தமிழக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – பிப்.19 ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

தமிழக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – பிப்.19 ம் தேதிக்கு தள்ளிவைப்பு!


தமிழக இடைநிலை ஆசிரியர்கள் இன்று நடத்த இருந்த போராட்டம் தொடர்பாக புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம்:

தமிழக அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் மத்தியில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு அளித்திருந்த உறுதியின் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


தற்போது நான்கு மாதங்கள் ஆகியும் இது தொடர்பாக எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் பிப்ரவரி 12-ம் தேதியான இன்று சென்னை டி பி ஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் முற்றுகைப் போராட்டம் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments