இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி தொடக்கம்: வீட்டிலிருந்தே படிக்கலாம்!

பள்ளிக்கு வர இயலாத, தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் பள்ளி திட்டத்தை தில்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:

இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை இன்று தொடங்கியுள்ளோம். தில்லி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் தில்லி மாதிரி மெய்நிகர் பள்ளியில் இன்று முதல் 9ஆம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கபட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.

மெய்நிகர் பள்ளியில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் நேரடி வகுப்புகளை கவனிக்கவும், அதை பதிவு செய்து கொள்ளவும் முடியும். மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படும். நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கும் உதவி செய்யப்படும் என்றார். 

Share:

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

Scholarship Schemes implemented in Schools and Colleges – Procedures to be Followed


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 

Scholarship Schemes implemented in Schools and Colleges – Procedures to be Followed - Download here...

Share:

காலண்டுத்தேர்வு மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு - தயாரா இருங்க!

காலண்டுத்தேர்வு மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு - தயாரா இருங்க!


புதுச்சேரி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை புதுச்சேரிபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

எப்பொழுதுமே தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே நேரத்தில்தான் தேர்வு நடைபெறும் என்பது அறிந்த்தே!

தமிழக பள்ளி காலண்டரில் 23 முதல் 30 ந் தேதி வரை காலாண்டுத்தேர்வு என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாகக் கடந்த 2 ஆண்டு கல்வி ஆண்டுகளாகப் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. பொதுத் தேர்வுகள் மற்றும் ஆண்டுத் தேர்வுகள் வழக்கத்தை விட தாமதமாக நடைபெற்றன. கொரோனா தொற்று வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, நடப்புக் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு கடந்த ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதற்கிடையே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில், காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. விரிவான காலஅட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 

11th 12th Quarterly Exam time table 2022

செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு 

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறுகிறது. காலாண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 

காலாண்டுத் தேர்வு நடைபெறும் நேரம்

6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல், மதியம் 12 மணி வரை காலாண்டுத் தேர்வு நடக்கிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல், மதியம் 12.30 மணி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 

1st std To 10th Quarterly Time Table

1- 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு 

6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26ஆம் தேதி மொழித் தாளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. செப்டம்பர் 27ஆம் தேதி ஆங்கில மொழிக்கான தேர்வும் செப்டம்பர் 28ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் நடைபெறுகிறது. 

அதேபோல செப்டம்பர் 29ஆம் தேதி மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கு அறிவியல் பாடமும், செப்டம்பர் 30ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வும் நடக்க உள்ளன.  தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதை அடுத்து அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 

பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வு

உயர் வகுப்புகளான 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள கல்வித் துறை, இதற்கான வினாத்தாள்களைத் தேர்வுத் துறை மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளது. 

Share:

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் எச்சரிக்கை! - எந்தெந்த மாவட்டங்கள் இதோ!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் எச்சரிக்கை! - எந்தெந்த மாவட்டங்கள் இதோ!

தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர்‌, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி

மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

01.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி,திருப்பூர்‌,திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர்‌, விருதுநகர்‌, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌,திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

03.09.2022 மற்றும்‌ 04.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!


தமிழகத்தில் அனைத்து அப்பள்ளிகளும் கொரோனாவுக்கு முன்பு இருந்து போல வழக்கமாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து சுற்றறிக்கையும் அனுப்பபட்டுள்ளது.


தூய்மை பணி:

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் புதிய முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. நடப்பு ஆண்டில் திமுக ஆட்சியில் பள்ளிகல்வி துறையில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளிகளில் மாணவர்களை கொண்டு தூய்மை பணிகளை செய்ய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பள்ளிகளில் NCC, தேசிய சாரணர் அமைப்பில் உள்ள மாணவர்களும் பிற மாணவர்களும் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள்.


இந்த நிலையில் இனி மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி தூய்மை பணியில் ஈடுபடுத்த கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை செய்ய 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றிக்கையில், எதிர்வரும் மழைக் காலத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய கட்டிட பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மழையின் போது மேல் ஓட்டில் இல்ல குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகளை அகற்ற வேண்டும். பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உரிய அலுவலர்கள் அணுகிப் பெற்று பள்ளியின் பராமரிப்பு பணிகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

Share:

புதுவை அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம்!

துச்சேரி அரசு பள்ளிகளில் 6 - 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர பாடத் திட்டமும், மாஹேவில் கேரள பாடத் திட்டமும் பின்பற்றப்படுகின்றன.

இதனால், ஒரே பாடத் திட்டத்தை மேற்கொள்ள, தனி கல்வி வாரியத்தை அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சாத்தியமில்லாத நிலையில், மத்திய கல்வி வாரிய திட்டத்தை (சிபிஎஸ்இ) பின்பற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுவையில் ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து, அதன்படி கடந்த 2014-15ஆம் கல்வியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பிலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலானது. அது படிப்படியாக 2018-19ஆம் கல்வியாண்டில் 5-ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டது.


இதன் தொடா்ச்சியாக, தற்போதைய தே.ஜ. கூட்டணி அரசு, புதுவையில் 6-ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரைக்கும், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தனர். தற்போது, 6- 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

“6- 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். 2022-2023ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 73 ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ரூ.1 கட்டணத்தில் இயக்கப்பட்டு வரும்போது பேருந்து இலவச பேருந்தாக மாற்றப்படும்” என புதுவை கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Share:

செப். 3வது வாரத்தில் நீட்-பிஜி கவுன்சலிங்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலங், செப்டம்பர் 3வது வாரத்தில் நடக்கும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-பிஜி) ஜனவரியில் நடத்தப்பட்டு, மார்ச் மாதத்தில் கவுன்சிலிங் தொடங்கும். ஆனால் கொரோனா தொற்று மற்றும் கடந்த ஆண்டு சேர்க்கை செயல்முறை தாமதம் காரணமாக, இந்த ஆண்டு தேர்வு கடந்த மே 21 அன்று நடத்தப்பட்டு ஜூன் 1 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, செப்.1ம் தேதி முதல் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலங்கை தொடங்க திட்டமிட்டப்பட்டிருந்தது.


ஆனால், தேசிய மருத்துவ ஆணையம் நடப்பு கல்வியாண்டிற்கான புதிய அனுமதி கடிதங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலங் செப்டம்பர் 3வது வாரத்தில் நடக்கும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த ஆண்டு முதுகலை கவுன்சிலிங் சுமார் 52,000 இடங்களுக்கு நடைபெற உள்ளது. அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதம் மற்றும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் 50 சதவீதமும் ஒரே நேரத்தில் முதுகலை கவுன்சிலிங் தொடங்கும்’ என்றனர்.

Share:

இன்று நள்ளிரவு 1 மணியளவில் வெளியாகும் நீட் விடைக்குறிப்பு

நள்ளிரவில் வெளியாகும் நீட் விடைக்குறிப்பு

நீட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகளை இன்று நள்ளிரவு 1 மணியளவில் வெளியிடுகிறது தேசிய தேர்வு முகமை

தேர்வர்கள் எழுதிய OMR தாளும் 1 மணியளவில் www.Padavelai.com இணையதளத்தில் வெளியீடு.

Uploading of data of 18 lakh candidates will take some more time. Hence, display of OMR Answer Sheet, Recorded Responses, and Provisional Answer Key will become available only by 12.15 P.M. today.
Share:

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

Scholarship Schemes implemented in Schools and Colleges – Procedures to be followed



பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்


CLICK HERE TO DOWNLOAD

Share:

ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு - TRB அறிவிப்பு.

முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 2ம் தேதி துவங்குகிறது.


இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பதவிகளுக்கு தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம், 48 மணி நேரத்துக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

சம்பந்தப்பட்டவர் குறிப்பிட்ட நேரத்தில், தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வர வேண்டும். அவற்றின் நகல்களும் வைத்திருக்க வேண்டும்.மொபைல் போன், கைப்பை அனுமதி கிடையாது. பெற்றோர், சிறார், உறவினர்களை அழைத்து வரக்கூடாது. வளாகத்தில் கூட்டம் சேரக்கூடாது. கூடுதல் விபரங்களை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை - செப்.5-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்கிறார்.

தமிழக அரசின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில், இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உதவி திட்டமாக மாற்றப்பட்டது. அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, திட்டத்தில் பயனாளிகளாக சேர, பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகி்ன்றனர்.


இத்திட்டத்துக்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதந்தோறும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் இத்திட்டத்தின் கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பயன்பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு ‘புதுமைப் பெண்’ திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அப்போது டெல்லியில் உள்ளதை போல, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 மாதிரிப் பள்ளிகளை அவர் திறந்து வைக்கிறார்.

Share:

உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது!

அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது!

அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது!


Share:

தெரியுமா : PGTRB - Certificate Verification Call Letter Published

முதுகலை ஆசிரியர் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Click here to Download the Call Letter

Share:

செப். 5-இல் தமிழக அரசின் 3 கல்வித் திட்டங்கள் தொடக்க விழா: தில்லி முதல்வர் கேஜரிவால் பங்கேற்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப். 5-ஆம் தேதி தொடக்கிவைக்கும் "புதுமைப் பெண்' திட்ட விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் 26 "தகைசால் பள்ளிகள்' மற்றும் 15 "மாதிரிப் பள்ளிகள்' திட்டத்தை கேஜரிவால் தொடக்கிவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டத்தை தொடக்கிவைப்பதற்கான அழைப்பிதழை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தில்லிக்கு செவ்வாய்க்கிழமை நேரில் வந்து வழங்கினார்.

தமழக முதல்வர் சார்பில் வழங்கப்பட்ட இந்த அழைப்பிதழை பெற்றுக் கொண்ட பின்னர், முதல்வர் கேஜரிவால் தனது ட்விட்டர் பதிவில், "தமிழகம் வருமாறு என்னை அழைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். செப். 5 -ஆம் தேதி மூன்று முக்கியமான திட்டங்களை நாங்கள் இணைந்து தொடங்குகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், இது குறித்து தில்லி முதல்வர் கேஜரிவாலின் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லிக்கு வந்தபோது தில்லி அரசின் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை பார்வையிட்டார். தில்லியின் கல்வி மாதிரியில் மிகவும் ஈர்க்கப்பட்டார். அந்த நேரத்தில், மு.க. ஸ்டாலின் தனது மாநிலத்தில் தில்லியைப் போல மாதிரிப் பள்ளிகளை உருவாக்க விரும்புவதாகவும், அவற்றைப் பார்வையிட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வருகை தர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள தில்லி முதல்வர், "அது தனக்கு கெளரவமானது' என்று தெரிவித்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள் என்ன?


சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் புதுமைப் பெண், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் ஆகிய மூன்று திட்டங்களுக்கான தொடக்க விழா (செப்.5) நடைபெறவுள்ளது.

அவற்றின் விவரம்:

1. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் படித்த அனைத்து மாணவிகளுக்கும் உயர் கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்.

2. சிறந்த பள்ளிகள் - தில்லியை போலவே, தமிழக அரசும் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அதிநவீன 26 தகைசால் பள்ளிகளை அறிமுகப்படுத்துகிறது. தொலைநோக்குப் பார்வையுடன் வலுவான அடித்தளத்தையும், கற்றலின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக இந்தப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.

3. தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 2021, அக்டோபர் மாதம் தொழில்முறை படிப்புகளை வழங்கும் 10 ஸ்டீம் (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை, மருத்துவம்) மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 15 இடங்களில் ரூ. 125 கோடியில் இந்த மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன

Share:

முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நேரடியாக நடைபெறும் என்றும், அப்போது கைப்பேசி, பைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வர அனுமதியில்லை என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நிதழாண்டில் 2, 955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் வெளியிட்டுள்ளது.


இந்தநிலையில் இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்துக்கு இருவா் வீதம் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4- ஆம் தேதி வரையில் ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நடைபெறவுள்ளது.


தோ்வா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்துக்கு 15 நிமிஷங்களுக்கு முன்னா் மட்டுமே ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா். சான்றிதழ் சரிபாா்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாா்கள் அவா்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்தகட்ட பணித் தோ்வுக்கு பரிசீலிக்கப்படமாட்டாா்கள்.

விண்ணப்பதாரா்கள் ஒரு பணியிடத்திற்கு 2 போ் வீதம் சான்றிதழ் சரிபாா்ப்பிற்கு அழைக்கப்படுவதாலும், அவா்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபாா்க்கப்படுவதாலும் மட்டுமே இறுதித் தோ்வுக்கு உத்தரவாதம் இல்லை. ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வளாகத்தின் வாசலில் கூட்டமாக சேருவதை தவிா்த்து வளாகத்துக்குள் அமைதி காத்திட வேண்டும்.


சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வருவோா் அசல் கல்விச்சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள், அசல் ஆதாா் அட்டை ஆகியவற்றில் ஒரு ‘செட்’ சுய சான்றொப்பம் இட்ட நகல், அழைப்புக்கடிதம், மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும். கைப்பேசிகள், பைகள் உள்ளிட்ட பொருள்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. வளாகத்துக்குள் பெற்றோா்கள், சிறாா்கள் மற்றும் உறவினா்களை அழைத்து வரக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது

Share:

நீட் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு

நீட் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு


நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்.7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் , விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமை ( என் டிஏ ) இணையதளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியி டப்பட்ட.

 விடைக்குறிப்புகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் , ரூ .200 பதிவுக் கட்டணம் செலுத்தி அதுகுறித்து புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

 எம்பிபிஎஸ் , பிடி.எஸ் , இயற்கை மருத்துவப் படிப் புகள் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 - ஆம் தேதி நடைபெற்றது . நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 தமிழகத்தில் சென்னை , கோவை , கடலூர் , காஞ்சிபுரம் , கரூர் , மதுரை , நாகர்கோவில் , நாமக்கல் , சேலம் , தஞ்சாவூர் , திருவள்ளூர் , திருச்சி , திருநெல் வேலி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் 200 - க்கும் மேற் பட்டமையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நிக ழாண்டு நீட் தேர்வுக்கு தமிழ கத்தில் 1.41 லட்சம் பேர் விண் ணப்பித்திருந்தனர். அவர்க ளில் 90 சதவீதத்துக்கும் மேற் பட்டோர் தேர்வில் பங்கேற்ற தாக மருத்துவக் கல்வி இயக்கசு வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி , தெலுங்கு , கன்னடம் , குஜ ராத்தி , மராத்தி , ஓடியா , அஸ்ஸாமி , வங்காளம் , உருது உள் ளிட்டமொழிகளில் தேர்வு நடைபெற்றது.

 அதற்கான முடிவுகள் வரும் செப் . 7 - ஆம் தேதி வெளியாக வுள்ள நிலையில் விடைக்குறிப் புகள் என்டி.ஏ இணையதளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியாகின.

Share:

SG,MG - நிதியை களவாடும் களைகள் ஒழிக்கப்படுமா?

பள்ளிக்கல்வித்துறையில் SG,MG என்று சொல்லப்படுகின்ற பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற நிதி,எதற்கெல்லாம் செலவிடவேண்டுமோ அதற்கெல்லாம் செலவிடப்படாமல் Share பிரித்தலுக்காகவும்,Fake billகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.Records வாங்குவதற்காகவே என்ற கணக்கில் மட்டும்தான் அதில் உண்மைத்தன்மை இருக்கிறது.மற்றபடி ??

ஆகவே ஒவ்வொரு பள்ளிக்கும் என்ன தேவையென்று அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள்

& அங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் ஒப்புதலோடு உடன் அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் சிலரின் ஒப்புதலோடு உறுதிமொழிப் பெறப்பட்டு,பின் அதற்கான நிதியைப் பள்ளிக்கல்வித்துறை வழங்கவேண்டும்.

பள்ளி மேலாண்மைக்குழு என்ற ஒன்று உள்ளதே அது பார்க்காதா என்று சந்தேகம் எழுந்தால் ...அதில் நியாயம் இருக்கிறது.சரியான தலைமையாசிரியர்கள் மட்டுமே சரியான வழியில் அதை அந்த SMC/SMDC தலைவர்களின் ஒப்புதலோடு செலவழிப்பார்கள்.

ஆனால்...முறையற்றவர்கள் தலைவருக்குத் தெரியாமலே,தலைவரின் கையெழுத்தை அவர்களாகவே போட்டு பணத்தை எடுத்து என்ன செய்வார்களென்று கூட அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தெரியாது.இந்தத் தொகைக்கான கணக்கெழுதும் BRC Accountant ம் இது சார்ந்து கேள்வியெழுப்பினால் "billஐ பார்த்துக் கணக்கெழுவதுதானே உங்கள் வேலை"என்று மிரட்டுவதுபோல் செய்வார்கள் இல்லையெனில் அவர்களுக்கு ஒரு Share.இதையே BRC Supervisor கேட்காமலிருக்க அவருக்கு ஒரு Share.

ஆகவே......இந்த நிதி Share holderன் கைகளிலிருந்து சேராமலிருக்க வழிசெய்யவேண்டும்.Records வாங்க தலைமையாசிரியர்கள் என்ன செய்வார்கள் என்று கோபம் கொண்டால் அதையும் அரசு வழங்கும் விலையில்லா

நோட்டுப் புத்தகங்கள்,புத்தகங்கள் வரிசையில் அந்த Recordsஐயும் சேர்த்து விடவும்.அதற்காக கடந்த ஆட்சியில் மண்வெட்டி,

கடப்பாரை,சாணி காகிதத்தில் அச்சிடப்பட்ட நூலகப் புத்தகங்களுக்கு Tender விட்டதுபோல எதையும் செய்துவிடாதீர்கள்.

களைகளை எடுக்காமல் பயிர்களைக் காப்பாற்றிட முடியாது!

#குறிப்பு :ஒவ்வோர் ஆசிரியருக்கும் Separate id&password கொடுத்தாச்சு.

Queries னு ஒரு Optionஐ வைத்துவிட்டால்கூட ஒரு பள்ளியில் நடக்கும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து புகாரளிக்க வசதியாக இருக்கும்.

என்னடா....இது இந்த புள்ள கல்வித்துறை சம்பந்தமாவே எழுதுதுனு குழப்பமடைய வேண்டாம்.ஏனெனில் இது நம் அனைவருடைய வரிப்பணம் சார்ந்தது.

ஆசிரியர் மகாலட்சுமி

Share:

School Calendar - September 2022

செப்டம்பர் 2022 மாத நாள்காட்டி



03-09-2022 -- குறை தீர்க்கும் நாள்

RL

08 -09-2022 -- வியாழன் --ஓணம் பண்டிகை

09- 09-2022 -- வெள்ளி -- சாம உபகர்மா

அரசு விடுமுறை நாட்கள் இல்லை.

1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை முதல் பருவத் தேர்வு

11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை முதல் பருவத் தேர்வு

அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை விடுமுறை

அக்டோபர் 6 பள்ளி திறப்பு.

  • 9th,10th Quarterly Exam Time Table 2022 & Model Question- Click Here

  • 11th,12th Quarterly Exam Time Table 2022 & Model Question- Click Here

Share:

தொடர்மழை விடுமுறை அறிவிப்பு ( 29.08.2022)


தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் , தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று ( 29.08.22 ) விடுமுறை

Share:

71 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை

71 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை

71 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளியில் தற்சமயம் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு மாணவர்களின் நலன் கருதி 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கு கீழ்க்குறிப்பிடப்பட்டவாறு மாற்றுப்பணி மூலம் ஆசிரியரை நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
71 BT Asst Deputation Order - Download here

Share:

மத்திய அரசு ஊழியருக்கு ஜூலை 2022- க்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு. எவ்வளவு தெரியுமா?

மத்திய அரசு ஊழியருக்கு ஜூலை 2022- க்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எவ்வளவு தெரியுமா?

The undersigned is directed to refer to this Ministry's Office Memorandum No. 1 / 4 / 2021 - E - II ( B ) dated 25th October , 2021 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 34 % to 38 % of the Basic Pay with effect from 1st July , 2022



Share:

TNSED Parents Mobile APP - SMC கூட்ட உறுப்பினர்கள் வருகையினை எவ்வாறு பதிவு செய்வது?

SMC- Mobile App

TNSED Parent App New

🟡SMC கூட்டம் - 26.08.2022

🔊இன்று நடைபெறும் SMC கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்களின் வருகையை TNSED parent App-யில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்ய .....

🔊USER NAME:

▪️HM or SMC தலைவர் Mobile Number

🔒PASSWORD:

▪️Smc@Last 4 digit of HM or SMC தலைவர் Mobile number

S only Capital letter

🔴TNSED Parents App 

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent

Share:

தமிழகத்தில் இருந்து ஓர் ஆசிரியர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர் கே.ராமச்சந்திரன்.

ராமநாதபுரம்: 

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

நாடு முழவதும் 46 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து ஆறு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதில் தமிழகத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கே.ராமச்சந்திரன் ஒருவர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டில்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, விருது வழங்க உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூ. 50,000-க்கான காசோலை ஆகியவை வழங்கப்படும் என மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது

Image source : www.vikadan.con

Share:

9th to 12th மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு - தேர்வுத்துறை

6th to 12th மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு - தேர்வுத்துறை!


புதுச்சேரி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை புதுச்சேரிபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

எப்பொழுதுமே தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே நேரத்தில்தான் தேர்வு நடைபெறும் என்பது அறிந்த்தே!

தமிழக பள்ளி காலண்டரில் 23 முதல் 30 ந் தேதி வரை காலாண்டுத்தேர்வு என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாகக் கடந்த 2 ஆண்டு கல்வி ஆண்டுகளாகப் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. பொதுத் தேர்வுகள் மற்றும் ஆண்டுத் தேர்வுகள் வழக்கத்தை விட தாமதமாக நடைபெற்றன. கொரோனா தொற்று வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, நடப்புக் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு கடந்த ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதற்கிடையே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில், காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. விரிவான காலஅட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 

11th 12th Quarterly Exam time table 2022

செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு 

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறுகிறது. காலாண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 

காலாண்டுத் தேர்வு நடைபெறும் நேரம்

6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல், மதியம் 12 மணி வரை காலாண்டுத் தேர்வு நடக்கிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல், மதியம் 12.30 மணி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 

1st std To 10th Quarterly Time Table

1- 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு 

6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26ஆம் தேதி மொழித் தாளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. செப்டம்பர் 27ஆம் தேதி ஆங்கில மொழிக்கான தேர்வும் செப்டம்பர் 28ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் நடைபெறுகிறது. 

அதேபோல செப்டம்பர் 29ஆம் தேதி மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கு அறிவியல் பாடமும், செப்டம்பர் 30ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வும் நடக்க உள்ளன.  தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதை அடுத்து அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 

பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வு

உயர் வகுப்புகளான 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள கல்வித் துறை, இதற்கான வினாத்தாள்களைத் தேர்வுத் துறை மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளது. 

Share:

10th Tamil - Quarterly Exam Question Paper 2022-2023

10th Tamil - Quarterly Exam Question Paper 2022-2023 

Tamil

  • 10th Tamil - Quarterly Model Question Paper - 2022-2023  Download Here

10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023 - All Subjects

10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023
10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023

Tamil

  • 10th Tamil - Quarterly Model Question Paper 2022 - Tamil Medium Download Here

English

  • 10th English - Quarterly Model Question Paper 2022- Download Here

Maths

  • 10th Maths - Quarterly Model Question Paper 2022 -  Download Here

Science

  • 10th Science - Quarterly Model Question Paper 2022 -  Download Here

    Social

    • 10th Social Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here
    Share:

    பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு - பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

    பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு - பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

    பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது சென்னை, கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம், விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்றும் முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியுள்ளார்

    Share:

    1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

    1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

    1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

    1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும்படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவல்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

    Share:

    11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு - முக்கிய அறிவிப்பு!

    11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு - முக்கிய அறிவிப்பு!

    11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வழக்கம்போல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

    அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று

    சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தேசியக் கொடி ஏற்றினார்.

    இதனைத் தொடர்ந்து சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், " சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாரண, சாரணியருக்கு வாழ்த்துகள். நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்" என்றார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்," கல்வித் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவரா என்பதை விட, அவருடைய செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதே முக்கியம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நுழைந்துவிடாதபடி அரசு எச்சரிக்கையாகவே உள்ளது.

    11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும். அதில் குழப்பம் வேண்டாம். தனியார் பள்ளிகள் முறையாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையே கொண்டு வரப்பட்டது" என்று கூறினார்.

    Share:

    அரசு பள்ளிகளில் அட்மிஷன் - நீட்டித்து அதிரடி அறிவிப்பு

    அரசு பள்ளிகளில் அட்மிஷன்  - நீட்டித்து அதிரடி அறிவிப்பு


    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.


    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளிக் கல்வி துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு தரப்பு மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.


    இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. செப்டம்பரில் காலாண்டு தேர்வு துவங்குவதற்கு முன்பு வரை, மாணவர்களை சேர்த்து கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

    Share:

    11th English Quarterly Exam Question Paper 2022-2023

    11th English Quarterly Exam Question Paper 2022-2023

    English

    • 11th English Quarterly Model Question Paper 1 - 2022-2023 - Download Here
    • 11th English Quarterly Model Question Paper 1 - 2022-2023 - Download Here
    Share:

    10th Maths - Quarterly Exam Question Paper 2022-2023

    10th Maths - Quarterly Exam Question Paper 2022-2023 

    Maths

    • 10th Maths - Quarterly Model Question Paper - English Medium Download Here
    • 10th Maths - Quarterly Model Question Paper - English Medium Download Here (Sri Krishna Academy)
    • 10th Maths - Quarterly Model Question Paper - English Medium Download Here
    • 10th Maths - Quarterly Model Question Paper - English Medium Download Here
    • 10th Maths - Quarterly Model Question Paper - English Medium Download Here (Ravi Tution Center)

    • 10th Maths - Quarterly Model Question Paper - English Medium Download Here (Illahi high School )

    10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023 - All Subjects

    10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023
    10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023

    Tamil

    • 10th Tamil - Quarterly Model Question Paper 2022 - Tamil Medium Download Here

    English

    • 10th English - Quarterly Model Question Paper 2022- Download Here

    Maths

    • 10th Maths - Quarterly Model Question Paper 2022 -  Download Here

    Science

    • 10th Science - Quarterly Model Question Paper 2022 -  Download Here

      Social

      • 10th Social Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here
      Share:

      10th Science - Quarterly Exam Question Paper 2022-2023

      10th Science - Quarterly Exam Question Paper 2022-2023

      Science

      • 10th Science - Quarterly Model Question Paper - English Medium Download Here
      • 10th Science - Quarterly Model Question Paper - English Medium Download Here
      • 10th Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here
      • 10th Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here
      • 10th Science - Quarterly Model Question Paper - English Medium Download Here

      • 10th Science - Quarterly Exam Model Question paper 2022-2023 - English Medium Download Here

      • 10th Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here

      10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023 - All Subjects

      10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023
      10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023

      Tamil

      • 10th Tamil - Quarterly Model Question Paper 2022 - Tamil Medium Download Here

      English

      • 10th English - Quarterly Model Question Paper 2022- Download Here

      Maths

      • 10th Maths - Quarterly Model Question Paper 2022 -  Download Here

      Science

      • 10th Science - Quarterly Model Question Paper 2022 -  Download Here

        Social

        • 10th Social Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here
        Share:

        10th Social Science - Quarterly Exam Question Paper 2022-2023

        10th Social Science - Quarterly Exam Question Paper 2022-2023

        Science

        • 10th Social Science - Quarterly Model Question Paper - English Medium Download Here
        • 10th Social Science - Quarterly Model Question Paper - English Medium Download Here ( Saiveera Academy)
        • 10th Social Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here
        • 10th Social Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here
        • 10th Social Science - Quarterly Model Question Paper - English Medium Download Here ( Sri Krishna Academy)

        • 10th Social Science - Quarterly Exam Model Question paper 2022-2023 - English Medium Download Here

        • 10th Social Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here

        10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023 - All Subjects

        10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023
        10th Quarterly Exam - Question Papers & Answer Keys 2022-2023

        Tamil

        • 10th Tamil - Quarterly Model Question Paper 2022 - Tamil Medium Download Here

        English

        • 10th English - Quarterly Model Question Paper 2022- Download Here

        Maths

        • 10th Maths - Quarterly Model Question Paper 2022 -  Download Here

        Science

        • 10th Science - Quarterly Model Question Paper 2022 -  Download Here

          Social

          • 10th Social Science - Quarterly Model Question Paper - Tamil Medium Download Here
          Share:

          ஆசிரியர்களின் மனசு' திட்டம் தொடக்கம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் ( Mail id Added )

          ஆசிரியர்களின் மனசு' திட்டம் தொடக்கம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் ( Mail id Added )


          ஆசிரியர்களின் மனசு' திட்டம் தொடக்கம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.... Mail id - உருவாக்கம்.....

          ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க ‘ஆசிரியர்களின் மனசு’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 

          புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர் சங்கம் சார்பில் 'ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். இதில்,


          அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

          இதனைதொடர்ந்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில்,


          ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு செல்கிற இயக்கம் இல்லை. 'ஆசிரியர்களின் மனசு' என்ற பெட்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


          இதில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பணி பாதுகாப்பு சட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 

          Teachers Manasu Mail I'd 

          aasiriyarmanasu@gmail.com,

          aasiriyarkaludananbil@gmail.com 

          என்ற இ.மெயில் முகவரியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

          Share:

          தொடக்க வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்! - பள்ளிக்கல்வித்துறை

          தொடக்க வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்! - பள்ளிக்கல்வித்துறை?

