ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!


திருச்சியில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் திருச்சி மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில், ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாகவும், அந்த விடுமுறை நாளை ஈடு செய்ய ஜூன் 8ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.


சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி இத்திருத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவபதத்தில் விக்ரமசிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

இத்தகைய சிறப்புக்குரிய இத்தலத்தில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏப்.15 ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்.16ம் தேதி நடைபெற உள்ளது


ஏப்.17ம் தேதி வெள்ளிக் காமதேனு வாகனத்திலும், ஏப்.18ம் தேதி முத்துப்பல்லக்கும், ஏப்.19ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும். மேலும் ஏப்.23ம் தேதி தங்க கமலவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...