பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பாக சூழலுக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம்.! தமிழக அரசு அறிவிப்பு.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பாக சூழலுக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம்.! தமிழக அரசு அறிவிப்பு.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாக்குமரி,நெல்லை,தூத்துக்குடி,தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கிடையில்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தததால் சாலைகளில் வெள்ளம் தேங்கியதுடன், வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், தற்போது, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...