          எண்ணும் எழுத்தும் சிலபஸ் படித்து, அடுத்த வகுப்புக்கு முன்னேறும், குழந்தைகளுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான ஆலோசனை, ஆசிரியர்களிடம் இருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது.

          பள்ளிக்கு ஆர்வமுடன்

          இது களைய, தொடக்க வகுப்பு மாணவர்களை, பள்ளிக்கு ஆர்வமுடன் வரவழைத்து, கற்றல் திறன் மேம்படுத்த, எண்ணும் எழுத்தும் திட்டம், நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பு வரை, பிரத்யேகமாக இத்திட்டத்திற்கு சிலபஸ் உருவாக்கப்பட்டுள்ளது.ஆக்டிவிட்டி சார்ந்த கற்றல், கற்பித்தல் நடைமுறையில், பாடங்கள் சொல்லி கொடுப்பதால், மாணவர்கள் விளையாட்டு வழியாக, பல்வேறு தகவல்களை அறிந்து கொள்கின்றனர். எண்கள், எழுத்துகளை அறிமுகம் செய்வதோடு, பிழையின்றி வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணிதத்திறனுக்கு, இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை முழுமையாக, ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து, நான்காம் வகுப்புக்கு முன்னேறி வரும் குழந்தைகளுக்கு, சிலபஸ் மாற்றியாக வேண்டும். இக்குழந்தைகளின் கற்றல் திறனுக்கு ஏற்ப, வகுப்பறை செயல்பாடுகள் இருந்தால்தான், பாடங்களை உள்வாங்குவதில் சிக்கல் ஏற்படாது.

          ஆசிரியர்களிடம் கருத்துகள்

          இதற்காக, ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம், சென்னையில் நடந்தது. தொடர்ந்து, மாவட்ட வாரியாக முதன்மை கருத்தாளர்களாக செயல்படும், ஆசிரியர்களிடம் இதுசார்ந்து கருத்துகள் பெற்று, புதிய நடைமுறை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.முதன்மை கருத்தாளர்கள் சிலர் கூறுகையில், 'தொடக்க வகுப்பிலே, புதிய கற்றல் முறை கொண்டு வந்ததால், அடுத்தடுத்த வகுப்புகளில், பாடத்திட்டத்தில் மாற்றங்கள் புகுத்த வேண்டியது அவசியம். அடுத்த கல்வியாண்டில், மூன்றாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகள், நான்காம் வகுப்புக்கு செல்லும் போது, புதிய நடைமுறைகள் கொண்டு வந்தால்தான், கற்றலில் தொய்வு இருக்காது. இது சார்ந்து, அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்துகள் பெற்ற பிறகு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.

          Share:

          TNTET 2022 Practice Test DEMO

          TNTET 2022 Practice Test DEMO

          TNTET 2022 Practice Test TRB Announced

          Teacher Eligibility Test TNTET 2022 Practice Test DEMO.

          Teacher Eligibility Test TNTET 2022 Practice Test DEMO. TET Paper 1 Computer Based Test for practice test. Portal reopen - for Online Application for Teacher Eligibility Test (TNTET) - 2022. 

          TNTET Paper 1 - Practice Test Portal

          ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ள நிலையில் அதற்காக பயிற்சி பெறும் பகுதியானது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

          விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப உள்நுழைவு ( user Login) மூலமாக சென்று தேர்வுக்கான பயிற்சியினை பெறலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

          TNTET 2022 Paper 1 Practice Test Link  - Try This Test - Click Here



          Share:

          8th Tamil - First Mid Term Question Paper 2022-2023

          8th Tamil - First Mid Term Question Paper 2022-2023

          Tamil

          • 8th Tamil - First Mid Term Question Paper - Tamil Medium - Download Here ( Madurai District)
          Share:

          கனமழை தொடர்வதால் இன்று ( 05.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்

          கனமழை தொடர்வதால் இன்று ( 05.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்

          • கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(05-08-2022) விடுமுறை.
          • கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! 


          Share:

          கனமழை தொடர்வதால் இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்

          கனமழை தொடர்வதால் இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்


          தேனி - மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

          திருவாரூர் - மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

          திண்டுக்கலில் - கொடைக்கானல் பள்ளி,  கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை.

          சிறுமலை பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை

          கோவையில் - வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


          கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! 


          உத்தரவை மீறி பள்ளி, கல்லூரி இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!


          Share:

          Blog Archive

          Definition List

          header ads

          Unordered List

          Support