12th Economics Assignment Answer Tamil Medium

12th Economics Assignment Answer Tamil Medium

ஒப்படைப்பு

  • வகுப்பு 12 பாடம் : பொருளியல்
  • அலகு -1 பேரியல் பொருளாதாரம்

 பகுதி -அ

I. சரியான விடையை தெரிவு செய்க ?

1.சமத்துவம் பின்பற்றும் நாடு எது ?

அ ) இந்தியா   ஆ) சைனா

இ ) ரஸ்யா ஈ ) அமெரிக்கா

Answer: ஆ) சைனா இ ) ரஸ்யா

2. பொருளியல் படத்தின் கிளைகள் என்பவை

அ ) நுண்ணியல் மற்றும் பேரியல் ஆ) உற்பத்தி மற்றும் நுகர்வு

இ ) சொத்து மற்றும் நலம் ஈ ) தேவையும் மற்றும் அளிப்பும்

Answer: அ ) நுண்ணியல் மற்றும் பேரியல்

3. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஓட்ட மறலியை கண்டுபிடி

அ ) வருவாய் ஆ) சொத்துக்கள்

இ ) பண அளிப்பு ஈ ) வெளிநாட்டு செலாவணி இருப்பு

Answer: அ ) வருவாய்

4. திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் ஓட்ட மாதிரி எது ?

அ ) முத்திரை மாதிரி ஆ) நான்கு துறை மாதிரி

இ ) இத்துறை மாதிரி ஈ ) மேல் சொல்லப்பட்ட அனைத்தும்

Answer: ஆ) நான்கு துறை மாதிரி

5. இரு துறை மாதிரியில் உள்ள இரு

அ ) நிறுவனங்களும் அரசும்   ஆ) குடும்பங்களும் நிறுவனங்களும்

இ ) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் துறைகள் ஈ ) தனியார் மற்றும் பொதுத்துறை

Answer: ஆ) குடும்பங்களும் நிறுவனங்களும்

6. பேரியல் பொருளாதாரம் என்பது

அ ) தனிநபர் ஆ) நாடு

இ ) மொத்தங்கள் ஈ ) நிறுவனங்கள்

Answer: இ ) மொத்தங்கள்

7. பொதுவான விலையில் தொடர் உயர்வை குறிப்பிடுவது எது

அ ) தேசிய வருவாய் ஆ) வாணிபசூழல்

இ ) பணவீக்கம் ஈ ) மொத்த விளைக்குறியீடு

Answer: இ ) பணவீக்கம்

8. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது

அ ) வருவாய் கோட்பாடு ஆ) விலை கோட்பாடு

இ ) அங்காடி கோட்பாடு ஈ ) நுண்ணியல் கோட்பாடு

Answer: அ ) வருவாய் கோட்பாடு

9. எந்த பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது

அ ) உலகமய அமைப்பு ஆ) முதலாளித்துவ அமைப்பு

இ ) சமத்துவ அமைப்பு ஈ ) கலப்பு பொருளாதார அமைப்பு

Answer: ஆ) முதலாளித்துவ அமைப்பு

10. பகிர்வில் சமத்துவத்தை கடைபிடிக்கின்ற பொருளாதார அமைப்பு எது ?

அ ) சமத்துவம் ஆ) முதலாளித்துவம்

இ ) கலப்பு பொருளாதாரம் ஈ ) உலகமயத்துவம்

Answer: அ ) சமத்துவம்  

பகுதி – ஆ

II.குறுவினா

1. பொருளாதார மாதிரியின் இலக்கணம் கூறுக ?

  • பேரியல் என்பது உண்மைகள் மற்றும் கோட்பாடுகளை ஒருங்கிணைப்பது பற்றியது ஆகும்

2. முதலாளித்துவம் என்றால் என்ன ?

  • முதலாளித்துவப் பொருளாதாரம் தடையில்லா மற்றும் அங்காடி பொருளாதாரம் என்றும் அழைக்கப்படுகிறது
  • அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும் சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்
  • முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடவைககைகள் தனியார் வசம் இருக்கும்
  • பொருள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாப நோக்கத்தை முதன்மையாக கொண்டிருப்பார்கள்

3. பேரியல் பொருளாதாரம் என்பதன் பொருள் யாது ?

  • ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை புரிந்துகொள்ளவும் அதற்க்கு தேவையான சரியான யுக்திகளை மாற்றம் மற்றும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது

4. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக ?

  • பணவீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பதாகும்

5. வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக

  • வளர்ந்த பொருளாதாரம்
  • வளராத பொருளாதாரம்
  • முன்னேறாத பொருளாதாரம்
  • வளரும் பொருளாதாரம்

பகுதி – இ

III. சிறுவினா

1.பொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக

பொருளாதார அமைப்புகளின் பல்வேறு அடிப்படியில் வகைப்படுத்தலாம்

வளர்ச்சி நிலை : 

  • வளர்ந்த ,வளராத ,முன்னேறாத மற்றும் வளரும் பொருளாதர அமைப்புகள்

நடவடிக்கைகளின் முறை : 

  • முதலாளித்துவ ,சமத்துவ மற்றும் கலப்பு பொருளாதார அமைப்புகள்

நடவடிக்கைகள் அளவு : 

  • சிறிய மற்றும் பெரிய பொருளாதார அமைப்புகள்

செயல்படும் தன்மை : 

  • நிலையான மற்றும் இயங்கும் பொருளாதார அமைப்புகள்

செயற் பரப்பு தன்மை : 

  • மூடிய மற்றும் திறந்த வெளி பொருளாதார அமைப்புகள்

2.சமத்துவத்தின் குறைகளை கூறுக

சிகப்பு நாடா மற்றும் அதிகார வர்க்கம் :- 

  • அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகளே எடுப்பதிலும் ,அநேக அலுவலர்களின் அனுமதி பெற கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றோன்றுக்கு செல்ல எடுக்கும் கால அளவு அதிகமாகவுதலும் ஒரு சிகப்பு நாடா நிலைக்கு கொண்டு செல்லப்படும்

ஊக்கமில்லாமை : 

  • சமத்துவத்தின் மிகப்பெரிய குறை என்பது ,இந்த முறையில் நின்றமைக்கு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை எனவே உற்பத்தி திறனும் பாதிக்கப்படும்

தெரிவு செய்வதில் சுதந்திர குறைவு : 

  • பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வத்தில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது

அதிகார குவித்தல் : 

  • அரசே அணைத்து முடிவுகளையும் எடுக்கிறது .பொருளாதார தீர்மானங்களில் தனியார் எந்த முயர்ஸியும் எடுப்பது இல்லை

3.முதலாளித்துவத்தின் சிறப்பினை விளக்குக

1.தனியார் சொத்துருரிமை மற்றும் பரம்பரை சட்டம் : -

  • முதலாளித்துவத்தின் முக்கிய இயல்பு என்னவெனில் உழைப்பு மூலதனம்,இயந்திரம், சுரங்கள் போன்ற அணைத்து வளங்களும் தனிநபருக்கு சொந்தமாக இருக்கும்

2.தேர்ந்தெருப்பதில் சுதந்திரம் : 

  • ஒவ்வொரு தனிநபருக்கு தங்களது வேலையை தேர்ந்தெடுப்பதிழும் ,உற்பத்தி செய்யும் பொருள்களை தேர்ந்தெடுப்பதிலும் மற்றும் வியாபார இடத்தை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பர்

3.இலாப நோக்கம் :- 

  • முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் ,அணைத்து பொருளாதார நடவடிக்கைகளும் இலாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும்

4.போட்டியில் சுதந்திரம் 

  • அ ) பொருள்கள் சந்தை மற்றும் காரணிகள் சந்தை ஆகிய இரண்டிலும் முழு சுதந்திரம் உண்டு 
  • ஆ) அரசாங்கமோ வேறு எந்த அமைப்போ நிறுவனங்களில் வாங்குதல் மற்றும் விற்பதில் தலையிட முடியாது

5. விலை இயங்கு முறை :- 

  • விலை இயங்கு முறையானது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இ தயமாகும்

4.இரு துறை சூழல் ஓட்ட மாதிரியினை விளக்குக

இல்லத்துறை : 

  • இல்லத்துறை தான் பொருள்கள் மற்றும் பணிகளை வாங்கும் ஒரே துறையாகும்,நிலம் ,உழைப்பு ,மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்தி காரணிகளை அளிக்கும் ஒரே துறையும் ஆகும்
  • இல்லத்துறையானது அதற்க்கு சொந்தமான உற்பத்தி காரணிகளை அளிப்பதன் மூலம் வருவாயை பெறுகிறது

நிறுவன துறை : 

  • நிறுவனதுறையானது பொருள் மற்றும் பணிகளை இல்லத்துரைக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாயை ஈட்டுகிறது

5.பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை தருக

  • ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை புரிந்துகொள்ளவும் அதற்க்கு தேவையான சரியான யுக்திகளை மாற்றம் மற்றும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது
  • எதிர்கால பிரச்சனைகளை புரிந்துகொள்ளவும் ,தேவைகள் மற்றும் சவால்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைல்களை எடுப்பதற்கு பேரியல் பொருளாதாரம் பயன்படும்
  • நடப்பு பிரச்சனைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறியவும் உதவுகிறது
  • பொருளாதாரக் குறியீடுகளை பகுதியாவும் அவைகளை சாப்பிடவும் உதவுகிறது
  • பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும் சரியான கொள்கைகளை உருவாக்கவும் எதிர்காலத்தில் நடப்பவைகளை முன் கணிக்கவும் இது உதவுகிறது

பகுதி – ஈ

IV.பெரு வினா

1.முதலாளித்துவம்,சமைத்தும்,கலப்புதுவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக


2.பேரினப் பொருளியலில் பரப்பெல்லையை விவரி

  • தேசிய வருவாய் :- தேசிய வருவாயை கணக்கிடுதல் மற்றும் தெரிஸ்ய வருவாயில் துகளின் பங்கு போன்றவை பேரியல் பொருளாதார பகுத்தாய்வின் அடிப்படை அம்சங்களாகும்
  • பணவீக்கம் :- பண வீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகப்பிப்பதை குறிப்பதாகும்
  • வாணிப சுழற்சி : பொதுவாக எல்லா நாடுகளும் வாணிப ஏற்றத்தாழ்வு மற்றும் வாணிப சுழற்சியால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கின்றன, மொத்த பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வாணிபச் சுழற்சி மாற்றங்களை தெரிந்து சிக்கொள்ள முடிகிதரு
  • வறுமை மற்றும் வேலையின்மை : வளங்கள் நிறைந்த நாடுகளிலும் வறுமை மற்றும் வேலையினமி மிகப்பெரிய பிரச்னையாகி உள்ளது ,ஒரு ஒரு பொருளாதார முரண்பாடுகளில் ஒன்றாகும் ,இப்பிரச்சாக்கு தீர்வு காண வளங்களை ஒதுக்கீடு செய்யவும் ,சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது
  • பொருளாதர வளர்ச்சி : பேரியல் பகுத்தாய்வின் மூலம்தான் ஒரு பொருளாதார மற்றும் முன்னேற்றம் , அதை தீர்மானிக்கும் காரணிகள் போன்றவற்றை புரிந்துகொள்ள முடியும்
  • பொருளாதார கொள்கைகள் : பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கு பேரியல் பொருளாதாரம் உதவுகிறது

3.கலப்பு பொருளாதாரத்தின் நன்மை தீமைகளை விளக்குக

  • ஒருங்கிணைப்பு இல்லாமை :- கலப்புதுவதின் மிகப்பெரிய குறைபாடு பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஒருங்கிணைப்பு இல்லாததாகும்
  • திறமையின்மை : மந்தமான அதிகாரமுறை ,சிவப்பு நாடா முறை ,ஊக்கமின்மை ஆகியவற்றால் பொதுத்துறை நடவடிக்கைகளில் பெரும்பாலானவை திறனற்றவைகளாகவும் இருக்கின்றன
  • விரிவடையும் சமத்துவமின்மை :வளங்களின் உரிமை .பரம்பைச் சட்டங்கள் ,மக்களின் இலாப நோக்கம் ஆகியவை பணக்காரர் ஏழைகளுக்கு இடையே விரிவடையச் செய்கின்றன

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Tamilnadu state council Educational Research and Training Published Samacheer kalvi TN Text Books .Our Kalvi kalvi Website provide these TN textbooks (EBooks) PDF Download direct link for all classes .you can download samacheer kalvi All classes Term wise All subject Ebooks .( TN SCHOOLS Textbook) 
ஒன்றாம் வகுப்பு Click Here
இரண்டாம் வகுப்பு Click Here
மூன்றாம் வகுப்பு  Click Here
நான்காம் வகுப்பு Click Here
ஐந்தாம் வகுப்பு Click Here
ஆறாம் வகுப்பு Click Here
ஏழாம் வகுப்பு Click Here
எட்டாம் வகுப்பு Click Here
ஒன்பதாம் வகுப்பு Click Here
பத்தாம் வகுப்பு Click Here
பதினோராம் வகுப்பு Click Here
பன்னிரண்டாம் வகுப்பு Click Here