலக அளவில் ஒருவித பரபரப்பான சூழல் காணப்படும். பகை நாடுகளின் அச்சுறுத்தல், பிரபலங்களின் உடல்நலத்தில் குறைபாடுகள் இவை தோன்றினாலும் சரியான நடவடிக்கைகளால் அனைத்தும் சீராகும். உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயரும்.


புதிய கண்டுபிடிப்புகளால் வான் வெளியில் பல அதிசயங்கள் நிகழ்த்தப்படும். கொடுமையான நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களின் ஆரோக்யம் பாதுகாக்கப்படும். மக்களிடையே சகோதர மனப்பான்மை, தெய்வீக நாட்டம், வலைதளங்களில் பகிரப்படும் விஷயங்களின் உண்மையை அறிதல் போன்றவற்றால் அமைதி நிலவும். மகான்கள் வழிபாடு, முதியோரை மதித்தல் போன்ற செயல்களால் இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நன்மை தருவதாக அமையும். தற்போது ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ள 12 ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.



மேஷம்:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார். இதனால் உங்கள் வாக்கின் செல்வாக்கு அதிகரிக்கும். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 6,8,10-ம் இடங்களில் பதிகின்றன. இதனால் எதிரிகள் பயம் நீங்கும். ஆயுள் ஆரோக்யம் சீராகும், பணி, தொழிலமைப்பில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும். அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும். பேச்சுக்கு மதிப்பு கூடும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு சீராகும். பழைய கடன்கள் சுலபமாக அடைபடும். வாரிசுகளால் பெருமை உண்டாகும். வீடு, வாகன யோகம் உண்டாகும்.


வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம். அரசாங்கப் பணிபுரிபவர்கள் திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவீர்கள். அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த சமயத்திலும் வாக்குறுதிகளை யோசித்துச் சொல்லுங்கள். மாணவர்கள் சோம்பலை உதறூங்கள். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு.சினிமா, இசை, படைப்புத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும். பயணம் செல்லும்போது வேகத்தைத் தவிருங்கள். அடிவயிறு, முதுகு, அஜீரணம், நரம்பு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடும், பெருமாள் ஆராதனையும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.


ரிஷபம்:


தற்போதைய பெயர்ச்சியில் குருவானவர், உங்கள் ராசிக்கு அதாவது ஜன்ம ராசியான ரிஷபத்திற்கு வருகிறார். இது ஜன்ம குரு காலம் என்று யாராவது அச்சுறுத்தினால் பயப்பட வேண்டாம். அவரது விசேஷ பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 5,7,9-ம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பினால், பூர்வ புண்ணிய பலம் அதிகரிக்கும். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் சேரும். அதேசமயம் விட்டுக் கொடுத்தலும், வீண் ரோஷம் தவிர்ப்பதும் முக்கியமாகும். அலுவலகத்தில் நீங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம். உயரதிகாரிகளிடம் பேசும்போது தர்க்கத்தைவிட தன்னடக்கமே நல்லது. பிறர் குறையை பெரிதுபடுத்துவதைத் தவிருங்கள். எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சுமுகமான போக்கு நிலவும். இந்த சமயத்தில் வேண்டாத ரோஷம் பெரும் சங்கடத்தை உருவாக்கிவிடலாம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.


சுபகாரியங்களில் பெற்றோர், பெரியோர் ஆலோசனைகலைக் கேளுங்கள். பிறமொழி நபர்களிடம் கவனமா பழகுங்கள். தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அயல்நாட்டு ஒப்பந்தத்தில் அவசரம் வேண்டாம். நடைமுறை சட்டங்களில் கவனமாக இருங்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள். அரசியலில் இருப்போர் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. அரசாங்க ஊழியர்கள் வளர்ச்சி அதிகரிக்கும். கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள்.படிப்பில் கவனச் சிதறலைத் தவிருங்கள். சினிமா, கலைத்துறையினர் ரகசியங்களைப் பொது இடத்தில் பகிர வேண்டாம்.கழுத்து,மூட்டு, ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி உபாதைகள் வரலாம். வாகனப்பழுதை உடன் சீர் செய்யுங்கள். துர்க்கை, தட்சிணாமூர்த்தி வழிபாடு வாழ்வை செழிக்க வைக்கும்.





மிதுனம்:


இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்துக்கு வருகிறார், குருபகவான். இந்த அமைப்பில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 4,6,8-ம் இடங்களில் பதிகின்றன. இதனால் உங்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கும்,மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது. வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கடன் தருவது, பெறுவதை உடனுக்குடன் எழுதி வையுங்கள். பெண்கள் சமையலறையில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம்.


தொழிலமைப்பில் லாபம் சீராகும்.பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம். ரசாயனத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கப் பணியில் உள்ளோர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். கலைஞர்கள், சினிமாத்துறையினர் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம். மதுரை மீனாட்சி, முக்குறுணி விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.



கடகம்:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்துக்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே மூன்று, ஐந்து, ஏழாம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பினால் உங்கள் சகோதர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானங்கள் விசேஷ நன்மை பெறுகின்றன. இதனால், வீடு, வாகனம் சேரும், பழைய வழக்குகள் சுமுகமாகத் தீர்வாகும். தம்பதியரிடையே இருந்த விரிசல்கள் நீங்கும். என்றாலும் தேவையற்ற தர்க்கம் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.



சிம்மம்:


குருபகவான், இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே இரண்டு, நான்கு, ஆறாம் இடத்தில் பதிகின்றன. இதனால் உங்கள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பூர்வீகப் பிரச்னைகள் தீரும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். வெளியூர் செல்லும் சமயத்தில் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பொறுப்புகளில் நேரடி கவனம் செலுத்துங்கள். இல்லத்தில் இன்சொல் பேசுங்கள்.


வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும். தேவையற்ற கட்ன் பெறவோ தரவொ வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பெண்கள் அமைதியால் அதிக நன்மைகளைப் பெறலாம். அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் வளர்ச்சி சீராகும். செல்லும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதியுங்கள். அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அரசாங்கப் பணிபுரிவோர் மேலான நன்மைகளைப் பெறுவர். சினிமா, கலைத்துறையினர் வாய்ப்புகளை தொடர்ச்சியாகப் பெறுவீர்கள். எதிர்பாலரிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாணவர்களுக்கு சோம்பல் கூடாது. வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது. திருவண்ணாமலை சுவாமி, அம்பாள் வழிபாடு சிறப்பான நன்மை தரும்.


கன்னி:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் ஐந்தாம் பார்வை உங்கள் ராசியில் பதிவது சிறப்பு. ஏழாம், ஒன்பதாம் பார்வைகள் முறையே மூன்று, ஐந்தாம் இடத்தில் பதிகின்றன. இதனால், ரத்தபந்தங்களிடையே உங்கள் மதிப்பு உயரும், சுபகாரியத் தடைகள் நீங்கும். தொட்டவை துலங்கும். அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும்.உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்து சேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.

அக்கம் பக்கத்தினரிடம் வீண் உரசல் தவிருங்கள். ஹார்மோன் குறைபாடுகளில் அலட்சியம் வேண்டாம். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். புதிய முயற்சிகள் ஏற்றத்தைத் தரும். அர்சுவழிப் பாராட்டுகள் சிலருக்குக் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அரசுப்பணியில் உள்ளவர்கள் நன்மைகள் அதிகரிக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் இரவில் வெகு நேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள். கலைஞர்கள், சினிமாத்துறையினர் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். செல்லும் இடத்தின் சட்டங்களை மதியுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். தலை, முதுகு, கழிவு உறுப்பு, ரத்தத் தொற்று உபாதைகள் வரலாம். நரசிம்மர், பைரவர் வழிபாடு நன்மைகள் பல சேர்க்கும்.

துலாம்:


தற்போதைய பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பர்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பன்னிரண்டு, இரண்டு, நான்காம் இடங்களில் பதிவது சிறப்பு. இந்த அமைப்பின் காரணமாக உங்கள் முயற்சிகள் பலிதமாகும், வாக்கில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம். பதவி, ஊதியம் உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரலாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு தடைப்பட்டால் தளரவேண்டாம், அது நன்மைக்கே. வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். உறவுகள் யாரிடமும் வீண் உரசல் வேண்டாம். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. விடுபட்ட முன்னோர் கடன்களை அவசியம் நிறைவேற்றுங்கள். பெண்கள் திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம். பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.


தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அது தொடர்ச்சியாக இருக்க உழைப்பு மிக முக்கியம். தேவையற்ற வங்கிக் கடன்களைத் தவிருங்கள். அரசியலில் உள்ளவர்கள் முகஸ்துதி நபர்களை ஒதுக்குவது முக்கியம். பொது இடத்தில் வாக்குறுதிகளைத் தவிருங்கள். அரசுப்பணியில் உள்ளோர், நிதானமாகச் செயல்படுவது நல்லது. பணத்தைக் கையாள்வோர் நிதானத்துடன் இருப்பது முக்கியம். கலைஞர்கள், சினிமாத் துறையினர் வாய்ப்புகள் வரப்பெறுவீர்கள். படைப்பு ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம். மாணவர்களுக்கு மதிப்பு உயரும். இரவில் வெளி இடங்களில் தங்க வேண்டாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். நரம்பு, எலும்பு, முதுகுத் தண்டுவடம், கண், பற்களில் உபாதை வரலாம். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு, சகல நன்மையும் தரும்.


விருச்சிகம்:


இந்தப் பெயர்ச்சியில் குரு பகவான், உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகளில் ஏழாம் பார்வை உங்கள் ராசியிலேயே பதிவது மிகமிக விசேஷம். அவ்ரது ஐந்து, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பதினொன்று, மூன்றாம் இடங்களில் பதிகின்றன. இது லாபத்தை அதிகரிக்கச் செய்யும், சகோதர வழியில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பணியிடத்தில் உங்கள் பெருமை உயரும். மேலதிகாரிகள் ஆதரவினால் பதவி,ஊதியம் உயரப்பெறுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். புதிய பணிவாய்ப்பு எதிர்ப்பார்ப்பு போல் கூடிவரும். அயல்நாட்டுப் பயண வாய்ப்பு சிலருக்கு உண்டு. பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் ஆதாயம் தரும். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். இளம்வயதினரின் பலகால கனவுகள் ஈடேறும். உடல்நலத்தில் இருந்த சங்கடங்கள் தீரும்.


ஆடை, ஆபரணம், சொத்து சேரும். மூன்றாம் நபரை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தொழிலில் லாபம் சீராக வரத்தொடங்கும். அயல்நாட்டு வர்த்தகம் கைகூடும். யாருடைய கட்டாயத்திற்காகவும் தெரியாத தொழிலில் முதலீடு செய்யவேண்டாம். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. சிலருக்கு புதிய பதவி, பொறுப்புகளால் பெருமை உண்டாகும். அரசுப்பணி செய்பவர்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கிடும். பயணத்தில் கோப்புகள் பத்திரம். பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். கலை, படைப்புத் துறையினர் முயற்சிகளால் முன்னேறலாம். பழைய உறவுகளை உதாசீனப்படுத்த வேண்டாம். வாகனம் ஓட்டுவோர்க்கு போதுமான ஓய்வு முக்கியம். தலைவலி, கண்கள், பாதம், இடுப்பு, மூட்டு, உணவு செரியாமை உபாதைகள் வரலாம். முருகன், துர்க்கை வழிபாடு முன்னேற்றம் தரும்.




தனுசு:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகிறார். அவரது சிறப்புப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பத்து, பன்னிரண்டு, இரண்டாம் இடங்களில் பதிகின்றன. இத்தகைய அமைப்பினால் உங்கள் பணியிடம் மேன்மை பெறும். தொழிலமைப்பு சீராகும். வார்த்தையில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் அனுகூல சூழல் நிலவும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் நிச்சயம் கைகூடும். அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் முக்கியம். புதிய பணி கைக்கு எட்டாமல், இருக்கும் பணியை உதற வேண்டாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது அசட்டுத் துணிச்சலை விட அடக்கமே நல்லது. வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம்.


வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அசையும் அசையா சொத்து சேரும். கையிருப்பை ஆடம்பரத்தில் கரைக்க வேண்டாம். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். குழந்தை பாக்யம் வேண்டுவோர் குலதெய்வத்தை வணங்குவது நல்லது. தொழிலில் தொடர்ச்சியாக லாபம் வரும். சட்டப்புறம்பினை கனவிலும் நினைக்க வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துங்கள். அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். செயல்களில் நிதானம் இருக்கட்டும். அரசுத்துறை சார்ந்த பணியில் உள்ளோர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம். மாணவர்கள், யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்க வேண்டாம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமை வெளிப்படும் அளவுக்கு வாய்ப்புகள் வரும். வாகனத்தில் வித்தைகாட்டல் வேண்டாம். அடிவயிறு, கீழ் முதுகுத் தண்டுவடம், மன அழுத்த உபாதைகள் வரலாம். ராமர், சீதை, அனுமனை ஆராதிப்பது வாழ்வை இனிமையாக்கும



மகரம்:

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வையில் ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியிலேயே பதிவது வெகு சிறப்பானது. மற்ற ஐந்து, ஏழாம் பார்வைகள் முறையே உங்கள் ராசிக்கு ஒன்பது, பதினோராம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பு உங்களுக்கு சகல விதத்திலும் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் எனக் காட்டுகிறது. அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு பேசப்படுவீர்கள். இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். சிலருக்குப் பலகாலக் கனவாக இருந்த பணிவாய்ப்பு தேடிவரும். உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.  வீட்டில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். மனம்போல வீடு, மனை, வாகன வசதிகள் உண்டாகும்.


