Daily TN Study Materials & Question Papers,Educational News

மாவட்டக் கல்வி ஆய்வுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு - ஆட்சியரின் செயல்முறைகள்..!

 மாவட்டக் கல்வி ஆய்வுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு - ஆட்சியரின் செயல்முறைகள்..!


மாவட்டக் கல்வி ஆய்வுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு தலைவராக மாவட்ட ஆட்சியர்,செயலராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்


பார்வை 1 மற்றும் 2 ன்படி , பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மாவட்ட கல்வி ஆய்வு அந்தந்த மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நடத்திட தெரிவிக்கப்பட்டிருந்தது . இதன் அடிப்படையில் பார்வை 3 ன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பிற துறை அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு ( DLMC - District Level Monitoring Committee ) அமைக்கப்பட்டுள்ளது.







Share:

TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு தேதி அறிவிப்பு..!

 TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு தேதி அறிவிப்பு..!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) 105 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை வெளிக்கிழமை வெளிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான)தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், 105 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இதற்கு பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் அல்லது எம்பிஏ மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் கட்டாய தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு, மனத் திறன் அறிவு குறித்த வினாக்கள் இடம் பெறும், இரண்டாம் தாளில், பாடம் தொடர்பான வினாக்கள் இடம் பெறும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இந்த பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 2 முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.


தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வு கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.




Share:

ஒற்றை இலக்கத்தில் 73 பள்ளி ஒரு மாணவர் கூட இல்லாத இரு பள்ளிகள் மூடல்..!

 ஒற்றை இலக்கத்தில் 73 பள்ளி ஒரு மாணவர் கூட இல்லாத இரு பள்ளிகள் மூடல்..!

கரூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் 73 பள்ளி ஒரு மாணவர் கூட இல்லாத இரு பள்ளிகள் மூடல்..



Share:

ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பதிவாளர் நீக்கம்: பிஎட் 2-ம் ஆண்டு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அதிரடி

 ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பதிவாளர் நீக்கம்: பிஎட் 2-ம் ஆண்டு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அதிரடி!


பி.எட். 2-ம் ஆண்டு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில் வியாழக்கிழமை காலை ஆன்லைனில் புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கப்பட்டு புதிய பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 700-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்வியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான செமஸ்டர் மற்றும் நான்-செமஸ்டர் தேர்வுகளை இப்பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பி.எட்., எம்.எட்., (பொது மற்றும் சிறப்புக் ல்வி

படிப்புகளில் முதல் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் மற்றும் நான்-செமஸ்டர் தேர்வுகள் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 3-ம் நாளான வியாழக்கிழமை பி.எட்., 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு, ‘கிரியேட்டிங் அன் இன்க்ளூசிவ் ஸ்கூல்’ என்ற பாடத்துக்கான (செமஸ்டர் முறை) தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுவதாக இருந்தது.


இந்தச் சூழ்நிலையில், இத்தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியானது. வினாத்தாள் வெளியான விவரம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து, காலை நடைபெற இருந்த தேர்வுக்கு உடனடியாக புதிய வினாத்தாள் ஆன்லைன் வாயிலாக தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

பி.எட்., வினாத்தாள் முன்கூட்டிய வெளியான நிலையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வந்த என்.ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் கல்வி திட்டம் மற்றும் நிர்வாகத்துறையின் தலைவரான பேரராசிரியர் கே.ராஜசேகரன் புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு புதன்கிழமை ( ஆக. 28) பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவில் ஏற்கெனவே பதிவாளராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 23-ம் தேதியே அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது

Share:

உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ முகாம்; செப். 2-ல் தொடக்கம்..!

 உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ முகாம்; செப். 2-ல் தொடக்கம்..!



தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘உயர்வுக்கு படி' சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் செப்.2-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் முதன்மைக் கல்வி

 அலுவலர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிகழ் கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மற்றும் நிகழ் கல்வியாண்டில் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத பிளஸ் 2 தேர்வெழுதிய, எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்க மே 6 முதல் மே 20-ம் தேதி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


இதையடுத்து அடுத்த கட்டமாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி' முகாம் செப்.2 முதல் அக்.1-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 2022-2023, 2023-2024 ஆகிய கல்வியாண்டுகளில் பிளஸ் 2 பயின்று இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ‘உயர்வுக்கு படி' முகாம் தொடர்பான விவரங்களையும், உயர்கல்வியில் சேருவதற்கான விழிப்புணர்வு, வழிகாட்டுதல்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


அடுத்தகட்டமாக உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் நேரடியாக மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று உயர்கல்வி செல்லாததற்கான காரணங்களை கண்டறிந்து மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளனர்.


இந்த முன்னெடுப்பில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு..!

 10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு..!

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள (Revaluation) தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 30.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது


Share:

India Post GDS Result 2024 : வெளியானது அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் - உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா..? முழு விவரம்..!

India Post GDS Result 2024 : வெளியானது அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் - உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா..? முழு விவரம்..!




India post GDS Merit List 2024 : இந்திய அஞ்சல் துறையில் (India Post) கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பெறப்பட்டது. தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,789 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.


India Post Office GDS Results 2024 :

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை ஜூலை 15 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முடிவுகள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. முடிவுகளை தெரிந்துகொள்ளுவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


44,228 போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள் :

இந்திய அஞ்சல் துறை ளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளில் தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.


தமிழ்நாட்டில் 3,789 காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாட்டில் உள்ள 3,789 காலிப்பணியிடங்களில் பொதுப் பிரிவில் 1,794, ஒபிசி பிரிவ்ல் 861, எஸ்சி பிரிவில் 621, எஸ்டி பிரிவில் 37, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 358, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 118 என்ற வகையில் நிரப்பப்படுகிறது. கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வயது வரம்பு சலுகையும் உள்ளது.


10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி :

இந்திய அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 10ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடம் கொண்டு படித்திருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


இந்திய அஞ்சல் துறை GDS முடிவுகள் 2024:

இந்நிலையில், கிராமின் டக் சேவக் (GDS) கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் பதவிக்களுக்கான முடிவுகள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக ஆந்திர பிரதேசம், அசாம், டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதர மாநிலங்களின் முடிவுகள் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு SMS மற்றும் இமெயில் முகவரி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.


முIndiaள் தெரிந்துகொள்ளுவது எப்படி?

படி 1 : இந்திய அஞ்சல் துறை GDS-இன் அங்கீகரிக்கப்பட்ட https://indiapostgdsonline.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும்.

படி 2 : Shortlist candidates 2024 என்ற பிரிவில், தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யவும்.

படி 3 : அதனைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும். 3,789 பேரின் தரவுகளில் உங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து கொள்ளவும்.


தேர்வு செய்யப்பட்ட அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும்.?

உங்களுடைய பெயர் முடிவுகள் வெளியான பட்டியலில் இடம்பெற்று இருந்தால், அடுத்தக்கட்டமாக நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் இடம் குறித்த விவரங்கள் SMS மற்றும் இமெயில் முகவரியில் தெரிவிக்கப்படும். இரண்டு கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு உங்களுக்கு பணி வழங்கப்படும்.

Share:

அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!

அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!


பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி

அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச் சூழல் மன்றம், விநாடி-வினா மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் பள்ளி அளவிலான போட்டிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வியாண்டு அட்டவணையில் ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும்.


இந்த செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்படுவது அவசியம். இந்த போட்டிகள் அடுத்தடுத்து வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும். இதில் அதிக அளவிலான மாணவா்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.

போட்டிகள் நடைபெறுவதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இதுதொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.


இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைத்து வகை மன்ற போட்டிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share:

அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் - அறிக்கை சமர்ப்பிக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவு...!

அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் - அறிக்கை சமர்ப்பிக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவு...!


அரசுப் பள்ளிகளில் தற்காலிக பராமரிப்பு தேவைப்படும் வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தலைமைச் செயலர் ஆய்வுக் கூட்டத்தில் 'அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து 100 சதவீத உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். பராமரிப்புப் பணிகள் தேவைப்பட்டால் பொதுப் பணித் துறை அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஒத்துழைப்புடன் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுதவிர அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்டிடங்களை ஆய்வு செய்து தற்காலிகமாக பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்கள் கொண்ட பட்டியலை தமிழக அரசுக்கு 2 வாரத்துக்குள் அனுப்ப வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை பார்வையிட வரும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பொறியாளருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.


மேலும், அவர்கள் உதவியுடன் தற்காலிகமாக பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் பள்ளிகளின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்பிவைக்க வேண்டும்.


Share:

கலைத் திருவிழா நடத்துவதா?காலாண்டுத் தேர்வு நடத்துவதா? ஆசிரியர் கூட்டணி அறிக்கை!!

கலைத் திருவிழா நடத்துவதா?காலாண்டுத் தேர்வு நடத்துவதா? ஆசிரியர் கூட்டணி அறிக்கை!!



கலைத் திருவிழா நடத்துவதா?காலாண்டுத் தேர்வு நடத்துவதா? பள்ளிக் கல்வித்துறை முடிவினை அறிவிக்க வேண்டும்...


AIFETO.….. 26-08-2024

ஆசிரியர் கூட்டணி அரசு

அறிந்தேற்பு

எண்:36/2001


மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுடனும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனும் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் இன்று மாலை செல்லிடை பேசியில் தொடர்பு கொண்டு கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறுவதாக EMIS - ல் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் வலியுறுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


திருச்சி மாவட்டத்தில் 2 இலட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள்,  அந்த இரண்டு இலட்சம் மாணவர்களையும் கலைத்  திருவிழா நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து அவர்கள்  தகவல்  அனுப்பி உள்ளார்கள்.


அறிவிப்புக்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் உள்ள புரிதலைக்  கூட தெரியாதவர்கள் ஆண்டுதோறும் காலாண்டுத் தேர்வு நேரத்தில்தான்  இந்த கலைத் திருவிழா நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள்.

கலைத் திருவிழா நிகழ்ச்சி வரவேற்க வேண்டிய நிகழ்ச்சியாக இருந்தாலும் 20 நாட்கள்  பயிற்சி நடத்துகின்ற பொழுது மாணவர்களுக்கு பாடம் எப்படி நடத்துவது? காலண்டுத் தேர்வு அவர்கள் எப்படி எழுதுவார்கள்?

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம் மாணவர்களின் 

 

கல்வி

 நலனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.


இத்தகவலினை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் தனிப் பார்வைக்கு உடன் கொண்டு செல்ல வேண்டுமாய் மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பொறுப்பில் உள்ள முனைவர் திரு. முத்து பழனிச்சாமி அவர்களிடமும்,  தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு. கு .ஆ. நரேஷ் அவர்களிடமும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் உடன் தொடர்பு கொள்வதாக நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்!!!

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.

Share:

12th Tamil - Quarterly Exam Question Paper 2024

12th Tamil - Quarterly Exam Question Paper 2024

12th Tamil

12th Tamil Quarterly Exam important Questions 2024 - Download here

12th Tamil Quarterly Model Question paper 2024 - Download Here

12th Tamil Quarterly Exam original Question paper 2024 - Download Here

12th All Subjects Quarterly Exam Question Paper 2024 Pdf Download

2022 - 2023 - 2024 PDF Download

12th Tamil - Quarterly Exam Question Paper 2023 - 2024 With Answer pdf ( Erode District )- Download Here

12th Tamil - Quarterly Exam Question Paper 2023 - 2024 ( kanchipuram District )- Download Here

12th Tamil - Quarterly Exam Question Paper 2023 - 2024 With Answer pdf ( Karur District )- Download Here

12th Tamil - Quarterly Exam Question Paper 2023 - 2024 ( Chengalpat District )- Download Here

12th Tamil - Quarterly Exam Question Paper 2023 - 2024 ( Sivaganga,Tuticorin District )- Download Here

12th Tamil - Quarterly Exam Question Paper  ( tirupatur District )- Download Here

12th Tamil - Quarterly Exam Question Paper  ( Chennai District )- Download Here

12th Tamil - Quarterly Exam Question Paper  ( Tenkasi District )- Download Here

12th Tamil - Quarterly Exam Question Paper  ( Madurai,Dindigul District )- Download Here


Share:

7 நாட்கள் தொடரப்போகும் மழை..! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை ..!

 7 நாட்கள் தொடரப்போகும் மழை..! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை ..!


தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் வரை வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் தற்போது, மீண்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதாவது, மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Share:

பிறப்புச் சான்றிதழில் மாணவர்களின் பெயரை சேர்க்க 31.12.2024 வரை வாய்ப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 பிறப்புச் சான்றிதழில் மாணவர்களின் பெயரை சேர்க்க 31.12.2024 வரை வாய்ப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


பிறப்புச் சான்றிதழில் மாணவர்களின் பெயரை சேர்க்க 31.12.2024 வரை வாய்ப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Inclusion of Name in Birth Certificate - Proceedings

👇👇👇👇

Download here


Share:

EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions!

EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions!



முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்ட குறிப்புகள் :


முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களால் 23.08.2024 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பெற்றது . கூட்டத்தின் போது கீழ்க்காண் விவரங்கள் குறித்து ஆலோசணையும் , அறிவுரைகளும் இணை இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டது.


Share:

ஒருவர் கூட சேராத 30 இன்ஜி., கல்லுாரிகள்..!

ஒருவர் கூட சேராத 30 இன்ஜி., கல்லுாரிகள்..!



இன்ஜினியரிங் சேர்க்கைக்காக நடந்த இரண்டு கட்ட கலந்தாய்வில், 30 கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேராத தகவல் வெளியாகி உள்ளது.


அண்ணா பல்கலையின் கீழ் உள்ள, 433 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரசு ஓதுக்கீட்டில், 1, 79,938 இடங்கள் உள்ளன. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 22ல் துவங்கியது.


சிறப்பு விருப்ப மாணவர்களுக்கு நடந்த கலந்தாய்வு முடிவில், தங்களுக்கான படிப்புகளையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்த, 836 மாணவ, மாணவியருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன.


அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 29ல் துவங்கி, இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது.

இதில், பொதுப்பிரிவில் 62,802 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், 8,308 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, மொத்த இன்ஜினியரிங் இடங்களில் தற்போது வரை, 71,946 இடங்கள் நிரம்பி உள்ளன. இது, மொத்த இடங்களில், 39 சதவீதம்.


இதுவரை நிறைவடைந்துள்ள கலந்தாய்வுகளின்படி, அண்ணா பல்கலையின் கிண்டி வளாக கல்லுாரி, எம்.ஐ.டி., உள்ளிட்ட நான்கு கல்லுாரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் 14 கல்லுாரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பி உள்ளன.


மேலும், 57 கல்லுாரிகளில், 80 சதவீத இடங்களும், 114 கல்லுாரிகளில், 50 சதவீத இடங்களும், 197 கல்லுாரிகளில், 10 சதவீத இடங்களும் நிரம்பி உள்ளன. அதேநேரம், 30 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Share:

பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்கக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்..!

பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் மறைக்கக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்..!



பள்ளிகளில் தவறுகள் நிகழ்ந்தால் அதனை நிா்வாகத்தினா் மூடிமறைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தினாா்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோா், ஆசிரியா் கழகக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதில், பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாணவா்களின் கல்வி நலன் ஊக்குவித்தல் போன்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவா்களை அங்கீகரிக்கவும், முன்னாள் மாணவா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெறவும் பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தப்படும். பள்ளிகளில் சிதிலமடைந்த நிலையிலுள்ள கட்டடங்களை இடிப்பது குறித்து மழைக்காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.


ஆக.31-இல் மண்டல மாநாடு: பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மண்டல மாநாடு வரும் 31-ஆம் தேதி திருநெல்வேலியில் பெற்றோா்களைக் கொண்டாடும் வகையில் நடத்தவுள்ளோம். கடலூரில் இறுதி மாநாடு நடைபெறும். பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் தயாா் செய்யப்பட்ட வினா வங்கி புத்தகங்கள் அனைத்து நூலகங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் கைப்பேசி செயலி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்து காவல்துறையிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாணவா்களுக்கு கவுன்சிலிங்: பள்ளி மாணவா்களுக்கு 800 மருத்துவா்கள் ஒன்றியம் வாரியாக ‘கவுன்சிலிங்’ கொடுத்து வருகின்றனா். ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் ஆலோசகராக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். பெண் குழந்தைகளை பெற்றவா்கள் தைரியமாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலையில் இருக்க வேண்டும். அரசு, தனியாா் பள்ளி நிா்வாகத்தினா், வளாகத்தில் நடைபெறக்கூடிய தவறுகளை மூடி மறைக்கக் கூடாது.


