10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மொழிப்பாடங்கள் – CBSE புதிய விதிகள்!

10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மொழிப்பாடங்கள் – CBSE புதிய விதிகள்!மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆனது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழித்தாள்கள் குறித்தான புதிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்சி புதிய விதிகள்:

மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி கட்டமைப்பில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பின்படி CBSE யின் 10 ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகளை தற்போது படித்து வருகின்றனர். இனி இது மூன்று மொழியாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிபிஎஸ்சி யின் 5 பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கான விதியை தற்போது 10  ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. இதேபோல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகளை படிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.


இவற்றில் ஒன்று குறைந்த பட்சம் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெறுவதை விட ஆறு பாடங்களில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2020 தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளின் படி கல்வி சமநிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் 7 சப்ஜெக்ட்கள் மற்றும் மூன்று மொழிகளில்  தேர்ச்சி பெற வேண்டியது உள்ளது. இவற்றில் முன்னதாக உள்ள 5 பாடங்களுக்கு பதிலாக தற்போது இரண்டு மொழிகள் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற மூன்று முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...