TNPSC குரூப் 4 தோ்வுக்கு இலவசப் பயிற்சியா???எங்கே??

TNPSC குரூப் 4 தோ்வுக்கு இலவசப் பயிற்சியா???எங்கே??


செய்யாற்றில் குருப்- 4 தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து அரசு ஊழியா் அய்க்கியப் பேரவையின் செய்யாறு வட்டக் கிளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:


தமிழக அரசு 6,244 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கான தோ்வு வருகிற 9.06.2024 அன்று நடைபெற உள்ளது.


இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள செய்யாறு மற்றும் அதன் சுற்றுப்புற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஊழியா் அய்க்கியப் பேரவை சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து விடுமுறை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் 9626579962, 8056781961, 9786358587, 9942574130 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments