எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக நாளை (08.11.2021) மற்றும் நாளை மறுதினம் (09.11.2021) நடைபெறவிருந்த எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு!

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்தது. தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில இதரத்தேர்வுகள் மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி நடைபெறும் . ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வுத் தேதிகள் தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments