TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி..!

 TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி..!

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட இந்தத் தேர்வுக்கு வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், தங்களின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் இரண்டுடன், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments