7 நாட்கள் தொடரப்போகும் மழை..! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை ..!

 7 நாட்கள் தொடரப்போகும் மழை..! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை ..!


தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் வரை வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் தற்போது, மீண்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதாவது, மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments