தேர்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஷ தகவல்!

முழு ஆண்டு தேர்வு முடிந்தவுடன் பிளஸ் 11 வகுப்பை தவிர மற்ற வகுப்பினருக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எப்போது என்பது குறித்து தேதியை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அவர் கூறுகையில் மே 5 ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 23 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

அது போல் ,மே 6 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கிறது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 17 ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு எப்போது ?


6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் மே 4 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மே 5 ஆம் தேதி முதல் மே 13 ஆம்தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் வரும் மே 30 ஆம் தேதி வெளியாகிறது. மாணவர்கள் அச்சப்படாமல் தேர்வை எழுத வேண்டும். எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப துறைகளை தேர்வு செய்து பயில வேண்டும்.

விரும்பி படிக்க வேண்டும்

எப்போதும் பெற்றோர் விருப்பதற்காக படிக்கக் கூடாது. மாணவர்கள் எழுதும் பதில்களுக்கு ஏற்ப மதிப்பெண்களை வழங்குவது எங்கள் கடமை. அதனை கண்டிப்பாக நாங்கள் செய்வோம். உங்களுடைய திறமையை நமது பள்ளிகளில் காண்பிக்க வேண்டும். உங்களை நம்பி வரும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும்.

கடைசி வேலை நாள் எப்போது

பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் 100 சதவீத செயல்பாட்டை தொடர்ந்து வழங்க வேண்டும். பிளஸ் 11 வகுப்பு தவிர அனைத்து மாணவர்களுக்கும் கடைசி வேலைநாள் மே மாதம் 13 ஆம் தேதி ஆகும். 2022 -2023 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13 ஆம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 11 மாணவர்களுக்கு ஜூன் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

1 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...