தமிழகத்தில் மார்ச்.3 ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் மார்ச்.3 ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் – பொதுமக்கள் கவனத்திற்கு!



தமிழகத்தில் மார்ச் மூன்றாம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலியோ சொட்டு மருந்து:

நாட்டில் இருந்து முற்றிலுமாக இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கு மார்ச் மூன்றாம் தேதியான வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் வழக்கமாக சொட்டு மருந்து வழங்கப்படும்.

இதை தவிர அன்றைய தினம் பயணத்தை மேற்கொண்டு இருக்கும் பெற்றோர்களை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனை சாவடிகளில் சொட்டு மருந்து முகாம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Share:

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்தால் ரூ.50,000/- பரிசு – கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்தால் ரூ.50,000/- பரிசு – கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.50,000 பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசு தொகை:

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொது தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் வகிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2023-24-ஆம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வில் தமிழ்ப்பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு மொத்தம் ரூ.50,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.10,000, இரண்டாம் இடம் பிடிக்கும் இருவருக்கு தலா ரூ.5000/- மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் மூன்று மாணவர்களுக்கு தலா ரூ.3000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு தலா ரூ.1,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையானது மே மாதத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் எனவும் இத்தொகை அவர்கள் உயர்கல்விக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

பொதுத்தேர்வு - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்..!

பொதுத்தேர்வு - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்..!



பொதுத்தேர்வு 2024 - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்

Hall invigilator duty - Download here

Share:

11 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை..!

11 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை..!


மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும்மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்தாண்டு 440 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் வளர்ச்சியால் முந்தைய ஆண்டுகளைவிட 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை சற்று முன்னேற்றம் கண்டிருந்தது. எனினும், சில கல்லூரிகளில் சேர்க்கை ஒற்றைஇலக்கத்தில்தான் அமைந்தது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பல்கலை. அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘கடந்த 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு 2024-25-ம் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படாது. 2023-24-ம் கல்வியாண்டில் 25 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கை கொண்ட 67 கல்லூரிகளுக்கு வரும் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் நிபந்தனையுடன் அளிக்கப்படும். இதை பின்பற்றாத கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்’’ என்றனர்.

Share:

பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது: 3,302 மையங்களில் 7.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்...!

பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது: 3,302 மையங்களில் 7.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்...!



பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்கி மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வுகள் முறையாக நடைபெற ஏதுவாக, தேர்வுத் துறையால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

வழக்கமாக, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தனித் தேர்வர்களின் புள்ளி விவரங்கள், தேர்வுக்கான உதவி மைய எண்கள் போன்ற தகவல்களை ஒரு வாரத்துக்கு முன்பாகவே தேர்வுத் துறை வெளியிடும். ஆனால், இம்முறை,இந்த விவரங்களை தேர்வுக்கு முந்தைய நாளான இன்று (பிப்.29) பள்ளிக்கல்வி அமைச்சர் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!



நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வெழுதவுள்ள செய்முறைத் தேர்வுகளை மார்ச் / ஏப்ரல் 2024 மாணாக்கர்களுக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் பாட பள்ளித் 23.02.2024 முதல் 29.02.2024 வரை நடத்திட , ( 25.02.2024 நீங்கலாக ) அனைத்து தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

 கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

DGE - SSLC Science Practical Instructions - Download here

Share:

கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்...!

 கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்...!


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் வங்கிகள் இணைந்து எடுத்துவருகின்றன.

இதன் ஒருபகுதியாக, சென்னையில் மாபெரும் கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் இன்று (பிப்.15) நடைபெற உள்ளது.

கல்விக்கடன் விண்ணப்பம் மற்றும் அதற்கு தேவையான வருமான சான்றிதழ், பான் கார்டு விண்ணப்பம் இ-சேவை மையம் மூலம் இந்த முகாமில் பதிவு செய்யலாம்.

இந்த முகாமில், அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

Share:

தேர்வு நேரம் - விடைத்தாளில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன?

தேர்வு நேரம் - விடைத்தாளில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன?

பொதுத்தேர்வுக்கு படிப்படியாக எப்படி ஆயத்த wமாவது என்பதை கடந்த சில நாட்களாக பார்த்தோம். ஒட்டுமொத்த முயற்சி மற்றும் பயிற்சிக்கான பலன் தேர்வில் எப்படி விடையளிக்கிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது. ஆகையால் ‘தேர்வு நேரம்’ பகுதியில் நாம் இறுதியாக பார்க்கவிருப்பது, தேர்வு எழுதுபவர் விடைத்தாளில் செய்யக்கூடியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதேயாகும்.

செய்யக்கூடியவை

1. முகப்புச்சீட்டில் உரிய இடத்தில் கையொப்ப மிடவேண்டும்.

2. விடைத்தாளில் ஒரு பக்கத்திற்கு 20 முதல் 25 வரிகள்வரை எழுதவேண்டும்.

3. விடைத்தாளின் இருபுறங்களிலும் எழுத வேண்டும்.

4. செய்முறைகள் யாவும் விடைத்தாளின் கீழ்ப் பகுதியில் இடம்பெற வேண்டும்.

5. வினா எண் தவறாமல் எழுதவேண்டும்.

6. இருவிடைகளுக்கிடையே இடைவெளி விட்டு எழுதவேண்டும்.

7. விடைத்தாளில் நீலம், கருப்புமை கொண்ட பேனாவால் விடைகளை தெளிவாக எழுத வேண்டும்.

8. விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்கே கோடு இடவேண்டும்.

செய்யக்கூடாதவை

1. வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.

2. விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.

3. விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் பெயர் எழுதக் கூடாது.

4. வண்ணங்கள் கொண்ட பேனா / பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது.

5. விடைத்தாள் கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது.

6. விடைத்தாள் புத்தகத்தின் எந்த தாளையும் கிழிக்கவோ நீக்கவோ கூடாது.

எல்லாம் படித்திருப்பீர்கள், எல்லாமே தெரிந் திருக்கும். ஆனால், நிதானம் தவறிவிடுவீர்கள். சின்ன தவறாக இருக்கும் அதை அதுவரை செய்திருக்கவே மாட்டீர்கள். கடைசியில் பார்த்தால் அதுதான் கிடைக்கவேண்டிய மதிப்பெண்ணை இழக்க காரணமாகிவிடும். ஆகையால், மாண வர்களே விடைத்தாளில் பதில் எழுதும்போது நிதானம் மிகவும் அவசியம்.

வெற்றி பெற வாழ்த்துகள்!


Share:

11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு

11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு..!


தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.19-ம்தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்), பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

Share:

10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்..!

 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் - விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்

விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் = 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல்

வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம்

நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை

வழக்கம்போல் தமிழ் . ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம்

நடப்பு ஆண்டு வரை 4 ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை

விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் : 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல்

Share:

+2 பொதுத்தேர்வு - நுழைவுச்சீட்டை 20.02.2024 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE வழிமுறைகள் வெளியீடு..!

 +2 பொதுத்தேர்வு - நுழைவுச்சீட்டை 20.02.2024 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE வழிமுறைகள் வெளியீடு..!

நடைபெறவுள்ள மார்ச் - 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு , பள்ளி தலைமையாசிரியர்கள் 20.02.2024 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று " online - portal " என்ற வாசகத்தினை " Click " செய்து “ HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH - 2024 " எனத் தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID , Password- ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை ( Hall Tickets ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பள்ளி அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும் .

Share:

தமிழக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – பிப்.19 ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

தமிழக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – பிப்.19 ம் தேதிக்கு தள்ளிவைப்பு!


தமிழக இடைநிலை ஆசிரியர்கள் இன்று நடத்த இருந்த போராட்டம் தொடர்பாக புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம்:

தமிழக அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் மத்தியில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு அளித்திருந்த உறுதியின் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


தற்போது நான்கு மாதங்கள் ஆகியும் இது தொடர்பாக எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் பிப்ரவரி 12-ம் தேதியான இன்று சென்னை டி பி ஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் முற்றுகைப் போராட்டம் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

Share:

TN TRB-ல் SGT அறிவிப்பு வெளியீடு – 1768 காலிப்பணியிடங்கள் ..!

 TN TRB-ல் SGT அறிவிப்பு வெளியீடு – 1768 காலிப்பணியிடங்கள் ..!

TN TRB ஆனது SGT தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TN TRB SGT:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் தோராயமாக 1768 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு + Diploma / B.EL.Ed, Graduate Degree + B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 53 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.20,600/- முதல் ரூ.75,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Compulsory Tamil Language Eligibility Test, Written Examination மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 15.03.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கான எழுத்து தேர்வானது ஜூன் 23ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

கேட்-பி நுழைவுத் தேர்வு அறிவிப்பு 2024 ..!

 கேட்-பி நுழைவுத் தேர்வு அறிவிப்பு 2024 ..!


தேசிய தேர்வு முகமை, NTA, ஆனது GAT-B/BET தேர்வு 2024க்கான பதிவு செயல்முறையைத் தற்போது தொடங்கியுள்ளது. Graduate Aptitude Test- Biotechnology (GAT-B) / Biotechnology Eligibility Test (BET) – 2024 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் dbt.ntaonline.in இதற்கு விண்ணப்பிக்கலாம்.

NTA GAT-B/BET தேர்வு 2024:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 6, 2024 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 6, 2024 எனவும், அதில்  விவரங்களில் திருத்தம் மார்ச் 8 முதல் மார்ச் 9 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GAT B மற்றும் BETக்கான விண்ணப்பக் கட்டணம் பொது விண்ணப்பதாரர்களுக்கு ₹2400/- மற்றும் SC/ST/PwD பிரிவினருக்கு ₹1200/- ஆகும். GAT B அல்லது BET க்கு, பொது/ OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹1200/- மற்றும் SC/ST/PwD பிரிவினருக்கு ₹600/- என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

GAT-B/BET 2024 தேர்வு ஏப்ரல் 20, 2024 அன்று நடத்தப்படும். இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும் – முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரண்டாவது ஷிப்ட் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை. மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் NTA GAT-B/BET 2024 இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட அறிவித்தப்பட்டுள்ளது.

Share:

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்..!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்..!


இன்று தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் இன்று பிப்ரவரி 12ம் தேதி துவங்கி பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 5,000 அதிகமான மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 6 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வில் பங்கேற்கவுள்ளனர். இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் செய்முறைத் தோ்வுக்கு தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி தோ்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி வரும் 17-ம் தேதிக்குள் செய்முறைத் தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

தோ்வுத்துறை சலுகை அறிவித்த மாணவா்களுக்கு மட்டும் செய்முறைத் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தோ்வுத் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share:

+2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..!

+2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..!

தொழிற் பயிற்சி பெறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விவரங்கள வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிதியானது விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share:

+2 தேர்வில் 2 வகை வினாத்தாள்..!

 +2 தேர்வில் 2 வகை வினாத்தாள்..!


தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ம் தேதி தொடங்க உள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் , ஒவ்வொரு தேர்வு அறையிலும் , 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இரண்டிலும் கேள்வியின் வரிசைகள் மாற்றப்பட்டிருக்கும் . இதன் மூலம் ஒரு தேர்வு அறையில் அருகருகே அமர்ந்திருக்கும் , மாணவர்களுக்கு வினாத்தாள் வகை மாற்றி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது .

Share:

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி ஆன்லைன் வழி பயிற்சி..!

 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி ஆன்லைன் வழி பயிற்சி..!


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்த பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்து உள்ள அரசாணை:

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சியானது, மாவட்ட, மாநில அளவில் சில பயிற்சி மையங்களில் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.பயிற்சி பெறுவோர், உணவு, உறைவிட வசதிகளுக்காக, மையங்களில் இருந்து நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் செல்வதால், பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.


எனவே, இனி நேரடி பயிற்சி வழங்காமல், அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்தப்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டில், 75 சதவீத பயிற்சிகளை, ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Share:

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு டிப்ஸ்…!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு டிப்ஸ்…!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023- 24 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு:

அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நவம்பர் மாதம் வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது. 2024 பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29-ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.   12  ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி  தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி  தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நேரத்தில், தேர்வு துறை தேர்வில் மாணவர்கள் காப்பி அடுப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் இருவகையான வினா தாள்கள் வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. தேர்வு இறுதி நேரத்தில் மாணவர்கள் பதட்டம் அடையாமல், இதுவரை படித்தை மட்டுமே மீண்டும் ஒரு முறை படித்தாலே தேர்வு பற்றிய அச்சத்தை தவிர்க்கலாம்.


Share:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ₹1,000/- உயர்வு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ₹1,000/- உயர்வு..!

பாபா கம்பீர் நாத் ஆடிட்டோரியத்தில் உடல் ஊனமுற்றோருக்கான மூன்று நாள் விழாவை முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், உடல் ஊனமுற்றவர்களுக்காக இரண்டு பல்கலைக்கழகங்களை நடத்தும் முதல் மாநிலம் உத்தரபிரதேசம் என்று கூறி, ஒன்று லக்னோவிலும் மற்றொன்று சித்ரகூடிலும், அவர்களின் நலனுக்காக மாநிலத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

மேலும், அவர் எங்கள் அரசாங்கம் உடல் ஊனமுற்றோருக்கு அனைத்து ஆதரவையும் வழங்கி, இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதாக குறிப்பிட்டார். உடல் ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ₹1,000 உயர்த்தப்படும் என்றும் முதல்வர் கூறினார். மேலும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 11,000 பேருக்கு ஏற்கனவே மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் 21 பள்ளிகள், 18 பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்காக மேலும் மூன்று பள்ளிகள் இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.


 

Share:

ரேஷன் அட்டை இல்லாதோருக்கு ரூ.6000 நிவாரணம் எப்போது? அரசு அறிவிப்பு!!

ரேஷன் அட்டை இல்லாதோருக்கு ரூ.6000 நிவாரணம் எப்போது? அரசு அறிவிப்பு!!


ரேஷன் அட்டை இல்லாதோருக்கு ரூ.6,000 நிவாரண தொகை எப்போது வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ரூ.6000 நிவாரணம்:

ரேஷன் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களாக உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இவர்கள் தனித்தனியாக ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்த பின்னர் அவர்களுக்கான நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் சுமார் 5.5 லட்சம் பேர் நிவாரண உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியானவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கணக்கெடுப்பு பணி முடிவடைந்த நிலையில் உள்ளதால் விரைவில் நிவாரண உதவித்தொகை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

ஆசிரியர்களின் ஆன்லைன் பதிவுகள்: கண்காணிக்கும் பள்ளிக்கல்வி துறை..!

ஆசிரியர்களின் ஆன்லைன் பதிவுகள்: கண்காணிக்கும் பள்ளிக்கல்வி துறை..!


ஆசிரியர் அமைப்புகளின் போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நியமன ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பாக செயல்படுகின்றன. தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அரசு தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து, டிட்டோ ஜாக் என்ற கூட்டமைப்பாக செயல்படுகின்றன.

இந்த கூட்டமைப்புகளின் சார்பில், வரும், 15ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தமும், வரும், 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் மேற்கொள்வது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஜாக்டோ ஜியோ மற்றும் டிட்டோ ஜாக் கூட்டமைப்புகள் ஈடுபடுகின்றன. இதற்கிடையில், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு, இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், வரும் 12ம் தேதி, முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொது தேர்வுகள் நெருங்க உள்ளதால், ஆசிரியர்களின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர, பள்ளிக்கல்வி துறை ஆலோசித்து வருகிறது. இதற்காக ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளில், நிதி செலவில்லாத அம்சங்களை பட்டியல் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், போராட்டம் தொடர்பாக, ஆசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் தகவல்களை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

போராட்டம் எப்படி நடத்த போகின்றனர்; போராட்டத்துக்கு எந்த வகையில் பிரசாரம் செய்யப் படுகிறது; போராட்டம் அமைதியாக நடக்குமா என்பன போன்றவற்றை தெரிந்து கொள்ள, ஆசிரியர் சங்கங்களின் சமூக வலைதள பக்கங்களை கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது.

சங்க நிர்வாகிகளின் சமூக வலைதள பக்கங்களில் உள்ள ஆசிரியர்கள் வழியே, சங்க நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளவும், பள்ளிக்கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Share:

+2 பொதுத் தேர்வு முதன்மை விடைத்தாட்கள் மற்றும் முகப்புத்தாட்கள் -- அறிவுரைகள் வழங்குதல் DGE Proceedings

+2 பொதுத் தேர்வு முதன்மை விடைத்தாட்கள் மற்றும் முகப்புத்தாட்கள் -- அறிவுரைகள் வழங்குதல் DGE Proceedings


மார்ச்- 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதன்மை விடைத்தாட்கள் , முகப்புத்தாட்களை உதவி இயக்குநர்கள் 07.02.2024 முதல் 13.02.2024 வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி தைக்கும் பணியினை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான முதன்மை விடைத்தாட்களின் வகைகள் , முதன்மை விடைத்தாளுடன் வைத்துத் தைக்கவேண்டிய வரைகட்டத்தாள் மற்றும் வரைபடங்கள் விவரம் ஆகியவை , தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . இவ்விவரத்தினை அனைத்து தேர்வுமைய தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

DGE Proceedings - Download here

Share:

TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!


அண்ணா பல்கலைக்கழகம் ஆனது TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தற்போது நீட்டித்துள்ளது.

TANCET, CEETA நுழைவு தேர்வு:

2024-25 ஆம் ஆண்டுக்கான TANCET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கு தகுதியானவர்கள் tps://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளம் மூலம் பிப்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதே போல், எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கான சீட்டா தேர்வுக்கும் பிப்.12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANCET தேர்வு மார்ச் 9 ஆம் தேதியும், CEETA – PG தேர்வு மார்ச் 10, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற உள்ளது. முதலில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7 ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Share:

CBSE 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!

CBSE 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி இருக்கிறது.

ஹால் டிக்கெட்

இந்தியாவில் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் இயங்கும் பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகி இருக்கிறது. சிபிஎஸ்இயின் cbse.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பரிக்ஷ சங்கம் தளத்தில் சென்று பள்ளிகள் தங்களது மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும், தேர்வுக்கூட அனுமதி சீட்டில் மாணவர்கள் தங்களது தேர்வு எண், தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்வறைக்கு வருகை தரும் நேரம் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப். 15 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் – மத்திய அரசின் முடிவு?

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் – மத்திய அரசின் முடிவு?



இந்திய நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது தொடர்பாக மாநிலங்களவையில் அமைச்சர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்:

2023 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் 2000 நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலமாக பறிமுதல் செய்யப்படுவது குறித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் முதல் முழுவதுமாக 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் தான் நாட்டின் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது. நடந்து வரும் மாநிலங்களவை கூட்டத்தில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கு சவுத்ரி அவர்கள் பதில் அளித்துள்ளார்.

அதில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை தடுக்கும் வகையிலும், அதிக காலம் புழக்கத்தில் இருக்கும் வகையிலும் ரூபாய் நோட்டுகளை தயார் தரம் உயர்த்துவது தொடர்பாக நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து ஒரு தொடர்பான எந்த முடிவும் இதுவரை அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதேபோல் கிரிப்டோ கரன்சி போன்ற தடை செய்யப்பட்டுள்ள நிதி சார்ந்த வர்த்தகங்களை மேற்கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2022 – 23 ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு ரூபாய் 4682.80 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு செலவானதாகவும் தெரிவித்துள்ளார்.


Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம் – அமைச்சர் தொடக்கம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம் – அமைச்சர் தொடக்கம்!


அரசு பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் திட்டத்தை ஜார்க்கண்ட் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

‘GiftMilk’ திட்டம்:

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தால் (NDDB) ஆதரிக்கப்படும் ஜார்க்கண்ட் பால் கூட்டமைப்பு (JMF), கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் (CSR) ஒரு பகுதியாக NBCC (இந்தியா) லிமிடெட் உடன் இணைந்து ‘கிஃப்ட்மில்க்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இந்தத் திட்டத்தின் கீழ், ராஞ்சியில் உள்ள எட்டு அரசுப் பள்ளிகளில் உள்ள சுமார் 3,500 குழந்தைகள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குழந்தைகளுக்கு தினமும் பள்ளியில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 200 மில்லி சுவையூட்டப்பட்ட பால் வழங்கப்படும். NDDB Foundation for Nutrition மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஜார்க்கண்ட் பால் கூட்டமைப்பு ஒவ்வொரு நாளும் பள்ளிகளுக்கு பால் வழங்கும், என்று அரசுக்கு சொந்தமான நிறுவனமான ஜேஎம்எஃப் தெரிவித்துள்ளது.

Share:

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி..!

 TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி..!

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட இந்தத் தேர்வுக்கு வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், தங்களின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் இரண்டுடன், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

கல்லூரி படிப்பை தொடர முடியவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!

கல்லூரி படிப்பை தொடர முடியவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!

வறுமையை காரணம் காட்டி உயர்கல்வியை தொடராமல் இருக்கும் மாணவியர்களுக்கு தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

பள்ளி கல்வித்துறை:

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களும் பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக அரசு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வியை தொடரும்போது ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியை தொடராமல் இருக்கும் மாணவ, மாணவியர்களின் விவரங்களை பெற்று அவர்களும் உயர் கல்வியை தொடர்வதற்காக அரசு உதவி செய்து வருகிறது. இந்நிலையில், வறுமையை காரணம் காட்டி படிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பள்ளிப்படிப்பு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டும் என்பதே அரசின் முழு கொள்கையாக இருந்து வருகிறது.

Share:

திருப்பதி கோவிலில் இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம் – தேவஸ்தானத்தின் சூப்பர் பிளான்!!

திருப்பதி கோவிலில் இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம் – தேவஸ்தானத்தின் சூப்பர் பிளான்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் பொருட்டு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏழுமலையான் கோவில்:

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பல மணி நேரங்கள் கூட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்காமல் டிக்கெட் பெறுவதற்கான புதிய சேவையை தேவஸ்தானம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவில்களில் 34 கவுண்டர்களில் டிக்கெட் வழங்கப்படும் நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்களை வாங்கும் நிலை இருக்கிறது. இந்நிலையில், இந்த காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் மூலமாகவே விஐபி பிரேக் தரிசனத்திற்கான டிக்கெட்களை பெரும் படி தேவஸ்தானம் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதாவது, விஐபி தரிசனம் மேற்கொள்வதற்கு சிபாரிசு கடிதங்களை சமர்ப்பித்த பின்னர் பக்தர்களின் மொபைல் எண்ணிற்கு செய்தி அனுப்பப்படும். அதில் வரும் லிங்கை பக்தர்கள் கிளிக் செய்து பணம் செலுத்தி விட்டால் உங்களுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

கல்வி தொலைக்காட்சிக்கு புதிய படப்பதிவு கூடம் திறப்பு; நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு..!

கல்வி தொலைக்காட்சிக்கு புதிய படப்பதிவு கூடம் திறப்பு; நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு...!

தமிழகத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் அடுத்த கட்டமாக உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி துறை அலுவலக வளாகத்தில் (டிபிஐ) கல்வி தொலைக்காட்சி உயர் தொழில்நுட்ப படப்பதிவு கூடங்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று திறந்து வைத்து, அங்கு இருந்த கேமராவை இயக்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கல்வி தொலைக்காட்சிக்கு படப்பதிவு கூடங்கள் (ஸ்டுடியோ), உயர் தொழில்நுட்ப ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டுடியோக்களை உலக தரத்தில் கொண்டுவர வேண்டும் என்ற முதல்வரின் ஆசை நிறைவேறியுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதுப்புது உத்திகளோடு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரவேண்டும் என்று விரும்பினோம். அதன் ஒரு பகுதியாக தற்போது ஸ்டுடியோ திறக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில், நெய்தல், பாலை, மருதம் போன்ற நிலப் பகுதிகளையும் உயர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளோம். சொல்லிக் கொடுத்து படிப்பதைவிட, நேரடியாக மாணவர்களின் கற்பனை திறனை அங்கேயே கொண்டு செல்லும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை அனைத்து பாடங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

1-ம் வகுப்பு குழந்தைக்கு ரைம்ஸ், கதைகள் சொல்லித் தருவதில் தொடங்கி, 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல உள்ளோம். பாடம் நடத்துவதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், மாணவர்களின் இடைநிற்றலும் தவிர்க்கப்படுகிறது. தமிழகத்தில் 6,218 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்கி வலுப்படுத்தி உள்ளோம், அடுத்த கட்டமாக நடுநிலைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல உள்ளோம்,

மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம், வழிகாட்டுதல் தேவைப்பட்டால் ‘14417’ என்ற தொலைபேசி எண் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2023 மார்ச் முதல் கடந்த ஜனவரி வரை 2.96 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், துறை செயலர் ஜெ.குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய ஏற்பாடு – தமிழக அரசின் சூப்பர் பிளான்!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய ஏற்பாடு – தமிழக அரசின் சூப்பர் பிளான்!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில் மாநில அரசு மாணவர்களின் நலன் கருதி முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

அரசின் ஏற்பாடு:

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் பல்வேறு சிக்கல்களையும் தீர்க்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித் துறை ஆனது 14417 என்ற இலவச உதவி ஆலோசனை எண்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக 24 மணி நேரமும் மாணவர்கள் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை கேட்டுக் கொள்ளலாம். உதவி மைய ஆலோசனை நபர்களின் எண்ணிக்கை முன்னதாக 20 ல் ஆக இருந்து தற்போது 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதியும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் கல்வி தொடர்பான சிக்கல்கள், மன ரீதியான சிக்கல்கள், பாலியல் தொந்தரவு, பிற பிரச்சனைகள் போன்றவற்றை பகிர்ந்து தீர்வு காணலாம்.

ஒவ்வொரு பிரச்சனைக்கும் குறிப்பிட்ட கால அளவிற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. மாணவர்கள் மட்டும் இன்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பல்வேறு குறைகளுக்காக உதவி எண்களை அழைத்து வருகின்றனர். பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் அழைப்புகளுக்கு எந்த நேரமும் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் 2022 பேர் பல்வேறு காரணங்கள் காரணமாகவும் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளப்பட்டு பலமுறை பேசி மீண்டும் கல்வியை தொடர்வதற்கு உதவி மைய ஆலோசகர்கள் மிகவும் உறுதுணையாக செயல்பட்டுள்ளனர்.

Share:

பிப். 8 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு புதிய உத்தரவு!!

பிப். 8 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு புதிய உத்தரவு!!

மாநிலத்தில் ஷப்-இ-மெராஜ் பிப்ரவரி எட்டாம் தேதி கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை:

உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களும் புனிதமான இரவாக ஒவ்வொரு ஆண்டும் ஷப்-இ-மெராஜ் என்கிற திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதாவது, நபிகள் நாயகம் அவர்கள் மக்காவில் இருந்து இரவு பயணம் மேற்கொண்டதை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு டெல்லியில் பிப்ரவரி 7ஆம் தேதி ஷப்-இ-மெராஜ் கொண்டாடப்படும் எனவும், இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், தற்போது ஷப்-இ-மெராஜ் பிப்ரவரி 8ஆம் தேதி கடைபிடிக்கப்படும் என டெல்லி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதன்படி, வரும் பிப்.8 வியாழக்கிழமை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஷப்-இ-மெராஜ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

Share:

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் – வெளியான சூப்பர் அறிவிப்பு!

 வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் – வெளியான சூப்பர் அறிவிப்பு!


தமிழகத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகளை மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

சூப்பர் அறிவிப்பு:

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேலையில், பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் காவல்துறையினருக்கு சம்பளம் இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், அவர் இதுநாள் வரை அரசு வேலை இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு 8 மணி நேர வேலை, வாரம் ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

Share:

அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்...!

அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்...!

திருச்செங்கோடு, சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அறிவுசாா் மையத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நகராட்சி நிா்வாகமும், கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களும் இணைந்து சனிக்கிழமை தொடங்கி வைத்தன.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் மாணவ, மாணவிகளை டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாா்படுத்தும் வகையில், சந்தைப்பேட்டை பகுதியில் நகராட்சி சாா்பில் அறிவுசாா் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும், யூபிஎஸ்சி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கிராம நிா்வாக அலுவலா், உதவி அலுவலா், இதர காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட 6,224 இடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எதிா்கொள்ளும் விதமாக, பிரதி வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகளை திருச்செங்கோடு நகராட்சியும், கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களும் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு வழங்குகின்றன.

இந்த போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தாா்

Share:

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி – மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட்

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி – மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட்

TNPSC குரூப் 4 தேர்விற்காக மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் பயிற்சி மையத்தில் 75 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி., 6244 காலிப்பணியிடங்களுக்கு குரூப் – 4 தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி நேஷனல் இன்ஸ்டிடியூட் பயிற்சி மையம் சார்பில் 75 மாணவர்களுக்கு 4 மாதங்கள் இலவச பயிற்சி அளிக்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான 75 பேரை தேர்வு செய்ய பிப்.11ல் நேஷனல் இன்ஸ்டிடியூட் மையத்தில் நுழைவுத் தேர்வு நடைபெறும்.

முன்பதிவு செய்ய 95666 59484 வாட்ஸ் ஆப்பிற்கு பெயர், வயது, கல்வித் தகுதி, முகவரியை ‘டைப்’ செய்து அனுப்ப வேண்டும் என நிர்வாக இயக்குநர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

Share:

ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஆசிரியர்களும் கட்டாயமாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது.

தகுதி தேர்வு:

தமிழக உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்தில் அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, மாநிலத்தில் ஒப்பந்த ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் அதிகபட்சமாக மூன்று பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இல்லையெனில், அவர்கள் பணியிழக்க நேரிடும் என அதிர்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பீகார் மாநிலத்தில் 3.5 லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு பிப்ரவரி 26 முதல் மார்ச் 13ஆம் தேதி வரையிலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Share:

பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வரியாக உயர் அதிகாரிகள் / அலுவலர்கள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!

பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வரியாக உயர் அதிகாரிகள் / அலுவலர்கள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!

பள்ளிக்கல்வி அரசுத் தேர்வுகள் இயக்ககம் பொதுத் தேர்வுகள் பள்ளிக் கல்வித் துறை இயக்ககங்களைச் சார்ந்த உயர் அதிகாரிகள் / இயக்குநர்கள் / இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்களை தேர்வுப் பணிகள் கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்து , மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆணை வெளியீடு!

Monitoring Officers List G.O.Ms.No 77. - Download here

Share:

UPSC CSE Mains தேர்வர்களுக்கு நேர்காணல் – அறிவிப்பு சற்றுமுன் வெளியீடு!

UPSC CSE Mains தேர்வர்களுக்கு நேர்காணல் – அறிவிப்பு சற்றுமுன் வெளியீடு!

UPSC CSE Personality Test:


UPSC தேர்வாணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் Civil Service Exam (CSE) மூலம் IAS, IFS, IPS ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இத்தேர்வானது Preliminary Exam, Mains Exam, Personality Test என 03 பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான UPSC CSE Mains தேர்வானது 15.09.2023 அன்று முதல் 24.09.2023 அன்று வரை நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் 08.12.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து UPSC CSE Mains தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1026 நபர்களுக்கான நேர்காணல்  பட்டியலானது (Personality Test List) கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்டது.

இப்பட்டியலில் படி, நேர்காணலானது Phase I, Phase II என இரண்டு பிரிவுகளாக 02.01.2024 அன்று முதல் 15.03.2024 அன்று வரை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் UPSC தேர்வாணையம் மூலம் இன்று (01.02.2024) வெளியிடப்பட்ட அறிவிப்பில், நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தங்களது முழு விவரங்களையும் https://upsconline.nic.in என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வர்கள் தங்களது முன்பதிவை மேற்கொள்ள 01.02.2024 அன்று முதல் 05.02.2024 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Download Notification Link

Share:

10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மொழிப்பாடங்கள் – CBSE புதிய விதிகள்!

10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மொழிப்பாடங்கள் – CBSE புதிய விதிகள்!



மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆனது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழித்தாள்கள் குறித்தான புதிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்சி புதிய விதிகள்:

மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி கட்டமைப்பில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பின்படி CBSE யின் 10 ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகளை தற்போது படித்து வருகின்றனர். இனி இது மூன்று மொழியாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிபிஎஸ்சி யின் 5 பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கான விதியை தற்போது 10  ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. இதேபோல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகளை படிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.


இவற்றில் ஒன்று குறைந்த பட்சம் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெறுவதை விட ஆறு பாடங்களில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2020 தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளின் படி கல்வி சமநிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் 7 சப்ஜெக்ட்கள் மற்றும் மூன்று மொழிகளில்  தேர்ச்சி பெற வேண்டியது உள்ளது. இவற்றில் முன்னதாக உள்ள 5 பாடங்களுக்கு பதிலாக தற்போது இரண்டு மொழிகள் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற மூன்று முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்

Share:

SSC Head Constable (AWO / TPO) தேர்வின் மதிப்பெண் பட்டியல் – வெளியீடு!

SSC Head Constable (AWO / TPO) தேர்வின் மதிப்பெண் பட்டியல் – வெளியீடு!

SSC என்னும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Head Constable (AWO / TPO) பதவிக்கென நடைபெற்ற தேர்வுகளின் இறுதி மதிப்பெண் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் இப்பதிவின் மூலம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

SSC Head Constable Mark List:

டெல்லி காவல் துறையில் காலியாக உள்ள Head Constable (Assistant Wireless Operator (AWO) / Tele-Printer Operator (TPO)) பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட 857 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது 08.07.2022 அன்று SSC-யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பிறகு இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு SSC Head Constable (AWO / TPO) எழுத்து தேர்வானது 27.10.2022, 28.10.2022 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு இறுதி கட்ட முடிவானது 21.12.2023 அன்று வெளியிடப்பட்டது

இதனை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 01) வெளியான அறிவிப்பில் எழுத்து தேர்வின் மதிப்பெண் பட்டியல் ஆனது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் பட்டியல் https://ssc.nic.in/ என்ற SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் Login பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளிடுவதன் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். 01.02.2024 அன்று முதல் 15.02.2024 அன்று வரை மட்டுமே இம்மதிப்பெண் பட்டியலை பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

TNPSC குரூப் 4 தேர்வு விண்ணப்பத்தில் புதிய அறிமுகம் – பதவியை நாமே செலக்ட் செய்யலாம்!

TNPSC குரூப் 4 தேர்வு விண்ணப்பத்தில் புதிய அறிமுகம் – பதவியை நாமே செலக்ட் செய்யலாம்!


2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் புதிய தகவல் குறித்து இப்பதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4:

ஜனவரி 30 ஆம் தேதி இரவு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. மொத்தம் 6244 காலி பணியிடங்கள் பல்வேறு பதவிகளுக்கும் உள்ளதாகவும், விண்ணப்பங்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு வெளியான அறிவிப்பில் புதிதாக வன காவலர் மற்றும் வனக்காப்பாளர் என்ற பதவிகள் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் பலரும் விண்ணப்பிக்க தொடங்கியுள்ள நிலையில் விண்ணப்பத்தில் நாம் பணியாற்ற விரும்பும் பதவியை தேர்வு செய்து கொள்ள புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, வனக்காப்பாளர் பதவிக்கு 363 காலிடங்களும், வனக்காவலர் பதவிக்கு 814 காலியிடங்களும் உள்ளது. இவைகளில் மட்டும் சேர விரும்பினால் அதற்கான விருப்பத்தையும், அனைத்து பதவிகளிலும் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்ய தயாராக இருந்தால் அதற்கான விருப்பத்தையும், வனத்துறை பதவி வேண்டாம் என்றால் அதற்கான விருப்பத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி வாரியம் விண்ணப்ப வழிமுறை படிவத்தில் தெரிவித்துள்ளது.

Share:

TNPSC GROUP IV - தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

TNPSC GROUP IV - தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!



Share:

4-ம் தேதி 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: எக்ஸாம் ஹால் போகும் போது இதை எல்லாம் மறக்காதீங்க!

 4-ம் தேதி 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: எக்ஸாம் ஹால் போகும் போது இதை எல்லாம் மறக்காதீங்க!

தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல வட்டார வள மைய ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வினை நடத்த அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். 2,222 ஆசிரியர் பணியிடங்களுக்கு 41,485 விண்ணப்பித்து இருந்தனர். ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்தனர்.

ஆனால் டிசம்பர் மாத இறுதியில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வர்கள் மேலும் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. அவர்களில் பலர் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு கடந்த சில மாதங்களாக சென்று ஆயத்தமாகி வருகின்றனர்.

தேர்வுக்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் முழு வீச்சில் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 130 மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 41,485 பேர் எழுதுகிறார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

தேர்வறைக்குச் செல்லும் போது உங்கள் அனுமதி அட்டை என்ற ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்



Share:

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க நடவடிக்கை..!!

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க நடவடிக்கை..!!

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால், அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 26 உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் 2,100 மாணவ, மாணவிகளும், பிளஸ் 1 வகுப்பில் 1,700 மாணவ, மாணவிகளும், பிளஸ் 2 வகுப்பில் 1,600 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 5,400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளன. பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற, மேற்கண்ட 3 வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இம்மாதத்தில் ( பிப்ரவரி ) இருந்து சிறப்பு வகுப்புகள் மாநகராட்சி நிர்வாகத்தின் வரும் சார்பில் நடத்தப்பட உள்ளன.

பொதுவாக, இச்சிறப்பு வகுப்புகள் மாலை பள்ளி முடிந்த பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் மேற்கண்ட மூன்று வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பசி ஏற்படக் கூடாது, பசி ஏற்படுவதால் படிப்பின் மீது இருந்து கவனம் சிதறி விடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம், கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு வகுப்புகள் நடக்கும் சமயத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, நடப்பாண்டுக்கான சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் கூறும்போது, ‘‘கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் வகையில், முக்கிய வினாக்கள் குறித்த வினா வங்கி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுத்தேர்வு நெருங்குவதைத் தொடர்ந்து இவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.

மாணவ, மாணவிகளுக்கு பசி ஏற்படாமல் இருக்க மாலை நேர சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. சிறு தானிய வகைகள், சுண்டல், பச்சை பயிறு போன்ற உடலுக்கு சத்து அளிக்கக் கூடிய சிற்றுண்டி உணவுகள், திரவ வகைகள் வழங்கப்படும். பொதுத் தேர்வு நடக்கும் வரை, தினசரி நடத்தப்படும் மாலை நேர சிறப்பு வகுப்புகளின் போது இந்த சிற்றுண்டி வழங்கப்படும்,’’ என்றார்.


Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support