தலைமையாசிரியர் கையேடு வெளியிடப்பட்டதன் நோக்கம் - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்...!

தலைமையாசிரியர் கையேடு வெளியிடப்பட்டதன் நோக்கம் - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்...!



செய்திக்குறிப்பு :

தமிழக அரசின் சீரிய முயற்சியான அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை பண்பு பயிற்சிகள் இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது . இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் அனுபவ பகிர்வை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொகுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு கையேட்டினை தயாரிக்க ஆணையிட்டு இருந்தார்கள். 

இதன் அடிப்படையில் 40 - க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 291 பக்க அளவில் தலைமை ஆசிரியர் கையேடு பள்ளிக்கல்வி இயக்ககத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இக்கையேட்டில் தலைமை ஆசிரியர்கள் , உதவி தலைமை ஆசிரியர்கள் , வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களின் பணிகள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கமாக உள்ளது. மேலும் அலுவலக நடைமுறை பகுதியில் அலுவலகப் பணியாளர்களின் பணிகளும் , கடமைகளும் , பொறுப்புகளும் நிதி சார்ந்த நடைமுறை தகவல்களும் தரப்பட்டுள்ளன.

முதுகலை , பட்டதாரி , இடைநிலை மற்றும் சிறப்பு வழிகாட்டுதல்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது . மேலும் பள்ளிகளில் செஞ்சிலுவைச் சங்கம் , சாரணியர் இயக்கம் சுற்றுச்சூழல் மன்றம் , இலக்கிய மன்றம் , நூலக மன்றம் , வானவில் மன்றம் உள்ளிட்ட பல வகையான கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களும் ஆசிரியர்களுக்கான தரப்பட்டுள்ளன.

இக்கையேட்டினை இன்று 30.10.2023 அன்று மதுரையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டு தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள் . தலைமை ஆசிரியர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழும். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனரும் கலந்து கொண்டனர்.


Head Masters Guide 2023 - 2024 | Download here

Share:

தலைமை ஆசிரியர்கள் 1,200 பேருக்கு சிக்கல்..!

 தலைமை ஆசிரியர்கள் 1,200 பேருக்கு சிக்கல்..!

அரசு உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும், 1,200 தலைமை ஆசிரியர்களை முதுநிலை ஆசிரியர் நிலைக்கு கொண்டு வர, பள்ளி கல்விக்கு அரசு அனுமதி அளித்துஉள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் என்ற இரண்டு பதவி உயர்வில் ஒன்றை தேர்வு செய்யலாம். ஆனால், பல பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தாமதமாகும் நிலையில், முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு பின், பழைய பணி மூப்பு அடிப்படையில், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வை மாற்றி பெறுகின்றனர். இதனால், ஒரு பதவி உயர்வு கூட கிடைக்காமல் காத்திருப்போருக்கு பிரச்னை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பதவி உயர்வு செல்லாது என, நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, 1,200 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை மீண்டும் முதுநிலை ஆசிரியராக பழைய நிலைக்கு கொண்டு வர, அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

மாநில கல்வி அடைவுத் தேர்வு SEAS நடத்துதல் சார்ந்து தகவல்கள்..!

 மாநில கல்வி அடைவுத் தேர்வு SEAS நடத்துதல் சார்ந்து தகவல்கள்..!

மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மாநில அடைவுத்தேர்வு 3, 6 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இத்தேர்வு 3.11.2023 அன்று மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

 பள்ளி தலைமையாசிரியரின் பணிகளும் பொறுப்புகளும்:

1) தங்களுக்கு வழங்கப்படடும் வினாத்தாள் கட்டுகள் தங்கள் பள்ளிக்கு உரியதுதானா என்றும் மற்றும் வகுப்பு, Medium சரிபார்த்து வட்டார அளவிலான அலுவலர்களிடம் பெறுதல்.

2) நவம்பர் 2 அன்று தேர்வை நடத்தும் களப்பணியாளரிடம் (FI _B.Ed பயிலும் மாணவர்கள்) பள்ளி வினாநிரல் (SQ), ஆசிரியர் வினாநிரல் (TQ) முடிந்து மீண்டும் பெற்று தனி அலமாரியில் வைத்து பூட்டி பாதுகாத்தல்.

> நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குதல்.

> பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் 02.11.2023 மற்றும் 03.11.2023 ஆகிய நாட்களில் எவ்வித விடுப்பும் இன்றி பள்ளிக்கு வருகை புரிதலை உறுதிபடுத்தவேண்டும்.

> அடைவு ஆய்வு நடக்கும் அறையின் வெளிச்சம், காற்றோட்டம், சரிபார்த்தல்.

> வினாத்தாள் தொகுப்பிற்கான மந்தணத்தன்மையை பாதுகாத்தல்

அடைவுத்தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் தொகுப்பு SQ, TQ, PQ மற்றும் OMR / Field Note பயன்படுத்தப்பட்ட படிவங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத படிவங்களை தனித்தனியாக உறையில் வைத்து அன்று மாலையே வட்டார அளவிலான பொறுப்பு அலுவலரிடம் ஒப்படைத்தல்.

> வினாத்தாள் நகலெடுத்தல், பார்த்தல், பகிர்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

> தேர்வு நடைபெறும் போது கள ஆய்வு பணியாளர் (FI) தவிர தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பிற நபர்கள் தேர்வு அறைக்கு செல்லக்கூடாது.



Share:

TET பட்டதாரிகள் சங்கம் - போராட்டம் அறிவிப்பு...!

 TET பட்டதாரிகள் சங்கம் - போராட்டம் அறிவிப்பு...!

தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் , TET பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

ஆசிரியர் மறு நியமன தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறிய ஆசிரியர்கள் , மீண்டும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

Share:

ICFRE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!!

 ICFRE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!!


ICFRE நிறுவனத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில் Chair of Excellence (Climate Change) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:

ICFRE நிறுவனம் 6.10.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், Chair of Excellence (Climate Change) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் Master Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்திய வனத்துறையில் Forestry Research, Academic போன்ற பிரிவுகளில் 05 வருடங்கள் முதல் 15 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.


இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு 31.10.2023 அன்றைய தினத்தின் படி, 65 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நாளைக்குள் (31.10.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். ரூ.1000/- விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.



Share:

அலைபேசி பழுது நீக்குதல், சோலார் பேனல் நிறுவுவது குறித்து இலவச பயிற்சி – Mobile Repair, Solar Panel Training...!

அலைபேசி பழுது நீக்குதல், சோலார் பேனல் நிறுவுவது குறித்து இலவச பயிற்சி – Mobile Repair, Solar Panel Training...!

மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ளஎம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் அலைபேசி பழுதுநீக்குதல், சோலார் பேனல் நிறுவுவது குறித்த இலவச பயிற்சி நவம்பரில் துவங்குகிறது.8ம் வகுப்புக்கு மேல் படித்த 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.


பயிற்சி காலம் 40 நாட்கள். இரண்டு பயிற்சிகளும் தனித்தனியாக நடத்தப்படும். பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் ஜாதிச்சான்றிதழ் நகலுடன் அக்.,30க்குள் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும். அலைபேசி: 86670 65048

Share:

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது ஜாக்டோ - ஜியோ அமைப்பு அதிருப்தி...!

 ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது ஜாக்டோ - ஜியோ அமைப்பு அதிருப்தி...!


கூட்டமைப்பை கலந்தாலோசிக்காமல், சில ஆசிரியர் சங்கங்கள் மட்டும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்ததால், ஜாக்டோ ஜியோவில் அதிருப்தி உருவாகியுள்ளது.மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும், 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, இம்மாதம், 25ம் தேதி அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி மூன்று நாட்களுக்கு பின், சில ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 


இந்த புகைப்படமும், அரசின் சார்பில் வெளியானது. இதையடுத்து, ஜாக்டோ - ஜியோவில் அங்கம் வகிக்கும் பல சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய முரண்பாடுகளை களைவது, ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்தால் ஊதியம் வழங்குவது போன்றவை குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்காகவே, தொடர்ச்சியாக போராட்டங்களை அறிவித்து வருகிறோம்.போராட்டங்களையும், சங்க நடவடிக்கைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில், கூட்டமைப்பில் ஆலோசிக்காமல், சில சங்கங்களின் நிர்வாகிகள் மட்டும், அரசின் ஏற்பாட்டில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.


ஆனால், நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து, முதல்வர் தலைமையில் பேச்சு நடத்த, 2 ஆண்டுகளாக முயற்சிக்கிறோம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இரட்டை நிலைப்பாடு கொண்ட சங்கங்களை, முழுமையாக புறக்கணித்து விட்டு, ஜாக்டோ - ஜியோ செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான களையெடுப்பு நடவடிக்கை விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

Share:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்...!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்...!


நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்(நிப்டெம்) சேர்ந்துள்ள மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிப்டெம் இயக்குநர் வி.பழனிமுத்து வரவேற்றார்.

விழாவில், அரசுப் பள்ளியில் படித்து இந்நிறுவனத்தில் சேர்ந்துள்ள 13 பேருக்கு லேப்டாப்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் மாதிரி பள்ளித் திட்டத்தின் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் என்ஐடி, ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி வருகிறோம். இத்திட்டத்தை இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிதிநிலை சரியான பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், 6,218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இந்த விழாவில் அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர்- செயலர் இரா.சுதன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மேயர் சண். ராமநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் இரா.மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேசிய சட்டப் பள்ளியில்...

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்து, திருச்சி நவலூர் குட்டப்பட்டில் இயங்கி வரும் மத்திய அரசின் தேசிய சட்டப் பள்ளி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் படிக்கும் 17 மாணவ, மாணவிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துரையாடும் நிகழ்ச்சி தேசிய சட்டப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டம் இல்லை என்கிற நிலை இன்று உருவாகி உள்ளது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் மாணவர்களுக்காக 51 திட்டங்களை பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி உள்ளோம்.

தற்போது ஒரு மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி இருப்பதுபோல, நாளை ஒரு தொகுதிக்கு ஒரு மாதிரி பள்ளியை உருவாக்கவும், தொடர்ந்து அனைத்து பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக மாற்றுவதற்கான ஏற்பாட்டையும் தொடங்கியுள்ளோம்” என்றார்.

இதில், ரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.நாகராஜ், பதிவாளர் எஸ்.எம்.பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share:

ஆசிரியர் பணி நியமன தேர்வு அறிவிப்பை கண்டித்து அமைச்சர் அலுவலகம் முற்றுகை...!

ஆசிரியர் பணி நியமன தேர்வு அறிவிப்பை கண்டித்து அமைச்சர் அலுவலகம் முற்றுகை...!


ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு, மீண்டும் பணி நியமனத் தேர்வு அறிவித்திருப்பதை கண்டித்து, திருச்சியில் உள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில், 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டி தேர்வு, 2024 ஜன., 7ம் தேதி நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதை கண்டித்து, நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, பணி நியமனத்துக்கு காத்திருந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், திருச்சியில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

கடந்த 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு தரப்பினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதில், 20,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும், பணி வழங்கப்படவில்லை.

தேர்தலின் போது, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 2013ல் தகுதித் தேர்வு எழுதியவர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, உறுதி அளித்தனர்.

ஆனால், தற்போது பணி நியமனத்துக்கு, போட்டித் தேர்வு நடத்தப் போவதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் வாயிலாக, 2013ல் தகுதித் தேர்வு எழுதி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுவர்.

அ.தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சியாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆசிரியர் நியமனத் தேர்வை ரத்து செய்வோம் என, தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார்.

தற்போது, நியமன தேர்வு நடத்தப்படும் என, அரசாணை வெளியாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன், அமைச்சர் அலுவலக தரப்பினரும், போலீசாரும் பேச்சு நடத்தினர்.

வரும், 31ம் தேதி, சென்னையில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.

Share:

TNPSCகுரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும்? காலியிடங்கள் எத்தனை? முக்கியத் தகவல்கள் இதோ !!!

TNPSCகுரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும்? காலியிடங்கள் எத்தனை? முக்கியத் தகவல்கள் இதோ !!!

2023ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் வெளியிடயிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



2023ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை டிஎன்பிஎஸ்சி முன்னதாக  வெளியிட்டது.

இதில், பல இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், நவம்பர் 12-ஆம் நாள் தீபாவளி கொண்டாடப்படும்  நிலையில் ,அதற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.


Share:

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை..!

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை..!

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் 

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706 .

அரசாணை எண் 37 நாள் 10.03.2020 ன் படி உயர் கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது என்று அரசு Policy decision எடுத்துள்ளது .

அரசாணை எண் 116 நாள் 15.10 .2020 ன் படி அரசாணை எண் 37 செயல்படுத்தல் சார்பானது . தெளிவாணைகள் பொதுவாக அரசு கடிதமாக வெளியிடப்படும் . அரசு கடிதங்களை எளிதாக நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய முடியும் என்பதனால் அரசாணையாக வெளியிடப்பட்டது.

அரசாணை எண் 116 நாள் 15.10 .2020 ன் படி அரசாணை எண் 37 க்கு effect 10 .03.2020 என்று வரையறுக்கப் பட்டது .

அரசாணை எண் 37 ன் படி /any recovery/ என்பதனால் 10.03.2020க்கு முன்பாக உயர் கல்வி தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை பிடித்தம் செய்ய கூடாது.

அரசாணை எண் 37 ன் படி  10 .03 .2020க்கு முன்பாக முடித்து /not Sanctioned / examined என்ற அடிப்படையில் தற்போது அரசாணை எண் 95 ன் படி one time lumpsum என்பதனை உறுதி செய்துள்ளது அரசு .

அரசாணை எண் 120 ன் படி மத்திய அரசின் வழிகாட்டுதலை கணக்கில் கொண்டு ஊக்க ஊதிய உயர்வு One time lumpsum என்று அரசு முடிவு செய்துள்ளது. அரசாணை தான் கொள்கை முடிவு அல்ல.

உச்ச நீதிமன்றம் அரசாணையை முன் தேதியிட்டு நடைமுறைபடுத்துதல் சார்ந்து தீர்ப்புகள் வழங்கி உள்ளது . ஊக்க ஊதியம் ரத்து என்று அரசு கொள்கை முடிவு என்பதனால் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லும்.

வழக்கை இணைந்து நடத்தினால் தான் பயன் அளிக்கும். நீதிமன்றத்தை நாட முடிவு செய்து உள்ளோம்.

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706


Share:

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும்: என்சிஇஆர்டி பரிந்துரை..!!

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும்: என்சிஇஆர்டி பரிந்துரை..!!

இந்தியா சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. அப்போது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின் அழைப்பிதழில் முதன் முதலாக குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டது. அதன்பின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி)உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இக்குழுவின் தலைவரும், வரலாற்று ஆராய்ச்சி இந்திய கவுன்சில் உறுப்பினருமான ஐசக் கூறியதாவது:

பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றிய மைப்பதற்காக உருவாக்கப்பட்ட என்சிஇஆர்டி, சமூக அறிவியல் பாடத்துக்கான உயர் நிலைக் குழுவை அமைத்தது. என்சிஇஆர்டி புதிய பாடப் புத்தகங்களில் மாற்றங்களை செய்ய 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.

அரசியல் சாசனத்தின் 1(1) வது பிரிவில் இந்தியாவின் பெயர் ஏற்கெனவே பாரத் என்று உள்ளது. பாரத் என்பது பழங்கால பெயர். 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பழங்கால புத்தகங்களில் பாரத் என்ற பெயர் குறிப்பு உள்ளது. கிழக்கு இந்திய கம்பெனி வந்த பின்பும், 1757-ம் ஆண்டு பிளாஸி போருக்குப் பின்புதான் இந்தியா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. அதனால், அனைத்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என உயர்நிலைக் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல் ஆங்கிலேயர்கள் இந்திய வரலாறை பழங்கால, இடைக்கால, நவீன வரலாறு என மூன்று பகுதிகளாக பிரித்தனர். இவை இந்தியாவின் இருண்டகாலம், அறிவியல் அறிவு பற்றிஅறியாதது, முன்னேற்றம் என 3 பகுதிகளை காட்டுகிறது. ஆனால் சூரிய குடும்பத்தில் ஆர்யபட்டாவின் ஆராய்ச்சி உட்பட இந்தியாவின் சாதனைகள் பழங்காலத்திலேயே இடம்பெற்றுள்ளன. அதனால் பழங்கால வரலாற்றுக்கு பதிலாக, இந்திய வரலாற்றின் செம்மைக் காலம் பற்றி பள்ளிகளில் கற்றுக் கொடுக்க நாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

மேலும் பாடப் புத்தகங்களில் இந்து வெற்றிகள் பற்றிய வரலாறு இடம் பெறவும் உயர்நிலைக் குழுபரிந்துரை செய்துள்ளது. பாடப் புத்தகங்களில் நமது தோல்விகள் மட்டும் தற்போது இடம் பெற்றுள்ளன. முகலாயர்கள் மற்றும் சுல்தான்களுக்கு எதிரான நமது வெற்றிகள் பாடப் புத்தகங்களில் இல்லை. எனவே இந்து வெற்றிகளின் வரலாறு இடம் பெறவும் பரிந்துரை செய்துள்ளோம். மேலும் அனைத்துபாடத்திட்டங்களிலும் இந்திய அறிவியல் முறையை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறு ஐசக் தெரிவித்தார்.

தேசிய கல்வி கொள்கை 2020-க்கு ஏற்ப பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள பாடத்திட்டங்களை என்சிஇஆர்டி மாற்றியமைத்து வருகிறது. பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத் திட்டங்களை இறுதி செய்ய என்சிஇஆர்டி பல குழுக்களை உருவாக்கியுள்ளது.

இவற்றின் பரிந்துரைப்படி பள்ளிப் பாடத் திட்டங்களில் மாற்றம் செய்வது குறித்து என்சிஇஆர்டி இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.


Share:

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை.. காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை – மாநில அரசு அதிரடி!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை.. காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை – மாநில அரசு அதிரடி!



இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பட்டாசுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பட்டாசு

நாடு முழுவதும் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகள் தான் நியாபகத்திற்கு வரும். ஆனால் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பயிர் கழிவுகளை எரிப்பது, டீசல் வாகனங்களின் பயன்பாடு, தொழிற்சாலை மாசு ஆகியவற்றால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.


பொதுவாக காற்று மாசு அளவு 50க்கு குறைவாக இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் தற்போது 300யை கடந்து மிகவும் மோசம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது தான். மேலும் ஹரியானா மாநிலத்தில் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதையும் தடை செய்ய வேண்டும் என டெல்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் டெல்லி எல்லையை ஒட்டி உள்ள உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா புறநகர் பகுதிகளிலும் பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என டெல்லி அரசு வலியுறுத்தி இருக்கிறது

Share:

தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் கடனுதவி – அரசின் சூப்பர் திட்டம்...!

தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் கடனுதவி – அரசின் சூப்பர் திட்டம்...!



தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க அரசு புதிய திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கிறது. அதில் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு திட்டம்

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இளைஞர்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள் விற்பனை, எலெக்ட்ரிக்கல் கடை, மளிகை கடை, அரிசி கடை, சுவீட் ஸ்டால், செல்போன் விற்பனை, இருசக்கர வாகன உதிரிபாகம் விற்பனை, ஸ்டேசனரி கடை போன்ற பல்வேறு தொழில்களை தொடங்க அரசு கடன் வழங்க இருக்கிறது. அந்த கடனில் 25% மானியமாக வழங்கப்பட இருக்கிறது.


இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ. 3.75 லட்சம் வரை அரசு மானியம் வழங்குகிறது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட அறிவிப்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்கள் சமூக பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும். இதனை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தொழில் செய்ய ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் உள்ள UYEGP விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share:

துறைத்தேர்வு டிச-2023 விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு....!

 துறைத்தேர்வு டிச-2023 விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு....!


2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.10.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு...




Share:

ஜாக்டோ ஜியோ - தொடக்கக் கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியீடு...!!

 ஜாக்டோ ஜியோ - தொடக்கக் கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியீடு...!!


ஜாக்டோ ஜியோ மாநில  செய்தி

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள சங்கங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம் வாரியாக நியமிக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியல் ஜாக்டோ ஜியோ மாநில அமைப்பு சார்பாக வெளியிடப் பட்டுள்ளது.

jactto District_leaders.pdf - Download here

Share:

கூடுதலாக 1000 ஆசிரியர் பணியிடங்கள்!!!

கூடுதலாக 1000 ஆசிரியர் பணியிடங்கள்!!!

அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைமேலும் 1000 அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

2,222 பணியிடங்களுக்கான அறிவிப்பைநேற்று TRB வெளியிட்ட நிலையில், புதிதாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்படுகின்றன.

8 ஆண்டுகளாக பட்டதாரி – இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால்,2,222 + 1000 என மொத்தம் 3,222 பணியிடம் நிரப்பப்பட உள்ளன. 

மேலும் 2,000 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தகவல்

இதனால், ஆசிரியர்கள் தேர்வுக்கு ரெடியாகி வந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share:

TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு..!!

TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு..!!

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வுக்கான TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

2012 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5.5 மதிப்பெண் போனஸ்...

2013 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண் போனஸ்...

2014 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 4.5 மதிப்பெண் போனஸ்...

2017 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண் போனஸ்...

2019 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண் போனஸ்...

2022 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 0.5 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும்.






Share:

ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கேற்ப நிறைவேற்றப்படும்- அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி..!!

ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கேற்ப நிறைவேற்றப்படும்- அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 105 ஆண்டுகள் பழைமையானது. இதுபோல், 100 ஆண்டுகளைக் கடந்துள்ள பள்ளிகளுக்கு பழைமை மாறாமல் புதுப்பிக்க தமிழக முதல்வா் ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

அதன்படி, இப்பள்ளி 2024இல் புதுப்பிப்பு பட்டியலில் சோக்கப்படும். மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் தேங்கும் நீரை அகற்றவும், வகுப்பறைகள்- திறந்தவெளி கலையரங்கம் ஆகியவற்றை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று இப்பள்ளியில் ஹாக்கி மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் சுமாா் 31,000 பள்ளிகளில் 17.50 லட்சம் மாணவா்கள் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறுகின்றனா். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்துவது தொடா்பாக நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சா் முடிவெடுப்பாா். இத்திட்டம் தெலுங்கானாவிலும் செயல்படுத்தப்படுவது பெருமையாக உள்ளது. சத்துணவில் கோவில்பட்டி கடலை மிட்டாய் சோப்பது தொடா்பாக சமூக நலத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறை சம்பந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆசிரியா்களின் போராட்டங்களைப் பொருத்தவரை, அவா்களது உணா்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே பாா்க்கிறோம். நிதி நிலைமைக்கு ஏற்ப அவா்களது ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.


Share:

மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை 55,000-ஆக அதிகரிப்பு...!!!

மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை 55,000-ஆக அதிகரிப்பு...!!!

தமிழக மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 55,000-ஆக அதிகரித்துள்ளது.

தமிழக மின் வாரியத்தில் உதவி பொறியாளா், கணக்கீட்டாளா் உள்ளிட்ட 1.44 லட்சம் பணியிடங்களில் நிகழாண்டு மாா்ச் நிலவரப்படி 88,774 போ் பணியாற்றி வருகின்றனா். இதனால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 55,226-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2,001 பணியாளா்கள் ஓய்வு பெற்றுள்ளனா்.

அதிக காலிப் பணியிடங்களால் மின் வாரியத்தில பல்வேறு பணிகள் தாமதமாகின்றன. இதனால் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின் வாரியத்துக்கு ஊழியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த ஊழியா்களை பணிக்கு அமா்த்தாமல், முதல்கட்டமாக 5,000 நிரந்தர ஊழியா்களை உடனே நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


Share:

2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்...!!

2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்...!!

2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்...

*அக்டோபர் :-27...வெள்ளி...கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் காதர்

*நவம்பர் :-02.. வியாழன்... கல்லறை திருநாள்..

*நவம்பர் :- 13... திங்கள்... தீபாவளி நோன்பு... ( அரசுபொது விடுமுறை பட்டியலில் 12-11-2023.. ஞாயிறு.. தீபாவளி என்று உள்ளது... மறுநாள் திங்கள் அன்று  அரசு ஈடுசெய்யும் பொது விடுமுறை விடவில்லை எனில் 13-11-2023.. திங்கள்.. RL எடுக்கலாம்...)

*நவம்பர் :-27... திங்கள்.. குருநானக் ஜெயந்தி..




Share:

பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை!

தேவர் ஜெயந்தி - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை , திருப்புவனம் , மானாமதுரை , இளையான்குடி , காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவிப்பு


Share:

Local Holiday - தமிழகத்தில் அக்.27 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!

Local Holiday - உள்ளூர் விடுமுறை
1. Local Holiday - சிவகங்கை உள்ளூர் விடுமுறை :

தமிழகத்தில் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை முன்னிட்டு அக்.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மருது சகோதரர்கள் 222வது நினைவுதினம் அக்.27 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

அதனால் சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்புத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு அக். 27 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ளார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. Local Holiday - சேலம் உள்ளூர் விடுமுறை :
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு பெருவிழாவையொட்டி 27.10.2023 வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.   
 - செ.கார்மேகம்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், சேலம்

Share:

நவம்பர் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நவம்பர் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

1954ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதால் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய தியாகி மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னா் நடந்த கிளா்ச்சிகள், போராட்டங்கள், கடை அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் விளைவாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய உயிர்களை இழக்கவேண்டி இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. திருவிதாங்கூர் பகுதியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1956ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தோவாளை, அகஸ்தீ்ஸ்வரம், கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.


இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி 'கன்னியாகுமரி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அப்பகுதி மக்கள் 'குமரி தந்தை' என அழைக்கின்றனர்.


Share:

அரசு பள்ளி 2024ல் கணினி பள்ளி ...!!

அரசு பள்ளி 2024ல் கணினி பள்ளி ...!!

கணினி ஆசிரியர்களின் நீண்ட நாள் துயர்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் திருச்சி செயற்கூட்டம். அரசு பள்ளி 2024ல் கணினி பள்ளி ...

கணினி ஆசிரியர்கள் செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெறுகிறது அனைத்து மாவட்ட கணினி ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

(கணினி ஆசிரியர்கள் மீது அரசின் கடைக்கண் பார்வை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது).

நாள்:28.10.2023 (வருகின்ற சனிக்கிழமை).

 நேரம்:காலை 10 மணி.

இடம்: திருச்சி ஆசிரியர் இல்லம்.

முகவரி:

ஆசிரியர் இல்லம்,

பிளாக் எண்.36,

கஸ்தூரி மஹால் சாலை,

கோ.அபிஷேகபுரம்,

திருச்சிராப்பள்ளி,

(புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்),

(கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்).

மகிழ்வான செய்தி:

"அரசுப்பள்ளி இனி கணினி பள்ளி"

பற்றியும்,

கலைஞர் அவர்களின்  நீண்ட நாள் கனவை  நினைவாக்கிடவும்,

கணினி ஆசிரியர்களுக்கான

பணிவாய்ப்பு மற்றும் எதிர்காலத் திட்டமிடல் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்க இருக்கின்றோம். 

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் மனசு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய திருமிகு.

"சிகரம் சதிஷ்குமார் "அவர்கள் கலந்துகொள்கின்றார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புரிந்து கொள்வீர்!!!

2024ஆம் கல்வியாண்டில்  "வேலையில்லா பட்டதாரி " என்ற பெயர்  நீக்கப் பெற உள்ளது.

திரு வெ. குமரேசன் மாநில பொதுச் செயலாளர்,

தொடர்பு எண்: 8248922685,

9626545446,9791756026

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்.655/2014.


Share:

அண்ணா பல்கலை.யில் நடப்பாண்டு 2 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்...!!

அண்ணா பல்கலை.யில் நடப்பாண்டு 2 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்...!!

அண்ணா பல்கலை.யில் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பி.வோக் சரக்கு மேலாண்மை, பி.வோக் காலணி உற்பத்தி ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேர்ந்து மாணவர்கள் பயன்பெற வேண்டுமென அதன் துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.

தற்போதைய காலத்துக்கேற்ப கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதியசெயல்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இளநிலை தொழிற்கல்வி (Bachelor of Vocational Degree) எனும் 3 ஆண்டு படிப்புகள் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டன. முதல்கட்டமாக ஆரணியில் உள்ள அண்ணாபல்கலை. உறுப்புக் கல்லூரியில் காலணி உற்பத்தி (Footware Manufacturing) மற்றும் காஞ்சிபுரம் உறுப்புக் கல்லுரியில் சரக்கு மேலாண்மை (Logistics Management) படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்விரு படிப்புகளில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால் சேர்க்கை குறைவாகவே இருக்கிறது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது; இவ்விரண்டும் திறன்சார்ந்தபடிப்புகளாகும். தற்போதைய சூழலில் அறிவைவிட திறனை வளர்த்து கொள்வது அவசியமாகும். வரும்காலங்களில் பொறியியல் படிப்பு முடித்தவர்களைவிட இத்தகையதொழிற் கல்வி படித்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பு அதிகளவில் இருக்கும்.

தொழிற்கல்வி மீதான தவறான புரிதல்களை மாற்றினால்தான் நாம் வேலைவாய்ப்புகளில் முன்னேற முடியும். தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்கள் சார்ந்துஇத்தகைய படிப்புகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. சேர்க்கைசரிந்து வருவதால் வரும்காலங்களில் பொறியியல் படிப்புகளின் இடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த படிப்புகள் குறித்த கூடுதல் தகவல்களை பல்கலை. இணையதளத்தில் (https://www.annauniv.edu/) சென்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்கிடையே பணிபுரிந்து கொண்டே படிக்க விரும்புபவர்களுக்கான புதிய கல்வி முறையைஏஐசிடிஇ தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இதற்கு தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த கல்வி முறைக்கு அனுமதி தந்து மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு வழிசெய்ய வேண்டும்.

Share:

தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்திடுக: ராமதாஸ் வலியுறுத்தல்...!!

தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்திடுக: ராமதாஸ் வலியுறுத்தல்...!!

ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று 30 மாதங்களுக்கு மேலாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

தமிழகம் முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்துக்கும் கூடுதலானவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. அவர்கள் போட்டித் தேர்வு எழுதிதான் பணியில் சேர வேண்டும் என்றால், அதற்கான பயிற்சியைப் பெற அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும். அந்த வகையில் பணம் படைத்த, நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி கிடைப்பதற்கு போட்டித் தேர்வு வகை செய்கிறது. எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்


Share:

கல்வி உதவி தொகைக்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம் - பள்ளிகளுக்கு உத்தரவு...!!

கல்வி உதவி தொகைக்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம் - பள்ளிகளுக்கு உத்தரவு...!!

கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்துக்கு, மாணவர்களின் குடும்ப வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் விபரங்களை பதிவு செய்யுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிகல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியான மாணவர்கள், தங்களின் ஜாதி சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப வருமான சான்றிதழும் வாங்கி வர வேண்டும்.

கல்வி உதவி தொகையானது வரும் காலத்தில், மாணவரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அதனால், மாணவரின் வங்கி கணக்கில், பெற்றோரின் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து, உரிய சான்றிதழ்களை மாணவர்களிடம் பெற்று, நவ.,15க்குள் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிகளை அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share:

B.Ed தேர்வு கட்டணம் கல்லுாரிகளுக்கு உத்தரவு...!!

B.Ed தேர்வு கட்டணம் கல்லுாரிகளுக்கு உத்தரவு...!!


தேர்வு கட்டணத்தை ஆன்லைன் வழியில் மட்டுமே செலுத்த வேண்டும் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.

பல்கலை தரப்பில், கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'தேர்வு கட்டணம், அரியர் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் போன்றவற்றை, நேரடியாக பல்கலைகளில் ஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் செலுத்த வேண்டும். கல்லுாரிகள் வழியே பெறப்படாது' என்று கூறப்பட்டுஉள்ளது.

Share:

15 ஆயிரம் பணியிடங்கள் Group-4 தேர்வு - அறிவிப்பு !

15 ஆயிரம் பணியிடங்கள் Group-4 தேர்வு அறிவிப்பு விரைவில்!


பத்திரிக்கைச் செய்தி :

காத்திருந்தது போதும் நண்பர்களிக்கும் Share செய்யுங்கள் . தேர்விற்கு இன்றிலிருந்தே தயாராகுங்கள் . உங்களுக்கான Group-4 Study Material தேவை என்ன என்பதை Comment செய்யுங்கள். நமது வலைப்பூ வில் உள்ள One online Test களை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.


 

Share:

ஆசிரியர்களுக்கு அரசின் அடுத்த திட்டம்:...!

ஆசிரியர்களுக்கு அரசின் அடுத்த திட்டம்:...!


ஒரு பிரத்யேக இணையதளம் வாயிலாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அவற்றுக்கு தீர்வு காண புதிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரர் புதிய முயற்சி என்ற தகவல்களை அறிய முடிகிறது.

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய குறைகளை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

கோரிக்கைகள் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? அதற்கான காரணம் என்ன? பரிசீலனையில் உள்ளதா? அல்லது மனுவில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று இணையதளம் வாயிலாக முழுக்க முழுக்க ஆசிரியர்களினுடைய GREIVENCES இனி நடைபெற அரசு திட்டம் வகுத்துள்ளதாக தகவல்கள்.

எனவே ஒரு அலுவலகத்தில் ஆசிரியரிடம் இருந்து மனு பெறப்பட்ட நாள் அதனை அலுவலர்கள் அதன் மீது எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படுத்தன்மையுடனும் ஆதாரத்துடனும் நாள்வாரியாக அது பதியப்படும் என்பதால் இது எதிர்காலத்தில் பல்வேறு வழக்கு சிக்கல்களை தவிர்க்கும் என்று அரசு கருதுகிறது. மேலும் இதன்மூலம் எந்த ஒரு அதிகாரியும் ஆசிரியர்களின் மனுக்களை அலட்சியப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் 5000 க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த முடிவை அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பும் உள்ளது.

Share:

அனைத்து மாணவர்களுக்கும் Aadhaar போலவே "APAAR Card" - முழு விவரம்!

அனைத்து மாணவர்களுக்கும் Aadhaar போலவே "APAAR Card" - முழு விவரம்


ஒரே நாடு ஒரே அடையாள எண் என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கான நிரந்தர அடையாள எண் உருவாக்கப்பட உள்ளது. 

ஒரே நாடு ஒரே ஐ.டி. என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கான நிரந்தர அடையாள எண் உருவாக்கப்பட உள்ளது. 

ஒரே நாடு - ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே நாடு - ஒரே ரேஷன்; ஒரே நாடு - தேர்தல் உள்ளிட்டவற்றின் வரிசையில் மத்திய அரசு, ஒரே நாடு - ஒரே அடையாள எண் என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.  இது தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு (Automated Permanent Academic Account Registry  - APAAR) என்று அழைக்கப்பட உள்ளது. சுருக்கமாக அபார் என்று அழைக்கப்படுகிறது. எனினும் இதை உருவாக்க மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அபார் ஐடி: என்ன செய்யும்?

ஆதார் அட்டையைப் போலவே ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக அபார் ஐ.டி. உருவாக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட மாணவரின் கல்வி வளர்ச்சி, சாதனைகள் மற்றும் பிற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். 

இதுதொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மாணவர்களுக்கு, ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு அபார் ஐடி உருவாக்கப்பட வேண்டும் என்றும் யுடிஐஎஸ்இ (UDISE)-ல் ரத்த வகை, உயரம், எடை ஆகியவையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தனிப்பட்ட அடையாள எண்

ஒரு மாணவருக்கு அவரின் மழலையர் கல்வியில் தொடங்கி உயர் கல்வி வரை, அபார் எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் பயன்படுத்தப்படும். வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள எண் செயல்படும். இதன் மூலம் தேர்வு முடிவுகள், கற்பித்தல் விளைவுகள், படிப்பு தவிர்த்து பிற கலை செயல்பாடுகள், சாதனைகள், ஒலிம்பியாட் தேர்வு சாதனைகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்படும். அத்துடன் ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாணவர் மாறும்போது, புதிய சேர்க்கையின்போது ஏற்படும் சிரமங்கள் வெகுவாகக் குறையும். 

பாதுகாப்பு காரணங்கள் 

மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் எக்காரணம் கொண்டும், பொது வெளியில் பகிரப்படாது என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதை உருவாக்க மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் பெற்றோர் தேவைப்படும்போது விருப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

அபார் அடையாள எண்ணில் இருக்கும் தகவல்கள், தேவைப்படும்போது மட்டும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள், கல்வி தளத்தில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும்.👍

Share:

8th Tamil - 2nd Mid-Term Question Paper 2023 - 2024

8th Tamil - 2nd Mid-Term Question Paper 2023 - 2024

8th Tamil- 2nd Mid Term important questions 2023 - Download Here ( Soon)

8th Tamil - 2nd Mid-Term  Model Question Paper 2023 -   PDF Download here

8th Tamil - 2nd Mid-Term  Original Question Paper -  PDF Download here ( Tirupattur District )

8th Tamil - 2nd Mid-Term  Original Question Paper -  PDF Download here ( Tenkasi District )

8th Tamil - 2nd Mid-Term  Original Question Paper -  PDF Download here (Dindigul District )

Share:

8th English - 2nd Mid-Term Question Paper 2023 - 2024

8th English - 2nd Mid-Term Question Paper 2023 - 2024

8th English - 2nd Mid-Term  Original Question Paper -   PDF Download here ( Tenkasi District )

8th English - 2nd Mid-Term  Original Question Paper -  PDF Download here ( Nagapattinam District )

8th English - 2nd Mid-Term  Original Question Paper -  PDF Download here ( Ranipet District )

8th English - 2nd Mid-Term  Original Question Paper -  PDF Download here (Dindigul District )

8th English - 2nd Mid-Term  Original Question Paper -   PDF Download here ( Tirupattur District )

Share:

8th Maths - 2nd Mid-Term Question Paper 2023 - 2024

8th Maths - 2nd Mid-Term Question Paper 2023 - 2024

8th Maths - 2nd Mid-Term  Original Question Paper -   English Medium DF Download here ( Ranipet District )

8th Maths - 2nd Mid-Term  Original Question Paper -  Tamil Medium PDF Download here ( Ranipet District )

8th Maths - 2nd Mid-Term  Original Question Paper -  English Medium PDF Download here ( Nagapattinam District )

8th Maths - 2nd Mid-Term  Original Question Paper -  English Medium PDF Download here (Tirupattur District )

8th Maths - 2nd Mid-Term  Original Question Paper -   Tamil Medium PDF Download here ( Tirupattur District )

8th Maths - 2nd Mid-Term  Original Question Paper -   Tamil Medium PDF Download here ( Dindigul Madurai District )

Share:

8th Science - 2nd Mid-Term Question Paper 2023 - 2024

8th Science - 2nd Mid-Term Question Paper 2023 - 2024

8th Science - 2nd Mid-Term  Original Question Paper -   English Medium DF Download here ( Ranipet District )

8th Science - 2nd Mid-Term  Original Question Paper -  Tamil Medium PDF Download here ( Ranipet District )

8th Science - 2nd Mid-Term  Original Question Paper -  English Medium PDF Download here ( Tenkasi District )

8th Science - 2nd Mid-Term  Original Question Paper -  English Medium PDF Download here (Tirupattur District )

8th Science - 2nd Mid-Term  Original Question Paper -   Tamil Medium PDF Download here ( Tirupattur District )

8th Science - 2nd Mid-Term  Original Question Paper -   Tamil Medium PDF Download here ( Dindigul Madurai District )

Share:

8th Social Science - second Mid-Term Question Paper 2023 - 2024

8th Social Science - second Mid-Term Question Paper 2023 - 2024

8th Social Science - 2nd Mid-Term  Original Question Paper -   English Medium DF Download here ( Ranipet District )

8th Social Science - 2nd Mid-Term  Original Question Paper -  Tamil Medium PDF Download here ( Ranipet District )

8th Social Science - 2nd Mid-Term  Original Question Paper -  English Medium PDF Download here ( Tenkasi District )

8th Social Science - 2nd Mid-Term  Original Question Paper -  English Medium PDF Download here (Tirupattur District )

Share:

இளநிலை, முதுநிலை ஆராய்ச்சிக்கான யுஜிசி உதவி தொகை அதிகரிப்பு..!

இளநிலை, முதுநிலை ஆராய்ச்சிக்கான யுஜிசி உதவி தொகை அதிகரிப்பு..!



இளநிலை, முதுநிலை ஆராய்ச்சியாளர் உட்பட ஆராய்ச்சி திட்டங்களுக்கான உதவித் தொகையை யுஜிசி உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:

கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உதவித் தொகை திட்டங்களை மத்திய அரசு யுஜிசி வாயிலாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான உதவித் தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு (ஜேஆர்எப்) மாதந்தோறும் தரப்படும் உதவித்தொகை ரூ.31 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாகவும், முதுநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான (எஸ்ஆர்எப்) உதவித் தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, ஒற்றை பெண் குழந்தைகளின் ஆராய்ச்சி படிப்புக்கான சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே உதவித் தொகையும் ஜேஆர்எப் பிரிவுக்கு ரூ.37 ஆயிரம், எஸ்ஆர்எப் பிரிவுக்கு ரூ.42 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதுதவிர, டாக்டர் டி.எஸ்.கோத்தாரி முதுநிலை உதவித் தொகைத் திட்டத்தில் முதலாம் ஆண்டு ரூ.58 ஆயிரம், 2-ம் ஆண்டு ரூ.61 ஆயிரம், 3-ம் ஆண்டு ரூ.67 ஆயிரம் என்ற அளவில் மாதந்தோறும் அளிக்கப்படும்.

அதன் முழுமையான விவரங்களை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

Share:

தமிழக அரசின் மாதாந்திர உதவித்தொகை...பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்...!

தமிழக அரசின் மாதாந்திர உதவித்தொகை...பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்...!


10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை  தமிழக அரசு தரும் உதவித் தொகை பெறுவதற்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தொகையைப் பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித்தகுதியைப் பதிவு செய்து 5 வருடங்களும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வருடமும் போதுமானது.

உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவி தொகை பெற தகுதியுள்ள விருப்பமுள்ள பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்திலோ  உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம், முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்

பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நவம்பர் 30-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Share:

NEET SS தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு..!

 NEET SS தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு..!

தேசிய தேர்வு வாரியம் நீட் தேர்வு முடிவை இன்று வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை ஆன்லைனில் nbe.edu.in அல்லது natboard.edu.in இல் சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NBE NEET SS தேர்வு முடிவுகள் 2023:

156 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவை (ஏஎஃப்எம்எஸ்) நிறுவனங்களில் 2,447 டாக்டர்கள் (டிஎம்) மற்றும் முதுநிலை அறுவை சிகிச்சை (எம்சிஎச்) இடங்களுக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 29 மற்றும் 30, 2023 அன்று நடைபெற்றது.

தேசிய தேர்வுகள் வாரியம் (NBE) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சூப்பர் ஸ்பெஷாலிட்டி (NEET SS) முடிவை இன்று, அக்டோபர் 15, 2023 அன்று அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் NEET SS முடிவை அதிகாரப்பூர்வ இணையதளமான natboard.edu.in மற்றும் nbe.edu .in. ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், ஒவ்வொரு சிறப்புக்கும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் அட்டையுடன், ஒவ்வொரு 13 குழுக்களுக்கான கட்ஆஃப்களும் வெளியிடப்படும். NEET SS தேர்வுக்கு தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் DM, MCh மற்றும் DrNB சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சேர தகுதியுடையவர்கள்.

Download NEET SS Result 2023 Pdf

Share:

TNPSC புதிய தேர்வு அறிவிப்பு - 360+ காலிப்பணியிடங்கள்..1

 TNPSC புதிய தேர்வு அறிவிப்பு - 360+ காலிப்பணியிடங்கள்..1


TNPSC நிறுவனத்தில் CESE பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPSC

பணியின் பெயர்: CESE

மொத்த பணியிடங்கள்: 368

தகுதி:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

TNPSC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,400/- முதல் ரூ.2,05,700/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 32 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

Registration Fee – ரூ.150/-

Examination Fee – ரூ.200/-

தேர்வு செயல்முறை:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (11.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

11.11.2023

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு TNPSC 2023: இங்கே பதிவிறக்கவும்

விண்ணப்பிக்க: உடனே விண்ணப்பிக்க

அதிகாரப்பூர்வ தளம்: Check Now

Share:

ஆசிரியர் பணியிடங்களை TRB மூலம் 6 மாதத்தில் நிரப்ப வேண்டும் - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு...!

ஆசிரியர் பணியிடங்களை TRB மூலம் 6 மாதத்தில் நிரப்ப வேண்டும் - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு...!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 499 பணியிடங்களில், 243 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 மாதத்தில் நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சென்னை மாநகராட்சிக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி, சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இடமாற்றம் மூலமாக நியமிப்பதாக இருந்தால் அதற்கு எந்த பணி விதி ஒப்புதல் அளிக்கிறது, உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு விளக்கம் அளிக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநகராட்சிக்கு என தனி விதிகள் இல்லை. எனவே, பள்ளிக்கல்வித் துறை விதிகளே பின்பற்றப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதத்தை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

எனினும் கடந்த 10 ஆண்டுகளாக நேரடி தேர்வு நடத்தவில்லை. தற்போது காலியாக உள்ள 499 ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களான 243 பணியிடங்களை நிரப்பக் கோரி இரு வாரங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுத வேண்டும்.

மாநகராட்சியின் கடிதம் கிடைத்ததும் போர்க்கால அடிப்படையில் ஆறு மாதங்களில் தேர்வு நடவடிக்கைகளை முடித்து, இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, தேர்வானவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் சென்ைன மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாநகராட்சி பள்ளிகளின் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடமாற்றம் மூலம் நியமிக்கப்படும் 79 ஆசிரியர்களும், நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டதும், தங்கள் சொந்த அலகுக்கு திரும்ப வேண்டும்.

பதவி உயர்வு மூலம் நியமிக்க வேண்டிய 50 சதவீத ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை தயாரித்து மூன்று மாதங்களில் வெளியிட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

Share:

ஒரே நேரத்தில் தேர்வு , பயிற்சி , கலை திருவிழா நடத்த உத்தரவு ஆசிரியர்கள் , மாணவர்கள் சிரமம்...!

ஒரே நேரத்தில் தேர்வு , பயிற்சி , கலை திருவிழா நடத்த உத்தரவு ஆசிரியர்கள் , மாணவர்கள் சிரமம்...!


ஒரே நேரத்தில் தேர்வு, பயிற்சி, கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டதால் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அக்.16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அதேபோல் அக்.17-ம் தேதி முதல் அக்.20-ம் தேதி வரை 6,7,8-ம் மாணவர்களுக்கு கற்றல் அடைவுத்திறனை மதிப்பிட திறன் வழி தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டது.

Share:

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நவ.6 முதல் கல்லூரி களப்பயணம்!


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், அருகே உள்ள கல்லூரிகளுக்கு கடந்தாண்டு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த அனுபவம் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த அச்சம், குழப்பங்களை களைய வழிவகை செய்தது.

தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி களப்பயணம் நிகழ்வை அக்டோபர் 25 முதல்28-ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது நிர்வாகக் காரணங்களால் இந்த பயணம் நவம்பர் 6 முதல் 9-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, ஒரு பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்குள்ள நூலகம், ஆய்வகங்களை பார்வையிடுவார்கள். மேலும், கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகள், கல்வி உதவித்தொகை திட்டங்கள்குறித்து விளக்கம் தரப்படும்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support