தனியாா், அரசு என அனைத்து பள்ளிகளிலும் எந்த தவறு நடந்தாலும் பள்ளி மேலாண்மைக்குழு அல்லது பெற்றோா் ஆசிரியா் கழக அமைப்புக்கு தகவலை கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியா்களுக்கு போக்ஸோ சட்டத்தைவிட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றாா் அவா்..

Share:

10th Maths Quarterly Exam 2024 Question Paper - Pdf Download

10th Maths - Quarterly Exam Question paper 2024 (All district)

10th Maths

10th Maths - Quarterly Exam 2024 Important Questions - Pdf Download here

10th Maths - Quarterly Exam Model Question paper 2024 -Pdf Download here

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Chennai District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Chengapat District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Erode District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Krishnagiri District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Madurai District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( namakkal,Dindigul,Dharmapuri District ) -  Pdf Download here Tamil Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Pudukottai District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Government Emis Question ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Raniper District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Tenkasi District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Tiruneveli District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Tiruvalur District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Trichy District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper 2023 - 2024 ( Vellore District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper ( kallakurichi District ) -  Pdf Download here Tamil Medium

10th Maths - Quarterly Exam Question paper ( Tenkasi District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper ( District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper ( District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper ( Salem District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper ( Tiruvallure District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper ( Virudunagar District ) -  Pdf Download here Tamil Medium

10th Maths - Quarterly Exam Question paper ( Virudunagar District ) -  Pdf Download here English Medium

10th Maths - Quarterly Exam Question paper ( Tirupatture District ) -  Pdf Download here Tamil Medium

10th Maths - Quarterly Exam Question paper ( Tirupatture District ) -  Pdf Download here English Medium

Share:

11th & 12th Quarterly Ayllabus 2024

11th & 12th Quarterly syllabus 2024

11th and 12th std All subjects Quarterly Exam syllabus portion Pdf Download.

Pdf Download Click here

Share:

மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் - உண்மை நிலை என்ன? மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம்..!

 மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் - உண்மை நிலை என்ன? மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம்..!


தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் 19.08.2024 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது. 

மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு வெளியிடுவதில்லை . தரவரிசைப் பட்டியல் மட்டுமே அரசால் வெளியிடப்படுகிறது ' என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது .


Share:

23 8 2024 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

23-8-2024 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!



தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால் 23 8 2024 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Share:

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 29.08.2024 முதல் விநியோகம் - தேர்வுத்துறை..!

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 29.08.2024 முதல் விநியோகம் - தேர்வுத்துறை..!



நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 29.08.2024 ( வியாழக்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் . தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் .

Share:

அரசுப் பள்ளிகளுக்கு விரைவில் இரவு காவலாளிகள்..!

அரசுப் பள்ளிகளுக்கு விரைவில் இரவு காவலாளிகள்..!



தமிழக அரசுப் பள்ளிகளுக்கு , விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

செஞ்சியில் பேட்டியளித்த அவர் , அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஹைடெக் லேப் மற்றும் இரவு நேரக் காவலர்கள் , தூய்மை பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். 

மேலும் , அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கூடுதல் கழிப்பறைகள் கட்டி தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

“மாணவர்கள் படைப்பாளிகளாக உருவாக அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்” - அன்பில் மகேஸ் உறுதி

மாணவர்கள் படைப்பாளிகளாக உருவாக அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.




பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேன்சிட்டு, புது ஊஞ்சல் ஆகிய சிறார் இதழ்களில் பங்களித்த மாணவ படைப்பாளிகளுக்கு பாராட்டு விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆக.17) நடைபெற்றது. விழாவில், மாணவ படைப்பாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியது: "மாணவர்கள் என்ற நிலையிலிருந்து ஒரு படைப்பாளி என்ற நிலைக்கு உயர்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இங்கு வந்துள்ள மாணவ, மாணவியருக்கு மட்டுமல்ல, யாரெல்லாம் படைப்புகளை அளித்துள்ளார்களோ, படைப்புகளை அளிக்க வேண்டும் என்ற ஊக்கம் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கும் சேர்த்துத் தான் இந்தப் பாராட்டு விழா.





மாணவர்கள் இந்த நிலைக்கு உயர தயார்படுத்திய பெற்றோர்கள், ஆசிரியர்களை பாராட்டுகிறேன். வீரமாமுனிவர், அழ.வள்ளியப்பா உள்ளிட்ட ஏராளமானோர் குழந்தைகளுக்காக பல்வேறு படைப்புகளை அளித்துள்ளனர். குழந்தைகளுக்கான பல பத்திரிகைகள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாததால் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனால், தற்போது அரசே குழந்தைகளை ஒரு படைப்பாளியாக உருவாக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி சொல்ல வேண்டும்.





மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள், பாடங்களை படிக்கிறார்கள், வீட்டுப் பாடம் எழுதுகிறார்கள் அத்துடன் அவர்களது பணி முடிந்துவிடவில்லை. ஒரு படைப்பாளியாக உருவாக வாய்ப்புகள் தற்போது ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்போடு மட்டுமல்லாது அவர்களுக்குள் உள்ள தனித்திறன்களை இதன் மூலம் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தனது படைப்பு, தேன் சிட்டு, புது ஊஞ்சல் இதழ்களில் வந்து விட வேண்டும் என்ற முயற்சியோடு குழந்தைகள் படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.





ஒவ்வொரு வகுப்பறைக்கும் இந்த இதழ்கள் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையின் படைப்பும் தமிழகம் முழுவதும் இதன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் வழியாக பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தோஷம், பெருமிதம் ஆகியவற்றை பார்த்து, அந்த குழந்தைகள் இன்னும் ஊக்கம் பெறுகின்றனர். இது பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு நேர்மறையான சிந்தனையை உருவாக்கும்.




குழந்தைகளின் தனித்திறமைகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் படைப்பாளிகளாக உருவாக அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். அதன் ஒரு பகுதியாகத் தான் சிறந்த படைப்பாற்றல் கொண்ட குழந்தைகள் மூவரை தேர்வு செய்து கவிமணி விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசும் வழங்குகிறோம்.





அதேபோன்று இலக்கிய விழாக்கள் நடத்தி, அதில் மூன்று குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. இவை குழந்தைகளை படைப்பாளிகளாக உருவாக்கும் முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாடப் புத்தகங்களின் விலையை ஏற்றி விட்டோம் என பலரும் விமர்சிக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு காகிதத்தின் விலை, அச்சுக் கூலி, அட்டை விலை ஆகியவை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அரசு விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.




ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது தான் 25 முதல் 40 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது லாப நோக்கத்துடன் செய்யப்பட்டது அல்ல. இன்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் தான் வழங்கப்படுகிறது" இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் அமுதவள்ளி, திருச்சி மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Share:

பிஎட், எம்எட் தேர்வுகள் ஆக. 27-ல் தொடக்கம்

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கான தேர்வுகள் (செமஸ்டர் அல்லாதது) ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்க உள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.




இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பி.கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:





தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தின்கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மற்றும் பி.எட். சிறப்பு கல்வி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் (செமஸ்டர் அல்லாதது) ஆகஸ்ட் 27-ம் தேதிதொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி முடிவடையும். அதேபோல், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கி 31-ம்தேதி நிறைவடையும்.




மேலும், எம்.எட். மற்றும் எம்.எட். சிறப்பு கல்வி (செமஸ்டர் அல்லாதது) முதலாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும். அதேபோல், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2-ம் தேதிமுடிவடையும்.

Share:

தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல்

தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் டாப் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல்...




7-ஆவது இடத்தில் கோயம்புத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி.




