10th,12th first Revised Revision Test Time Table February - 2022

10th,12th first Revised Revision Test Time Table  February - 2022

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் இரண்டு திருப்புதல் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணைகள் அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.


10th,12th - 1st and second Revised Revision Test Time Table  Feb and march 2022

1st Revision test Time table February 2022:

2nd Revision test timetable march 2022 :

இரு வகுப்புகளுக்கும் பிப்ரவரி 9-ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கும்

Share:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022 | வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கையேடு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022 |  வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கையேடு.

Local-body Election - Polling Officers Duty Guide - Download here...

தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள் :



PRO (PO) Officer duty

1-Pro dairy

2-Form17c.

3-16 points observer report  sheet.

4-Visiter sheet.

5-Pledge commencement of poll and after close the poll.

 6-Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro officer பூர்த்தி செய்யவும்

PO 1 duty

1. Elector identify is very important.

2.Marked copy of elecoral roll ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்

3. பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்

 PO 2 duty

1. 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து

2. அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்

3. வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்

4. Voter slip. வரிசை எண்ணை குறித்து, வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.     

 PO 3 duty

வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.

 General instructions

  49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும் Refused the Vote என்று எழுத வேண்டும். 49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before entered the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.

 49 MA என்றால் வாக்காளர்வாக்களித்த பின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன். அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும் இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no, serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும். மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்.

1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்

2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்

3.Test votes

4.proxy votes

மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.


 குறிப்பு

தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்

எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்

Share:

PGTRB 2022 - Exam Time Table Published

PGTRB 2022 - Exam Time Table Published

PGTRB 2022 - Exam Time Table :

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020-21 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்தப்படும் என 12.01.2022 பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 12.02.2022 முதல் 15.02.2022 வரை 4 நாட்களுக்குரிய கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 28.01.2022 வெளியிடப்படுகின்றது.

இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும். 

ஆங்கிலம் , கணிதம் , கணினி அறிவியல் பாடங்களுக்குரிய அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும். இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.

PGTRB 2022 - Exam Time Table Published




Share:

உள்ளாட்சி தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

உள்ளாட்சி தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

எந்த காரணமும் சொல்லாமல், தேர்தல் பணிகளுக்கு செல்ல வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய, ஆசிரியர்களின் பட்டியலை, பள்ளி கல்வி அதிகாரிகள் தயாரித்துள்ளனர். இந்த பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, மூன்று கட்டமாக தேர்தல் பணி பயிற்சி வழங்கப்பட உள்ளது.


ஆனால், பயிற்சி காலத்தில் சில ஆசிரியர்கள் விடுப்பு கேட்டுள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர்கள் பிறப்பித்துள்ள உத்தரவு:தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல், தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுவது தொடர்பாக, எந்தவித காரணங்களும் கூறாமல், பள்ளிக் கல்வித் துறை அறிவிக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.


மாறாக, தவறான காரணம் கூறி, தேர்தல் பணிகளை புறக்கணித்ததாக புகார் எழுந்தால், அந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.



Share:

TNPSC குரூப் 4 & குரூப் 2, 2 A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் திட்டம்!

TNPSC குரூப் 4 & குரூப் 2, 2 A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் திட்டம்!



தமிழகத்தில் தற்போது மின்சார வாரியம், மாநகர போக்குவரத்துக் கழகம், வீட்டு வசதி வாரியம், ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் மூலம் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தேவைப்படும் தகுதியான பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் பணியமர்த்தப்பட உள்ளனர்.TNPSC தேர்வாணையம் மூலமாக குரூப் 4, குரூப் 2, 2ஏ, குரூப் 1, குரூப் 3 உள்ளிட்ட பல தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வந்ததால் கடந்த ஆண்டு அனைத்து போட்டித்தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.


தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். இத்தேர்வு மூலமாக 5831 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். இத்தேர்வு மூலமாக 5255 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் மேலும் இந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் மின்சார வாரியம், மாநகர போக்குவரத்துக் கழகம், வீட்டு வசதி வாரியம், ஆவின் உள்ளிட்ட பணியிடங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதால் குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுடன் சேர்க்கப்பட்ட உள்ளது. அதனால் குரூப் 4, குரூப் 2,2ஏ பதவிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

தமிழக அரசு துறையில் 12ம் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 57 ஆயிரம் சம்பளம்!முழு விவரம் இதோ!

தமிழக அரசு துறையில் 12ம் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 57 ஆயிரம் சம்பளம்!முழு விவரம் இதோ!

தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் “தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்” மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதனால் அரசு மற்றும் அரசு சாரா எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த வகையில் தற்போது அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகி வருகிறது. தமிழக பொதுச் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதால், பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர் – Field Assistant (கள உதவியாளர்)

காலியாக உள்ள பணியிடங்கள் : 174

விண்ணப்பதாரரின் தகுதி: 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், மருத்து இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எம்எல்டி 1 ஆண்டு படிப்பை முடித்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பார்வை திறன் மற்றும் உடற்தகுதி சரியாக இருக்க வேண்டும்.

மாத சம்பளம் – ரூ.18,200 முதல் ரூ. 57,900 வரை.

விண்ணப்பதாரரின் வயது வரம்பு – தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம் மற்றும் ஓசி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.

தேர்வு செய்யும் முறை – நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு, ஓபிசி பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ 600 ஆகும். மற்ற பிரிவினருக்கு ரூ 300 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி – பிப்ரவரி 2, 2022

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Share:

இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும்.

ஆன்லைன் தேர்வு அமைச்சர் பொன்முடி பேட்டி முழு விவரம்



 பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முரையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.

இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும். 

   கல்லூரி இறுதியாண்டு தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும்.

   கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

     அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி அடிப்படையில் செமஸ்டர் தேர்வு நடக்கும். 

பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என அனைத்திலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். 

பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும். 

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும். 

பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும். 

சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறித்து 29ம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும். 

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகளை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை. எடுக்கப்படும்.  ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். 

கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும். 

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி அனைத்துக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெறும். 

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான முறையிலேயே ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். 

எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காத வகையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். 

ஒரு செமஸ்டர் தேர்வில் 4 தாள்கள் எழுத வேண்டி இருந்தால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அனுப்பலாம். 

கல்லூரி முதல்வர், கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.

Share:

TRB - ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.

 TRB - ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.



9494 Teachers Vacancies Filling - Annual Planner - 2022 | TRB Published. 

9494 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.


ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

Share:

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!



தமிழகத்தில் இந்த ஆண்டில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமான முறையில் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் தொற்று பரவலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்காமல் இருக்க மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார்


இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீண்டும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர். அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டாயமாக நேரடி முறையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதற்கான பணிகளை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் ஜனவரி 19ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இணையதளம் மூலமாக பதிவேற்றுவதால் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதனால் ஜனவரி 31ம் தேதி வரை கூடுதல் அவகாசத்தை அரசு வழங்கியுள்ளது. இது தான் கடைசி வாய்ப்பு என்றும் மேலும் இது போன்ற கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Share:

NMMS -2022 UPLOADING INSTRUCTIONS PUBLISHED!

2022 - ம் ஆண்டு மார்ச் 5 - ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 12.01.2022 முதல் 27.01.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.



பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவரங்கள் : 

மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 24.01.2022 பிற்பகல் முதல் 05.02.2022 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு , அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

NMMS -2022 UPLOADING INSTRUCTIONS - Download here

Share:

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.10th tamil katturai

கட்டுரை எழுதுக : - உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச்சென்று வந்த  ̈நிகழ்வைக் கட்டுரையாக்குக, --------------

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

விடை:

முன்னுரை:

எங்கள் பகுதியான மதுரையில் அரசுப்பொருட்காட்சி ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் சித்திரை திருவிழாவை ஒட்டித் தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறைப் பிரிவு சார்பில் நடைபெற்றது. அரசுப் பொருட்காட்சிப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சியின் சிறப்பம்சங்கள்: 


உலகில் கண்டு வியக்கத்தக்க பொருட்கள் நாள் தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறு தோன்றும் புதிய பொருட்களைக் காணவும், வாங்கவும் வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு பொருட்களையும் ஓர் இடத்தில் மக்கள் எளிதில் வந்து பார்க்கத் தகுந்த வகையில் கவர்ச்சிகரமான முறையில் வணிக நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து மக்கள் காணுமாறு செய்திருந்தனர்.

அரங்குகள் அமைப்பு:


இந்தப் பொருட்காட்சியில் 26 மாநில அரசுத்துறை நிறுவனங்கள், 12 தமிழக அரசுத்துறை நிறுவனங்கள், 3 மத்திய அரசு நிறுவனங்கள் என மொத்தம் 42 அரசு அரங்குகள் அரசின் சாதனை நலத்திட்டத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. மேலும் 115 கடைகளும், 25 விற்பனை அரங்குகளும் தனியார் மூலம் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வடிவமைப்பு பொருட்காட்சியின் முகப்பாக அமைக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற மக்கள், கிராமச் சூழ்நிலையை உணர்ந்து அனுபவிக்கும் வகையில் சிற்றூர் சுற்றுலா எனப்படும் சிறப்பு அரங்கு 25 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டிருந்தது.

கலைநிகழ்ச்சிகள்:


ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாங்கள் சென்றிருந்தபோது ஒரிசா, குஜராத், சிக்கிம், மிசோரம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் அம்மாநில மக்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் இருந்தது. இது இந்த ஆண்டுதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார்கள்.

விளையாட்டு அரங்குகள்: 


இராட்சச ராட்டினம், குவளை இராட்டினம், மின்சாரத் தொடர்வண்டி, மரணக் கிணறு, மேஜிக்,குதித்து விளையாடும் மெத்தை எனப் பல்வேறு அரங்குகள் இருந்தன. அந்த அரங்குகளுக்குத் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது. நுழைவுக் கட்டணம்: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொருட்காட்சி அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெற்றது. நாங்கள் சென்றபோது இதுவரை ஐந்து இலட்சம் பேர் வருகை புரிந்நதாகக் கூறினார்கள்.

முடிவுரை: 

பொருட்காட்சிக்கு வருகை புரிந்தது மூலம் நாங்கள் இதுவரை அறிந்திராத அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. பொழுது போக்கிற்காக நாங்கள் சென்று வந்த நிகழ்வுமிகவும் பயனுள்ளதாகவும் அறிவார்ந்த சிந்தனையை தூண்டுவதாகவும் அமைந்தது.

Share:

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக - 10th tamil

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக, 

குறிப்பு - நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் – மொ ̄நடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர், --------------

பள்ளி ஆண்டு விழா மலருக்காக. நான் நூலகத்தில் படித்த ஒரு கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுதல்,

நூலின் தலைப்பு:- 

  • மு,மேத்தா எழுதிய கண்ணீர்ப் பூக்கள் (கவிதை நூல்)

நூலின் மையப்பொருள் :

இன்றைய சூழலில் ம2த2ன் ஏக்கங்களும் மனதில் ஏற்படும் தாக்கங்களும்

நூலின் மையப்பொருளாக அமைந்துள்ளன,

மொழிநடை :

இலக்கண விதிமுறைகள் அதிகம் இல்லாமல் இலக்கிய பாங்குடன் பாமரரும்

எளிதாக படித்துப் பொருள் உணரும் நடையில் எளிமையாக இந்நூல் அமைந்துள்ளது,

வெளிப்படுத்தும் கருத்து :

இக்கவிதை நூல் வாழ்வியல் எதார்த்தங்களை அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது, இந்த உலகம் போட்டி  ̈றைந்த உலகம்; பூசல்களைக் குறைத்தால் பூவுலகு பிறக்கும், ஆசைகளைத் துறந்தால்; ஆனந்தம் பிறக்கும், இறைவன் படைப்பில் அனைவரையும். சமமாக நடத்தப்பட வேண்டும், பெண்மையைப் போற்றும் இந்நாட்டில். பெண்ணை இ ̄வுபடுத்துகின்றோம், நாம் யாரிடமும் அன்பு செலுத்தாமல். 

நம்மிடம் அன்பு செலுத்த யாரும் இல்லையே என வருந்தக்கூடாது, 

மரங்களை வெட்டக்கூடாது; வளர்க்க வேண்டும்,

மனிதநேயம் வளர்க்க வேண்டும் . 

என்பது போன்ற பல கருத்துகள் இக்கவிதை நூலில் இடம் பெற்றுள்ளன,

நூலின் நயம் :

எதுகை. மோனை. இயைபு. முரண் ஆகிய தொடைநயங்கள் இக்கவிதை

நூலில் அதிகமாக இடம் பெற்றுள்ளன, அதற்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒரு பாடல் கீழ்வருமாறு:-

“பங்களா தேசத்துப் பாதையில்  ̈ன்றொரு

பாடகன் பாடுகின்றேன், வீர

பாரத பூஹயின் பாரதி ர்மையின்

பாடகன் பாடுகிறேன்!”, 

நூல் கட்டமைப்பு:- 

இந்நூல் 28 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும், இதில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும். ஒவ்வொரு கருத்தையும்; வாழ்வியல் எதார்த்தங்களையும் எடுத்தியம்புகிறது, 28 கவிதைகளில் ஒன்று கவிதைப்பூக்கள் என்னும் கவிதை,

இக்கவிதையையே புத்தகத்தின் தலைப்பாக அமைத்துள்ளார் ஆசிரியர், சில கவிதைகள் சிறியதாகவும். சில கவிதைகள் பெரியதாகவும் இந்நூலில் இடம் பிடித்துள்ளன,

சிறப்புக்கூறு :-

இக்கவிதை தொகுப்பு முப்பதாவது பதிப்பாகும், ஒரு புத்தகம் முப்பது முறை அச்சேறி பதிப்பு பெற்று வெளிவந்திருக்கிறது என்றால் அதைவிட சிறப்புக்கூறு வேறு என்ன வேண்டும்! அந்த அளவிற்கு இந்நூல் சிறப்பாக உள்ளது, பல்வேறு அழகான கருத்துகள் எளிய நடையில் அமைந்துள்ள நூல் இதுவாகும்,

நூல் ஆசிரியர் :

  • கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூலின் ஆசிரியர் மு,மேத்தா ஆவார்,

Share:

உழவுத் தொழில் கட்டுரை - 10th Tamil

உழவுத் தொழிலின் பெருமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

முன்னுரை

உழவு இல்லையேல் உணவு இல்லை

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

முடிவுரை

முன்னுரை

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்கிறார் திருவள்ளுவர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைப்பிடி உணவை உண்ணுவதற்கு அதில் ஒவ்வொரு விவசாயிகளினுடைய உழைப்பு தங்கியிருக்கும். ஆதலால் தான் உலகத்தில் பல தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழில் தலைசிறந்த தொழிலாக காணப்படுகிறது.

இது வரைக்கும் விளம்பரத்தில் ஈடுபடாத ஒரே தொழில் விவசாயம் தான் ஏனென்றால் விவசாயம் தொழில் அல்ல எமது உயிர்நாடி. உலகத்தின் ஒவ்வொரு உயிர்களுக்கும் பசி என்ற உணர்வு இருக்கும் வரை விவசாயம் அழியாது.

இக்கட்டுரையில் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயத்தில் இன்று காணப்படும் பிரச்சனைகள், விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றன நோக்கப்படுகின்றன.

உழவு இல்லையேல் உணவு இல்லை

இங்கே யாரும் உழவில்லை யாரும் விதைக்கவில்லை யாரும் வியர்வை சிந்தி நெல்மணிகளை விதைவிக்கவில்லை என்றால் நாம் உணவிற்கு எங்கே போவது? சற்று சிந்தியுங்கள்.

“விவசாயி சேற்றில் கால்வைத்தால் தான் நாம் இங்கே சோற்றில் கை வைக்க முடியும்”

விவசாயம் ஒன்றும் அத்தனை இலகுவான தொழில் கிடையாது. கஷ்ரப்பட்டு நிலத்தை உழுது பண்படுத்தி வியர்வை சிந்தி பயிரிட்டு அதனை நீர் பாய்ச்சி பாதுகாத்து பசளையிட்டு நோய்களில் இருந்து காப்பாற்றி வெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்து விலங்குகள் பறவைகளில் இருந்து பயிரை காக்க காவல் இருந்து அறுவடை செய்யும் வரை விவசாயி பாடுபட்டு உழைத்தால் தான் விளைச்சலை பெற முடிகிறது.

இந்த கஷ்ரங்களை பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் அவர்கள் உழைத்து கொண்டிருப்பதால் தான் இவ்வுலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இதனையே திருவள்ளுவர் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை” என்கிறார்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் என்பது ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு என்று கூறுவார்கள். ஒரு நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு காணவேண்டுமாயின் அங்குள்ள மக்களுக்கு போதிய உணவு கிடைக்க வேண்டும்.

அப்போது தான் அந்த தேசம் உத்வேகத்துடன் இயங்க முடியும். பஞ்சம், பசி, பட்டினி என்பன இல்லாத தேசம் ஒன்று உருவாக வேண்டும் என்றால் அந்நாடு விவசாயத்தில் உச்சநிலை பெற வேண்டும். இல்லாவிடில் அந்த நாடு வளர்ச்சி பெறுவதென்பது இயலாத காரியமாகும்.

உலகத்தின் வளர்ச்சி அடைகின்ற, அடைந்த எல்லா தேசங்களும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தான் அவை தன்னிறைவடைந்து காணப்படுகின்றன.

விவசாயத்தில் காணப்படும் பிரச்சனைகள்

முன்பு குறிப்பிட்டதனை போல தலைசிறந்த நாடுகள் தமது நாட்டின் விவசாயிகளை ஊக்குவிக்கின்றது. அவர்களது உற்பத்திகளை தாமே கொள்வனவு செய்கிறது. விவசாய உற்பத்திகளை முடிவு பொருட்களாக தனது தொழில்நுட்பங்கள் மூலமாக உற்பத்தி செய்து தனது உள்நாட்டு நுகர்வுக்கு பயன்படுத்தி எஞ்சியவற்றை சர்வதேசத்துக்கும் ஏற்றுமதி செய்கின்றது.

ஆனால் நம்முடைய வளர்முக நாடுகள் அவ்வாறில்லை முதலாளிகளின் கையிலே விவசாயம் உள்ளது. அதிகளவான நிலமும் வசதி படைத்தவர்களிடமே உள்ளது. சாதாரண ஏழை விவசாயிகள் கடன் பட்டு தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையானது இருக்கின்றது.

இயற்கை காரணிகளால் பயிர் சேதமடைந்தால் அவற்றுக்கான நஷ்ட ஈடுகளும் கிடைப்பது இல்லை

உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களுக்கு தனியார் தரகர்களே விலை நிர்ணயம் செய்கிறார்கள். குறைவான விலைக்கு கொள்வனவு செய்து மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து முதலாளிகள் அதிக இலாபம் ஈட்ட விவசாயிகளும் சாதாரண மக்களும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் விவசாயிகள் பல வருடங்களாக விவசாயம் செய்ய முடியாது கடன் சுமையால் தற்கொலை செய்வது மனதை உடைக்கும் துயர நிகழ்வுகளாகும். இவ்வாறு பல பிரச்சனைகள் இன்றைய விவசாயத்தில் காணப்படுகின்றன.

விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

விவசாயம் செய்பவர்கள் இன்று குறைந்த வண்ணமே இருக்கிறது. மீண்டும் மீண்டும் எத்துயர் வரினும் தம் உடலை வருத்தி எமக்காக போராடும் விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் முழுமனதாக திட்டங்களை வகுக்கவேண்டும்.


விவசாயத்தில் ஊழல் செய்வோரை சிறையில் அடைக்கவேண்டும். விவசாய உற்பத்திகளை அரசாங்கமே கொள்வனவு செய்ய வேண்டும். விவசாய உற்பத்திகளிற்கு மிகச் சரியான கொள்வனவு விலை, விற்பனை விலைகளை நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயத்திற்கு வேண்டிய உள்ளீட்டு வசதிகள் தொழில்நுட்பங்கள் என்பவற்றை மேம்படுத்தல். விவசாயிகளுக்குரிய காப்புறுதி ஆதரவுகளையும் உரிய மரியாதையையும் கிடைக்க செய்தல்.

இவை போன்ற நடவடிக்கைகளால் விவசாயத்தை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

உணவு உற்பத்தி எனும் விடயம் உலகத்தில் எத்தனை தொழில்நுட்பங்கள் உருவானாலும் அதற்குரிய மதிப்பு என்றும் குறையாது.

சனத்தொகை பெருக்கம் பெருக்கல் விருத்தியில் பெருகி வருவதால் உணவு உற்பத்தி அதற்கேற்ப இல்லாவிடின் உலகமே பாரிய பிரச்சனைகளில் சிக்கி விடும்.

விவசாயிகள் அனுபவிக்கும் துன்பங்களை கண்டுகொள்ளாது அவர்களுக்காய் குரல் கொடுக்காமல் விட்டால் இங்குள்ள அனைவரும் உணவின்றி இறக்க நேரிடும். அனைவரும் உயிர் வாழ வேண்டுமென்றால் உழவுத்தொழிலை காக்க அனைவரும் முன்வரவேண்டும்.

Share:

திருப்புதல் தேர்வு வழிமுறைகள்

 திருப்புதல் தேர்வு வழிமுறைகள்

விடைத்தாள் திருத்தும் முறை - Read More

மாணவர்களுக்கான Exam No & விடைத்தாளில் பள்ளியின் முத்திரை - Read More


மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு அறிவிப்புகளும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது .முதல் அறிவிப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் திருத்த கூடாது என்று வந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும் .

இரண்டாவது அறிவிப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடத்தும்போது மாணவர்களுக்கான Exam நம்பர் எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் பள்ளியின் முத்திரை விடைத்தாளில் பதிக்கப்பட்டிருக்க கூடாது என்ற அறிவிப்பு

இவை இரண்டையும் பார்க்கும்போது பள்ளியின் முத்திரையும் இல்லை மாணவர்களுக்கான தேர்வு என்னும் இதற்கு முன்பு தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற நிலையில் இன்று ஒரு நாளில் மாணவர்களுக்கான தேர்வு எண் ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கான தேர்வை நடத்தி விடைத்தாள் வேறு பள்ளியில் திருத்தம் செய்து எப்படி மாணவர்களுடைய ஒவ்வொரு மாணவனுடைய தனிப்பட்ட ஏமிஸ் நம்பரில் அப்டேட் செய்ய இயலும் என்ற சூழ்நிலை இல்லாததால் தேர்வு ஒத்தி வைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

இதைப் படிக்கும்போது தேர்வுக்கு சரியான முறையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தயாரான பிறகு நடத்தப்படும் என்பதனை மாணவர்கள் கருத்தில் கொண்டு நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாணவர்கள் இந்த "விடுமுறை" படிப்பதற்காக கிடைத்த கால அவகாசம் என்பதை புரிந்து கொண்டு வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராகுமாறு நமது www.kalvikavi.com வலைதளத்தின் மூலம் மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் ஆசிரியர் என்ற முறையில்.


குறிப்பு : இது எனது தனிப்பட்ட கருத்து ஆனால் நன்கு ஆராய்ந்து கூறப்பட்ட கருத்து . தேர்வு நடத்த வேண்டும் அதையும் முறைகேட்டிற்கு இடமில்லாமல் நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் கல்வித்துறை உள்ளது. மாணவர்கள் புரிந்து கொண்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.

Share:

அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி கமிஷனரகம்

அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி கமிஷனரகம்



அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்' என, பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.

பள்ளி கல்வித்துறை பணிகள் குறித்து, விழுப்புரத்தில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வின் முடிவுகளை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கை அடிப்படையில், கமிஷனர் தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன் விபரம்:

ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை. வகுப்பறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை. சில ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை. ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பேசி பாடம் நடத்துகின்றனர். ஆங்கில பாடம் எடுப்பவர்கள், தமிழில் பேசுவது எப்படி பொருத்தமாக இருக்கும். இதை மாற்றி, அவர்கள் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும்.


பள்ளிகளின் கண்காணிப்பு பதிவேடு சரியாக பராமரிக்கப்பட வேண்டும். பதிவேடுகளில் போலியான, தவறான தகவல்கள் இடம் பெறக்கூடாது. தலைமை ஆசிரியருக்கு, மாணவர்களுக்கான பாடங்களை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது, தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் சுற்றி வந்து, வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.வகுப்பறைகளில் மாணவர் வழிபாட்டு கூட்டம் நடத்த வேண்டும். கட்டுரை, பாட நோட்டுகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் ஆசிரியர்கள் திருத்தி, மாணவர்களுக்கு பிழைகளை விளக்க வேண்டும். 


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவை கட்டாயம் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது, பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, விரைந்து சரிசெய்ய வேண்டும். வீட்டு பாடங்களை மாணவர்களுக்கு வழங்கி அவற்றை திருத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

Tamil Nadu RL List 2022 | Restricted Holidays 2022 | RH leave List 2022 | வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2022

Tamil Nadu RH Leave List 2022 | RL Leave 2022 | வரையறுக்கப்பட்ட விடுப்பு 2022 | Restricted holidays 2022

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் 2022 ஆண்டுக்கான மத விடுப்பு நாட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மத விடுப்பு நாட்களை வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் என்றும் கூறுகிறோம். அரசு ஊழியர்கள் இந்த வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களை வருடத்திற்கு மூன்று நாட்கள் எடுத்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu RL List 2022 | Restricted Holidays 2022 | RH leave List 2022 | வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2022 :

Tamil Nadu RL Leave List 2022 Download Pdf



 RL Leave list 2022 :

Tamil Nadu RL / RH Leave List in January 2022 :

  • 13.01.2022 – வியாழன் – போகி
  • 13.01.2022 – வியாழன் – வைகுண்ட ஏகாதேசி
  • 15.01.2022- சனி –கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்
  • 18.01.2022 –செவ்வாய் – தை பூசம் 

Tamil Nadu RL / RH Leave List in the Month Of February 2022 :

  • 17.02.2022- வியாழன் - மாசி மகம்   

Tamil Nadu RL / RH Leave List in the Month Of March 2022 :

  • 01.03.2022- செவ்வாய்- ஷபே மீரஜ்
  • 01.03.2022- செவ்வாய் –மகா சிவராத்திரி
  • 02.03.2022- புதன் – சாம்பல் புதன்
  • 04.03.2022- வெள்ளி -அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்
  • 18.03.2022 –வெள்ளி - ஷபே பரத்  

RL / RH Leave List in the Month Of April 2022 :

  • 03.04.2022-ஞாயிறு-ரம்ஜான் முதல் நாள்

  • 14.04.2022 –வியாழன் –பெரிய வியாழன்

  • 14.04.2022- வியாழன் -  அம்பேத்கார் பிறந்த நாள்
  • 16.04.2022- சனி- சித்ரா பெளர்ணமி
  • 17.04.2022-ஞாயிறு – ஈஸ்டர்
  • 28.04.2022 -வியாழன் –ஷபே கதர் 

RL / RH Leave List in the Month Of May 2022 :

  • 16.05.2022-திங்கள் –புத்த பூர்ணிமா 

RL / RH Leave List in the Month Of June 2022 :  

  •  ஜூன் மாதத்தில் வரையறுக்கப்பட்ட விடுப்புகள் இல்லை

RL / RH Leave List in the Month Of July 2022 :

  • 09.07.2022-சனி –அர்பா
  • 31.07.2022-ஞாயிறு –ஹிஜிரி வருடப்பிறப்பு 

RL / RH Leave List in the Month Of August 2022 :

  • 03.08.2022-புதன் – ரிக் உபகர்மா
  • 03.08.2022-புதன் – ஆடி பெருக்கு
  • 05.08.2022-வெள்ளி – வரலட்சுமி விரதம்
  • 11.08.2022- வியாழன் – யஜுர் உபகர்மா
  • 12.08.2022-வெள்ளி - காயத்ரி ஜெபம் 

RL / RH Leave List in the Month Of September 2022 :

  • 08.09.2022 – வியாழன்- ஓணம்
  • 09.09.2022 - வெள்ளி – சர்ம உபகர்மா
  • 25.09.2022 – ஞாயிறு – மகாளய அமாவாசை 

RL / RH Leave List in the Month Of October 2022 :

  • 24.10.2022-திங்கள் – தீபாவளி நோம்பு  

RL / RH Leave List in the Month Of  November 2022 :

  • 02.11.2022-புதன் - ஆல் சோல்ஸ்டே
  • 08.11.2022 - செவ்வாய் – குருநானக் ஜெயந்தி  

RL / RH Leave List in the Month Of December 2022 :

  • 06.12.2022-செவ்வாய் - கார்த்திகை தீபம்
  • 24.12.2022-சனி – கிறிஸ்துமஸ் ஈவ்
  • 31.12.2022-சனி - நியூ இயர் ஈவ்  
  • ஆருத்ரா தரிசனம் - இந்த வருடம்  இல்லை

Share:

அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 62 ஆக அதிகரிப்பு, 23% சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 62 ஆக அதிகரிப்பு, 23% சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்திய ஆந்திர பிரதேச அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் 23.39 சதவீதமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.  கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சம்பள உயர்வு

ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தி, சம்பளத்தையும் 23.39 சதவீதமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசாங்கத்தின் அறிவிப்புகளின் படி, இந்த மாற்றம் ஜூலை 1, 2018 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதாயங்களான கூடுதல் சலுகைகள் ஏப்ரல் 1, 2020 முதல் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனிடையே அரசு ஊழியர்களுக்கு 23.39 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஊதியம் ஜனவரி 2022 முதல் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையால் அரசின் கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ.10,247 கூடுதல் சுமை ஏற்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இது ஆயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இது தவிர கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) தொகையும் ஜனவரி 2022 சம்பளத்துடன் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதே போல வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் போன்ற அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் ஏப்ரல் 2022க்குள் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலத்தின் தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு ஒன்று ஜூன் 30க்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த இறுதி முடிவை எடுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share:

கொரோனா பாதிப்பு : சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டா? யார் எத்தனை நாள்கள் வரை எடுக்கலாம்?

கொரோனா பாதிப்பு : சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டா? யார் எத்தனை நாள்கள் வரை எடுக்கலாம்?

Covid 19 - Positive TN Government Employees Special Leave Details 

வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 நாள்.17.06.2020-ன் படி ஊழியர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலோ  / குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் தொற்று பாதிப்பிற்குள்ளாகிய சூழலால் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க நேர்ந்தாலோ அவரது முழுமையான சிகிச்சை / வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தை சிறப்புத் தற்செயல் விடுப்பின்கீழ் அனுமதிக்கலாம். இதற்குச் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலரின் சான்று கட்டாயம்






Share:

கல்வித்துறையின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளிவைப்பு - ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

கல்வித்துறையின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளிவைப்பு - ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்.


ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியன திட்டமிட்டபடி நடைபெறும்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

சிவகங்கை

Share:

தமிழகத்தில் ஜன.19 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு?

தமிழகத்தில் ஜன.19 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு?


தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் தொடக்கம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வகையாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து மீண்டும் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வருவதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை நீட்டித்து தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஏனெனில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதால் பொதுத்தேர்வுக்கு உரிய பாடங்களை நடத்த மற்றும் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.


இந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமே என்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன.19ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Share:

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்ப நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

10th, 11th, 12-ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்ப நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை முடிந்து 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.


கொரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துபடியும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது என்றும், 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுவதாகவும், நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து பொங்கல் விடுமுறைக்கு 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு குறித்து பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

2000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இந்திய ராணுவ பொதுப் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசின் நிதி உதவியுடன், முதன் முதலில் 1983 இல் தொடங்கப்பட்டது.  நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.


இந்த பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது. 


தற்போது பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Army Welfare Education Society

அறிக்கை எண். APS OST 2021-22 Exam

மொத்த காலியிடங்கள்: 2000 + காலியிடங்கள்

  • பணி: TGT(Trained Graduate Teachers)
  • பணி: PGT (Post Graduate Teacher)
  • பணி: PRT (Primary Teacher)

தகுதி: இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து CTET/TET தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். முழு விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு 

: 29 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு கட்டணம்: 

ரூ.385

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: 

https://www.apsbathinda.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.apsbathinda.org/Brief%20Description%20of%20LSB.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share:

PGTRB தேர்வு Feb-12 க்கு மாற்றப்பட்டது

PGTRB போட்டித் தேர்வு 12.02.2022 முதல் 20.02.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 - 2020-21 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட 31.12.2021 நாளிட்ட பத்திரிகைச் செய்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது . தற்பொழுது பெருந்தொற்று சூழ்நிலை , நிர்வாகக் காரணங்களினால் வரும் 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் . இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


 இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்களினால் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.

Share:

9th Tamil Kalvi Tv Videos - Unit wise Colection Latest

9th Tamil Kalvi Tv Videos - Unit wise Colection Latest

      ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான டிவி பாடங்கள், Tamil Kalvi TV videos Tamil today Kalvi TV videos 9th standard Tamil lb TV videos 2022 K TV videos live Kalvi TV 9 2 Tamil videos live Kalvi TV 9th standard Tamil videos unit 1Kalvi TV 9th standard Tamil video unit 2 9th standard Kalvi TV unit 3 videos Kalvi TV videos unit4 Tamil Kalvi TV videos unit-5 Tamil Kalvi TV 9th Tamil unit 6 videos Kalvi TV Tamil unit 7 videos Kalvi TV 9th standard Unit 8 videos Kalvi TV Kalvi TV 9th standard unit 9 full videos collection Kalvi tholaikatchi 9th standard Tamil videos live

9th Standard Tamil Kalvi TV Videos Collection 2022

9th Tamil Unit 1 Kalvitv Video collection

9th Tamil Unit 2 Kalvitv Video collection

9th Tamil Unit 3 Kalvitv Video collection

  • Chapter 3.1 ஏறு தழுவுதல்
  • Chapter 3.2 மணிமேகலை
  • Chapter 3.3 அகழாய்வுகள்
  • Chapter 3.4 வல்லினம் மிகும் இடங்கள்
  • Chapter 3.5 திருக்குறள்

9th Tamil Unit 4 Kalvitv Video collection

  • Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
  • Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே
  • Chapter 4.3 உயிர்வகை
  • Chapter 4.4 விண்ணையும் சாடுவோம்
  • Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

9th Tamil Unit 5 Kalvitv Video collection Today Live

  • Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்
  • Chapter 5.2 குடும்ப விளக்கு
  • Chapter 5.3 சிறுபஞ்சமூலம்
  • Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை
  • Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல்

9th Tamil Unit 6 Kalvitholaikatchi Video collection

  • Chapter 6.1 சிற்பக்கலை
  • Chapter 6.2 இராவண காவியம்
  • Chapter 6.3 நாச்சியார் திருமொழி
  • Chapter 6.4 செய்தி
  • Chapter 6.5 புணர்ச்சி
  • Chapter 6.6 திருக்குறள்

9th Tamil Unit 7 Kalvitv Video collection

  • Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
  • Chapter 7.2 சீவக சிந்தாமணி
  • Chapter 7.3 முத்தொள்ளாயிரம்
  • Chapter 7.4 மதுரைக்காஞ்சி
  • Chapter 7.5 சந்தை
  • Chapter 7.6 ஆகுபெயர்

9th Tamil Unit 8 Kalvitv Video collection

  • Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்
  • Chapter 8.2 ஒளியின் அழைப்பு
  • Chapter 8.3 தாவோ தொ live.
  • Chapter 8.4 யசோதர காவியம்
  • Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம்
  • Chapter 8.6 யாப்பிலக்கணம்

9th Tamil Unit 9 Kalvitv Video collection

  • Chapter 9.1 விரிவாகும் ஆளுமை
  • Chapter 9.2 அக்கறை
  • Chapter 9.3 குறுந்தொகை
  • Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை
  • Chapter 9.5 அணியிலக்கணம்
ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான டிவி பாடங்கள், Tamil Kalvi TV videos Tamil today Kalvi TV videos 9th standard Tamil lb TV videos 2022 K TV videos live Kalvi TV 9 2 Tamil videos live Kalvi TV 9th standard Tamil videos unit 1Kalvi TV 9th standard Tamil video unit 2 9th standard Kalvi TV unit 3 videos Kalvi TV videos unit4 Tamil Kalvi TV videos unit-5 Tamil Kalvi TV 9th Tamil unit 6 videos Kalvi TV Tamil unit 7 videos Kalvi TV 9th standard Unit 8 videos Kalvi TV Kalvi TV 9th standard unit 9 full videos collection Kalvi tholaikatchi 9th standard Tamil videos live

Share:

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு.


10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும்.


1-9 ஆம் வகுப்புகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை. ஆன்லைன் கல்வி நடைபெறும்


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை : உயர்கல்வித்துறை தகவல்.


அனைத்து பிஇ , கலை - அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இள , முதுநிலை மாணவர்களுக்கு ஜன .31 வரை விடுமுறை

Share:

10th Tamil First Revision Exam Model Question 2022

10th Tamil First Revision Exam Model Question 2022

10th Tamil Model Revision Exam Question Paper January 2022
Prepared By : செல்வமுருகன் 
தமிழ்துகள் . 
  • 10th Tamil First Revision Exam Model Question Paper 1 - Download Here

  • 10th Tamil First Revision Exam Model Question Paper 2 - Download Here
  • 10th Tamil First Revision Exam Model Question Paper 3 - Download Here
  • 10th Tamil First Revision Exam Model Question Paper 4 - Download Here
Share:

10th Maths Revision Exam Model Question Papers 2022 - English and Tamil medium

10th Maths Revision Exam Model Question Papers 2022

10th Maths Revision Test Model Question Papers 2021-2022

10th Maths Model Revision Test Question Papers 2021-2022. SSLC Maths Revision Test Model Question Papers January Month 2022. Its 1st Revision Test model Question paper. 10th Maths Model Question papers based on Reduced Syllabus 2021-2022.

Share:

10th Science Revision Exam Model Question Papers 2022

10th Science Revision Exam Model Question Papers 2022

10th Science Revision Test Model Question Papers 2021-2022

10th Science Model Revision Test Question Papers 2021-2022. SSLC Science Revision Test Model Question Papers January Month 2022. Its 1st Revision Test model Question paper. 10th Science Model Question papers based on Reduced Syllabus 2021-2022.

Share:

12th Maths Revision Exam Model Question Papers 2022

12th Maths Revision Exam Model Question Papers 2022

12th Maths Revision Test Model Question Papers 2021-2022

12th Maths Model Revision Test Question Papers 2021-2022. HSC Maths Revision Test Model Question Papers January Month 2022. Its 1st Revision Test model Question paper. 12th Maths Model Question papers based on Reduced Syllabus 2021-2022.

Share:

ஜன.21 முதல் தொடங்கவிருந்த பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பு

ஜன.21 முதல் தொடங்கவிருந்த பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பு


தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த பருவத் தோ்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக இணையவழியில் தோ்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் அவ்வாறு நடத்தப்படும் தோ்வுகளின் தரம் குறித்து பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இணையவழித் தோ்வுகளை ரத்து செய்து, நேரடியாக தோ்வுகள் நடத்த உயா்கல்வித்துறை முடிவெடுத்தது. இதைத் தொடா்ந்து நேரடித் தோ்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு மாணவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஜனவரி மாதத்தில் நேரடித் தோ்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 20 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, 21-ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த பருவத் தோ்வுகளையும் ஒத்திவைத்து சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு மீண்டும் தோ்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Learning Outcomes ( LO ) - Introduction Guide

கற்றல் விளைவுகள் பயிற்சிக்கான அறிமுக கையேடு.

Share:

9th Tamil Unit 2 Kalvitv videos Collection


9th Tamil Unit 2 Kalvitv videos Collection



9th Tamil kalvi tv Collections

Kalvi Tv video List:


No 9th Tamil kalvi tv video Lesson  Unit 2 நூல் ஆசிரியர் 
1 நீரின்றி அமையாது உலகு உரைநடை கட்டுரை
2 பட்டமரம் செய்யுள் கவிகர் தமிழ்ஒளி
3 பெரியபுராணம் செய்யுள் சுந்தரர்
4 புறநானூறு செய்யுள் குடபுலவியனார்
5 தண்ணீர் விரிவானம் கந்தர்வன்
6 துணைவினைகள் கற்கண்டு தன்வினை,பிறவின,காரணவினை ை,செய்வினை ,செய்யபாட்டு வினை

Search Tags :




Share:

9th Tamil Unit 1 Kalvitv videos Collection

9th Tamil Unit 1 Kalvitv videos Collection



9th Tamil kalvi tv Collections

Kalvi Tv video List:


No Lesson  Unit 1 நூல் ஆசிரியர் 
1 திராவிட மொழிக்கூடும்பம் - Video Here Book Back Answer Here உரைநடை இராபர்ட்டு கால்டுவெல்
2 தமிழோவியம் செய்யுள் ஈரோடு தமிழன்பன்
3 தமிழ் வீடு தூது செய்யுள் அறியப்படவில்லை
4 வளரும் செல்வம் விரிவானம் உரையால் வடிவில்
5 தொடர் இலக்கணம் கற்கண்டு தொடரின் வகைகள்(நன்னூல் )

Search Tags :

9th tamil kalvi TV videos,9th tamil Today kalvi TV videos,9th std kalvi tholaikatchi video live,9th Tamil Kalvi TV video collection.




9th Tamil Unit 1 Kalvitv videos Collection



9th Tamil kalvi tv Collections

Kalvi Tv video List:


No Lesson  Unit 1 நூல் ஆசிரியர் 
1 திராவிட மொழிக்கூடும்பம் உரைநடை இராபர்ட்டு கால்டுவெல்
2 தமிழோவியம் செய்யுள் ஈரோடு தமிழன்பன்
3 தமிழ் வீடு தூது செய்யுள் அறியப்படவில்லை
4 வளரும் செல்வம் விரிவானம் உரையால் வடிவில்
5 தொடர் இலக்கணம் கற்கண்டு தொடரின் வகைகள்(நன்னூல் )

Search Tags :

9th tamil kalvi TV videos,9th tamil Today kalvi TV videos,9th std kalvi tholaikatchi video live,9th Tamil Kalvi TV video collection.



Share:

Learning Outcomes - 2 நாள் பயிற்சி செயல்பாடுகள்

Learning Outcomes - 2 நாள் பயிற்சி செயல்பாடுகள்

ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் நடைபெறவுள்ள Learning Outcomes  பயிற்சிக்கான செயல்பாடுகள்.




Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support