பழைய கடன்கள் பைசலாகும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். பெற்றோர் உடல்நலத்தில் கவனம்செலுத்துங்கள். வாரிசுகளிடம் வீண்கண்டிப்பு தவிருங்கள். பெண்களுக்கு திடீர் யோகத்தால் பொருட் சேர்க்கை ஏற்படும். செய்யும் தொழிலில் சேதங்கள் நீங்கி, லாபங்கள் அதிகரிக்கும். பங்குவர்த்தகம், வீடு ,மனை சார்ந்த தொழிலில் சீரான திட்டமிடல் முக்கியம். அரசியலில் உள்ளவர்களுக்கு திடீர் பதவி, பொறுப்புகளால் பெருமை சேரும். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம். அரசுப்பணியில் உள்ளோர் புதிய வாய்ப்புகளால் ஆதாயம் பெறுவீர்கள். எதிர்பால் நட்புகளிடம் நெருக்கம் தவிருங்கள். மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். இரவுப் பயணம் எதையும் தொடங்கும் முன் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் காலம் கனிந்து வாய்ப்புகள் பெறுவீர்கள். நரம்பு, அடிவயிறு, முதுகு, கால்கள், தொடை, இடுப்பு உபாதைகள் வரலாம். விநாயகர், அனுமன் வழிபாடு, விசேஷ நன்மைகள் தரும்.



கும்பம்:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு வருகிறார். இந்த சமயத்தில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே எட்டு, பத்து, பன்னிரண்டாம் இடங்களில் பதிகின்றன. இதன் காரணமாக உங்கள் உடல்நலம் சீராகும், தொழிலமைப்பு ஏற்றம் பெறும். பணவரவு இருந்தாலும் செலவுகள் சேர்ந்து வரும். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். பல கால எதிர்பார்ப்புகளான ஊதியம், பதவி உயர்வு கிட்டும். உடனிருப்போருடன் வீண் தர்க்கம் வேண்டாம். திட்டமிடலும் நேரம் தவறாமையும் உயர்வுகளை உறுதியாக்கும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். இல்லத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். விடியல் வெளிச்சம் வரும்போது அதை வார்த்தைகளால் விரட்டிவிட வேண்டாம். உறவுகளால் சகாயம் உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம்.  குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்கள். வரவை திட்டமிட்டுச் செலவிடுங்கள்.


தொழிலில் மேன்மையும் வளர்ச்சியும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பதே நல்லது. மேலிடத்துக்கு எதிரானவர்கள் நட்பு கனவிலும் வேண்டாம். அரசுப்பணி புரிபவர்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி பெறுவீர்கள். சட்டப்புறம்பு சகவாசம் சங்கடம் தரும் உடனே உதறுங்கள். பெண்களுக்கு பூர்வீக சொத்து சேரும். மகப்பேறு அமைய முறையான சிகிச்சைகள் உதவும். மாணவர்கள் மறதியை உடனே விரட்டுங்கள். கலைஞர்கள், சினிமாத்துறையினர் கவனத்தை ஒருநிலைப்படுத்துங்கள். வீண் ரோஷம் தவிருங்கள். வாகனத்தில் பழுதிருப்பின் உடனே கவனியுங்கள். ஒற்றைத் தலைவலி, சுவாசக் கோளாறுகள், அடிவயிறு உபாதை, ரத்த அழுத்த மாற்றம் வரலாம். சிவன்-பார்வதி, பெருமாள்-தாயார் வழிபாடு சீரான நன்மை தரும்.



மீனம்:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஏழு, ஒன்பது, பதினோராம் இடங்களில் பதிகின்றன. இதனால் குடும்பத்தில் அமைதி நிலவும், பூர்வீக சொத்து சேரும், வரவு சீராக இருக்கும். அதேசமயம் எதிலும் தலைகனம் தவிர்ப்பது அவசியம். அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் தவிருங்கள். பிறரைக் குறைகூறுவதும் கூடாது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், பொறுமை முக்கியம். புதிய பதவிகளில் அலட்சியம் கூடாது. வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். அதை வார்த்தைகளால் விரட்டிவிட வேண்டாம். உறவுகளிடம் பழைய கசப்பை பேசுவதைத் தவிருங்கள். வாரிசுகள் வாழ்வில் சுபதடைகள் நீங்கும். வரவு சீரானாலும் செலவுகளும் சேர்ந்து வரும். வீண் ஆடம்பரம் தவிருங்கள். கடன் தருவது, பெறுவதில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம்.


உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் கிட்டும். அரசு வழி அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசியலில் இருப்போர்க்கு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படும். சகவாச தோஷத்தால் அதை இழக்க நேரிடலாம், கவனம். அரசுப்பணி புரிவோர், திறமைக்கு ஏற்ப உயர்வுகளை பெறுவீர்கள். பணியிடக் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலைஞர்களும் படைப்பாளிகளும் சீரான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சின்சியர் செயல்பாடு வளர்ச்சியைத் தொடர்ச்சியாக்கும். மாணவர்கள் எதிர்கால நன்மைக்கு இப்போதே உத்தரவாதம் கிட்டும். பயணப்பாதையில் பிறர் தரும் எதையும் உட்கொள்ள வேண்டாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயார், கொடி மர கருடன் வழிபாடு, சிறப்பான நன்மை தரும்.






Share:

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியமாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து - தேர்வு முடிவுகள் விரைவில்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியமாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன

இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. இதில் சுமார் 40ஆயிரத்துக்கும் மேலான முதுநிலைஆசிரியர்கள் ஈடுபட்டனர். தற்போதுவிடைத்தாள் திருத்துதல் முடிவுற்றதை அடுத்து மாணவர்களின் மதிப்பெண்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நாளை (ஏப்.15) முதல் தொடங்கும்.

அதைத்தொடர்ந்து மாணவர் மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்டவேலைகளை முடித்து, 

திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் 

மே 6-ல்.  வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.!


தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் (2024-25) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது.


அதன்படி, 1-ம் வகுப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 1-ம் தேதி தொடங்கியுள்ளது. இதில் சேர விரும்பும் குழந்தைகளுக்கு 31.3.2024 அன்று 6 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். www.kvsangathan.nic.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 15-ம் தேதி மாலை 5 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர்வதற்கு அந்தந்த பள்ளிகளில் ஏப்ரல் 10-ம் தேதி மாலை 4 மணிக்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்


மத்திய அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் அல்லாத பொதுமக்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கியதுபோக, எஞ்சியுள்ள இடங்கள் மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும். கே.வி. பள்ளிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கு உரிய இடஒதுக்கீடு உண்டு.


Share:

11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான தேர்வு முறை மாற்றம் – CBSE முக்கிய அறிவிப்பு!

11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான தேர்வு முறை மாற்றம் – CBSE முக்கிய அறிவிப்பு!


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது 2024-25 ஆம் கல்வியாண்டிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

தேர்வு முறை மாற்றம்:

CBSE இன் இயக்குனர் (கல்வி) ஜோசப் இமானுவேல் அவர்கள் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி, 2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் இருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முறையில் திறன் சார்ந்த கேள்விகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முறையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று சிபிஎஸ்சி தெளிவுபடுத்தி உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி ,வாழ்க்கை சூழ்நிலை கருத்துக்களின் அடிப்படையில் மாணவர்களின் சிந்தனை திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CBSE தெரிவித்துள்ளது.


அதாவது இனி 11 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான தேர்வுகளில், பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வினா கேள்விகள் போன்ற திறன் சார்ந்த கேள்விகளின் சதவீதம் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் எனவும், குறுகிய மற்றும் நீண்ட கேள்விகளின் சதவீதம் 40லிருந்து 30 சதவீதமாக குறைக்க குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி, 21ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு தயார்படுத்துவதற்கான கல்விச் சூழலை உருவாக்குவதே சிபிஎஸ்இ வாரியத்தின் முக்கிய குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

பொது தேர்வுக்கு பிட் - "ரீல்ஸ்" வீடியோவால் பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி..!

பொது தேர்வுக்கு பிட் - "ரீல்ஸ்" வீடியோவால் பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி..!


அரசு பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது ஆனாலும் பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை இதனால் ஒழுங்கீனமற்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது பல பள்ளிகளில் தொடர்கதை ஆகி வருகிறது.


அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் பல அரசு பணிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு புத்தகப் பையுடன் செல்வதை விட செல்போனுடன் செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர் 

இவர்கள் வகுப்பறையில் அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் இந்த ஒழுங்கீனமற்ற செயலை கண்காணித்து அதற்கு கடிவாளம் போட வேண்டிய ஆசிரியர்கள் பின்விளைவுகளை நினைத்து நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் 

இதன் விளைவாக பொதுத்தேர்வில் விட்டு எடுத்து சென்றதையும் ரீல்ஸ் எடுத்து வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த மாணவர்கள் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர் 

வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படிக்கும் பிளஸ் டூ மாணவர்கள் தேர்வுக்கு பிட்டு எடுத்து சென்றதை போனில் ரீல்ஸ் வீடியோவாக எடுத்து சமூகத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் 

இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது பள்ளிக்கு செல்போனுடன் வந்தவர்கள் இப்போது பொது தேர்வு நடக்கும்போது விட்டு எடுத்துச் சென்று அதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து வெளியிட்டது பள்ளி கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

தடம் மாறி செல்லும் மாணவர்கள் அடுத்து கட்டத்துக்கு நகரம் முன்பே மாணவர்களின் செயல்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவும் மாணவர்களை சீர்திருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கவும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் 

மாணவர்களின் ரூல்ஸ் வீடியோ குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிமொழி அவர்களிடம் கேட்டபோது அதுபோன்ற வீடியோ இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை என்றார்

Share:

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் வினா தாள் கடினம்: தேர்ச்சி குறையும் என அச்சம்..!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் வினா தாள் கடினம்: தேர்ச்சி குறையும் என அச்சம்..!


பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், மாணவர்கள் தேர்ச்சிகுறையக்கூடும் எனவும் ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அறிவியல் பாடத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,107 தேர்வு மையங்களில் 9.07 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில் அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் அதிர்ச்சிதெரிவித்துள்ளனர். அனைத்துபகுதிகளிலும் பெரும்பாலானவை எதிர்பாராத வினாக்களாக இருந்தன. வழக்கமாக இடம் பெறும்கேள்விகள் 25 சதவீதம் அளவுக்குகூட இந்த வினாத்தாளில் இல்லைஎன்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அறிவியல் ஆசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொருபாடப்பகுதியிலும் முக்கியமானதாக மாணவர்களுக்கு குறித்து கொடுத்த ஒரு கேள்வி கூட வினாத்தாளில் இடம்பெறவில்லை. ஒருமதிப்பெண் உட்பட அனைத்து பகுதிகளிலும் புதிய வடிவிலான வினாக்களே கேட்கப்பட்டிருந்தன. அதற்கு நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட பதிலளிக்க சிரமப்பட்டனர். மெல்ல கற்கும் மாணவர்களை கருத்தில் கொள்ளாமல் இந்த வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர் தேர்ச்சி குறைவதுடன் சென்ட்டம் எண்ணிக்கையும் பெருமளவு சரியும்’’ என்றனர்.


இதற்கிடையே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்ற பாடங்களை ஒப்பிடுகையில் தொடர்ந்துஅறிவியல் வினாத்தாள் மட்டும் கடினமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிற பாடங்களை போல் அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்றவேண்டுமென பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.இது அறிவியல் பயில விரும்பும்மாணவர்களின் விருப்பத்தை சிதைக்கும் செயலாகும் எனவும் கல்வியாளர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

Share:

கோடை விடுமுறை எப்போது? - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்...!!

கோடை விடுமுறை எப்போது? - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்...!!


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்.2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்.13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்.10, 12-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைகிறது. அவர்களுக்கு ஏப்.6-ம்தேதி முதல் கோடை விடுமுறையாகும். அதேபோல், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.6 முதல் 21-ம் தேதிவரை ரம்ஜான் பண்டிகை மற்றும்தேர்தல் பணிகள் நிமித்தம் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த மாணவர்களுக்கு மீண்டும்ஏப்.22, 23-ம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். தொடர்ந்து ஏப்.24-ல்தொடங்கி கோடை விடுமுறை தரப்படும். பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்.26-ம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களே., மீண்டும் இறுதி தேர்வு தேதி மாற்றம்., மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!

4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களே., மீண்டும் இறுதி தேர்வு தேதி மாற்றம்., மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வை, ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்து இருந்தது. பின்னர் ரமலான் பண்டிகை வர இருப்பதையொட்டி 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்ரல் 10ஆம் தேதிக்கான தேர்வு ஏப்ரல் 22 ஆம் தேதியும், ஏப்ரல் 12ஆம் தேதிக்கான தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் சமூக அறிவியல் பாடத் தேர்வு ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

Share:

Definition List

header ads

Unordered List

Support