CCE GRADE XL SOFTWARE
CCE GRADE XL SOFTWARE
🛑 *TERM-1 CCE GRADE XL SOFTWARE*
🌹 *ஒரு முறை மாணவர் பெயர்,FA(A),FA(B)&SA மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்தால் போதும்.*
👉 *5 நிமிடங்களில் CCE மதிப்பெண் பதிவேடு தயார்*
👉 *பாட ஆசியர் மற்றும் வகுப்பாசிரியர் பதிவேடு அனைத்தும் A4 SHEET-ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்*
👉 *60 மாணவர்கள் வரை பதிவு செய்து கொள்ளலாம்.
EMIS & TNSED பற்றிய புதிய தகவல்கள்!!!
EMIS & TNSED பற்றிய புதிய தகவல்கள்!!!
EMIS தகவல்கள்:
1. TNSED attendance என்ற புதிய செயலி வருகையை பதிவு செய்வதற்காக மட்டும் வர உள்ளது. (This will be resolved attendance not marked issues)
2. App version - will be updated every 2nd and 4th week of saturday if necessary.
3. Leave application module - Edit வசதியுடன் வர இருக்கிறது.
Currently Available modules:
4. Health module : அனைத்து அரசு பள்ளிகளும் பதிவு செய்து முடிக்க வேண்டும். எந்த பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் screening செய்து முடித்துள்ளீர்களோ அந்த பள்ளிகளுக்கு மட்டுமே Medical Team oct -10 லிருந்து வர உள்ளனர்.
5.library module : அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் assign செய்யப்பட்டிருக்க வேண்டும்.
6. School stock: இன்று முதல் தங்கள் பள்ளிக்கு எந்த பொருள் வாங்கினாலும் / பெறப்பட்டாலும் உடனடியாக எமிஸில் அன்றே பதிவு செய்திட வேண்டும். பழைய stock பதிவிட வேண்டாம்.
7.Tech infra : தங்கள் பள்ளியில் உள்ள கணினி, லேப்டாப், புரஜெக்டர், etc., சார்ந்த தகவல்கள் இந்த ஆண்டிற்கு update செய்யப்பட வேண்டும். (கடந்த ஆண்டு பதிவு செய்ததை தற்போது புதுப்பிக்க வேண்டும்) .
8. SNA: SNA account details 29.9.22 க்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும்.
9. Events and tours:
பள்ளிகளில் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள், சிறப்பு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை சார்ந்த தகவல்கள் புகைப்படத்துடன் எமிஸில் அன்றே பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
10. Clubs: தங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படும் clubs( Scout, NSS, NCC, JRC, etc.,) தகவல்கள், அதற்கான incharge Teacher - assign செய்யப்பட வேண்டும்.
பிறகு club incharge Teacher மாணவர்களை tag செய்யப்பட வேண்டும்.
11. Sanctioned post : பள்ளியில் அரசு ஆணைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் பாட வாரியாக மற்றும் காலிப் பணியிடம் விபரங்கள் எமிஸில் பதிவு செய்யப்பட வேண்டும் .
12. Students Profile - ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கு ஆதார் எண் students profile- ல்
Update செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவல்கள் ஒவ்வொரு வருடமும் தொடர் நிகழ்வாக எடுத்துக்கொண்டு நினைவூட்ட லுக்கு இடமளிக்காமல் உடனுக்குடன் எமிஸில் பதிவு செய்திட தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
15.10.2022- அன்று CRC - கூட்டம் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் !!!
SMC கூட்டம் - 30.09.2022 - ஆசிரியர்கள் செய்யவேண்டியது என்ன? - Proceedings!!!
SMC கூட்டம் - 30.09.2022 - ஆசிரியர்கள் செய்யவேண்டியது என்ன? - Proceedings
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் - 30.09.2022
நடைபெறுவதற்கான வழிமுறைகள்
1. 30.9.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடைய செயல்முறைகளின் படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3. அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
4. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED Parents ஆப்ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்தல் வேண்டும்.
5. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (Username & Password) வருகை பதிவை update செய்தல் வேண்டும்.
6. மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும்.
7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அக்டோபர் 02.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
8. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றினை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து ) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED parents app-ல் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.
9. அனைத்து செயல்பாடுகளுக்குமான காணொளி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, அதைப் பின்பற்றி தலைமையாசிரியர்கள் பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை update செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
10. அனைத்து தலைமை ஆசிரியர்களும் TNSED_ Parents app-ல் உறுப்பினர்களுடைய பெயர் பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்களுடைய பெயர்கள் விடுபட்டு இருந்தால் SCHOOL EMIS ல் login செய்து SMC Reconstitution சென்று பெயர்களை பதிவேற்றம் செய்திட கொள்ளப்படுகிறார்கள்.
11. TNSED parents app i login ஆகவில்லை என்றால் பள்ளி udise நம்பர் உடன்
வட்டார வள மையத்திற்கு மதியம் 2 மணிக்குள் தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
12. ஒரே தொலைபேசி எண் இரண்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு (தலைவர், தலைமை ஆசிரியர்) update செய்யப்பட்டிருந்தால் username does not exist என்று வரும்.
13. மேற்கண்ட விவரங்களை உடன் சரி பார்த்திட அனைத்து அனைத்து அரசு வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
14. பள்ளி மேலாண்மை குழு கூட்ட நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
மேற்கண்ட வழிமுறைகள் அனைத்து வகை பள்ளிகளிலும் நடைபெறுவதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் மாவட்டம்.
தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை அட்டவனை - பள்ளி மீண்டும் திறப்பு எப்போது பார்க்கலாமா?
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்.13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காலாண்டுத் தோ்வு முடிவடைந்து அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து பின்வருமாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்படுகிறது. செப்.30-ஆம் தேதி காலாண்டுத் தோ்வு முடிந்தவுடன் அக்.1முதல் அக்.5 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
‘எண்ணும் எழுத்தும்’ முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடு செய்யும் விடுப்பு அளிக்குமாறு ஆசிரியா் சங்கங்களும், ஆசிரியா்களும் தொடா்ந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அக். 6, 7, 8 ஆகிய மூன்று நாள்களும் ஈடு செய்யும் விடுப்பாக கருதப்படும் (மீதமுள்ள இரு நாள்கள் பின்பு ஈடு செய்யப்படும்).
6th - 12th வகுப்புகளுக்கு அக்.10:
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு அக். 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகளை கையாளும் ஆசிரியா்களுக்கு அக்.10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கும் மட்டும் அக்.13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளனா்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு!!!
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு!!!
![]() |
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு!!! |
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி கல்வித்தரத்தை உயர்த்த அறிவுரை வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை 50 முதல் 60 சதவீதம் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய வகுப்புகளில் அவர்கள் பாடம் நடத்துகின்றார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தொடக்க அனுமதி ஆணை பெறாத தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாததை உறுதி செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் 12 பள்ளிகளில்:
அரசின் விதிகளை பின்பற்றி பள்ளிகளுக்கு தொடர்ந்து அங்கீகாரத்தை புதுப்பித்து ஆணை அளிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மாதம் குறைந்தபட்சம் 12 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டார். போக்சோ தொடர்பான புகார்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி வருகின்றனர். அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள சிவகங்கை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தரவு:
செப்டம்பர் 16,17-ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் ஆலோசனை நடத்தபட்ட நிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படக்கூடிய தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாததை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதை தனியார் பள்ளிகளை பொறுத்த வரை அந்த கட்டண குழுவிற்கு அனுப்பி அந்த கட்டண குழுவானது நிர்ணயிக்கக்கூடிய தொகையை CEO மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ததன் பின்பாகவே பள்ளிகளில் தரவேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்த பள்ளியினுடைய கட்டிட உறுதி தன்மை சரியாக செயல்படுகிறதா என்று ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு பள்ளிக்கும் 16 இலக்கமாக கொடுக்கப்பட்டிருக்ககூடிய EMIS என்ற எண் என்பது மாணவர்கள் எளிதாக மனதில் வைக்கக்கூடிய நிலையில் இல்லை என்றும் தற்போது தொலைப்பேசி எண் போலவே 10 இலக்கங்கள் ஆன எண்களாக மாற்றப்பட்டிருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள், இடைநிலை அதைப்போல தொடக்கக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கென தனிதனியாக கொடுக்கப்படிருக்ககூடிய அந்த அலுவலகங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருகிறது.
அதைப்போல மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ள மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க வேண்டும் என்றும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக வகுப்புகள் நடத்தி அவர்களுக்கு எந்த பாடம் புரியவில்லை என்பதை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றி மாணவர்களின் கல்வி தரத்தையும், தேர்ச்சி விதத்தையும் அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
தொடக்கக் கல்வி - கள அளவில் நிர்வாக மறுகட்டமைப்பு - ஒப்படைக்கப்பட வேண்டிய பணியிடங்களைக் கொண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் - 58 மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) பணியிடங்கள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை - டிஆர்பி தரப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என டிஆர்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு முடித்து வைக்கப்பட்டது. சீர் மரபினர் நலச்சங்க தலைவர் ஜெபமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகுதியானோர் பட்டியல் கடந்த ஆக. 28ல் வெளியானது. இதில், எம்பிசி, எம்பிசி (வன்னியர்) மற்றும் எம்பிசி - சீர்மரபினர் என தனித்தனியாக மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். ஏற்கனவே எம்பிசி பட்டியலில் இருந்து வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை கருத்தில் கொள்ளாமல் தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் பாடவாரியான கட்-ஆப் முறை கணக்கிடப்படவில்லை. எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான பட்டியலை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதேபோல் மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘சம்பந்தப்பட்ட நியமனங்களில் வன்னியர் உள்இடஒதுக்கீட்டின்படி 10.5 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தான் பொதுவான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில், எந்த விதிமீறலும் இல்லை’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுக்களை முடித்து வைத்தார்.
மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது?
TN EMIS NEW UPDATE
ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் தங்களுக்கான individual user id & password பயன்படுத்தி Academic Scores பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.
வகுப்பு ஆசிரியர் பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை பள்ளியின் emis தளத்தில் students-------->students details----------> Academic Scores என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இனிவரும் காலங்களில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு , முமுஆண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை emis தளத்தில் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையில் மாற்றம்- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையில் மாற்றம்- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!!
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தமிழக பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்.)
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும், தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சசி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் (ந.எண்.2411/ஈ2/2021 நாள்.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரையும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9-ம் தேதி வரையும் விடுமுறை அறிவித்திருந்தது பள்ளிக் கல்வித் துறை.
அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது உயர்வு , சுற்றறிக்கை வெளியீடு!!!
அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது உயர்வு , சுற்றறிக்கை வெளியீடு!!!
![]() |
அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது உயர்வு , சுற்றறிக்கை வெளியீடு!!! |
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஓய்வு பெறும் வயது:
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகையை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மறுபடியும் ஓய்வு பெறும் வயதை 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.
ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வேலைக்காக வருடக்கணக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் பணியில் உள்ள அரசு ஊழியர்களின் வயது அதிகரிப்பு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணி ஓய்வு பெறும் வயது உயர்வு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு மத்தியில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், கல்வி மைய பாதுகாவலர், உதவியாளர்கள் ஆகியோர்களின் ஓய்வு பெறும் வயதானது 58ல் இருந்து தற்போது மற்ற அரசு ஊழியர்களை போல 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டார வள மையங்களுக்கும் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Ennum Ezhuthum - Term 2 - Tamil , English , Maths - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books
Ennum Ezhuthum - Term 2 - Tamil , English , Maths - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books
![]() |
Ennum Ezhuthum - Term 2 - Tamil , English , Maths - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books |
எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - தமிழ், ஆங்கிலம், கணக்கு - பயிற்சி பவர்பாயிண்ட் - ஆசிரியர் கையேடுகள் மற்றும் பயிற்சி புத்தகங்கள்
Tamil - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books - Download here
English - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books - Download here
Maths - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books - Download here
1 - 12 காலாண்டுத்தேர்வு விடுமுறை மாற்றம் - முக்கிய அறிவிப்பு
காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை
விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு
தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்
06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும்
விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்.)
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் (ந.எண்.2411/ஈ2/2021 நாள்.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.
ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம்
ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம்
எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம்
Audio Information - Download here
Kind Attn : All Faculty pertaining to EEM-2 - Block level Date under EEM Phase-2 is postponed to 10.10.2022 to 12.10.2022 from 06.10.2022 to 08.10.2022. It should be informed to concerned Block Level venue without fail. Proceedings of Director for change is expected.
(கனிவான கவனத்திற்கு: எண்ணும் எழுத்தும்-2 தொடர்பான அனைத்து ஆசிரியர்களுக்கும் - EEM கட்டம்-2 இன் 06.10.2022 முதல் 08.10.2022 வரை வழங்கப்பட இருந்த வட்டார அளவிலான பயிற்சி தேதி 10.10.2022 முதல் 12.10.2022 வரை ஒத்திவைக்கப்பட்டது. இது சம்மந்தப்பட்ட தகவலை வட்டார அளவிலான அனைவருக்கும் தவறாமல் தெரிவிக்க வேண்டும். மாற்றத்திற்கான இயக்குநரின் செயல்முறைகள் எதிர்பார்க்கப்படுகின்றது)
செய்தி....
எண்ணும் எழுத்தும் கருத்தாளர்களுக்கான பயிற்சி நாளை முதல் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும்.
தமிழக பள்ளிகளில் மாற்றம் - இனி இவங்க இருக்க கூடாது.,உடனே அனுப்புங்க! கல்வித்துறை அதிரடி!!!
தமிழக பள்ளிகளில் மாற்றம் - இனி இவங்க இருக்க கூடாது.,உடனே அனுப்புங்க! கல்வித்துறை அதிரடி!!!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில், புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்காக பணியிட மாறுதல் குறித்த முக்கிய அறிவிப்பை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அறிக்கை :
தமிழகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் குறித்த முக்கிய சுற்றறிக்கையை, கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 01.06.2022 அன்றைய நிலையில் கல்வித்துறை அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை, இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தி உடனே அவர்களை பணியிட மாறுதல் செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெலிக்ராம்: padavelai News
பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், கண்காணிப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டு வரும் வகையிலும், ஊழியர்கள் எந்தவித புகாரும் இன்றி புது உத்வேகத்துடன் செயல்பட தக்க வகையிலும் இந்த மாற்றங்களை கொண்டு வரப்படவுள்ளது.
இந்த கலந்தாய்வை உடனடியாக முடித்து, இதில் பங்கேற்காத ஊழியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையரகத்துக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து, இந்த இடம் மாறுதலுக்கு தகுதி உடையவராக இருந்தாலும் அவர்களுக்கான பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள விலக்களிக்கப்படுவாதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த சுற்றறிக்கை, பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு - இது நடந்தா? பிரச்சனை உங்க பெற்றோருக்கும் தான்! போலீஸ் பகிரங்க எச்சரிக்கை!
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு - இது நடந்தா? பிரச்சனை உங்க பெற்றோருக்கும் தான்! போலீஸ் பகிரங்க எச்சரிக்கை!
தமிழகத்தில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால் மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக, எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.
எஸ்.பி எச்சரிக்கை:
தமிழகத்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. பஸ்களில் உட்கார இருக்கை இருந்தாலும் அவற்றில் உட்காராமல், படிக்கட்டுகளில் ஒரு காலை தரையில் தேய்த்தபடி செல்வது, ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு செல்வது, படிக்கட்டில் மொத்தமாக நின்று கொண்டு கத்துவது, தாளம் போட்டுக் கொண்டு செல்வது, இவ்வாறு பயணிகளுக்கு தொந்தரவு தரும் செயல்களில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
டெலிக்ராம்: Education News & Materials
இதனால் பல வழித்தடங்களில் திடீரென ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் ஓட்டுநருக்கும், மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இது தொடர்பாக மாணவர்களை பல முறை எச்சரித்தாலும், அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. இந்நிலையில் இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு சென்றால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுமட்டுமல்லாமல் அவர்களின் ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என, ஸ்டாலின் ஊழியர்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு சாத்தியமா?
தமிழகத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என, ஸ்டாலின் ஊழியர்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு சாத்தியமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பழைய பென்ஷன் திட்டம் :
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு, பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள், தற்போது வரை போராடி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்டாலின், இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்ட பின் மீண்டும் தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.
வாட்ஸ் அப்: Padavelai News
ஆனால் தற்போது இது சாத்தியமா? என சந்தேகம் எழுந்துள்ளது. 2019-20பட்ஜெட் படி, தமிழக அரசின் பென்ஷன் பெற்றவர் எண்ணிக்கை 7,15,699 மட்டுமே, ஆனால் இந்த ஆண்டு அறிக்கையின் படி 7,15,761 நபர்கள் பென்ஷன் பெறுகின்றனர். இந்த திட்டம் அமலானால், இளம் வயதில் பணிக்கு சேர்ந்த ஊழியர்கள் பென்ஷன் பெற வாய்ப்பு உண்டு.
பழைய பட்ஜெட் படி அதற்கான செலவு 3,488.20 கோடி, ஆனால் தற்போதைய திட்டத்தின் படி இதற்கு 39,508.37 கோடி. இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெறும் 17.07% மட்டும் கூடுதலாக தேவைப்படுகிறது. அதனால்தான் அரசு மீண்டும் அதை கொண்டு வருவோம் என அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான முறையான அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 35.38 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா 4-வது அலையில், ஜூலை மாதம் தொடக்கத்தில் தினசரி தொற்று அதிகபட்சமாக 3 ஆயிரம்வரை சென்றது. அதன் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த 19-ம் தேதி தினசரி தொற்று பாதிப்பு 419 என்ற நிலைக்கு வந்தது. இந்நிலையில், தொற்று பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் தொற்றால் 529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே வாரத்தில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100 அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல் பரிசோதனை
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் கரோனா பரிசோதனை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு என்ன வகையான காய்ச்சல் என கண்டறிய பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்மூலம் சிலருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகிறது. இதுவே தமிழகத்தில் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம். தமிழகத்தில் ப்ளூ, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுடன் கரோனா பரவலையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.
புதிதாக 533 பேருக்கு தொற்று
இதற்கிடையே தமிழகத்தில் நேற்று ஆண்கள் 274, பெண்கள் 259 என மொத்தம் 533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 479 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,349 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
கொரோனா தடுப்பூசி:
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதை தடுப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா தடுப்பூசி ஒவ்வொரு மக்களும் செலுத்தி கொண்டு வருகின்றனர். நேற்று மட்டும் கிட்டத்தட்ட 5000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவில் தற்போது வரை சுமார் 217.41 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 4 கோடி 9 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதே போல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 3 கோடி 14 லட்சத்து 91 ஆயிரத்து 154 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் 12 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி தடுப்பூசி 56 கோடி 11 லட்சத்து 63 ஆயிரத்து 416 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 51 கோடி 53 லட்சத்து 34 ஆயிரத்து 360 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நேற்று ஒரு நாள் மட்டும் 3,03,888 மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு முக்கிய அறிவிப்பு !
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு முக்கிய அறிவிப்பு !
ஆசிரிய! தேர்வு வாரியம், சென்னை -06.
பத்திரிகைச் செய்தி
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01;21122 நாள் (070320022 அன்று வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வுவரிய இணையதளத்தில் 09.08.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியின் படி 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு - தாள் 1ற்கான தேர்வு 03.09.2022 பத்திரிகைச் செய்தியின் படி நிருவாக காரணங்களினால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது தேர்வுகள் 1410.2022 தேதி முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்பட உள்ளது.
மேற்படி கணினி வழித் தேர்வுக்காக (Computer Basecd Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு (Admit Card) வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
நாள்: 23.09.2022
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்!
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலைநாட்கள், விடுமுறை அடங்கிய அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றும், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் (அடுத்த மாதம்) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடப்பட்டு, பின்னர் அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அக்டோபர் 9-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டு 10-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அட்டவணைப்படி அக்டோபர் 6-ந்தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போது வரை வாய்வழி அறிவுறுத்தலாகத்தான் இருக்கிறது. அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அப்படி வெளியிடப்படும்போதுதான் இது உறுதிப்படுத்தப்படும்’ என்றனர்.
கடவுள் வாழ்த்து - திருக்குறள்
கடவுள் வாழ்த்து - திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. - 1
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். - 2
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். - 3
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. - 4
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - 5
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - 7
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. - 8
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - 9
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
பொன்னியின் செல்வன் - கல்கி
அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
- முதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள்
- இரண்டாம் அத்தியாயம் - ஆழ்வார்க்கடியான் நம்பி
- மூன்றாம் அத்தியாயம் - விண்ணகரக் கோயில்
- நாலாம் அத்தியாயம் - கடம்பூர் மாளிகை
- ஐந்தாம் அத்தியாயம் - குரவைக் கூத்து
- ஆறாம் அத்தியாயம் - நடுநிசிக் கூட்டம்
- ஏழாம் அத்தியாயம் - சிரிப்பும் கொதிப்பும்
- எட்டாம் அத்தியாயம் - பல்லக்கில் யார்?
- ஒன்பதாம் அத்தியாயம் - வழிநடைப் பேச்சு
- பத்தாம் அத்தியாயம் - குடந்தை சோதிடர்
- பதினோறாம் அத்தியாயம் - திடும்பிரவேசம்
- பன்னிரண்டாம் அத்தியாயம் - நந்தினி
- பதின்மூன்றாம் அத்தியாயம் - வளர்பிறைச் சந்திரன்
- பதினான்காம் அத்தியாயம் - ஆற்றங்கரை முதலை
- பதினைந்தாம் அத்தியாயம் - வானதியின் ஜாலம்
- பதினாறாம் அத்தியாயம் - அருள்மொழிவர்மர்
- பதினேழாம் அத்தியாயம் - குதிரை பாய்ந்தது!
- பதினெட்டாம் அத்தியாயம் - இடும்பன்காரி
- பத்தொன்பதாம் அத்தியாயம் - ரணகள அரண்யம்
- இருபதாம் அத்தியாயம் - முதற் பகைவன்!
- இருபத்தொன்றாம் அத்தியாயம் - திரை சலசலத்தது!
- இருபத்திரண்டாம் அத்தியாயம் - வேளக்காரப் படை
- இருபத்து மூன்றாம் அத்தியாயம் - அமுதனின் அன்னை
- இருபத்து நான்காம் அத்தியாயம் - காக்கையும் குயிலும்
- இருபத்தைந்தாம் அத்தியாயம் - கோட்டைக்குள்ளே
- இருபத்தாறாம் அத்தியாயம் - அபாயம்! அபாயம்!
- இருபத்தேழாம் அத்தியாயம் - ஆஸ்தானப் புலவர்கள்
- இருபத்தெட்டாம் அத்தியாயம் - இரும்புப் பிடி
- இருபத்தொன்பதாம் அத்தியாயம் - நம் விருந்தாளி
- முப்பதாம் அத்தியாயம் - சித்திர மண்டபம்
- முப்பத்தொன்றாம் அத்தியாயம் - திருடர்! திருடர்!
- முப்பத்திரண்டாம் அத்தியாயம் - பரிசோதனை
- முப்பத்துமூன்றாம் அத்தியாயம் - மரத்தில் ஒரு மங்கை!
- முப்பத்து நான்காம் அத்தியாயம் - லதா மண்டம்
- முப்பத்தைந்தாம் அத்தியாயம் - மந்திரவாதி
- முப்பத்தாறாம் அத்தியாயம் - "ஞாபகம் இருக்கிறதா?"
- முப்பத்தேழாம் அத்தியாயம் - சிம்மங்கள் மோதின!
- முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நந்தினியின் ஊடல்
- முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - உலகம் சுழன்றது!
- நாற்பதாம் அத்தியாயம் - இருள் மாளிகை
- நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - நிலவறை
- நாற்பத்திரெண்டாம் அத்தியாயம் - நட்புக்கு அழகா?
- நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - பழையாறை
- நாற்பத்து நான்காம் அத்தி யாயம் - எல்லாம் அவள் வேலை!
- நாற்பத்து ஐந்தாம் அத்தியாயம் - குற்றம் செய்த ஒற்றன்
- நாற்பத்தாறாம் அத்தியாயம் - மக்களின் முணுமுணுப்பு
- நாற்பத்தேழாம் அத்தியாயம் - ஈசான சிவபட்டர்
- நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்
- நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - விந்தையிலும் விந்தை!
- ஐம்பதாம் அத்தியாயம் - பராந்தகர் ஆதுரசாலை
- ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மாமல்லபுரம்
- ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - கிழவன் கல்யாணம்
- ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - மலையமான் ஆவேசம்
- ஐம்பத்து நான்காம் அத்தியாயம் - நஞ்சினும் கொடியாள்
- ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - நந்தினியின் காதலன்
- ஐம்பத்தாறாம் அத்தியாயம் - அந்தப்புர சம்பவம்
- ஐம்பத்தேழாம் அத்தியாயம் - மாயமோகினி
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
- முதலாவது அத்தியாயம் - பூங்குழலி
- இரண்டாம் அத்தியாயம் - சேற்றுப் பள்ளம்
- மூன்றாம் அத்தியாயம் - சித்தப் பிரமை
- நான்காம் அத்தியாயம் - நள்ளிரவில்
- ஐந்தாம் அத்தியாயம் - நடுக்கடலில்
- ஆறாம் அத்தியாயம் - மறைந்த மண்டபம்
- ஏழாம் அத்தியாயம் - சமுத்திர குமாரி
- எட்டாம் அத்தியாயம் - பூதத் தீவு
- ஓன்பதாம் அத்தியாயம் - இது இலங்கை!
- பத்தாம் அத்தியாயம் - அநிருத்தப் பிரமராயர்
- பதினொன்றாம் அத்தியாயம் - தெரிஞ்ச கைக்கோளப் படை
- பன்னிரண்டாம் அத்தியாயம் - குருவும் சீடனும்
- பதின்மூன்றாம் அத்தியாயம் - பொன்னியின் செல்வன்
- பதினான்காம் அத்தியாயம். - இரண்டு பூரண சந்திரர்கள்
- பதினைந்தாம் அத்தியாயம் - இரவில் ஒரு துயரக் குரல்
- பதினாறாம் அத்தியாயம் - சுந்தர சோழரின் பிரமை
- பதினேழாம் அத்தியாயம் - மாண்டவர் மீள்வதுண்டோ?
- பதினெட்டாம் அத்தியாயம் - துரோகத்தில் எது கொடியது?
- பத்தொன்பதாம் அத்தியாயம் - ஒற்றன் பிடிப்பட்டான்!
- இருபதாம் அத்தியாயம் - இரு பெண் புலிகள்
- இருபத்தொன்றாம் அத்தியாயம் - பாதாளச் சிறை
- இருபத்திரண்டாம் அத்தியாயம் - சிறையிர் சேந்தன் அமுதன்
- இருபத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தினியின் நிருபம்
- இருபத்து நான்காம் அத்தியாயம் - அனலில் இட்ட மெழுகு
- இருபத்தைந்தாம் அத்தியாயம் - மாதோட்ட மாநகரம்
- இருபத்தாறாம் அத்தியாயம் - இரத்தம் கேட்ட கத்தி
- இருபத்தேழாம் அத்தியாயம் - காட்டுப் பாதை
- மூன்றாம் பாகம் - கொலை வாள்
- முதலாவது அத்தியாயம் - கோடிக்கரையில்
- இரண்டாம் அத்தியாயம் -மோக வலை
- மூன்றாம் அத்தியாயம் - ஆந்தையின் குரல்
- நான்காம் அத்தியாயம் - தாழைப் புதர்
- ஐந்தாம் அத்தியாயம் - ராக்கம்மாள்
- ஆறாம் அத்தியாயம் - பூங்குழலியின் திகில்
- ஏழாம் அத்தியாயம் - காட்டில்
- எழுந்த கீதம் எட்டாம் அத்தியாயம் - ஐயோ! பிசாசு!
- ஒன்பதாம் அத்தியாயம் - ஓடத்தில் மூவர்
- பத்தாம் அத்தியாயம் - சூடாமணி விஹாரம்
- பதினொன்றாம் அத்தியாயம் - கொல்லுப்பட்டறை
- பன்னிரண்டாம் அத்தியாயம் - தீயிலே தள்ளு!
- பதின்மூன்றாம் அத்தியாயம் - விஷ பாணம்
- பதினான்காம் அத்தியாயம் - பறக்கும் குதிரை
- பதினைந்தாம் அத்தியாயம் - காலாமுகர்கள்
- பதினாறாம் அத்தியாயம் - மதுராந்தகத் தேவர்
- பதினேழாம் அத்தியாயம் - திருநாரையூர் நம்பி
- பதினெட்டாம் அத்தியாயம் - நிமித்தக்காரன்
- பத்தொன்பதாம் அத்தியாயம் - சமயசஞ்சீவி
- இருபதாம் அத்தியாயம் - தாயும் மகனும்
- இருபத்தொன்றாம் அத்தியாயம் - நீயும் ஒரு தாயா?
- இருபத்திரண்டாம் அத்தியாயம் - அது என்ன சத்தம்?
- இருபத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி
- இருபத்துநான்காம் அத்தியாயம் - நினைவு வந்தது!
- இருபத்தைந்தாம் அத்தியாயம் - முதன்மந்திரி வந்தார்!
- இருபத்தாறாம் அத்தியாயம் - அநிருத்தரின் பிரார்த்தனை
- இருபத்தேழாம் அத்தியாயம் - குந்தவையின் திகைப்பு
- இருபத்தெட்டாம் அத்தியாயம் - ஒற்றனுக்கு ஒற்றன்
- இருபத்தொன்பதாம் அத்தியாயம் - வானதியின் மாறுதல்
- முப்பதாம் அத்தியாயம் - இரு சிறைகள்
- முப்பத்தொன்றாம் அத்தியாயம் - பசும் பட்டாடை
- முப்பத்தி ரண்டாம் அத்தியாயம் - பிரம்மாவின் தலை
- முப்பத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி கேட்ட உதவி
- முப்பத்து நான்காம் அத்தியாயம் - தீவர்த்தி அணைந்தது!
- முப்பத்தைந்தாம் அத்தியாயம் - வேளை நெருங்கி விட்டது!
- முப்பத்தாறாம் அத்தியாயம் - இருளில் ஓர் உருவம்
- முப்பத்தேழாம் அத்தியாயம் - வேரும் வெளிப்பட்டது
- முப்பத்தெட்டாம் அத்தியாயம் - வானதிக்கு நேர்ந்தது
- முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - கஜேந்திர மோட்சம்
- நாற்பதாம் அத்தியாயம் - ஆனைமங்கலம்
- நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - மதுராந்தகன் நன்றி
- நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - ஜூரம் தெளிந்தது
- நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தி மண்டபம் நாற்பத்து
- நான்காம் அத்தியாயம் - நந்தி வளர்ந்தது!
- நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - வானதிக்கு அபாயம்
- நாற்பத்தாறாம் அத்தியாயம் - வானதி சிரித்தாள்
- நான்காம் பாகம் - மணிமகுடம்
- முதலாவது அத்தியாயம் - கெடிலக் கரையில்
- இரண்டாம் அத்தியாயம் - பாட்டனும், பேரனும்
- மூன்றாம் அத்தியாயம் - பருந்தும், புறாவும்
- நான்காம் அத்தியாயம் - ஐயனார் கோவில்
- ஐந்தாம் அத்தியாயம் - பயங்கர நிலவறை
- ஆறாம் அத்தியாயம் - மணிமேகலை
- ஏழாம் அத்தியாயம் - வாலில்லாக் குரங்கு
- எட்டாம் அத்தியாயம் - இருட்டில் இரு கரங்கள்
- ஒன்பதாம் அத்தியாயம் - நாய் குரைத்தது!
- பத்தாம் அத்தியாயம் - மனித வேட்டை
- பதினோராம் அத்தியாயம் - தோழனா? துரோகியா?
- பன்னிரண்டாம் அத்தியாயம் - வேல் முறிந்தது!
- பதின்மூன்றாம் அத்தியாயம் - மணிமேகலையின் அந்தரங்கம்
- பதினான்காம் அத்தியாயம் - கனவு பலிக்குமா?
- பதினைந்தாம் அத்தியாயம் - இராஜோபசாரம்
- பதினாறாம் அத்தியாயம் - மலையமானின் கவலை
- பதினேழாம் அத்தியாயம் - பூங்குழலியின் ஆசை
- பதினெட்டாம் அத்தியாயம் - அம்பு பாய்ந்தது!
- பத்தொன்பதாம் அத்தியாயம் - சிரிப்பும் நெருப்பும்
- இருபதாம் அத்தியாயம் - மீண்டும் வைத்தியர் மகன்
- இருபத்தொன்றாம் அத்தியாயம் - பல்லக்கு ஏறும் பாக்கியம்
- இருபத்திரண்டாம் அத்தியாயம் - அநிருத்தரின் ஏமாற்றம்
- இருபத்து மூன்றாம் அத்தியாயம் - ஊமையும் பேசுமோ?
- இருபத்து நாலாம் அத்தியாயம் - இளவரசியின் அவசரம்
- இருபத்தைந்தாம் அத்தியாயம் - அநிருத்தரின் குற்றம்
- இருபத்தாறாம் அத்தியாயம் - வீதியில் குழப்பம்
- இருபத்தேழாம் அத்தியாயம் - பொக்கிஷ நிலவறையில்
- இருபத்தெட்டாம் அத்தியாயம் - பாதாளப் பாதை
- இருபத்தொன்பதாம் அத்தியாயம் - இராஜ தரிசனம்
- முப்பதாம் அத்தியாயம்-குற்றச்சாட்டு
- முப்பத்தொன்றாம் அத்தியாயம் - முன்மாலைக் கனவு
- முப்பத்திரண்டாம் அத்தியாயம் - ஏன் என்னை வதைக்கிறாய்?
- முப்பத்து மூன்றாம் அத்தியாயம் - சோழர் குல தெய்வம்
- முப்பத்து நான்காம் அத்தியாயம் - இராவணனுக்கு ஆபத்து!
- முப்பத்தைந்தாம் அத்தியாயம் - சக்கரவர்த்தியின் கோபம்
- முப்பத்தாறாம் அத்தியாயம் - பின்னிரவில்
- முப்பத்தேழாம் அத்தியாயம் - கடம்பூரில் கலக்கம்
- முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நந்தினி மறுத்தாள்
- முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - விபத்து வருகிறது!
- நாற்பதாம் அத்தியாயம் - நீர் விளையாட்டு
- நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - கரிகாலன் கொலை வெறி
- நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - அவள் பெண் அல்ல!
- நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - புலி எங்கே?
- நாற்பத்து நான்காம் அத்தியாயம் - காதலும் பழியும்
- நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - நீ என் சகோதரி!
- நாற்பத்தாறாம் அத்தியாயம் - படகு நகர்ந்தது!
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
- முதலாவது அத்தியாயம் - மூன்று குரல்கள்
- இரண்டாம் அத்தியாயம் - வந்தான் முருகய்யன்!
- மூன்றாம் அத்தியாயம் - கடல் பொங்கியது!
- நான்காம் அத்தியாயம் - நந்தி முழுகியது
- ஐந்தாம் அத்தியாயம் - தாயைப் பிரிந்த கன்று
- ஆறாம் அத்தியாயம் - முருகய்யன் அழுதான்!
- ஏழாம் அத்தியாயம் - மக்கள் குதூகலம்
- எட்டாம் அத்தியாயம் - படகில் பழுவேட்டரையர்
- ஒன்பதாம் அத்தியாயம் - கரை உடைந்தது!
- பத்தாம் அத்தியாயம் - கண் திறந்தது!
- பதினொன்றாம் அத்தியாயம் - மண்டபம் விழுந்தது!
- பன்னிரண்டாம் அத்தியாயம் - தூமகேது மறைந்தது!
- பதிமூன்றாம் அத்தியாயம் - குந்தவை கேட்ட வரம்
- பதினான்காம் அத்தியாயம் - வானதியின் சபதம்
- பதினைந்தாம் அத்தியாயம் - கூரை மிதந்தது!
- பதினாறாம் அத்தியாயம் - பூங்குழலி பாய்ந்தாள்!
- பதினேழாம் அத்தியாயம் - யானை எறிந்தது!
- பதினெட்டாம் அத்தியாயம் - ஏமாந்த யானைப் பாகன்
- பத்தொன்பதாம் அத்தியாயம் - திருநல்லம்
- இருபதாம் அத்தியாயம் பறவைக் குஞ்சுகள்
- இருபத்தொன்றாம் அத்தியாயம் - உயிர் ஊசலாடியது!
- இருபத்திரண்டாம் அத்தியாயம் - மகிழ்ச்சியும், துயரமும்
- இருபத்துமூன்றாம் அத்தியாயம் - படைகள் வந்தன!
- இருபத்துநான்காம் அத்தியாயம் - மந்திராலோசனை
- இருபத்தைந்தாம் அத்தியாயம் - கோட்டை வாசலில்
- இருபத்தாறாம் அத்தியாயம் - வானதியின் பிரவேசம்
- இருபத்தேழாம் அத்தியாயம் - "நில் இங்கே!"
- இருபத்தெட்டாம் அத்தியாயம் - கோரும் எழுந்தது!
- இருபத்தென்பதாம் அத்தியாயம் - சந்தேக விபரீதம்
- முப்பதாம் அத்தியாயம் - தெய்வம் ஆயினாள்!
- முப்பத்தொன்றாம் அத்தியாயம் - வேளை வந்து விட்டது!
- முப்பத்திரண்டாம் அத்தியாயம் - இறுதிக் கட்டம்
- முப்பத்துமூன்றாம் அத்தியாயம் - ஐயோ! பிசாசு!
- முப்பத்து நன்காம் அத்தியாயம் - போய் விடுங்கள்!
- முப்பத்தைந்தாம் அத்தியாயம் - குரங்குப் பிடி
- முப்பத்தாறாம் அத்தியாயம் - பாண்டிமாதேவி
- முப்பத்தேழாம் அத்தியாயம் - இரும்பு நெஞ்சு இளகியது!
- முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நடித்தது நாடகமா?
- முப்பதென்பதாம் அத்தியாயம் - காரிருள் சூழ்ந்தது!
- நாற்பதாம் அத்தியாயம் - நான் கொன்றேன்!
- நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - பாயுதே தீ!
- நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - மலையமான் துயரம்
- நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - மீண்டும் கொள்ளிடக்கரை நாற்பத்து
- நான்காம் அத்தியாயம் - மலைக் குகையில்
- நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - விடை கொடுங்கள்!
- நாற்பத்தாறாம் அத்தியாயம் - ஆழ்வானுக்கு ஆபத்து!
- நாற்பத்தேழாம் அத்தியாயம் - நந்தினியின் மறைவு
- நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - நீ என் மகன் அல்ல!
- நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - துர்பாக்கியசாலி
- ஐம்பதாம் அத்தியாயம் - குந்தவையின் கலக்கம்
- ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மணி மேகலை கேட்ட வரம்
- ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - விடுதலைக்குத் தடை
- ஐம்பத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் யோசனை
- ஐம்பத்துநான்காம் அத்தியாயம் - பினாகபாணியின் வேலை
- ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - பைத்தியக்காரன்
- ஐம்பத்தாறாம் அத்தியாயம் - சமய சஞ்சீவி
- ஐம்பத்தேழாம் அத்தியாயம் - விடுதலை
- ஐம்பத்தெட்டாம் அத்தியாயம் - கருத்திருமன் கதை
- ஐம்பத்தொன்பதாம் அத்தியாயம் - சகுனத் தடை
- அறுபதாம் அத்தியாயம் - அமுதனின் கவலை
- அறுபத்தொன்றாம் அத்தியாயம் - நிச்சயதார்த்தம்
- அறுபத்திரண்டாம் அத்தியாயம் - ஈட்டி பாய்ந்தது!
- அறுபத்துமூன்றாம் அத்தியாயம் - பினாகபாணியின் வஞ்சம்
- அறுபத்துநான்காம் அத்தியாயம் - உண்மையைச் சொல்!
- அறுபத்தைந்தாம் அத்தியாயம் - ஐயோ, பிசாசு!
- அறுபத்தாறாம் அத்தியாயம் - மதுராந்தகன் மறைவு
- அறுபத்தேழாம் அத்தியாயம் - மண்ணரசு நான் வேண்டேன்
- அறுபத்தெட்டாம் அத்தியாயம் - ஒரு நாள் இளவரசர்!
- அறுபத்தொன்பதாம் அத்தியாயம் - வாளுக்கு வாள்!
- எழுபதாம் அத்தியாயம் - கோட்டைக் காவல்
- எழுபத்தொன்றாம் அத்தியாயம் - திருவயிறு உதித்த தேவர்
- எழுபத்திரண்டாம் அத்தியாயம் - தியாகப் போட்டி
- எழுபத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் திருட்டுத்தனம்
- எழுபத்துநான்காம் அத்தியாயம் - நானே முடிசூடுவேன்!
- எழுபத்தைந்தாம் அத்தியாயம் - விபரீத விளைவுகள்
- எழுபத்தாறாம் அத்தியாயம் - வடவாறு திரும்பியது!
- எழுபத்தேழாம் அத்தியாயம் - நெடுமரம் சாய்ந்தது!
- எழுபத்தெட்டாம் அத்தியாயம் - நண்பர்கள் பிரிவு
- எழுபத்தொன்பதாம் அத்தியாயம் - சாலையில் சந்திப்பு
- எண்பதாம் அத்தியாயம் - நிலமகள் காதலன்
- எண்பத்தொன்றாம் அத்தியாயம் - பூனையும் கிளியும்
- எண்பத்திரண்டாம் அத்தியாயம் - சீனத்து வர்த்தகர்கள்
- எண்பத்து மூன்றாம் அத்தியாயம் - அப்பர் கண்ட காட்சி
- எண்பத்து நான்காம் அத்தியாயம் - பட்டாபிஷேகப் பரிசு
- எண்பத்தைந்தாம் அத்தியாயம் - சிற்பத்தின் உட்பொருள்
- எண்பத்தாறாம் அத்தியாயம் - கனவா? நனவா?
- எண்பத்தேழாம் அத்தியாயம் - புலவரின் திகைப்பு
- எண்பத்தெட்டாம் அத்தியாயம் - பட்டாபிஷேகம்
- எண்பத்தொன்பதாம் அத்தியாயம் - வசந்தம் வந்தது
- தொண்ணூறாம் அத்தியாயம் - பொன் மழை பொழிந்தது!
- தொண்ணூற்றொன்றாம் அத்தியாயம் - மலர் உதிர்ந்தது!
நன்றி
TN 9th, 10th, 11th, 12th Quarterly Exam Time table 2022 - All district
TN 9th, 10th, 11th, 12th Quarterly Exam Time table 2022 - All district
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 22.09.2022 முதல் காலாண்டு தேர்வு: பள்ளி கல்வித் துறை அட்டவணை வெளியீடு
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 22.09.2022 முதல் காலாண்டு தேர்வு: பள்ளி கல்வித் துறை அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 முதல் 30ம் தேதி வரை 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 12ம் வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டன. நடப்பு கல்விஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டது.
அதில், பள்ளி இயங்கும் நாட்கள், விடுமுறை விவரங்கள், காலாண்டு,அரையாண்டு, பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும், காலச் சூழலுக்கேற்ப தேதிகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது காலாண்டுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித் துறை உறுதிசெய்து, அதற்கான அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 11, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 22 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்கான விரிவான கால அட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளையும் நடத்த வேண்டும்.
இதற்கான வினாத்தாள்கள் தேர்வுத் துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 12ம் வகுப்புகளுக்கு 22ம்தேதி மொழிப்பாடமும், 23ம்தேதி ஆங்கிலமும், 26ம்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல், 27ம்தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன், 28ம்தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 29ம்தேதி கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல், 30ம்தேதி தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.
11ம் வகுப்புக்கு
22ம்தேதி மொழி பாடம் பாடம்,
23ம்தேதி ஆங்கிலம்,
26ம்தேதி வேதியியல், கணக்கியல், புவியியல்,
27ம்தேதி தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்,பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியல்,
28ம்தேதி கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல்,
29ம்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல்,
30ம்தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.
வகுப்பு 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு (SA) தேர்வு முறை மற்றும் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
வகுப்பு 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு (SA) தேர்வு முறை மற்றும் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண். 2411 / ஈ2/2021. நாள்.12.09.2022.
பொருள் :
எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) 1 முதல் 3 ஆம் வகுப்பு, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்துதல்-சார்பு :
பார்வை
எண்ணும் எழுத்தும் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் வார ஆய்வுக் கூட்ட நாள் : 10.09.2022.
எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ். ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான வளரரி மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது. பார்வையில் காணும் கலந்தாய்வு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை (Summative Assessment) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 19.09.2022 முதல் 30.09.2022 முடிய நடத்த தெரிவிக்கப்படுகிறது. இம்மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டிற்கான PDF தொகுப்பு (CD) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு 16 மற்றும் 17ஆம் தேதி அன்று நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 26.09.2022 முதல் 30.09.2022 முடிய தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆகவே, இம்மதிப்பீட்டை முழுமையாக 30.09.2022-க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி
பெறுநர்
3. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
இயக்குநர் நகல்
1. அரசு முதன்மைச் செயலாளர். பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலகம்,
12/09/ சென்னை-09.தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-06. தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. சென்னை-06. தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
12 ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்!
12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 15.09.2022 முதல் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!
01.08.2022 நிலவரப்படி PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
01.08.2022 நிலவரப்படி PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.
2 பெண் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்த ஆசிரியர் தம்பதி - பாராட்டு குவிகிறது
கூடலூரில் தனது இரு மகள்களையும் அரசு பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர் தம்பதிகளுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி ரேவதி. தேவாலா அட்டி அரசுப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களது முதல் பெண் குழந்தை நிகரிலியை கடந்த 2018-19ம் கல்வி ஆண்டில் கூடலூர் துப்புக்குட்டி பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்தனர். தற்போது 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவர்களது 2வது மகள் மகிழினியை இதே பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். அப்போது தனியார் பள்ளியில் குழந்தையை சேர்ப்பதற்கு செலவாகும் தொகையில் இப்பள்ளிக்கு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலி, தண்ணீர் பேரல் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினர். மேலும், வெயில் காலம் தொடங்கியதும் இப்பள்ளி முழுவதும் சுவர்களுக்கு வர்ணம் பூச ஆசிரியர் தம்பதி உறுதி அளித்துள்ளனர். முன்னதாக, தலைமை ஆசிரியருக்கு தட்டில் பழங்கள் வெற்றிலை பாக்கு வைத்து வழங்கப்பட்டு குழந்தைக்கு பள்ளியில் சேர்க்கை நடைபெற்றது.
இப்பள்ளியில் மொத்தம் உள்ள 163 குழந்தைகளும் ஆங்கில வழி கல்வி கற்று வருகின்றனர். ஆனால், தங்களது குழந்தைகள் இருவரையும் தமிழ் வழிக் கல்வியில் சேர்த்துள்ளனர். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரியும் இவர்கள் அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து மற்றவர்களும் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க முன்வரும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுவதை வலியுறுத்தும் வகையிலும் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்துள்ளதாகவும்,
இதே போல் ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகளின் தரம் மேலும் உயரும் என தெரிவித்துள்ளனர். தங்களது இரு குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் இந்த ஆசிரியர் தம்பதிகளுக்கு பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன