India Post GDS Result 2024 : வெளியானது அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் - உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா..? முழு விவரம்..!
India post GDS Merit List 2024 : இந்திய அஞ்சல் துறையில் (India Post) கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பெறப்பட்டது. தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,789 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
India Post Office GDS Results 2024 :
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை ஜூலை 15 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முடிவுகள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. முடிவுகளை தெரிந்துகொள்ளுவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
44,228 போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள் :
இந்திய அஞ்சல் துறை ளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளில் தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
தமிழ்நாட்டில் 3,789 காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாட்டில் உள்ள 3,789 காலிப்பணியிடங்களில் பொதுப் பிரிவில் 1,794, ஒபிசி பிரிவ்ல் 861, எஸ்சி பிரிவில் 621, எஸ்டி பிரிவில் 37, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 358, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 118 என்ற வகையில் நிரப்பப்படுகிறது. கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வயது வரம்பு சலுகையும் உள்ளது.
10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி :
இந்திய அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 10ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடம் கொண்டு படித்திருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்திய அஞ்சல் துறை GDS முடிவுகள் 2024:
இந்நிலையில், கிராமின் டக் சேவக் (GDS) கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் பதவிக்களுக்கான முடிவுகள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக ஆந்திர பிரதேசம், அசாம், டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதர மாநிலங்களின் முடிவுகள் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு SMS மற்றும் இமெயில் முகவரி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
முIndiaள் தெரிந்துகொள்ளுவது எப்படி?
படி 1 : இந்திய அஞ்சல் துறை GDS-இன் அங்கீகரிக்கப்பட்ட https://indiapostgdsonline.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும்.
படி 2 : Shortlist candidates 2024 என்ற பிரிவில், தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யவும்.
படி 3 : அதனைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும். 3,789 பேரின் தரவுகளில் உங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்பட்ட அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும்.?
உங்களுடைய பெயர் முடிவுகள் வெளியான பட்டியலில் இடம்பெற்று இருந்தால், அடுத்தக்கட்டமாக நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் இடம் குறித்த விவரங்கள் SMS மற்றும் இமெயில் முகவரியில் தெரிவிக்கப்படும். இரண்டு கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு உங்களுக்கு பணி வழங்கப்படும்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.