8-ஆவது இடத்தில் சென்னை லயோலா கல்லூரி 




11-ஆவது இடத்தில் கோயம்புத்தூர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி.




13-ஆவது இடத்தில் சென்னை மாநிலக் கல்லூரி.




14-ஆவது இடத்தில் மெட்ராஸ் கிருஷ்டியன் கல்லூரி.




15-ஆவது இடத்தில் மதுரை தியாகராஜர் கல்லூரி.




25-ஆவது இடத்தில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி. 




28-ஆவது இடத்தில்  தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி .




30- வது இடத்தை  சென்னை ஸ்டெல்லா மாரிஸ் பெண்கள் கல்லூரி.




33-ஆவது வது இடத்தை திருச்சி பிஸப் ஹீப்பர் கல்லூரி.




36-ஆவது இடத்தை பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி 




37-ஆவது இடத்தை  கோயம்புத்தூர் ஸ்ரீ கிரிஷ்ணா கலை அறிவியல் கல்லூரி.




41-ஆவது இடத்தை திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி.




42-ஆவது இடத்தை மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிரிஸ்டியன் கல்லூரி.




44-ஆவது இடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி





47-ஆவது இடத்தை திருப்பத்தூர் செக்ரெட் ஹார்ட் கல்லூரி





52-ஆவது இடத்தை கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி 




54-ஆவது இடத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி 




56-ஆவது இடத்தை கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி.




59-ஆவது இடத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரி




63-ஆவது இடத்தை சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி




67-ஆவது இடத்தை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி




67-ஆவது இடத்தை சென்னை பெண்கள் கிரிஸ்டியன் கல்லூரி




71-ஆவது இடத்தை சென்னை ராணி மேரி கல்லூரி




73-ஆவது இடத்தை சென்னை ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க்




75-ஆவது இடத்தை கோயம்புத்தூர் டாக்டர் NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரி




76-ஆவது இடத்தை காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி





78-ஆவது இடத்தை தூத்துக்குடி APC மகாலட்சுமி பெண்கள் கல்லூரி




79-ஆவது இடத்தை சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி 




82-ஆவது இடத்தை திருச்சி நேஷனல் கல்லூரி



82-ஆவது இடத்தை  கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி



89-ஆவது இடத்தை சென்னை குரு நானக் கல்லூரி



94-ஆவது இடத்தை கோயம்புத்தூர் டாக்டர் SNS ராஜலஷ்மி கல்லூரி


96-ஆவது இடத்தை விருதுநகர் இந்து நாடார் செந்திகுமர் நாடார் கல்லூரி 


98-ஆவது இடத்தை திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி


100-ஆவது இடத்தை நாகர்கோவில் ஸ்காட் கிரிஸ்டியன் கல்லூரி பிடித்துள்ளது.

Share:

NET - தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

யுஜிசி நெட் தோ்வுகள் ஆக. 21-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ள நிலையில் முதல் மூன்று தோ்வுகளுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.




இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவா் சோ்க்கைக்கும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்தத் தோ்வு ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன், டிசம்பா்) நடத்தப்படும்.



அதன்படி, நிகழாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தோ்வு நாடு முழுவதும் 1,205 மையங்களில் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 8,580 பட்டதாரிகள் எழுதினா்.



இந்நிலையில், நெட் தோ்வில் முறைகேடுகள் நடைபெற்ாகத் தகவல்கள் வந்தன. அதையடுத்து, யுஜிசி நெட் தகுதித் தோ்வை மத்திய  கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. அதற்கான மறுதோ்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் எனவும் என்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர மொத்தமுள்ள 83 பாடங்களுக்கும் எந்தெந்த நாள்களில் தோ்வு நடத்தப்படும் என்ற விரிவான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.


தோ்வெழுத உள்ள பட்டதாரிகளுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல்கட்டமாக ஆகஸ்ட் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 3 தோ்வுகளுக்கான அனுமதிச் சீட்டு மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. எஞ்சிய தோ்வுகளுக்கான அனுமதிச் சீட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்படும். கூடுதல் விவரங்கள் வலைதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.


இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மைய எண் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி வழியாகவோ தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support